உத்தரபிரதேச மாநிலம் வாரணாசியில் ‘வளர்ச்சி அடைந்த இந்தியாவுக்கு போதைப் பொருள் இல்லாத இந்தியா’ என்ற கருப்பொருளில் ‘இளைஞர் ஆன்மீக உச்சி மாநாட்டை’ மத்திய இளைஞர் நலன், விளையாட்டுத் துறை அமைச்சர் திரு மன்சுக் மண்டவியா இன்று (19.07.2025) தொடங்கி வைத்தார். உச்சிமாநாட்டின் தொடக்க அமர்வின் போது, பிரதமர் திரு. நரேந்திர மோடியின் சிறப்பு செய்தி பங்கேற்பாளர்களுடன் பகிர்ந்து கொள்ளப்பட்டது. இது இளைஞர்கள் தலைமையிலான இயக்கத்திற்கு உத்வேகத்தையும் வழிகாட்டுதலையும் வழங்குவதாக அமைந்தது. பிரதமர் தமது செய்தியில், “இளைஞர் ஆன்மீக உச்சி மாநாடு 2025 என்பது வலுவான, விழிப்புணர்வுடன் கூடிய, ஒழுக்கமான இளம் இந்திய தலைமுறையை உருவாக்க முயலும் ஒரு பாராட்டத்தக்க முயற்சியாகும். போதைப்பொருள் தனிப்பட்ட திறனைத் தடம் புரளச் செய்வது மட்டுமல்லாமல், சமூகத்தின் அடித்தளத்தையும் பலவீனப்படுத்துகிறது. போதைப்பொருள்களுக்கு எதிரான இந்த கூட்டுப் போராட்டத்தில், சுய விழிப்புணர்வு, சமூக பங்கேற்பு ஆகியவை நமது வழிகாட்டும் கொள்கைகளாக இருக்க வேண்டும்” என்று குறிப்பிட்டார். நாடு முழுவதும் 120-க்கும் மேற்பட்ட ஆன்மீக அமைப்புகளைச் சேர்ந்த 600-க்கும் மேற்பட்ட இளைஞர் பிரதிநிதிகளை ஒன்றிணைத்து நடத்தப்படும் இந்த உச்சிமாநாடு, போதைப் பழக்க அச்சுறுத்தலுக்கு எதிராக இந்தியாவின் இளைஞர் சக்திக்கு ஒரு தெளிவான அழைப்பாகும். அமைச்சர் திரு மன்சுக் மாண்டவியா தமது தொடக்க உரையில், வளர்ச்சி அடைந்த இந்தியா என்ற இலக்கை எட்ட இளைஞர்கள் போதைப் பழக்கத்தின் பிடியிலிருந்து விடுபடுவதை உறுதி செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினார். இந்த நிகழ்வில் பேசிய மத்திய சமூக நீதி, அதிகாரமளித்தல் அமைச்சர் டாக்டர் வீரேந்திர குமார், இந்த உச்சிமாநாடு ஒரு கூட்டு சங்கல்பம் என்று கூறினார். இந்த சங்கல்பத்தை ஒவ்வொரு வீட்டிற்கும், ஒவ்வொரு குடும்பத்திற்கும், ஒவ்வொரு சமூகத்திற்கும் கொண்டு செல்ல வேண்டும் என்றார். மத்திய கலாச்சாரம், சுற்றுலாத்துறை அமைச்சர் திரு கஜேந்திர சிங் ஷெகாவத் தமது உரையில், இந்தியா தற்போது ஆழமான மாற்றத்திற்கான சகாப்தத்தை கடந்து வருவதாகவும், இதுபோன்ற திருப்புமுனைகளின் போது இளைஞர்கள் எப்போதும் முக்கிய பங்கு வகித்துள்ளனர் என்பதை வரலாறு காட்டுகிறது என்றும் எடுத்துரைத்தார். கூட்டுக் குடும்ப அமைப்புகளின் சிதைவு காரணமாக, இன்று பல இளைஞர்கள் எதிர்கொள்ளும் உணர்ச்சி ரீதியான தனிமை குறித்தும் திரு ஷெகாவத் கவலை தெரிவித்தார். கலாச்சார அம்சங்களை மீட்டெடுப்பது நமது கூட்டுப் பொறுப்பாகும் என்று அவர் கூறினார். மத்திய இளைஞர் நலன், விளையாட்டுத் துறை இணையமைச்சர் திருமதி ரக்ஷா நிகில் காட்சே, போதைப் பொருள்களுக்கு எதிராக அரசின் சமரசமற்ற நடவடிக்கைகளை எடுத்துரைத்தார்.
