ಪ್ರಧಾನಮಂತ್ರಿ ಶ್ರೀ ನರೇಂದ್ರ ಮೋದಿ ಅವರು ಇಂದು ಉತ್ತರ ಪ್ರದೇಶದ ವಾರಣಾಸಿಯಲ್ಲಿ 72ನೇ ರಾಷ್ಟ್ರೀಯ ವಾಲಿಬಾಲ್ ಪಂದ್ಯಾವಳಿಯನ್ನು ವಿಡಿಯೋ ಕಾನ್ಫರೆನ್ಸಿಂಗ್ ಮೂಲಕ ಉದ್ಘಾಟಿಸಿದರು. ಈ ಸಂದರ್ಭದಲ್ಲಿ ಸಭಿಕರನ್ನುದ್ದೇಶಿಸಿ ಮಾತನಾಡಿದ ಶ್ರೀ ಮೋದಿ, ವಾರಣಾಸಿಯ ಸಂಸತ್ ಸದಸ್ಯನಾಗಿ, ಎಲ್ಲಾ ಆಟಗಾರರನ್ನು ಸ್ವಾಗತಿಸಲು ಮತ್ತು ಅಭಿನಂದಿಸಲು ಸಂತಸವಾಗುತ್ತಿದೆ ಎಂದು ಹೇಳಿದರು. ರಾಷ್ಟ್ರೀಯ ವಾಲಿಬಾಲ್ ಚಾಂಪಿಯನ್ಶಿಪ್ ಇಂದಿನಿಂದ ವಾರಣಾಸಿಯಲ್ಲಿ ಪ್ರಾರಂಭವಾಗುತ್ತಿದೆ. ಆಟಗಾರರು ಅಪಾರ ಕಠಿಣ ಪರಿಶ್ರಮದ ಬಳಿಕ ಈ ರಾಷ್ಟ್ರೀಯ ಪಂದ್ಯಾವಳಿಯನ್ನು ತಲುಪಿದ್ದಾರೆ ಮತ್ತು …
Read More »வாரணாசியில் 72-வது தேசிய வாலிபால் சாம்பியன்ஷிப் போட்டியைப் பிரதமர் திரு நரேந்திர மோடி காணொலிக் காட்சி மூலம் தொடங்கி வைத்தார்
உத்தரபிரதேச மாநிலம் வாரணாசியில் இன்று தொடங்கிய (04.01.2025) 72-வது தேசிய வாலிபால் (கைப்பந்து) போட்டியை பிரதமர் திரு நரேந்திர மோடி காணொலிக் காட்சி மூலம் தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் உரையாற்றிய திரு நரேந்திர மோடி, வாரணாசி நாடாளுமன்ற உறுப்பினர் என்ற முறையில், அனைத்து வீரர்களையும் வரவேற்று வாழ்த்துவதில் மகிழ்ச்சி அடைவதாகக் குறிப்பிட்டார். தேசிய கைப்பந்து சாம்பியன்ஷிப் இன்று முதல் வாரணாசியில் தொடங்குகிறது என்று அவர் கூறினார். வீரர்கள் மிகுந்த கடின …
Read More »பகவான் புத்தருடன் தொடர்புடைய புனித பிப்ரவா நினைவுச்சின்னங்களின் பிரமாண்டமான சர்வதேச கண்காட்சியை ஜனவரி 3 அன்று பிரதமர் தொடங்கி வைக்கிறார்
“ஒளி மற்றும் தாமரை: விழிப்புற்றவரின் நினைவுச்சின்னங்கள்” என்ற பொருளில் பகவான் புத்தருடன் தொடர்புடைய புனித பிப்ரவா நினைவுச்சின்னங்களின் பிரமாண்டமான சர்வதேச கண்காட்சியை பிரதமர் திரு நரேந்திர மோடி, 2026, ஜனவரி 3, அன்று காலை 11 மணியளவில் புதுதில்லியில் உள்ள ராய் பித்தோரா கலாச்சார வளாகத்தில் தொடங்கி வைப்பார். இந்தக் கண்காட்சி, ஒரு நூற்றாண்டுக்கும் மேலாக மீட்டுக் கொண்டுவரப்பட்ட பிப்ரவா நினைவுச்சின்னங்களை, புது தில்லியில் உள்ள தேசிய அருங்காட்சியகம் மற்றும் …
Read More »மனதின் குரல் நிகழ்ச்சியின் 129-வது அத்தியாயத்தில், 28.12.2025 அன்று பிரதமர் ஆற்றிய உரையின் தமிழாக்கம்
எனதருமை நாட்டுமக்களே, வணக்கம். மனதின் குரலில் உங்களை மீண்டும் வரவேற்கிறோம். சில நாட்களில் 2026ஆம் ஆண்டு தன்னைப் பதிவு செய்ய இருக்கிறது, நான் இன்று உங்களோடு உரையாடிக் கொண்டிருக்கும் வேளையிலே, என் மனதில் ஓராண்டுக்கால நினைவுகள் நிழலாடுகின்றன – தேசத்தை ஒன்றாக இணைத்துவைத்த பல காட்சிகள், பல விவாதங்கள், பல சாதனைகள். 2025ஆம் ஆண்டின் பல கணங்கள் பாரத நாட்டு மக்களான நமக்குப் பெருமிதத்தைச் சேர்த்தன. தேசத்தின் பாதுகாப்புத் தொடங்கி விளையாட்டு மைதானம் வரை, …
