கர்நாடகாவின் பெலகாவி மாவட்டம் அதானியில் மராட்டிய மன்னரான சத்ரபதி சிவாஜி மகாராஜின் 25 அடி உயர சிலையை மத்திய தொலைத் தொடர்புத் துறை அமைச்சர் திரு ஜோதிராதித்ய சிந்தியா இன்று (14.12.2025) திறந்து வைத்தார். இந்த நிகழ்வு வரலாற்றுச் சிறப்புமிக்கது என அவர் கூறினார். இது வெறும் சிலை திறப்பு விழா மட்டுமல்ல என்றும் இந்தியாவின் சுயமரியாதை, துணிச்சல் ஆகிய உணர்வுகளை எதிர்கால சந்ததியினருக்கு எடுத்துச் செல்வதற்கான ஒரு விழா என்றும் கூறினார். “ஜெய் பவானி, ஜெய் சிவாஜி” என்ற முழக்கம் இன்றும் கூட ஒவ்வொரு இந்தியரிடமும் அச்சமின்மை, தேசிய கடமை உணர்வைத் தூண்டி வருவதாக அவர் குறிப்பிட்டார். சத்ரபதி சிவாஜி மகாராஜின் வாழ்க்கையையும் போராட்டங்களையும் அவர் நினைவு கூர்ந்தார். சிவாஜி மகாராஜின் வீரத்திற்கு பெலகாவி பகுதியும் அதானி நிலமும் ஒரு சாட்சியாக இருந்துள்ளது என்று அவர் எடுத்துரைத்தார். பெலகாவி மண்ணில், வீரம், சுயமரியாதை ஆகியவற்றின் அழியாத சரித்திரம் நிலைப்பெற்றுள்ளது என்று அவர் கூறினார். சிவாஜி மகாராஜால் ஈர்க்கப்பட்டு நவீன இந்தியா முன்னேறுகிறது என்று அவர் குறிப்பிட்டார். இந்த சிலை வருங்கால சந்ததியினரை தொடர்ந்து ஊக்குவிக்கும் என்று திரு ஜோதிராதித்ய சிந்தியா கூறினார்.
Read More »மத்திய அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா, பம்பாய் ஜிம்கானாவின் 150-வது ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில் ஒரு நினைவு தபால் தலையை வெளியிட்டார்
பாம்பே ஜிம்கானாவின் 150-வது ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில், அதன் விளையாட்டு சிறப்புமிக்க பாரம்பரியம் மற்றும் தேசத்திற்கு அதன் நீடித்த கலாச்சார பங்களிப்பைக் கொண்டாடும் வகையில் அஞ்சல் துறை ஒரு நினைவு தபால் தலையை வெளியிட்டுள்ளது. இந்த நினைவு தபால் தலையை மும்பையில் உள்ள பம்பாய் ஜிம்கானாவில் மத்திய தொலைத்தொடர்புத் துறை அமைச்சர் திரு ஜோதிராதித்ய சிந்தியா முறையாக வெளியிட்டார். பம்பாய் ஜிம்கானாவின் தலைவர் திரு சஞ்சீவ் சரண் மெஹ்ரா, நவி மும்பை பிராந்தியத்தின் போஸ்ட் மாஸ்டர் ஜெனரல் திருமிகு சுசிதா ஜோஷி மற்றும் பலர் இதில் கலந்து கொண்டனர். இந்த நிகழ்வில் பேசிய திரு ஜோதிராதித்ய சிந்தியா, விளையாட்டைப் போலவே, இந்த அஞ்சல் முத்திரையும் கதைகளையும் மதிப்புகளையும் சுமந்து செல்கிறது. இளம் சிறுவர் சிறுமிகள் விளையாட்டுகளில் ஈடுபடவும், சுறுசுறுப்பாக இருக்கவும், வாழ்க்கையை நேர்மறையாக வடிவமைக்கும் நிறுவனங்களின் சக்தியை நம்பவும் தூண்டுகிறது என்று அவர் குறிப்பிட்டார். 1875 ஆம் ஆண்டு நிறுவப்பட்ட பம்பாய் ஜிம்கானா, இந்தியாவின் விளையாட்டு மற்றும் சமூக பாரம்பரியத்தின் ஒரு தனித்துவமான தூணாக நிற்கிறது. பல தலைமுறை விளையாட்டு வீரர்களை வளர்த்து வருகிறது, அதே நேரத்தில் கலாச்சார மற்றும் விளையாட்டு நோக்கங்களுக்கான துடிப்பான மையமாகவும் செயல்படுகிறது. ஒன்றரை நூற்றாண்டு காலமாக, விளையாட்டுத்திறன், தோழமை மற்றும் வலுவான சமூக ஈடுபாட்டு உணர்வை வளர்ப்பதில் இந்த நிறுவனம் முக்கிய பங்கு வகித்துள்ளது.