Read More »ஞாயிற்றுக்கிழமைகளில் மிதிவண்டி ஓட்டும் நிகழ்வு – காந்தி நகரில் மத்திய அமைச்சர் திரு மன்சுக் மண்டாவியா தலைமை வகித்தார்
மத்திய இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுகள் அமைச்சர் திரு மன்சுக் மண்டாவியா குஜராத்தின் காந்திநகரில் 500-க்கும் மேற்பட்ட பங்கேற்பாளர்களைக் கொண்ட குழுவிற்கு தலைமை தாங்கி, உடல் திறன் இந்தியா ஞாயிற்றுக்கிழமைகளில் மிதிவண்டி (ஃபிட் இந்தியா சண்டேஸ் ஆன் சைக்கிளிங்) ஓட்டும் நிகழ்வின் 31-வது பதிப்பை வழிநடத்தினார். இதேபோல் இந்த நிகழ்வு இன்று (13.07.2025 – ஞாயிற்றுக்கிழமை) காலை நாடு தழுவிய அளவில் வெற்றிகரமாக நடைபெற்றது. இந்த வாரம் பொதுத்துறை நிறுவனங்களுடன் இணைந்து ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த மிதிவண்டி ஓட்டுதல் நிகழ்வு நாடு முழுவதும் 7000-க்கும் மேற்பட்ட இடங்களில் நடைபெற்றது. காந்தி நகரில் நடைபெற்ற நிகழ்வின்போது பேசிய அமைச்சர், ஞாயிற்றுக் கிழமைகளில் மிதிவண்டி ஒட்டும் நிகழ்வு இப்போது நாடு தழுவிய ஒரு வலுவான முன் முயற்சியாக மாறியுள்ளது என்றார். இது பிரதமர் திரு நரேந்திர மோடியின் உடல் திறன் இந்தியா இயக்கத்தை முழு வீச்சில் முன்னெடுத்துச் செல்கிறது என்றும் அவர் குறிப்பிட்டார். இது உடற்பயிற்சி பற்றியது மட்டுமானதாக இல்லாமல் தேசிய அளவில் ஆரோக்கியம் தொடர்பான ஒரு முக்கிய முயற்சியாகவும் மாறியுள்ளது என்று அமைச்சர் திரு மன்சுக் மண்டாவியா கூறினார். இந்த வார மிதிவண்டி ஓட்டும் நிகழ்வுகளில் ஓஎன்ஜிசி, இந்தியன் ஆயில், கெயில், ஹெச்பிசிஎல், பிபிசிஎல், ஆயில் இந்தியா உள்ளிட்ட பல முன்னணி பொதுத்துறை நிறுவனங்களின் பிரதிநிதிகள் பங்கேற்றனர். தேசிய தலைநகர் புது தில்லியில், மேஜர் தியான் சந்த் மைதானத்தில் கயிறு தாண்டுதல், ஜூம்பா, யோகா நடவடிக்கைகள் உள்ளிட்டவற்றுடன் கூடிய நிகழ்வாக ஞாயிற்றுக்கிழமை மிதிவண்டி ஓட்டும் நிகழ்வு நடைபெற்றது. இதில் 3000-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். குர்கானில் நடைபெற்ற நிகழ்வில் 700 பங்கேற்பாளர்கள் கலந்து கொண்டு மிதிவண்டி ஓட்டுதல், யோகா செய்தல் மற்றும் பல விளையாட்டுகளில் பங்கேற்றனர். டிசம்பர் 2024-ல் தொடங்கப்பட்ட உடல்திறன் இந்தியா ஞாயிற்றுக் கிழமைகளில் சைக்கிள் ஓட்டுதல் இயக்கம் நாடு முழுவதும் தனிநபர்களின் பங்கேற்புடன் நடைபெற்று வருகிறது. இதில் ஒரு பகுதியாக 3000-க்கும் மேற்பட்ட மிதிவண்டி ஓட்டும் சங்கங்கள் இணைந்து ஒவ்வொரு வாரமும் இதில் தீவிரமாகப் பங்கேற்று வருகின்றன. இந்த மிதிவண்டி ஓட்டுதல் பயணங்கள் நாடு முழுவதும் உள்ள பல கேலோ இந்தியா மையங்கள், கேலோ இந்தியா மாநில சிறப்பு மையங்கள், இந்திய விளையாட்டு ஆணையப் பயிற்சி மையங்கள், கேலோ இந்தியா அங்கீகாரம் பெற்ற அகாடமிகள், பிராந்திய மையங்கள், பல்வேறு தேசிய சிறப்பு மையங்கள் போன்றவற்றால் நடத்தப்படுகின்றன.
