பிரதமர் திரு. நரேந்திர மோடி தில்லியில் பல்வேறு முக்கிய வளர்ச்சித் திட்டங்களை இன்று தொடங்கி வைத்ததோடு, மேலும் பல புதிய திட்டங்களுக்கும் அடிக்கல் நாட்டினார். இந்த நிகழ்ச்சியில், திரளாகக் கூடியிருந்தவர்களிடையே உரையாற்றிய திரு மோடி, அவர்களுக்கு தமது புத்தாண்டு வாழ்த்துகளைத் தெரிவித்தார். 2025-ம் ஆண்டு இந்தியாவின் வளர்ச்சிக்கு மகத்தான வாய்ப்புகளைக் கொண்ட ஆண்டாக இருக்கும் என்றும், உலகின் மூன்றாவது பெரிய பொருளாதாரமாக மாறுவதற்கான இலக்கை நோக்கி நாட்டை முன்னெடுத்துச் செல்லும் …
Read More »கிராமப்புற பாரத திருவிழா 2025-ஐ பிரதமர் ஜனவரி 4 –ம் தேதி புதுதில்லியில் தொடங்கி வைக்கிறார்
பிரதமர் திரு நரேந்திர மோடி ஜனவரி 4-ம் தேதி காலை 11 மணியளவில் புதுதில்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் கிராமப்புற பாரத திருவிழா 2025- ஐ தொடங்கி வைக்கிறார். இந்த நிகழ்ச்சியில் பங்கேற்கும் மக்களிடையே அவர் உரையாற்றுகிறார். கிராமப்புற இந்தியாவின் தொழில்முனைவோரின் உற்சாகம் மற்றும் கலாச்சார பாரம்பரியத்தைக் கொண்டாடும் வகையில், இத்திருவிழா ஜனவரி 4 முதல் 9 வரை ‘வளர்ச்சியடைந்த பாரதம்-2047-க்காக நெகிழ்வுத்தன்மையுடன் கொண்ட கிராமப்புற இந்தியாவை உருவாக்குதல்’ என்ற கருப்பொருளுடன் நடைபெறும். இத்திருவிழாவில் விவாதங்கள், பட்டறைகள், பயிற்சி வகுப்புகள் மூலம், கிராமப்புற உள்கட்டமைப்பை மேம்படுத்துதல், தற்சார்பு பொருளாதார நிலையை உருவாக்குதல், கிராமப்புற சமூகங்களிடையே புதுமையை ஊக்குவித்தல் ஆகியவற்றை நோக்கமாகக் கொண்டுள்ளது. வடகிழக்கு இந்தியாவில் சிறப்பு கவனம் செலுத்தி, கிராமப்புற மக்களிடையே பொருளாதார ஸ்திரத்தன்மை, நிதி பாதுகாப்பை ஊக்குவித்தல், நிதி உள்ளடக்கம், நிலையான விவசாய நடைமுறைகளை செயல்படுத்துதல் மூலம் இதன் குறிக்கோள்களை எட்டுவது உள்ளிட்ட அம்சங்கள் இதில் அடங்கும். தொழில்முனைவோர் மூலம் கிராமப்புற பெண்களுக்கு அதிகாரம் அளிப்பதே இந்த திருவிழாவின் முக்கிய நோக்கமாக இருக்கும். அரசு அதிகாரிகள், வழிகாட்டும் தலைவர்கள், கிராமப்புற தொழில்முனைவோர், கைவினைஞர்கள், பல்வேறு துறைகளைச் சேர்ந்த பிரதிநிதிகளுடன் ஒன்றிணைத்து கிராமப்புற மாற்றத்திற்கான வரைபடத்தை உருவாக்குதல்; கிராமப்புற மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த தொழில்நுட்பம், புதுமையான நடைமுறைகளைப் பயன்படுத்துவது குறித்த விவாதங்களை ஊக்குவித்தல், கண்காட்சிகள் ஆகியவை இந்தியாவின் வளமான கலாச்சார பாரம்பரியத்தை வெளிப்படுத்துகிறது. भारत : 1885 से 1950 (इतिहास पर एक दृष्टि) व/या भारत : 1857 से 1957 (इतिहास पर एक दृष्टि) पुस्तक अपने घर/कार्यालय पर मंगाने के लिए आप निम्न लिंक पर क्लिक कर सकते हैं सारांश कनौजिया की पुस्तकें ऑडियो बुक : भारत 1885 से 1950 …
Read More »தொலைதூர மற்றும் மாவோயிஸ்டுகளால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஒட்டுமொத்த வளர்ச்சியை உறுதி செய்யும் மகாராஷ்டிர அரசின் முயற்சிகளுக்கு பிரதமர் பாராட்டு