Read More »புதுதில்லியில் நடைபெற்ற வீரச் சிறார் தின நிகழ்ச்சியில் பிரதமர் திரு நரேந்திர மோடி உரையாற்றினார்
புதுதில்லியில் இன்று (26.12.2025) நடைபெற்ற வீரச் சிறார் தின நிகழ்ச்சியில் பிரதமர் திரு நரேந்திர மோடி உரையாற்றினார். இந்த நாள் குரு கோவிந்த் சிங்கின் புதல்வர்களான சாஹிப்சாதாக்களின் வீரத்தை நினைவுகூரும் நாள் என குறிப்பிட்டார். அச்சிறார்களின் வாழ்க்கை இளைய தலைமுறையினருக்கு ஊக்கம் அளிக்கும் என்றார். கடந்த 4 ஆண்டுகளாக இந்தத் தினம் கடைபிடிக்கப்படுவதை எடுத்துரைத்த அவர், இந்த நாளில் வீரச் சிறார் விருதுகள் வழங்கப்படுவதையும் சுட்டிக்காட்டினார். இந்த ஆண்டு நாடு …
Read More »டிசம்பர் 26 அன்று நடைபெறும் ‘வீர பாலகர் தினம் நிகழ்ச்சியில் பிரதமர் பங்கேற்கிறார்
புதுதில்லியில் உள்ள பாரத மண்டபத்தில் 2025 டிசம்பர் 26 அன்று, நண்பகல் 12:15 மணியளவில் நடைபெறும் ‘வீர பாலகர் தினம்’ தேசிய நிகழ்ச்சியில் பிரதமர் திரு நரேந்திர மோடி பங்கேற்று உரையாற்றுகிறார். வீர பாலகர் தினத்தைக் குறிக்கும் வகையில், சாஹிப்சாதாக்களின் அசாதாரண துணிச்சல் மற்றும் உன்னத தியாகம் குறித்து மக்கள் அறிந்து கொள்ளும் நோக்குடனும், இந்திய வரலாற்றின் இளம் வீரர்களின் உறுதியான துணிச்சல், தியாகம் மற்றும் வீரத்தைப் போற்றி நினைவுகூரும் …
Read More »இந்தியாவின் தடையற்ற வர்த்தக ஒப்பந்தங்கள், பொருளாதாரத்தை வலுப்படுத்துவது குறித்த கட்டுரையைப் பிரதமர் பகிர்ந்துள்ளார்
இந்தியாவின் தடையற்ற வர்த்தக ஒப்பந்தங்கள் இப்போது வரி குறைப்புக்கு மட்டுமல்லாமல் அதற்கு அப்பால், பொருளாதாரத்தை வலுப்படுத்தி, பல லட்சக் கணக்கான மக்களின் வாழ்க்கையை மேம்படுத்தி ஒரு பரந்த நோக்கத்தைக் கொண்டதாக அமைந்துள்ளன என்பதை விளக்கும் மத்திய அமைச்சர் திரு பியூஷ் கோயல் எழுதிய கட்டுரையை பிரதமர் திரு நரேந்திர மோடி பகிர்ந்துள்ளார். இந்தியா-நியூசிலாந்து தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் ஒரு வரலாற்று மைல்கல் என்றும், இது பெண்கள் தலைமையிலான முதல் தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் என்றும் …
Read More »அசாம் மாநிலம் நம்ரூப்பில் உரத் தொழிற்சாலைக்குப் பிரதமர் திரு நரேந்திர மோடி அடிக்கல் நாட்டினார்