Read More »மத்திய அமைச்சர்கள் டாக்டர் மன்சுக் மண்டவியா, திரு அஸ்வினி வைஷ்ணவ் முன்னிலையில், டிஜிட்டல் இந்தியா கார்ப்பரேஷனுடன் இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டு அமைச்சகம் புரிந்துணர்வு ஒப்பந்தம்
இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டு அமைச்சகமானது மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் கீழ் செயல்படும் டிஜிட்டல் இந்தியா கார்ப்பரேஷனுடன் புதுதில்லியில் இன்று புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது. மத்திய இளைஞர் விவகாரங்கள், விளையாட்டு, தொழிலாளர் நலன் மற்றும் வேலைவாய்ப்புகள் அமைச்சர் டாக்டர் மன்சுக் மாண்டவியா மற்றும் மத்திய மின்னணு, தகவல் தொழில்நுட்பம், ரயில்வே, தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சர் திரு அஸ்வினி வைஷ்ணவ் முன்னிலையில் இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. …
Read More »பாலிதானாவில் நடைபெற்ற ஞாயிற்றுக்கிழமைகளில் சைக்கிள் ஓட்டும் நிகழ்ச்சி- மத்திய அமைச்சர் திரு மன்சுக் மாண்டவியா தலைமை வகித்தார் – நாடு முழுவதும் 6,000 இடங்களில் மிதிவண்டி ஓட்டும் நிகழ்ச்சிகள் நடைபெற்றன
மத்திய இளைஞர் விவகாரங்கள், விளையாட்டுகள் அமைச்சர் திரு மன்சுக் மண்டாவியா, குஜராத்தின் பாலிதானாவில் இன்று (29.06.2025) காலை நடைபெற்ற உடல் திறன் இந்தியா ஞாயிற்றுக்கிழமைகளில் மிதிவண்டி ஓட்டுதல் நிகழ்வுக்குத் தலைமை வகித்தார். பல்வேறு குழுக்கள், குறிப்பாக ‘ஸ்வச்தா சேனானிஸ்’ எனப்படும் தூய்மைக் காவலர்கள் பங்கேற்ற இந்த மிதிவண்டி ஓட்டும் நிகழ்வை அவர் வழிநடத்தினார். நாடு முழுவதும் 6,000 இடங்களில் ஒரே நேரத்தில் நடைபெற்ற இந்த மிதிவண்டி ஓட்டுதல் நிகழ்வில், வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகார அமைச்சகத்தின் ஊழியர்கள், தூய்மைப் பணியாளர்கள், நகராட்சி நிறுவனங்களின் பணியாளர்கள் பங்கேற்றனர். இது டிசம்பர் 2024-ல் நாடு தழுவிய அளவில் தொடங்கப்பட்டு தற்போது 29-வது வாரமாக இன்று நடைபெற்றது. ‘ஃபிட் இந்தியா சண்டேஸ் ஆன் சைக்கிள்’ எனப்படும் உடல்திறன் இந்தியா ஞாயிற்றுக்கிழமைகளில் மிதிவண்டி ஓட்டுதல் நிகழ்வை பிரதமர் திரு நரேந்திர மோடி தமது வானொலி நிகழ்ச்சியான மனதின் குரல் உரை நிகழ்ச்சியில் பாராட்டியுள்ளார். இது இந்தியாவின் முதன்மையான சுகாதார மற்றும் நல்வாழ்வு இயக்கங்களில் ஒன்றாகும். பாலிதானாவில் நடைபெற்ற நிகழ்வில், பாவ்நகர் மாவட்டம் முழுவதும் உள்ள பல்வேறு சைக்கிள் ஓட்டுதல் சங்கங்கள் இணைந்தன. தமது சொந்த ஊரான பாலிதானாவில் இந்த இயக்கம் இப்போது பெரிய இயக்கமாக மாறியுள்ளது என்று திரு மன்சுக் மாண்டவியா கூறினார். பிரதமர் திரு நரேந்திர மோடியால் 2019-ம் ஆண்டு தொடங்கப்பட்ட