நிலக்கரி அமைச்சகத்தின் நியமன ஆணையம், மீனாட்சி நிலக்கரி சுரங்கத்திற்கான உரிமை ஒப்படைப்பு ஆணை ஹிண்டால்கோ இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் நிறுவனத்துக்கு இன்று வழங்கியது. இது நவம்பர் 22, 2024 அன்று நிலக்கரி சுரங்க மேம்பாடு மற்றும் உற்பத்தி ஒப்பந்தம் கையெழுத்தானதன் தொடர்ச்சியாகும். மீனாட்சி நிலக்கரி சுரங்கம் அதன் உச்ச மதிப்பிடப்பட்ட திறன் அடிப்படையில் ரூ.1,152.84 கோடி ஆண்டு வருவாயை உருவாக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ரூ.1,800 கோடி மூலதன முதலீட்டுடன், இந்தச் சுரங்கம் நாட்டின் நிலக்கரி உற்பத்தியைக் …
Read More »விதிமுறைகளை மீறிய 17 நிறுவனங்களுக்கு மத்திய நுகர்வோர் பாதுகாப்பு ஆணையம் நோட்டீஸ்
நுகர்வோர் பாதுகாப்பு (நேரடி விற்பனை) விதிகள், 2021ஐ மீறியதாகக் கண்டறியப்பட்ட 17 நிறுவனங்களுக்கு மத்திய நுகர்வோர் பாதுகாப்பு ஆணையம் (சிசிபிஏ) நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இவற்றில் 13 நிறுவனங்கள் மீதான புகார்கள் தற்போது விசாரணையில் உள்ளன. மூன்று நிறுவனங்களிடமிருந்து பதில் எதிர்பார்க்கப்படுகிறது. நுகர்வோர் உரிமைகளை நிலைநிறுத்துவதற்கான அதன் உறுதிப்பாட்டின் ஒரு பகுதியாக, நேரடி விற்பனை நடவடிக்கைகளை ஒழுங்குபடுத்துதல், தொடர்புடைய சட்ட கட்டமைப்புடன் இணங்குவதை உறுதி செய்தல் ஆகியவற்றில் சிசிபிஏ தனது கவனத்தை தீவிரப்படுத்தியுள்ளது. இது சம்பந்தமாக, இந்த நேரடி விற்பனை நிறுவனங்களின் வலைத்தளங்களை ஆணையம் கவனமாக ஆய்வு செய்தது. …
Read More »
Matribhumi Samachar Tamil