Friday, December 05 2025 | 10:25:32 PM
Breaking News

Tag Archives: Narendra Modi

திரு அடல் அவர்களின் 100-வது பிறந்தநாளான இன்று, நமது நாட்டிற்கு அவர் அளித்த மகத்தான பங்களிப்பு குறித்தும், அவரது முயற்சிகள் பலரின் வாழ்க்கையை எவ்வாறு மாற்றியது என்பது குறித்தும் சில எண்ணங்களை பதிவிட்டுள்ளேன்: பிரதமர்

முன்னாள் பிரதமர் திரு. அடல் பிகாரி வாஜ்பாயின் 100-வது பிறந்தநாளை முன்னிட்டு அவருக்கு மரியாதை செலுத்தி தாம் எழுதிய கட்டுரையை பிரதமர் திரு. நரேந்திர மோடி பகிர்ந்துள்ளார். இது பற்றி சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் குறிப்பிட்டதாவது: “இன்று, அடல் அவர்களின் 100-வது பிறந்தநாளில், நமது தேசத்திற்கு அவர் அளித்த மகத்தான பங்களிப்பு குறித்தும், அவரது முயற்சிகள் பலரின் வாழ்க்கையை எவ்வாறு மாற்றியது என்பது குறித்தும் சில எண்ணங்களைப் பதிவிட்டுள்ளேன்.”   भारत …

Read More »

புதுதில்லியில் டிசம்பர் 26 அன்று நடைபெறும் வீரபாலகர் தின நிகழ்ச்சியில் பிரதமர் பங்கேற்கிறார்

இந்தியாவின் எதிர்காலத்தின் அடித்தளமாக விளங்கும் குழந்தைகளை கௌரவிக்கும் நாடு தழுவிய கொண்டாட்டமான வீரபாலகர் தினத்தில் பிரதமர் திரு நரேந்திர மோடி 2024 டிசம்பர் 26 அன்று நண்பகல் 12 மணியளவில் புதுதில்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் பங்கேற்கிறார். இந்த நிகழ்ச்சியில் அவர் உரையாற்றுகிறார். ‘சுபோஷித் கிராம பஞ்சாயத்து இயக்கம்” என்ற திட்டத்தை பிரதமர் தொடங்கி வைப்பார். ஊட்டச்சத்து தொடர்பான சேவைகளை வலுப்படுத்துவதன் மூலமும், செயலூக்கம் நிறைந்த சமூகப் பங்களிப்பை உறுதி செய்வதன் …

Read More »

மத்தியப் பிரதேச மாநிலம் கஜுராஹோவில் கென்-பெட்வா நதிகள் இணைப்புத் தேசியத் திட்டத்திற்கு பிரதமர் திரு நரேந்திர மோடி அடிக்கல் நாட்டினார்

முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாயின் 100-வது பிறந்த நாளை முன்னிட்டு, பிரதமர் திரு நரேந்திர மோடி மத்தியப் பிரதேச மாநிலம் கஜுராஹோவில் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களைத் தொடங்கி வைத்ததுடன், பல்வேறு வளர்ச்சித் திட்டங்களுக்கும் அடிக்கல் நாட்டினார். கூட்டத்தினரிடையே உரையாற்றிய திரு நரேந்திர மோடி, இந்திய, உலக கிறிஸ்தவ சமூகத்தினருக்கு கிறிஸ்துமஸ் வாழ்த்துகளைத் தெரிவித்தார். மத்தியப் பிரதேசத்தில் முதலமைச்சர் டாக்டர் மோகன் யாதவ் தலைமையிலான அரசு அமைந்து ஓராண்டு நிறைவடைந்ததை நினைவுகூர்ந்த திரு நரேந்திர மோடி, இதற்காக …

Read More »

பிரதமர் திரு நரேந்திர மோடியின் சொந்த ஊரான வாட்நகரில் ‘நல் ஆளுகை’ நடைப்பயணம்’