உடல் திறன் இயக்கத்தின் ஒரு பகுதியாக தற்போது ஞாயிற்றுக்கிழமைகளில் மிதிவண்டி ஓட்டுதல் நிகழ்வு சிறந்த முறையில் நடத்தப்படுகிறது எனவும் அவர் தெரிவித்தார். ஸ்வச்தா சேனானிகள் எனப்படும் தூய்மைப் பணியாளர்கள் இன்றைய நிகழ்வில் பெரிய அளவில் பங்கேற்றுள்ளதாகவும், உடல் திறனும் தூய்மையும் கைகோர்த்துச் செல்வதாகவும் அவர் கூறினார். தற்போதைய நவீன தலைமுறையினரிடையே சைக்கிள் ஓட்டுதலை ஒரு பழக்கமாக மாற்ற வேண்டும் என திரு மன்சுக் மாண்டவியா கேட்டுக் கொண்டார். தேசிய தலைநகர் தில்லியில், ராஹ்கிரி அறக்கட்டளையும் புது தில்லி மாநகர கவுன்சிலும் (என்டிஎம்சி) இணைந்து நடத்திய இந்த நிகழ்வில், கிட்டத்தட்ட 1,000 மிதிவண்டி ஓட்டுநர்கள் பங்கேற்றனர். பத்மஸ்ரீ விருது பெற்றவரும், காமன்வெல்த் விளையாட்டில் தங்கப் பதக்கம் வென்றவருமான பபிதா போகத் இதில் பங்கேற்று இந்த முயற்சியைப் பாராட்டினார். டிசம்பர் 2024-ல் தொடங்கப்பட்ட உடல்திறன் இந்தியா ஞாயிற்றுக் கிழமைகளில் சைக்கிள் ஓட்டுதல் இயக்கம் நாடு முழுவதும் 11,000 க்கும் மேற்பட்ட இடங்களில் இதுவரை 4 லட்சத்திற்கும் மேற்பட்ட தனிநபர்களின் பங்கேற்புடன் நடைபெற்றுள்ளது. இந்த மிதிவண்டி ஓட்டுதல் பயணங்கள் நாடு முழுவதும் உள்ள பல கேலோ இந்தியா மையங்கள், கேலோ இந்தியா மாநில சிறப்பு மையங்கள், இந்திய விளையாட்டு ஆணைய பயிற்சி மையங்கள், கேலோ இந்தியா அங்கீகாரம் பெற்ற அகாடமிகள், பிராந்திய மையங்கள், பல்வேறு தேசிய சிறப்பு மையங்கள் போன்றவற்றால் நடத்தப்படுகின்றன.
Read More »சண்டிகரில் தொழிலாளர் நலத்துறை அலுவலகம், இபிஎஃப்ஓ அலுவலகம், இஎஸ்ஐ மருத்துவமனை ஆகியவற்றின் செயல்பாடுகளை மத்திய அமைச்சர் திரு மன்சுக் மாண்டவியா ஆய்வு செய்தார்
மத்திய தொழிலாளர் நலன், வேலைவாய்ப்புத் துறை அமைச்சர் திரு மன்சுக் மாண்டவியா இன்று (22.02.2025) சண்டிகர் சென்று, மத்திய தொழிலாளர் நலன், வேலைவாய்ப்பு அமைச்சகத்தின் கீழ் உள்ள முக்கிய நிறுவனங்களை ஆய்வு செய்தார். தமது பயணத்தின் ஒரு பகுதியாக, மத்திய அமைச்சர் தொழிலாளர் நலத்துறை அலுவலகம், சண்டிகரில் உள்ள இஎஸ்ஐசி (ESIC) மாதிரி மருத்துவமனைக்கு ஆகியவற்றுக்புச் சென்று, அவற்றின் தற்போதைய பணிகளை மதிப்பீடு செய்து, சம்பந்தப்பட்டவர்களுடன் கலந்துரையாடினார். தொழிலாளர் நல அலுவலகத்தில் மேற்கொள்ளப்படும் பல்வேறு நடவடிக்கைகள் திட்டங்கள் குறித்து மத்திய அமைச்சருக்கு …
Read More »உடல் திறன் இந்தியா இயக்கத்தின் ஒரு பகுதியாக ‘மிதிவண்டியில் ஞாயிற்றுக் கிழமைகள்’ இயக்கம் – மும்பையில் மத்திய விளையாட்டுத் துறை அமைச்சர் திரு மன்சுக் மாண்டவியா பங்கேற்பு