அசாம் மாநிலம் திப்ரூகரில் உள்ள நம்ரூப்பில், அசாம் பள்ளத்தாக்கு உர- வேதியியல் நிறுவனத்தின் சார்பில் அமைக்கப்படும் அமோனியா-யூரியா உரத் தொழிற்சாலைத் திட்டத்திற்கு பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று (21.12.2025) அடிக்கல் நாட்டினார். இந்த நிகழ்வில் உரையாற்றிய திரு நரேந்திர மோடி, இது சாவோலுங் சுகபா, மகாவீர் லச்சித் போர்புகான் போன்ற சிறந்த வீரர்களின் பூமி என்று குறிப்பிட்டார். பீம்பர் டியூரி, ஷாஹீத் குஷால் குன்வர், மோரன் மன்னர் போடோசா, …
Read More »பிரதமர் திரு நரேந்திர மோடி, அசாமின் குவஹாத்தியில் உள்ள லோகப்ரியா கோபிநாத் பர்தோலோய் சர்வதேச விமான நிலையத்தின் புதிய முனையக் கட்டிடத்தைத் திறந்து வைத்தார்
பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று குவஹாத்தியில் உள்ள லோகப்ரியா கோபிநாத் பர்தோலோய் சர்வதேச விமான நிலையத்தின் புதிய முனையக் கட்டிடத்தைத் திறந்து வைத்தார். இந்த நிகழ்வில் உரையாற்றிய திரு மோடி, இன்று அசாம் மற்றும் வடகிழக்கு இந்தியாவின் வளர்ச்சி மற்றும் முன்னேற்றத்தின் திருவிழா என்று கூறினார். முன்னேற்றத்தின் ஒளி மக்களைச் சென்றடையும்போது, வாழ்க்கையின் ஒவ்வொரு பாதையும் புதிய உயரங்களைத் தொடத் தொடங்குகிறது என்பதை அவர் எடுத்துரைத்தார். மேலும், அசாமின் முதல் முதலமைச்சரும், மாநிலத்தின் பெருமைக்குரியவருமான கோபிநாத் பர்தோலோயின் சிலையைத் திறந்து வைக்கும் பாக்கியம் தமக்குக் கிடைத்ததாக பிரதமர் குறிப்பிட்டார். திரு பர்தோலோய் அசாமின் அடையாளம், எதிர்காலம் மற்றும் நலன்களில் ஒருபோதும் சமரசம் செய்துகொள்ளவில்லை என்றும், அவரது சிலை எதிர்காலச் சந்ததியினருக்குத் தொடர்ந்து ஊக்கமளித்து, அவர்களுக்கு அசாம் மீது ஆழ்ந்த பெருமை உணர்வை ஏற்படுத்தும் என்றும் அவர் கூறினார். “நவீன விமான நிலைய வசதிகளும் மேம்பட்ட இணைப்பு உள்கட்டமைப்புகளும் எந்தவொரு மாநிலத்திற்கும் புதிய சாத்தியக்கூறுகளுக்கும் வாய்ப்புகளுக்கும் நுழைவாயிலாக அமைகின்றன, மேலும் மக்களிடையே வளர்ந்து வரும் நம்பிக்கை மற்றும் திடமான உணர்வின் தூண்களாக நிற்கின்றன”, என்று பிரதமர் கூறினார். அசாமில் பிரம்மாண்டமான நெடுஞ்சாலைகளும் விமான நிலையங்களும் கட்டப்படுவதை மக்கள் காணும்போது, அசாமிற்கு உண்மையான நீதி இறுதியாக கிடைக்கிறது என்பதை அவர்களே ஒப்புக்கொள்கிறார்கள் என்று அவர் குறிப்பிட்டார். இன்று இந்தியா மீதான உலகின் பார்வை மாறியுள்ளது என்றும், இந்தியாவின் பங்கும் மாறியுள்ளது என்றும் திரு மோடி குறிப்பிட்டார். இந்தியா