Read More »புதிய சஞ்சார் சாத்தி மொபைல் செயலி உட்பட குடிமக்களை மையமாகக் கொண்ட தொலைத்தொடர்பு வசதிகளை மத்திய அமைச்சர் திரு ஜோதிராதித்ய சிந்தியா தொடங்கி வைத்தார்
நாடு முழுவதும் தொலைத் தொடர்பு அணுகல், பாதுகாப்பு, அதிகாரமளித்தல் ஆகியவற்றை மேம்படுத்துவதற்கான ஒரு முக்கிய நடவடிக்கையாக, மத்திய தகவல் தொடர்புத் துறை அமைச்சர் திரு ஜோதிராதித்யா எம். சிந்தியா இன்று (17.01.2025) குடிமக்களை மையமாகக் கொண்ட முன்முயற்சிகளின் தொகுப்பை அறிமுகப்படுத்தினார். சஞ்சார் சாத்தி மொபைல் செயலி, தேசிய அகண்ட அலைவரிசை இயக்கம் 2.0, டிபிஎன் நிதியுதவி பெறும் 4ஜி மொபைல் தளங்களில் இன்ட்ரா சர்க்கிள் ரோமிங் வசதியின் தொடக்கம் ஆகியவை இந்த நிகழ்வின் சிறப்பம்சங்களாகும். சஞ்சார் சாத்தி மொபைல் செயலி என்பது …
Read More »வடகிழக்குப் பிராந்தியத்தில் முதலீடு செய்யுமாறு மத்திய அமைச்சர் திரு ஜோதிராதித்ய சிந்தியா வேண்டுகோள்
வடகிழக்கு பிராந்திய மேம்பாட்டு அமைச்சகம், மும்பையில் வடகிழக்கு வர்த்தகம் மற்றும் முதலீட்டு சாலைப் பேரணியை நடத்தியது. இந்தியாவின் முக்கிய நகரங்களில் ஒரு வருட கால தொடர் சாலைப் பேரணிகளைத் தொடர்ந்து, மும்பையில் நடந்த இந்த சாலைப் பேரணியானது இந்தியாவின் பொருளாதார மையத்தின் கவனத்தை ஈர்த்தது. இந்த நிகழ்ச்சியில் மத்திய தகவல் தொடர்பு மற்றும் வடகிழக்கு பிராந்திய மேம்பாட்டுத் துறை அமைச்சர் திரு ஜோதிராதித்ய எம். சிந்தியா, திரிபுரா முதல்வர் பேராசிரியர் …
Read More »இந்திய அஞ்சல், தொலைத்தொடர்பு கணக்குகள் – நிதிப் பணிகள் சேவை அமைப்பின் 50-வது நிறுவன தின கொண்டாட்டம்: குடியரசுத் துணைத் தலைவர் திரு ஜக்தீப் தன்கர், மத்திய அமைச்சர் திரு ஜோதிராதித்ய சிந்தியா ஆகியோர் பங்கேற்பு
இந்திய அஞ்சல், தொலைத்தொடர்பு கணக்குகள் – நிதிச் சேவை அமைப்பு (IP&TAFS) தனது 50-வது நிறுவன தினத்தை புதுதில்லியில் இன்று (14.12.2024) கொண்டாடியது. குடியரசுத் துணைத் தலைவர் திரு ஜக்தீப் தன்கர் தலைமை விருந்தினராக இதில் பங்கேற்றார். மத்திய தொலைத் தொடர்புத் துறை அமைச்சர் திரு ஜோதிராதித்ய எம். சிந்தியா நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். குடிமைப் பணி அதிகாரிகள் தொழில்நுட்ப நுண்ணறிவு கொண்டவர்களாகவும், பாரம்பரிய நிர்வாக எல்லைகளைக் கடந்து மாற்றத்தை …
Read More »
Matribhumi Samachar Tamil