முன்னாள் பிரதமர் திரு அடல் பிஹாரி வாஜ்பாயின் 100-வது பிறந்த நாளைக் குறிக்கும்வ கையில், மத்திய இளைஞர் நலன், விளையாட்டு, தொழிலாளர், வேலைவாய்ப்பு அமைச்சர் திரு மன்சுக் மாண்டவியா தலைமையில் குஜராத்தின் வாட்நகரில் 2024 டிசம்பர் 24, அன்று 8 கிலோ மீட்டர் தூரத்திற்கு ‘நல் ஆளுகை நடைபயணத்திற்கு’ ஏற்பாடு செய்யப்பட்டது. குஜராத் மாநில அமைச்சர்களும் முக்கிய பிரமுகர்களும், மைபாரத் தன்னார்வலர்களும் இந்த நடைப்பயணத்தில் பங்கேற்றனர். பிரதமர் திரு நரேந்திர மோடியின் சொந்த ஊரான வாட்நகர் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நகரமாகும். அங்கு நடைபெற்ற இந்த நடைப்பயணத்தில் உள்ளூர் பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள், தன்னார்வ …

Read More »

நித்தி ஆயோக்கில் பிரபல பொருளாதார நிபுணர்களுடன் பிரதமர் சந்திப்பு

2025-26-ம் ஆண்டு மத்திய பட்ஜெட் தயாரிப்புக்காக புகழ்பெற்ற பொருளாதார வல்லுநர்கள் மற்றும் சிந்தனையாளர்கள் குழுவுடன் பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று நித்தி ஆயோக்கில் கலந்துரையாடினார். “உலகின் நிச்சயமற்ற காலகட்டத்தில் இந்தியாவின் வளர்ச்சி வேகத்தை பராமரித்தல்” என்ற கருப்பொருளில் இந்தக் கூட்டம் நடைபெற்றது. கலந்து கொண்ட நிபுணர்களின் ஆழமான கருத்துக்களுக்கு பிரதமர் தமது உரையில் நன்றி தெரிவித்தார். 2047-ம் ஆண்டுக்குள் இந்தியாவை வளர்ச்சியடையச் செய்வதில் கவனம் செலுத்தும் வகையில் மனப்பாங்கை முற்றாக …

Read More »

புகழ்பெற்ற பாடகர் முகமது ரஃபியின் 100-வது பிறந்த நாளை முன்னிட்டு பிரதமர் அவரை நினைவு கூர்ந்துள்ளார்

புகழ்பெற்ற பாடகர் முகமது ரஃபி-யின் 100-வது பிறந்த நாளை முன்னிட்டு பிரதமர் திரு. நரேந்திர மோடி அவரை நினைவு கூர்ந்துள்ளார். முகமது ரஃபி ஒரு இசை மேதை என்றும், அவரது கலாச்சார  தாக்கம், தலைமுறைகளைக் கடந்தது என்றும் பிரதமர் குறிப்பிட்டுள்ளார். இது குறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது: புகழ்பெற்ற முகமது ரஃபி சாஹபின் 100-வது பிறந்த நாளை முன்னிட்டு அவரை நினைவு கூர்கிறேன். அவர் ஒரு இசை மேதை. …

Read More »

முன்னாள் பிரதமர் சவுத்ரி சரண் சிங் பிறந்த நாளையொட்டி பிரதமர் அவரை நினைவுகூர்ந்துள்ளார்

முன்னாள் பிரதமர் சவுத்ரி சரண் சிங் பிறந்த நாளையொட்டி பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று அவரை நினைவுகூர்ந்துள்ளார். சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் பதிவிட்டிருப்பதாவது: “ஏழைகள் மற்றும் விவசாயிகளின் உண்மையான நலன் விரும்பியான முன்னாள் பிரதமர் பாரத ரத்னா சவுத்ரி சரண் சிங்கின் பிறந்த நாளை முன்னிட்டு அவருக்குத்  தாழ்மையுடன் மரியாதை செலுத்துகிறேன். தேசத்திற்கான அவரது அர்ப்பணிப்பும் சேவையும் அனைவருக்கும் தொடர்ந்து ஊக்கமளிக்கும்.”

Read More »

வேலைவாய்ப்புத் திருவிழாவின்கீழ் மத்திய அரசுத் துறைகள், நிறுவனங்களில் புதிதாக நியமனம் செய்யப்பட்ட 71,000 -க் கும் மேற்பட்டோருக்கு நியமனக் கடிதங்களை பிரதமர் திரு நரேந்திர மோடி வழங்கினார்