இப்போது உலகின் மூன்றாவது பெரிய பொருளாதாரமாக மாறும் பாதையில் உள்ளது என்பதை அவர் எடுத்துரைத்தார். வெறும் 11 ஆண்டுகளில் இது எவ்வாறு சாத்தியமானது என்று அவர் கேள்வி எழுப்பியதுடன், நவீன உள்கட்டமைப்பின் வளர்ச்சி இதில் முக்கியப் பங்கு வகித்துள்ளது என்றும் வலியுறுத்தினார். ஒரு வளர்ச்சியடைந்த நாடு என்ற இலக்கை அடைவதற்காக, உள்கட்டமைப்பில் கவனம் செலுத்தி இந்தியா 2047-ம் ஆண்டிற்காகத் தயாராகி வருவதாக பிரதமர் தெரிவித்தார். இந்த மாபெரும் வளர்ச்சிப் பயணத்தின் மிக முக்கியமான அம்சம் ஒவ்வொரு மாநிலத்தின் மற்றும் ஒவ்வொரு பிராந்தியத்தின் பங்கேற்புதான் என்பதை அவர் அடிக்கோடிட்டுக் காட்டினார். ஒவ்வொரு மாநிலமும் ஒன்றாக முன்னேறி, வளர்ந்த இந்தியா என்ற இலக்கிற்குப் பங்களிப்பதை உறுதிசெய்யும் வகையில், அரசு பின்தங்கியவர்களுக்கு முன்னுரிமை அளித்து வருவதாக அவர் குறிப்பிட்டார். இந்த இலக்கில் அசாமும் வடகிழக்கு மாநிலங்களும் முன்னணியில் இருப்பது குறித்து அவர் மகிழ்ச்சி தெரிவித்தார். ‘கிழக்கு நோக்கிய கொள்கை’ மூலம் வடகிழக்கு மாநிலங்களுக்கு முன்னுரிமை வழங்கப்பட்டுள்ளது என்றும், இன்று அசாம் இந்தியாவின் கிழக்கு நுழைவாயிலாக உருவெடுத்துள்ளது என்றும் திரு. மோடி தெரிவித்தார். அசாம், இந்தியாவை ஆசியான் நாடுகளுடன் இணைக்கும் ஒரு பாலமாகச் செயல்படுவதாக அவர் குறிப்பிட்டார். இந்தத் தொடக்கம் இன்னும் வெகுதூரம் செல்லும் என்றும், பல துறைகளில் வளர்ச்சியடைந்த இந்தியாவின் ஒரு உந்துசக்தியாக அசாம் மாறும் என்றும் அவர் உறுதிபடக் கூறினார். “அசாமும் ஒட்டுமொத்த வடகிழக்கு மாநிலங்களும் இந்தியாவின் வளர்ச்சிக்கு ஒரு புதிய நுழைவாயிலாக மாறி வருகின்றன,” என்று திரு. மோடி வலியுறுத்தினார். பல்துறை இணைப்பு குறித்த தொலைநோக்குப் பார்வை இந்தப் பிராந்தியத்தின் நிலையையும் திசையையும் மாற்றியமைத்துள்ளது என்றும் அவர் எடுத்துரைத்தார். அசாமில் புதிய பாலங்கள் கட்டப்படும் வேகம், புதிய மொபைல் கோபுரங்கள் நிறுவப்படும் வேகம் மற்றும் ஒவ்வொரு வளர்ச்சித் திட்டத்தின் வேகம் ஆகியவை கனவுகளை நனவாக்கி வருவதாக அவர் கூறினார். இந்த நிகழ்வில் அசாம் ஆளுநர் திரு. லட்சுமண் பிரசாத் ஆச்சார்யா, அசாம் முதலமைச்சர் திரு. ஹிமந்த பிஸ்வா சர்மா, மத்திய அமைச்சர்கள் திரு. சர்பானந்த சோனோவால், திரு. கே. ராம்மோகன் நாயுடு, திரு. முரளிதர் மோஹோல், திரு. பவித்ரா மார்கெரிட்டா உள்ளிட்ட முக்கியப் பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.
