நாடு முழுவதும் கார்கில் வெற்றி தினத்தின் 26வது ஆண்டு நிறைவைக் கொண்டாடும் வேளையில், 1999 கார்கில் போரின் போது வீரர்களின் வீரத்தையும் உயர்ந்த தியாகத்தையும் போற்றும் வகையில், இந்திய ராணுவம் அதை மரியாதையுடனும், பெருமையுடனும், நாடு தழுவிய பங்கேற்புடனும் கொண்டாடியது. இந்த மைய நிகழ்வு டிராஸில் உள்ள கார்கில் போர் நினைவிடத்தில் இரண்டு நாட்கள் நடைபெற்றது, இதில் தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு மற்றும் இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டுத் துறை …
Read More »இந்தியா-ஜப்பான் கூட்டு ராணுவப் பயிற்சியான தர்மா கார்டியனில் பங்கேற்க இந்திய ராணுவக் குழு ஜப்பான் புறப்பட்டது
தர்மா கார்டியன் எனப்படும் இந்தியா-ஜப்பான் கூட்டு ராணுவப் பயிற்சியின் 6-வது பதிப்பில் பங்கேற்பதற்காக இந்திய ராணுவக் குழுவினர் இன்று (22.02.2025) ஜப்பானுக்குப் புறப்பட்டுச் சென்றனர். இந்த பயிற்சி 2025 பிப்ரவரி 24 முதல் மார்ச் 09 வரை ஜப்பானின் கிழக்கு புஜி பகுதியில் நடைபெறவுள்ளது. தர்மா கார்டியன் பயிற்சி என்பது இந்தியாவிலும் ஜப்பானிலும் மாறி மாறி ஆண்டுதோறும் நடத்தப்படும் ஒரு நிகழ்வாகும். இந்தப் பயிற்சியின் முந்தைய பதிப்பு ராஜஸ்தானில் 2024 …
Read More »77-வது ராணுவ தினத்தை முன்னிட்டு, இந்திய ராணுவத்தின் சிறந்த தொழில் நிபுணத்துவம் மற்றும் தேசத்தைக் கட்டியெழுப்புவதற்கான அர்ப்பணிப்பிற்கு முப்படைகளின் தளபதி பாராட்டு தெரிவித்துள்ளார்
77-வது ராணுவ தினமான ஜனவரி 15, 2025 அன்று, முப்படைகளின் தளபதி ஜெனரல் அனில் சவுகான், இந்திய ராணுவத்தின் அனைத்து படைகளுக்கும் தனது நல்வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். இந்திய ராணுவத்தை வரையறுக்கும் தளராத அர்ப்பணிப்பு, தைரியம், குன்றாத மனப்பான்மை மற்றும் தொழில்நிபுணத்துவத்தின் கொண்டாட்டம் ஆகியன இந்தியாவின் பாதுகாப்பு மற்றும் ஒற்றுமையின் அடித்தளமாகும் என்று அவர் விடுத்த செய்தியில் குறிப்பிட்டுள்ளார். இந்திய ராணுவத்தின் மரபானது சவால்களுக்கு ஏற்ப தகவமைத்துக் கொள்ளும் திறன்,இறையாண்மையை நிலைநிறுத்தல் …
Read More »ராணுவ தினத்தை முன்னிட்டு இந்திய ராணுவத்தின் அசைக்க முடியாத துணிச்சலுக்கு பிரதமர் மரியாதை செலுத்தினார்
