பிரதமர் திரு நரேந்திர மோடியின் பரீட்சைக்கு பயமேன் என்ற புத்தகத்தால் ஈர்க்கப்பட்டு, புதுதில்லி முனிசிபல் கவுன்சில் (NDMC- என்எம்டிசி) நடத்திய தேர்வு வீரர்கள் நிகழ்ச்சியில் மத்திய தகவல் ஒலிபரப்பு, ரயில்வே, மின்னணு, தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் திரு அஸ்வினி வைஷ்ணவ் பங்கேற்றார். இந்த முயற்சி மாணவர்களிடையே நேர்மறையான நம்பிக்கையையும், படைப்பாற்றலையும் உருவாக்க உதவுவதை நோக்கமாகக் கொண்டது. இதனால் அவர்கள் அமைதியான, சீரான மனநிலையுடன் தேர்வுகளை அணுக முடியும். சுமார் 4,000 மாணவர்கள் பிரதமரின் புத்தகத்தின் செய்திகளால் ஈர்க்கப்பட்டு …
Read More »சுற்றுச்சூழல் மறுசீரமைப்புக்கான நடவடிக்கையாக புதுவை பல்கலைக்கழகத்தில் மரக்கன்று நடும் நிகழ்வு
புதுவை பல்கலைக்கழகம் அதன் வெள்ளி விழா வளாகத்தில் நடைபெற்ற மரம் நடும் நிகழ்வின் மூலம் சுற்றுச்சூழல் நிலைத்தன்மைக்கான தனது உறுதிப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்தியது. 104 மரங்களை வேரோடு சாய்த்த ஃபெங்கல் சூறாவளி காரணமாக இழந்த பசுமையை மீட்டெடுப்பதும், வளாகத்தில் பல்லுயிர் பெருக்கத்தை மேம்படுத்துவதும் இந்த முயற்சியின் நோக்கமாகும். இதன் ஒரு பகுதியாக 1,040 மரக்கன்றுகள் நடப்பட்டன. இந்நிகழ்ச்சியை, தலைமை விருந்தினரான புதுச்சேரியின் துணை நிலை ஆளுநர் மற்றும் புதுவை பல்கலைக்கழகத்தின் முதன்மை …
Read More »அடித்தள அளவில் நிர்வாகத்தை மேம்படுத்துவதற்காக ‘விக்சித் பஞ்சாயத்து கர்மயோகி’ முன்முயற்சியை மத்திய இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் தொடங்கி வைத்தார்
அடிமட்ட அளவில் நிர்வாகத்தை வலுப்படுத்துவதற்கான ஒரு குறிப்பிடத்தக்க நடவடிக்கையாக, முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாயின் 100 வது பிறந்த நாளைக் குறிக்கும் நல்லாட்சி தினத்தன்று ‘விக்சித் பஞ்சாயத்து கர்மயோகி’ முன்முயற்சியை மத்திய பணியாளர் நலன், பொதுமக்கள் குறை தீர்ப்பு, ஓய்வூதியத் துறை இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் தொடங்கி வைத்தார். பரந்த ‘பிரஷசன் கான் கி அவுர்’ இயக்கத்தின் ஒரு பகுதியாக இருக்கும் இந்த முயற்சி, தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள், அதிகாரிகளை பயனுள்ள ஆளுகைக்கும் பங்கேற்பு திட்டமிடலுக்கும் தேவையான அறிவுடன் தயார்படுத்தும். இதன் …
Read More »டாக்டர் மன்சுக் மாண்டவியா ‘ஃபிட் இந்தியா சண்டேஸ் ஆன் சைக்கிள்’ முன்முயற்சியைத் தொடங்கி வைத்தார்
இந்த வார தொடக்கத்தில் மத்திய இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் டாக்டர் மன்சுக் மாண்டவியா, ‘ஃபிட் இந்தியா சண்டேஸ் ஆன் சைக்கிள்’ முன்முயற்சியை இன்று காலை இங்குள்ள மேஜர் தியான் சந்த் நேஷனல் ஸ்டேடியத்தில் கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்த நிகழ்வில் மத்திய ரிசர்வ் போலீஸ் படை மற்றும் இந்தோ-திபெத்திய எல்லைக் காவல் , இந்திய விளையாட்டு ஆணையம் மற்றும் ஸ்டேடியத்தைச் சேர்ந்த இளம் உடற்பயிற்சியாளர்கள் உட்பட 500க்கும் மேற்பட்ட வீரர்கள் கலந்து கொண்டனர். சைக்கிள் ஓட்டுதலின் பரவலான தாக்கத்தைப் பற்றி டாக்டர் மன்சுக் மாண்டவியா , “ஃபிட் இந்தியா சண்டேஸ் ஆன் சைக்கிள் முன்முயற்சியானது இந்தியாவில் 1100+ இடங்களில் ஒரே நேரத்தில் நடத்தப்படுகிறது. இந்த வார தொடக்கத்தில் தொடங்கப்பட்ட சைக்கிள் ஓட்டுதல் பற்றிய விழிப்புணர்வை அதிவேகமாக பரப்பியுள்ளது’’ என்றார். “சைக்கிள் ஓட்டுவது இன்றைய தேவை. வளர்ந்த பாரதத்தின் பார்வைக்கு ஆரோக்கியமான தனிநபர் தேவை, அவர் ஆரோக்கியமான சமூகத்தை உருவாக்குகிறார், இறுதியில் ஆரோக்கியமான தேசத்தை உருவாக்குகிறார். சைக்கிள் ஓட்டுதலின் நன்மைகள், 2019-ல் மாண்புமிகு பிரதமர் திரு நரேந்திர மோடியால் தொடங்கப்பட்ட ஃபிட் இந்தியா இயக்கத்தின் செய்தியை நிலைநிறுத்துகிறது,” என்று விளையாட்டுத் துறை அமைச்சர் மேலும் கூறினார். தேசிய தலைநகரில் நடந்த நிகழ்வில் சிஆர்பிஎப் மற்றும் ஐடிபிபி-யைச் சேர்ந்த ஏராளமான சைக்கிள் ஓட்டுநர்கள் கலந்து கொண்டனர், மேலும் அவர்கள் உடற்பயிற்சி மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு இரண்டையும் ஊக்குவிக்கும் முயற்சியின் ஒரு பகுதியாக இருப்பதில் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். ‘ஃபிட் இந்தியா சண்டேஸ் ஆன் சைக்கிள்’ இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டு அமைச்சகம், இந்திய சைக்கிள் ஓட்டுதல் கூட்டமைப்பு மற்றும் மை பாரத் ஆகியவற்றுடன் இணைந்து ஏற்பாடு செய்துள்ளது. நாடு முழுவதும் உள்ள இந்திய விளையாட்டு ஆணையத்தின் பிராந்திய மையங்கள், தேசிய சிறப்பு மையங்கள் மற்றும் கேலோ இந்தியா மையங்கள் ஆகியவற்றில் ஒரே நேரத்தில் நிகழ்வுகள் நடத்தப்படுகின்றன.
Read More »
Matribhumi Samachar Tamil