மாவோயிஸ்டுகளால் பாதிக்கப்பட்ட பகுதிகள் மற்றும் தொலைதூரப் பகுதிகளில் ஒட்டுமொத்த வளர்ச்சியை உறுதி செய்ய மகாராஷ்டிர மாநில அரசு மேற்கொண்டு வரும் முயற்சிகளுக்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி பாராட்டு தெரிவித்துள்ளார். தேவேந்திர பட்னாவிஸ் பதிவிட்ட எக்ஸ் பதிவுக்கு பதிலளித்த மோடி கூறியிருப்பதாவது: தொலைதூர மற்றும் மாவோயிஸ்டுகளால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஒட்டுமொத்த வளர்ச்சியையும் உறுதி செய்வதற்கான மகாராஷ்டிரா அரசின் முயற்சிகளை நான் பாராட்டுகிறேன். இது நிச்சயமாக ‘வாழ்க்கையை எளிதாக்குவதை’ ஊக்குவிப்பதோடு, மேலும் பல …
Read More »சிறு வணிகங்களுக்கு அதிகாரம் அளிப்பதிலும், மின்னணு வர்த்தகத்தில் புரட்சியை ஏற்படுத்துவதிலும் ஓஎன்டிசி பங்களித்துள்ளது: பிரதமர்
சிறு தொழில்களுக்கு அதிகாரம் அளிப்பதிலும், மின்னணு வர்த்தகத்தில் புரட்சியை ஏற்படுத்துவதிலும் டிஜிட்டல் வணிகத்துக்கான திறந்தநிலை வலைப்பின்னலின்(ஓ.என்.டி.சி.) பங்களிப்பை எடுத்துரைத்த பிரதமர் திரு. நரேந்திர மோடி, வளர்ச்சி மற்றும் செழிப்பை முன்னெடுத்துச் செல்வதில் இந்த அமைப்பு முக்கிய பங்காற்றும் என்று குறிப்பிட்டார். சமூக ஊடகத்தில் பியூஷ் கோயல் எழுதிய பதிவுக்கு பதிலளித்த மோடி பின்வருமாறு கூறியுள்ளார். “ஓஎன்டிசி சிறு வணிகங்களை மேம்படுத்துவதற்கும் மின்னணு வணிகத்தில் புரட்சியை ஏற்படுத்துவதற்கும் பங்களித்துள்ளது, இதனால் வளர்ச்சி …
Read More »இந்தியாவின் பொழுதுபோக்கு, படைப்பாற்றல் தொழில்துறையில் இளைஞர்கள் பங்கேற்கப் பிரதமர் அழைப்பு: உலக அரங்கில் இந்தியாவின் படைப்பாற்றல் சக்தியை வெளிப்படுத்த வேவ்ஸ்-சில் இணைய அழைப்பு
பிரதமர் திரு நரேந்திர மோடி, ‘மனதின் குரல்’ 117-வது நிகழ்ச்சியில் , இந்தியாவின் படைப்பாற்றல், பொழுதுபோக்குத் துறையில் ஒரு முக்கிய மைல்கல் குறித்து உற்சாகமான செய்திகளைப் பகிர்ந்து கொண்டார். நாட்டு மக்களிடையே உரையாற்றிய பிரதமர், 2025 பிப்ரவரி 5 முதல் 9 வரை, முதல் முறையாக உலக ஆடியோ விஷுவல் பொழுதுபோக்கு உச்சி மாநாட்டை (WAVES) இந்தியா நடத்தும் என்று கூறினார். வேவஸ் உச்சி மாநாடு: இந்தியாவின் படைப்பாற்றல் திறமைக்கான உலகளாவிய மேடை வேவ்ஸ் …
Read More »“நாடு முழுவதும் வலுவாக ஒன்றுபடட்டும்” என்பதே மகா கும்பமேளாவின் செய்தி: பிரதமர் திரு நரேந்திர மோடி
இன்று மனதின் குரல் நிகழ்ச்சியில் நாட்டு மக்களிடையே உரையாற்றிய பாரதப் பிரதமர் திரு நரேந்திர மோடி, மகா கும்பமேளாவின் சிறப்பு அதன் மகிமையில் மட்டுமல்ல, அதன் பன்முகத்தன்மையிலும் உள்ளது என்று கூறினார். இந்த நிகழ்ச்சியைக் காண கோடிக்கணக்கான மக்கள் கூடுகிறார்கள் என்று அவர் தெரிவித்தார். லட்சக்கணக்கான துறவிகள், ஆயிரக்கணக்கான பாரம்பரியங்கள், நூற்றுக்கணக்கான பிரிவுகள், பல அகாராக்கள், அனைவரும் இந்த நிகழ்வின் ஒரு பகுதியாக இருக்கிறார்கள் என அவர் தெரிவித்தார். எங்கும் பாகுபாடு இல்லை, யாரும் பெரியவர், …
