Thursday, December 19 2024 | 11:23:37 AM
Breaking News

Tag Archives: market development

ஆயுர்வேத பொருட்களின் சந்தை வளர்ச்சிக்கு அரசு ஆதரவளிக்கிறது

ஆயுர்வேத பொருட்களின் சந்தை வளர்ச்சிக்கு மத்திய அரசு பல்வேறு வகைகளில் ஆதரவளிக்கிறது. ஆயுஷ் அமைச்சகம் ஏற்றுமதியை ஊக்குவிப்பதற்காக ஆயுஷ்  பொருட்களுக்கான சர்வதேச ஒத்துழைப்பை ஊக்குவிக்கிறது. மத்திய அரசின் திட்டத்தை பல்வேறு அம்சங்களின் கீழ் செயல்படுத்தி வருகிறது. ஆயுஷ் பிரச்சாரத்திற்காக சர்வதேச கண்காட்சிகள், வர்த்தக கண்காட்சிகள், சாலை கண்காட்சிகள் போன்றவற்றில் பங்கேற்பதற்காக ஆயுஷ் மருந்து உற்பத்தியாளர்கள், தொழில்முனைவோர், ஆயுஷ் நிறுவனங்கள் மற்றும் மருத்துவமனைகள் போன்றவற்றிற்கு ஊக்கத்தொகை வழங்கப்படுகிறது. சர்வதேச ஆயுஷ் சந்தை மேம்பாடு மற்றும் ஆயுஷ் மேம்பாடு தொடர்பான நடவடிக்கைகளுக்கு ஆதரவு அளித்தல். மேலும், ஆயுஷ் தயாரிப்புகளை ஏற்றுமதி செய்வதற்கு ஆயுஷ் அமைச்சகமானது ஆயுஷ் தயாரிப்புகளுக்கு சான்றிதழ்களை வழங்க ஊக்குவித்தல். மூலிகைப் பொருட்களை உலக சுகாதார அமைப்பு வழிகாட்டுதல்களின்படி மருந்து தயாரிப்புகளுக்கு பயன்படுத்துவதற்கு சான்றிதழ் வழங்குதல். ஆயுர்வேதம், சித்தா மற்றும் யுனானி தயாரிப்புகளுக்கு சர்வதேச தரக்கட்டுப்பாடுகளுக்கு ஏற்ப இணங்குவதற்கான மூன்றாம் தரப்பு மதிப்பீட்டின் அடிப்படையில் ஆயுஷ் பிரீமியம்  வழங்குதல். இந்திய தர கவுன்சிலால் செயல்படுத்தப்பட்ட தர சான்றிதழ் திட்டம். இவ்வாறான பல திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. மாநிலங்களவையில் இன்று கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில் மத்திய ஆயுஷ் துறை இணையமைச்சர் (தனிப்பொறுப்பு) திரு பிரதாப்ராவ் ஜாதவ் இந்தத் தகவலைத் தெரிவித்துள்ளார்.

Read More »