Wednesday, January 07 2026 | 02:21:08 PM
Breaking News

Tag Archives: martyrs

குடியரசு துணைத்தலைவர், பிரதமர், பிற முக்கிய பிரமுகர்கள் நாடாளுமன்ற வளாகத்தில் தியாகிகளுக்கு அஞ்சலி

2001-ம் ஆண்டு நாடாளுமன்றத்தின் மீது நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலை நாடு இன்று நினைவு கூர்ந்தது. உச்சபட்ச ஜனநாயக அமைப்பான நாடாளுமன்றத்தைப் பாதுகாக்கும் போது தங்கள் இன்னுயிரை ஈந்த துணிச்சலான பாதுகாப்புப் படையினருக்கும் பிற ஊழியர்களுக்கும் அஞ்சலி செலுத்தியது. மாநிலங்களவைத் தலைவரும் குடியரசு துணைத்தலைவருமான திரு சி பி ராதாகிருஷ்ணன், பிரதமர் திரு நரேந்திர மோடி, மத்திய அமைச்சர்கள், எதிர்க்கட்சித் தலைவர் திரு ராகுல் காந்தி, மாநிலங்களவை துணைத்தலைவர் திரு ஹரிவன்ஷ், நாடாளுமன்ற உறுப்பினர்கள், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள், பிற பிரமுகர்கள் ஆகியோர் வீர மரணம் அடைந்த தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்தினர். மக்களவைச் செயலாளர் திரு உத்பல் குமார் சிங், மாநிலங்களவைச் செயலாளர் திரு பி சி மோடி, தாக்குதலில் உயிரிழந்தவர்களின் குடும்ப உறுப்பினர்கள் ஆகியோரும் அஞ்சலி செலுத்தினர். முன்னதாக, மக்களவைத் தலைவர் திரு ஓம் பிர்லா சமூக ஊடக எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது: “2001-ம் ஆண்டு நாடாளுமன்றத்தின் மீது நடத்தப்பட்ட கோழைத்தனமான பயங்கரவாதத் தாக்குதலை முறியடிக்கும்போது உயிர்த்தியாகம் செய்த நமது துணிச்சலான பாதுகாப்புப் படையினர், பிற ஊழியர்கள் ஆகியோரின்  உச்சபட்ச தியாகத்திற்கு அஞ்சலி செலுத்துகிறேன். …

Read More »

சத்தீஸ்கர் மாநிலம் ஜக்தல்பூரில் தியாகிகளுக்கு மத்திய அமைச்சர் திரு. அமித் ஷா மரியாதை செலுத்தினார்

சத்தீஸ்கர் மாநிலம் ஜக்தல்பூரில் நக்சலைட்டுகளை எதிர்த்து போராடி உயிர்த்தியாகம் செய்த தியாகிகளுக்கு மத்திய உள்துறை அமைச்சரும், கூட்டுறவு அமைச்சருமான திரு அமித் ஷா இன்று மரியாதை செலுத்தினார். உயிரிழந்த வீரர்களின் குடும்பத்தினரையும், அவர் சந்தித்து பேசினார். இந்த நிகழ்ச்சியில் சத்தீஸ்கர் முதலமைச்சர் திரு. விஷ்ணு தியோ சாய், துணை முதலமைச்சர் உட்பட பல பிரமுகர்கள் கலந்து கொண்டனர். அப்போது பேசிய மத்திய உள்துறை அமைச்சர் திரு அமித் ஷா, நக்சல் தீவிரவாதத்திற்கு எதிரான துணிச்சலான போராட்டத்தில் மிக உயர்ந்த தியாகம் செய்த 1,399 தியாகிகளை கௌரவிக்கும் …

Read More »