ராணுவ தினமான இன்று இந்திய ராணுவத்தின் அசைக்க முடியாத துணிச்சலுக்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி மரியாதை செலுத்தியுள்ளார். இந்திய ராணுவம் உறுதிப்பாடு, தொழில்நிபுணத்துவம் மற்றும் அர்ப்பணிப்பு ஆகியவற்றின் உருவகமாக திகழ்கிறது என்று பிரதமர் திரு. மோடி குறிப்பிட்டார். “ஆயுதப்படைகள் மற்றும் அவர்களது குடும்பங்களின் நலனுக்காக எங்கள் அரசு உறுதிபூண்டுள்ளது. பல ஆண்டுகளாக, நாங்கள் பல சீர்திருத்தங்களை அறிமுகப்படுத்தியுள்ளோம் மற்றும் நவீனமயமாக்கலில் கவனம் செலுத்தியுள்ளோம்” என்று திரு மோடி கூறினார். …
Read More »இந்தியா-நேபாள கூட்டு ராணுவப் பயிற்சிக்காக இந்திய ராணுவக் குழு நேபாளம் புறப்பட்டது
சூர்ய கிரண் என்ற கூட்டு ராணுவப் பயிற்சியின் 18-வது பதிப்பில் பங்கேற்பதற்காக 334 வீரர்களைக் கொண்ட இந்திய ராணுவக் குழு இன்று நேபாளத்திற்குப் புறப்பட்டது. இந்த பயிற்சி நேபாளத்தின் சல்ஜண்டியில் 2024 டிசம்பர் 31 முதல் 2025 ஜனவரி 13 வரை நடத்தப்படும். இது இரு நாடுகளிலும் மாறி மாறி நடத்தப்படும் வருடாந்திரப் பயிற்சி நிகழ்வாகும். இந்திய இராணுவப் பிரிவை 11-வது கோர்கா ரைபிள்ஸைச் சேர்ந்த ஒரு படைப் பிரிவு வழிநடத்துகிறது. நேபாள …
Read More »தற்சார்பு இந்தியா: இந்திய ராணுவத்திற்கான ஆயுத கொள்முதலுக்காக எல் அண்ட் டி நிறுவனத்துடன் 7,629 கோடி ரூபாய் ஒப்பந்தம்
லார்சன் & டூப்ரோ லிமிடெட் நிறுவனத்துடன் 155 மிமீ / 52 காலிபர் கே 9 வஜ்ரா-டி ரக பீரங்கிகள் கொள்முதல் செய்வதற்காக 7,628.70 கோடி ரூபாய் மதிப்பிலான ஒப்பந்தத்தில் பாதுகாப்பு அமைச்சகம் கையெழுத்திட்டுள்ளது. 2024-ம் ஆண்டு டிசம்பர் 20-ம் தேதி புதுதில்லியில் நாடாளுமன்ற வளாகத்தில் பாதுகாப்பு அமைச்சகத்தின் செயலாளர் திரு ராஜேஷ் குமார் சிங் முன்னிலையில் அமைச்சகத்தின் மூத்த அதிகாரிகள் மற்றும் எல் அண்ட் டி நிறுவனத்தின் பிரதிநிதிகள் இந்த …
Read More »ஜெனரல் அசோக் ராஜ் சிக்டலுக்கு இந்திய ராணுவத்தின் கவுரவ ஜெனரல் பதவியை குடியரசுத் தலைவர் வழங்கினார்
குடியரசுத் தலைவர் திருமதி திரௌபதி முர்மு இன்று (டிசம்பர் 12, 2024) குடியரசுத் தலைவர் மாளிகையில் நடைபெற்ற சிறப்பு பதவியேற்பு விழாவில், நேபாள இராணுவத்தின் இராணுவத் தளபதி சுப்ரபால் ஜனசேவஸ்ரீ ஜெனரல் அசோக் ராஜ் சிக்டெலுக்கு இந்திய இராணுவத்தின் கௌரவ ஜெனரல் பதவியை வழங்கினார். அவரது பாராட்டத்தக்க இராணுவ வலிமை மற்றும் இந்தியா-நேபாளம் இடையே நீண்டகாலமாக நட்புறவை வளர்ப்பதில் அவர் ஆற்றிய பங்களிப்பிற்காக இவ்விருது அவருக்கு வழங்கப்பட்டுள்ளது.
Read More »
Matribhumi Samachar Tamil