ஃபிட் இந்தியா எனப்படும் உடல்திறன் இந்தியா இயக்கத்தின் முதன்மை நிகழ்ச்சிகளில் ஒன்றான ‘சண்டே ஆன் சைக்கிள்’ (ஞாயிறுகளில் மிதிவண்டியில் பயணம்) என்ற இயக்கம் இன்று காலை (16.02.2025) மும்பையின் கேட்வே ஆஃப் இந்தியாவில் நடைபெற்றது. சைக்கிள் ஓட்டுதல் மூலம் ஆரோக்கியமான வாழ்க்கை முறையை ஏற்படுத்திக் கொள்வது குறித்து மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவதுடன், மாசுபாட்டிற்கான தீர்வையும் இது ஊக்குவிக்கிறது. நாடு முழுவதிலுமிருந்து ஆரோக்கிய நிபுணர்கள், பல்வேறு சைக்கிள் கிளப்புகள், தனிப்பட்ட உடற்பயிற்சி ஆர்வலர்கள் அடங்கிய 500-க்கும் மேற்பட்ட மிதிவண்டி (சைக்கிள்) ஓட்டுநர்கள் இதில் பங்கேற்றனர். மத்திய இளைஞர் நலன், விளையாட்டுத் துறை அமைச்சர் டாக்டர் மன்சுக் மாண்டவியா சைக்கிள் ஓட்டுபவர்களுக்கு தலைமை வகித்து நிகழ்ச்சியில் பங்கேற்றார். உடல் பருமன் பிரச்சினையை, குறிப்பாக நகர்ப்புற இளைஞர்களிடையே உள்ள உடல் பருமன் பிரச்சினையை எதிர்த்துப் போராட பிரதமர் திரு நரேந்திர மோடி அண்மையில் விடுத்த அழைப்பிற்கு ஏற்ப ‘ஞாயிற்றுக்கிழமைகளில் சைக்கிள் ஓட்டும் இயக்கம்’ மும்பையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பேசிய மத்திய விளையாட்டுத் துறை அமைச்சர் திரு மாண்டவியா, நாட்டின் மக்கள் ஆரோக்கியமாக இருந்தால் மட்டுமே நமது பிரதமரின் வளர்ச்சி அடைந்த பாரதம் என்ற பார்வையை அடைய முடியும் என்றார். ‘சைக்கிளில் ஞாயிற்றுக்கிழமைகள்’ என்ற இந்த முன்முயற்சி, பூஜ்ஜிய கார்பன் தடம் கொண்ட போக்குவரத்து முறையை ஏற்படுத்தி சுற்றுச்சூழலுக்கும் பங்களிப்பதாக அவர் தெரிவித்தார். ஒவ்வொருவரும், குறிப்பாக இளைஞர்கள், முடிந்தவரை சைக்கிள்களைப் பயன்படுத்துமாறு அமைச்சர் திரு மன்சுக் மாண்டவியா கேட்டுக்கொண்டார். கடந்த ஆண்டு டிசம்பர் 17-ம் தேதி தொடங்கப்பட்ட சண்டே ஆன் சைக்கிள் முன்முயற்சி ஏற்கனவே இந்தியா முழுவதும் 3500 க்கும் மேற்பட்ட இடங்களில் நடத்தப்பட்டுள்ளது. இன்று (பிப்ரவரி 16) இந்த நிகழ்வு 100 க்கும் மேற்பட்ட இடங்களில் நடைபெற்றது,
Read More »அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கான சமூக பாதுகாப்பு குறித்த சர்வதேச கருத்தரங்கு – நாளை தொடங்கி வைக்கிறார் மத்திய அமைச்சர் திரு மன்சுக் மாண்டவியா
மத்திய தொழிலாளர் நலன், வேலைவாய்ப்பு, இளைஞர் விவகாரங்கள், விளையாட்டுத் துறை அமைச்சர் திரு மன்சுக் மாண்டவியா, நாளை 2025 ஜனவரி 20 புதுதில்லியில் அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கான சமூக பாதுகாப்பு குறித்த இரண்டு நாள் சர்வதேச கருத்தரங்கை தொடங்கி வைக்கிறார். தொழிலாளர் நலன், வேலைவாய்ப்புத் துறை இணையமைச்சர், ஷோபா கரந்தலஜே தொழிலாளர் நலன், வேலைவாய்ப்புத் துறை செயலாளர் திருமதி சுமிதா தவ்ரா ஆகியோரும் இந்த கருத்தரங்கின் தொடக்க அமர்வில் கலந்து …
Read More »
Matribhumi Samachar Tamil