Read More »ஆயுர்வேதம் உலக அளவில் பிரபலம் அடைந்து வருவதைப் பிரதமர் திரு நரேந்திர மோடி எடுத்துரைத்துள்ளார்
பிரதமர் திரு நரேந்திர மோடி, மனதின் குரல் 117- வது அத்தியாயத்தில், ஆயுர்வேதத்தின் உலகளாவிய பிரபலத்தை எடுத்துரைத்தார். ஆயுர்வேதம் தொடர்பாக பராகுவேயில் மேற்கொள்ளப்பட்டு வரும் எழுச்சியூட்டும் பணிகளை அவர் மேற்கோள் காட்டினார். பிரதமர் கூறுகையில், “தென் அமெரிக்காவில் பராகுவே என்று ஒரு நாடு இருக்கிறது. அங்கு வாழும் இந்தியர்களின் எண்ணிக்கை ஆயிரத்துக்கு மேல் இருக்காது. பராகுவேயில் ஒரு அற்புதமான முயற்சி மேற்கொள்ளப்படுகிறது. பராகுவேயில் உள்ள இந்திய தூதரகத்தில், எரிகா ஹூபர் ஆயுர்வேத ஆலோசனைகளை …
Read More »2024 ஃபிடே மகளிர் உலக விரைவு சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்ற ஹம்பி கொனேருவுக்குப் பிரதமர் வாழ்த்து
2024 ஃபிடே மகளிர் உலக விரைவு செஸ் சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்ற ஹம்பி கொனேருவுக்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று வாழ்த்து தெரிவித்தார். அவரது மன உறுதியும் புத்திசாலித்தனமும் கோடிக் கணக்கானவர்களுக்கு தொடர்ந்து ஊக்கமளிக்கும் ஒன்று என்று அவர் பாராட்டியுள்ளார். இது குறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் குறித்து சர்வதேச செஸ் கூட்டமைப்பு வெளியிட்டுள்ள பதிவுக்கு பதில் அளிக்கும் வகையில் பிரதமர் வெளியிட்டுள்ள பதிலில் கூறியிருப்பதாவது: “2024 …
Read More »பஞ்சாப் மாநிலம் பதிண்டாவில் நேரிட்ட சாலை விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு பிரதமர் இரங்கல்
பஞ்சாப் மாநிலம் பதிண்டாவில் நேரிட்ட சாலை விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.2 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.50 ஆயிரமும் பிரதமரின் தேசிய நிவாரண நிதியிலிருந்து வழங்கப்படும் என்று பிரதமர் திரு நரேந்திர மோடி அறிவித்துள்ளார். இதுகுறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில், பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: “பஞ்சாப் மாநிலம் பதிண்டாவில் நேரிட்ட சாலை விபத்து காரணமாக ஏற்பட்ட …
Read More »புதுதில்லியில் நடைபெற்ற வீர பாலகர் தின நிகழ்ச்சியில் பிரதமர் திரு. நரேந்திர மோடி பங்கேற்றார்
புதுதில்லி பாரத மண்டபத்தில் இன்று நடைபெற்ற வீர பாலகர் தின விழாவில் பிரதமர் திரு. நரேந்திர மோடி பங்கேற்றார். 3-வது வீர பாலகர் தினத்தையொட்டி கூடியிருந்தவர்களிடையே உரையாற்றிய பிரதமர், சாஹிப்ஜாதேக்களின் இணையற்ற வீரம் மற்றும் தியாகத்தின் நினைவாக தங்களது அரசு வீர பாலகர் தினத்தை தொடங்கியதாகக் கூறினார். இந்த நாள் கோடிக்கணக்கான இந்தியர்களுக்கு நாட்டிற்கான உத்வேகம் அளிக்கும் திருவிழாவாக மாறியுள்ளது என்றும் அவர் கூறினார். இந்த நாள் பல குழந்தைகள் மற்றும் இளைஞர்களை …
Read More »
Matribhumi Samachar Tamil