Sunday, December 07 2025 | 09:41:23 AM
Breaking News

Tag Archives: Indian Coast Guard

இந்திய கடலோர காவல்படை தமது 49-வது நிறுவன தினத்தைக் கொண்டாடியது

இந்தியக் கடலோரக் காவல்படை நாட்டிற்காக சுமார் 50 ஆண்டுகளாக மேற்கொண்ட அர்ப்பணிப்புள்ள சேவையைக் குறிக்கும் வகையில் 2025 பிப்ரவரி 01 அன்று தனது 49-வது நிறுவன தினத்தைக் கொண்டாடியது. இந்நிகழ்ச்சியில், குடியரசுத் தலைவர், துணைக் குடியரசுத்தலைவர், பிரதமர், பாதுகாப்பு அமைச்சர் ஆகியோர் இந்திய கடலோர காவல்படையின் குறிப்பிடத்தக்க சாதனைகள் மற்றும் நாட்டின் கடல்சார் நலன்களைப் பாதுகாப்பதில் குறிப்பிடத்தக்க பங்களிப்பை அங்கீகரித்து, தங்கள் மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்தனர். இந்த நாளைக் குறிக்கும் வகையில், இந்திய கடலோர காவல்படையின் இயக்குநர் ஜெனரல் பரமேஷ் சிவமணி, புதுதில்லியில் உள்ள தேசிய போர் நினைவிடத்தில் மலர்வளையம் வைத்து, நாட்டின் சேவையில் தங்கள் இன்னுயிரை நீத்த வீரர்களுக்கு மரியாதை செலுத்தினார். 1977-ஆண்டு தொடங்கப்பட்டதில் இருந்து ஏழு தளங்களுடன், இந்திய கடலோர காவல்படை ஒரு வலிமைமிக்க சக்தியாக …

Read More »

இந்திய கடலோரக் காவல்படை, இந்தோனேசிய கடலோரக் காவல்படை இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தம் மேலும் மூன்று ஆண்டுகளுக்கு புதுப்பிப்பு

இந்திய கடலோரக் காவல்படை மற்றும் இந்தோனேசிய கடலோர காவல்படை ஆகியவற்றுக்கு இடையிலான, கடல்சார் பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பு ஒத்துழைப்பு குறித்த புரிந்துணர்வு ஒப்பந்தம் மேலும் 3 ஆண்டுகளுக்கு புதுப்பிக்கப்பட்டுள்ளது.  புதுதில்லியில் உள்ள கடலோர காவல்படை தலைமையகத்தில் ஜனவரி 27 -ம் தேதி நடைபெற்ற 2-வது உயர்மட்ட கூட்டத்தின் போது, ஒப்பந்தம் புதுப்பிக்கப்பட்டது. புரிந்துணர்வு ஒப்பந்த விதிகளின் கீழ் 2025 ஜனவரி 24 முதல் 28 வரை இந்தியாவுக்கு அதிகாரப்பூர்வ பயணமாக வந்துள்ள எட்டு பேர் கொண்ட குழுவுடன், இந்திய கடலோர காவல் படையின் தலைமை இயக்குநர் ஜெனரல் பரமேஷ் …

Read More »

இந்திய கடலோரக் காவல் படைக்கான ரோந்துக் கப்பல்களைக் கட்டும் பணி மும்பையில் தொடக்கம்

இந்தியக் கடலோரக் காவல் படைக்கான ரோந்துக் கப்பல்களைக் கட்டும் பணி மும்பையில் உள்ள மசாகான் கப்பல் கட்டும் தளத்தில் தொடங்கப்பட்டுள்ளது. கடலோரக் காவல் படைக்கு  14 விரைவு ரோந்து கப்பல்கள், ஆறு அடுத்த தலைமுறை  கடலார ரோந்துக் கப்பல்களை கட்டும் பணி இந்தக் கப்பல் கட்டும் நிறுவனத்துக்கு வழங்கப்பட்டுள்ளது. இந்த இரண்டு வகைக் கப்பல்களில்   முதலாவது கப்பல்கள் கட்டும் பணி 19-ந்தேதி தொடங்கப்பட்டது. இந்தக் கப்பல்களை உருவாக்குவதற்கு எம்டிஎல்  நிறுவனத்திற்கு ரூ. 2,684 கோடி ஒப்பந்தம் வழங்கப்பட்டுள்ளது. கண்காணிப்புக்கான …

Read More »