Tuesday, December 24 2024 | 08:01:38 AM
Breaking News

Tag Archives: integrity

சௌத்ரி சரண் சிங் வெளிப்படைத்தன்மை, பொறுப்புடைமை, ஒருமைப்பாடு மற்றும் அச்சமற்ற தலைவர் போன்றவற்றுக்கு எடுத்துக்காட்டு- குடியரசு துணைத் தலைவர்

விவசாயம், கிராமப்புற மேம்பாடு மற்றும் பத்திரிக்கைத் துறையில் சிறந்து விளங்கும் சாதனையாளர்களை கவுரவிக்கும் 2024 ஆம் ஆண்டுக்கான சவுத்ரி சரண் சிங் விருதுகளை குடியரசு துணைத் தலைவர் திரு ஜக்தீப் தன்கர் இன்று வழங்கினார். நிகழ்ச்சியில் பேசிய திரு தன்கர், சௌத்ரி சரண் சிங்கின் அசாதாரண பாரம்பரியத்தைப் பாராட்டினார், கிராமப்புற மேம்பாடு, விவசாயிகள் நலன் மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சியில் அவரது இடைவிடாத அர்ப்பணிப்பை அவர் சுட்டிக்காட்டினார். “சௌத்ரி சரண் சிங் நாட்டின் தலைசிறந்த மனிதர்களில் ஒருவர். வெளிப்படைத்தன்மை, பொறுப்புடைமை, ஒருமைப்பாடு, கிராமப்புற மேம்பாட்டிற்கான அர்ப்பணிப்பு, விவசாயிகளுக்கான அர்ப்பணிப்பு மற்றும் தனது கருத்துக்களை அச்சமின்றி வெளிப்படுத்தும் ஒரு தலைவர் , ”என்று குடியரசு துணைத் தலைவர் கூறினார். “சௌத்ரி சரண் சிங் கம்பீரமான தன்மை, அரசாட்சி, தொலைநோக்கு மற்றும் உள்ளடக்கிய வளர்ச்சி ஆகியவற்றால் வரையறுக்கப்படுகிறார். அவர் இந்தியக் குடியரசின் மிகப்பெரிய மாநிலத்தின் முதல் முதலமைச்சராகவும், பின்னர் பிரதமராகவும் ஆனார் என்பதில் ஆச்சரியமில்லை என்று திரு தன்கர் கூறினார். அவரது பங்களிப்புகளுக்கு அங்கீகாரம் கிடைக்காதது குறித்து கவலை தெரிவித்த அவர், “இந்த மனிதரின் மகத்தான பங்களிப்பை மதிப்பிடுவதில் மக்கள் தொலைநோக்கு பார்வையற்றவர்களாக இருப்பது மனதிற்கு வேதனை அளிக்கிறது. அவரது அற்புதமான குணங்கள், அவரது ஆழ்ந்த அர்ப்பணிப்பு மற்றும் கிராமப்புற இந்தியா பற்றிய அவரது அறிவு ஆகியவை உலகெங்கிலும் உள்ள அறிவொளி பெற்ற நபர்களின் பிரதிபலிப்புக்கு உட்பட்டவை. மண்ணின் மகன், அவர் கிராமப்புற இந்தியாவை மட்டுமல்ல, நகர்ப்புற இந்தியாவையும் நமது நாகரிக நெறிமுறைகளுடன் இணைந்த பார்வையுடன் கவனத்தில் கொண்டார்’’ என்றார். இன்று புது தில்லியில் சௌத்ரி சரண் சிங் விருதுகள் 2024 விருது பெற்றவர்களிடம் உரையாற்றிய குடியரசு துணைத் தலைவர், “கிராமப்புற வளர்ச்சியின் முதுகெலும்பு விவசாயம். விவசாயம் வளர்ச்சியடையாத வரை, கிராமப்புற நிலப்பரப்பை மாற்ற முடியாது. கிராமப்புற நிலப்பரப்பு மாறாத வரை, நாம் ஒரு வளர்ந்த தேசத்தை விரும்ப முடியாது என்று கூறினார். இந்தியாவின் பொருளாதாரப் பாதையைப் பற்றி விவாதித்த அவர், “சந்தேகத்திற்கு இடமின்றி, தற்போது, இந்தியா முன் எப்போதும் இல்லாத வகையில் உயர்ந்து வருகிறது. சந்தேகத்திற்கு இடமின்றி, நமது பொருளாதாரம் வளர்ந்து வருகிறது. நாங்கள் உலகளவில் ஐந்தாவது பெரிய நாடு மற்றும் ஜப்பான் மற்றும் ஜெர்மனியை விட மூன்றாவது பெரிய இடத்தைப் பெறுவதற்கான