ஐஎன்எஸ் துஷில் போர்க்கப்பல், 2025 பிப்ரவரி 7 அன்று ஆப்பிரிக்காவின் செஷல்ஸ் துறைமுகத்திற்குச் சென்றடைந்தது. இந்திய தூதரக அதிகாரிகளும் இந்திய கடற்படை படைப்பிரிவு அதிகாரிகளும் கப்பலை வரவேற்றனர். இந்த துறைமுக அழைப்புப் பயணத்தின் போது, கட்டளை அதிகாரி கேப்டன் பீட்டர் வர்கீஸ், செஷல்ஸுக்கான இந்திய தூதர் திரு கார்த்திக் பாண்டே, செஷல்ஸ் பாதுகாப்புப் படைகளின் தலைவர் மேஜர் ஜெனரல் மைக்கேல் ரோசெட் ஆகியோர் பங்கேற்றனர். செஷல்ஸ் உடனான இந்தியாவின் இருதரப்பு உறவு வரலாற்று ரீதியான …
Read More »ஐஎன்எஸ் துஷில் செனகலின் டாக்கர் சென்றடைந்தது
இந்தியக் கடற்படையின் புதிய போர்க்கப்பலான ஐஎன்எஸ் துஷில், 03 ஜனவரி 25 அன்று செனகலின் டாக்கர் துறைமுகத்திற்குச் சென்றது. இந்தப் பயணம் செனகலுடனான தற்போதைய உறவுகளை மேலும் வலுப்படுத்தும். மேலும், இரு நாட்டு கடற்படைகளுக்கு இடையேயான தொடர்புகளை மேம்படுத்தும். ஐஎன்எஸ் துஷில், கேப்டன் பீட்டர் வர்கீஸ் தலைமையில், துறைமுக அழைப்பின் போது பல்வேறு ராணுவ மற்றும் சமூக நிகழ்ச்சிகளில் ஈடுபடும். மூத்த செனகல் ராணுவம் மற்றும் அரசு அதிகாரிகளுடனான தொடர்புகள் …
Read More »இந்தியாவுக்கான பயணத்தை ஐ.என்.எஸ். துஷில் தொடங்கியது
அண்மையில் இந்தியக் கடற்படையில் இணைக்கப்பட்ட பன்னோக்கு ஏவுகணை போர்க்கப்பலான ஐ.என்.எஸ் துஷில், ரஷ்யாவின் கலினின்கிராடில் இருந்து இந்தியாவுக்கு 2024 டிசம்பர் 17 அன்று தனது பயணத்தைத் தொடங்கியது. இந்தப் போர்க் கப்பல் ரஷ்யாவில் கட்டப்பட்டு, 2024 டிசம்பர் 9-ம் தேதி அன்று பாதுகாப்புத்துறை அமைச்சர் திரு ராஜ்நாத் சிங் முன்னிலையில் இயக்கி வைக்கப்பட்டது. இந்தப் போர்க்கப்பல் பால்டிக், வடகடல், அட்லாண்டிக் பெருங்கடல், வழியாக பயணம் செய்து இந்தியப் பெருங்கடலைக் கடந்து, பல்வேறு நட்பு நாடுகளின் துறைமுகங்கள் வழியாக இந்தியா வந்து சேரும். ஐ.என்.எஸ் துஷில் போர்க்கப்பல் இந்தியக் கடற்படையின் ராஜதந்திரமிக்க நடவடிக்கைகளின் ஒரு அங்கமாக உள்ளது. இந்தப் போர்க்கப்பல் கடற்கொள்ளைகளைத் தடுப்பது, முக்கிய கடற்பகுதிகளில் ரோந்துப் பணியில் ஈடுபடுவது, கடல்சார் கூட்டுப் பயிற்சிகளை மேற்கொள்வது ஆகிய பணிகளில் ஈடுபடுத்தப்படும்.
Read More »
Matribhumi Samachar Tamil