Read More »வளர்ச்சியடைந்த இந்தியா ஜி ராம் ஜி மசோதாவை எடுத்துரைக்கும் வகையிலான கட்டுரை ஒன்றை பிரதமர் பகிர்ந்துள்ளார்
வளர்ச்சியடைந்த இந்தியா ஜி ராம் ஜி மசோதாவின் நோக்கங்களை விரிவாக எடுத்துரைக்கும் வகையில் மத்திய அமைச்சர் திரு சிவராஜ் சிங் சௌஹான் எழுதிய ஒரு கட்டுரையை பிரதமர் திரு நரேந்திர மோடி பகிர்ந்துள்ளார். வளர்ச்சியடைந்த இந்தியா ஜி ராம் ஜி மசோதா, வேலைவாய்ப்பு உத்தரவாதத்தை மேம்படுத்துதல், உள்ளூர் மேம்பாட்டிற்கான திட்டமிடல் பணிகளை ஒருங்கிணைத்தல், தொழிலாளர் பாதுகாப்பு, பண்ணை உற்பத்தித்திறன் ஆகியவற்றைச் சமநிலைப்படுத்துதல், திட்டங்களை ஒருங்கிணைத்தல், களப்பணியாளர்களின் திறனை வலுப்படுத்துதல், நிர்வாக நடைமுறைகளை நவீனமயமாக்குதல் போன்றவை மூலம் ஊரகப் பகுதிகளில் வாழ்வாதார வசதிகளில் மாற்றங்கள் ஏற்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது என்பதை அந்தக் கட்டுரை விரிவாக எடுத்துரைக்கிறது. மேலும், இந்த மசோதா சமூகப் பாதுகாப்பு அளிப்பதிலிருந்து பின்வாங்குவதற்கு மாறாக, அதனைப் புதுப்பித்து மேம்படுத்துகிறது என்பதையும் அந்தக் கட்டுரை விளக்குகிறது. சமூக ஊடக எக்ஸ் தளத்தில், மத்திய அமைச்சர் எழுதிய கட்டுரைக்கு பதிலளித்துள்ள பிரதமர் திரு நரேந்திர மோடி கூறியிருப்பதாவது; “அனைவரும் கட்டாயம் படிக்க வேண்டிய இந்தக் கட்டுரையில், மத்திய அமைச்சர் திரு @ChouhanShivraj, வளர்ச்சியடைந்த இந்தியா ஜி ராம் ஜி மசோதா, வேலைவாய்ப்பு உத்தரவாதத்தை மேம்படுத்துதல், உள்ளூர் திட்டமிடல் நடவடிக்கைகளை ஒருங்கிணைத்தல், தொழிலாளர் பாதுகாப்பு, பண்ணை உற்பத்தித்திறன் ஆகியவற்றை சமநிலைப்படுத்துதல், திட்டங்களை ஒருங்கிணைத்தல், களப்பணியாளர்களின் திறனை வலுப்படுத்துதல் மற்றும் நிர்வாக நடைமுறைகளை நவீனமயமாக்குதல் போன்றவை மூலம் ஊரகப் பகுதிகளில், வாழ்வாதார வசதிகளில் எவ்வாறு மாற்றங்களை ஏற்படுத்துவது என்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது குறித்து விரிவாக விளக்கியுள்ளார். இந்த மசோதா சமூகப் பாதுகாப்பு நடவடிக்கைகளிலிருந்து பின்வாங்குவதற்கு மாறாக, அதனைப் புதுப்பித்து மேம்படுத்துகிறது என்பதையும் அவர் தெளிவாக எடுத்துரைத்துள்ளார்.”
Read More »
Matribhumi Samachar Tamil