டிசம்பர் 2-ம் தேதி தொடங்கும் காசி தமிழ் சங்கமத்தின் நான்காவது ஆண்டு நிகழ்வுக்கு காசி தயாராகி வரும் நிலையில், அதில் பங்கேற்க இளைய தலைமுறையினரிடையே அதிக உற்சாகம் காணப்படுகிறது. இந்த நிகழ்வு காசிக்கும் தமிழ்நாட்டிற்கும் இடையிலான கலாச்சார, மொழியியல் உறவுகளை இளம் தலைமுறையினருக்குக் கொண்டு செல்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது. நவம்பர் 29 அன்று கன்னியாகுமரியில் இருந்து சிறப்பு ரயிலில் பயணத்தைத் தொடங்கிய முதல் குழுவில் ஏராளமான மாணவர்கள் உள்ளனர். நீண்ட ரயில் பயணம், விளையாட்டுகள், குழு நடவடிக்கைகள், கலகலப்பான உரையாடல்கள், ஆக்கப்பூர்வமான ஒத்துழைப்புகள் ஆகியவை நிறைந்த கலாச்சார மகிழ்ச்சிப் பயணமாக இது மாறியுள்ளது. இந்த அனுபவம் இளைஞர்களுக்கு மறக்க முடியாததாகவும் அர்த்தமுள்ளதாகவும் அமைந்துள்ளது. இந்த சிறப்பு ரயிலில் பயணிக்கும் தமிழ்நாட்டைச் சேர்ந்த அர்ச்சனா கூறுகையில், நான்காவது ஆண்டு காசி தமிழ் சங்கமத்தில் கலந்து கொள்வதில் மகிழ்ச்சி அடைவதாகக் கூறினார். இந்த வாய்ப்பை ஒரு தெய்வீக ஆசீர்வாதமாகக் கருதுவதாகவும் அவர் கூறினார். காசியின் வளமான ஆன்மீக, கலாச்சார பாரம்பரியத்தை முதல் முறையாக அனுபவிக்க ஆவலுடன் காத்திருப்பதாக அவர் தெரிவித்தார். திருப்பூரைச் சேர்ந்த மாலதி என்ற மற்றொரு மாணவி கூறுகையில், தமிழ்நாடும் காசியும் ஆழமான ஆன்மீகப் பிணைப்பைக் கொண்டுள்ளதாக கூறினார். காசி தமிழ் சங்கமம், அந்த பிணைப்பை நவீன வடிவத்தில் வலுப்படுத்துகிறது என்றும், காசிக்குச் செல்வது தனக்கு மகிழ்ச்சி அளிப்பதாகவும் அவர் கூறினார். இதற்கிடையில், காசியில், இளைய தலைமுறையினரின் உற்சாகமான பங்கேற்புடன், காசி படித்துறைகளிலும் பல்கலைக்கழக வளாகங்களிலும் பல்வேறு நிகழ்வுகள் …
Read More »காசி தமிழ்ச் சங்கம் மாணவர்கள் குழு கோயில்களுக்குச் சென்று வழிபாடு
மூன்றாவது காசி தமிழ்ச் சங்கமத்தின் இரண்டாவது நாளான இன்று, தமிழ்நாட்டைச் சேர்ந்த மாணவர்கள் குழுவினர் வாரணாசியில் உள்ள புனித ஹனுமான் படித்துறைக்குச் சென்று வழிபாடு செய்தனர். ஆன்மீக உணர்வுடன் அவர்கள் கங்கையில் புனித நீராடி, மகிழ்ச்சியும் செழிப்பும் வேண்டிப் பிரார்த்தனை செய்தனர். மரியாதைக்குரிய ஆச்சார்யர்களின் வழிகாட்டுதலைப் பெறும் அதிர்ஷ்டமும் மாணவர்களுக்கு கிடைத்தது. அவர்கள் தங்கள் ஞானத்தைப் பகிர்ந்து கொண்டதுடன், வாரணாசியில் உள்ள பல்வேறு படித்துறைகளின் வளமான வரலாற்று முக்கியத்துவத்தைப் பற்றி …
Read More »மத்திய அமைச்சர் திரு தர்மேந்திர பிரதான், உத்தரப் பிரதேச முதலமைச்சர் திரு யோகி ஆதித்யநாத், மத்திய இணையமைச்சர் டாக்டர் எல். முருகன் ஆகியோர் 3-வது காசி தமிழ்ச் சங்கமத்தைத் தொடங்கி வைத்தனர்
மத்திய கல்வி அமைச்சர் திரு தர்மேந்திர பிரதான், உத்தரப்பிரதேச முதலமைச்சர் திரு யோகி ஆதித்யநாத், மத்திய தகவல் ஒலிபரப்புத் துறை இணையமைச்சர் டாக்டர் எல்.முருகன் காசித் தமிழ்ச் சங்கத்தின் மூன்றாவது பதிப்பை உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசியில் இன்று தொடங்கி வைத்தனர். 3-வது காசி தமிழ்ச் சங்கம் குறித்து பிரதமர் திரு நரேந்திர மோடி தனது வாழ்த்துச் செய்தியில் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். பிரயாக்ராஜில் நடைபெறும் மகாகும்பமேளாவுக்கு மத்தியில் நடைபெறும் இந்த நிகழ்வு …
Read More »காசி தமிழ்ச் சங்கமம் 3-ம் கட்ட பதிவிற்கான இணையதள சேவையை மத்திய அமைச்சர் திரு தர்மேந்திர பிரதான் தொடங்கி வைத்தார்
மத்திய கல்வி அமைச்சர் திரு தர்மேந்திர பிரதான், காசி தமிழ் சங்கமத்தின் 3-வது கட்டப் பதிவிற்கான இணையதளத்தை தொடங்கி வைத்தார். பின்னர் செய்தியாளரிடம் பேசிய அவர் இந்த 3-வது கட்ட காசி தமிழ்ச் சங்கமம் நிகழ்ச்சி 2025 பிப்ரவரி 15-ம் தேதி, உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசியில் தொடங்கும் என்று அறிவித்தார். 10 நாட்கள் நடைபெறும் இந்த நிகழ்வு 2025 பிப்ரவரி 24- ம் தேதி முடிவடையும். சென்னை தொழில்நுட்பக் கல்வி …
Read More »
Matribhumi Samachar Tamil