பாதையில் இருக்கிறோம். ஆனால் 2047-க்குள் வளர்ந்த நாடாக இருக்க, நமது வருமானம் எட்டு மடங்கு அதிகரிக்க வேண்டும் – இது ஒரு கடினமான சவால்’’ என்றார். இந்தச் சவாலை எதிர்கொள்ள, கிராமப் பொருளாதாரத்தை வலுப்படுத்த வேண்டியதன் அவசியத்தை  அவர் வலியுறுத்தினார்: “விவசாயிகளும் அவர்களது குடும்பமும் சந்தைப்படுத்துதல், மதிப்பு கூட்டுதல், மற்றும் கிளஸ்டர்களை உருவாக்குதல் போன்றவற்றில் ஈடுபட்டு தன்னிறைவுக்கு வழிவகுக்கும் போதுதான் கிராமப் பொருளாதாரம் உயரும். எங்களிடம் உள்ள மிகப்பெரிய சந்தை விவசாய விளைபொருள்கள் ஆகும், இருப்பினும் விவசாய சமூகங்கள் அதில் ஈடுபடவில்லை. விவசாயத் துறையானது பொருளாதார வளர்ச்சியின் இயந்திரமாக மாறுவதற்கு அரசுகளால் முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும் ‘’ என கேட்டுக் கொண்டார். குடியரசுத் துணைத் தலைவர் ஜனநாயகத்தின் சாரத்தை அடிக்கோடிட்டுக் காட்டினார்: “வெளிப்பாடும் உரையாடலும் ஜனநாயகத்தை வரையறுக்கின்றன. ஒரு நாடு எவ்வளவு ஜனநாயகமானது என்பது அதன் தனிநபர்கள் மற்றும் அமைப்புகளின் வெளிப்பாட்டின் நிலையால் வரையறுக்கப்படுகிறது. எந்தவொரு ஜனநாயகமும் வெற்றிபெற வேண்டுமானால், இரு தரப்பிலும் பெரும் பொறுப்புடன் கருத்துப் பரிமாற்றமும் உரையாடலும் ஒன்றாகச் செல்ல வேண்டும் என்றார். நாடாளுமன்ற உறுப்பினர்கள் மத்தியில் பொறுப்பு வேண்டும் என்று அவர் அழைப்பு விடுத்தார்.  “இந்த விருதுகள், சந்ததியினர் சுயமாக நிலைநிறுத்தப்பட வேண்டும் என்பதற்காகக் கட்டமைக்கப்பட வேண்டும். செயல்பாட்டின் நெகிழ்வுத்தன்மைக்கு நிதி வலிமை அடிப்படையாகும். கிராமப்புற இந்தியாவின் நலன், விவசாயிகளின் நலன் – அது கார்ப்பரேட் துறை, அறிவுஜீவிகள் அல்லது பிற சமூகங்களில் இருந்து வருபவர்கள் – இது போன்ற நம்பிக்கையை வளர்க்க முன்வர வேண்டும். மற்றொரு சௌத்ரி சரண் சிங் வருவதற்கான நேரம் இது’’ என அவர் தெரிவித்தார். சௌத்ரி சரண் சிங் விருதுகள் 2024 விவசாயம், கிராமப்புற மேம்பாடு மற்றும் பத்திரிகை ஆகியவற்றில் குறிப்பிடத்தக்க பங்களிப்பைக் கொண்டாடியது. கலாம் ரத்னா விருது திருமதி நீரஜா சௌத்ரிக்கு நுண்ணறிவு கொண்ட பத்திரிகையில் அர்ப்பணிப்பிற்காக வழங்கப்பட்டது. “இந்தியாவின் நீர்மனிதன்” டாக்டர் ராஜேந்திர சிங்கிற்கு நீர் பாதுகாப்பில் முன்னோடியாக இருந்த முயற்சிகளுக்காக சேவா ரத்னா விருது வழங்கப்பட்டது. விவசாய ஆராய்ச்சி மற்றும் கண்டுபிடிப்புகளை மேம்படுத்தியதற்காக டாக்டர் ஃபிரோஸ் ஹொசைனுக்கு கிரிஷாக் உத்தன் விருது கிடைத்தது. கடைசியாக, கிசான் விருது திரு. ப்ரீதம் சிங்கின் விவசாயச் சிறப்பிற்கு அவர் ஆற்றிய பங்களிப்பிற்காக வழங்கப்பட்டது. திறன் மேம்பாடு மற்றும் தொழில்முனைவோர்க்கான மத்திய இணை அமைச்சர் (தனி பொறுப்பு)  திரு ஜெயந்த் சவுத்ரி, மற்றும் பிற பிரமுகர்களும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

Read More »