அரசுத் துறைகள், அமைப்புகளில் புதிதாக நியமனம் செய்யப்பட்ட 71,000 இளைஞர்களுக்கு பணி நியமன ஆணைகளை பிரதமர் திரு. நரேந்திர மோடி, காணொலிக் காட்சி மூலம்  இன்று வழங்கினார். வேலைவாய்ப்பு உருவாக்கத்திற்கு முன்னுரிமை அளிப்பதில் பிரதமரின் உறுதிப்பாட்டை இந்த வேலைவாய்ப்புத் திருவிழா எடுத்துக் காட்டுவதாக உள்ளது. நாட்டைக் கட்டமைப்பது, சுய அதிகாரமளித்தல் ஆகியவற்றிற்கு பங்களிப்பதற்கான அர்த்தமுள்ள வாய்ப்புகளை வழங்குவதன் மூலம் இளைஞர்களுக்கு அதிகாரம் அளிக்கும். வேலைவாய்ப்புத் திருவிழாவில் உரையாற்றிய பிரதமர் , குவைத் …

Read More »

டிசம்பர் 23-ம் தேதி புதுதில்லியில் உள்ள சிபிசிஐ மையத்தில் இந்திய கத்தோலிக்க ஆயர்கள் மாநாட்டில் நடைபெறும் கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்களில் பிரதமர் பங்கேற்கிறார்

டிசம்பர் 23ஆம் தேதி மாலை 6:30 மணிக்கு புதுதில்லியில் உள்ள சிபிசிஐ மைய வளாகத்தில் இந்திய கத்தோலிக்க ஆயர்கள் பேரவை  நடத்தும் கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்களில் பிரதமர் திரு நரேந்திர மோடி கலந்து கொள்கிறார். கர்தினால்கள், பிஷப்கள் மற்றும் திருச்சபையின் முக்கிய தலைவர்கள் உட்பட கிறிஸ்தவ சமூகத்தைச் சேர்ந்த முக்கிய தலைவர்களுடன் பிரதமர் உரையாடுவார். இந்தியாவில் உள்ள கத்தோலிக்க திருச்சபையின் தலைமையகத்தில் இதுபோன்ற நிகழ்ச்சியில் பிரதமர் ஒருவர் கலந்து கொள்வது இதுவே …

Read More »

ஒப்பந்தங்களின் பட்டியல்: பிரதமரின் குவைத் பயணம் (டிசம்பர் 21-22, 2024)

வ.எண்   புரிந்துணர்வு ஒப்பந்தம்/உடன்படிக்கை   குறிக்கோள்   01 பாதுகாப்புத் துறையில் ஒத்துழைப்புக்காக இந்தியா மற்றும் குவைத் இடையேயான புரிந்துணர்வு ஒப்பந்தம்.   இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தம் பாதுகாப்புத் துறையில் இருதரப்பு ஒத்துழைப்பை நிறுவனப்படுத்தும். பயிற்சி, பணியாளர்கள் மற்றும் நிபுணர்கள் பரிமாற்றம், கூட்டு பயிற்சிகள், பாதுகாப்பு தொழில்துறையில் ஒத்துழைப்பு, பாதுகாப்பு உபகரணங்கள் விநியோகம், ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டில் ஒத்துழைப்பு ஆகியவை  இந்த ஒப்பந்தத்தில் முக்கிய அம்சங்களாகும்.     02 இந்தியா மற்றும் குவைத் இடையே 2025-2029 ஆண்டுகளில் கலாச்சார பரிமாற்ற திட்டம் .   கலை, இசை, நடனம், இலக்கியம், நாடகம் ஆகியவற்றில் கலாச்சார பரிமாற்றங்கள், கலாச்சார பாரம்பரியத்தைப் பாதுகாப்பதில் ஒத்துழைப்பு, கலாச்சாரத் துறையில் ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு மற்றும் விழாக்களை ஏற்பாடு செய்தல் ஆகியவற்றிற்கு கலாச்சார பரிமாற்ற திட்டம் வழிவகுக்கும்.   03 விளையாட்டுத் துறையில் ஒத்துழைப்பைச் செயல்படுத்துவதற்கான திட்டம் (2025-2028)   இந்தியா மற்றும் குவைத் இடையேயான விளையாட்டுத் துறையில் இருதரப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்தும் வகையில், விளையாட்டுத் தலைவர்களின் அனுபவங்களை பகிர்ந்து கொள்வது, விளையாட்டுத் துறையில் நிகழ்ச்சிகள்  மற்றும் திட்டங்களில் பங்கேற்பது, விளையாட்டு மருத்துவம், விளையாட்டு மேலாண்மை, விளையாட்டு ஊடகம், விளையாட்டு அறிவியல் உள்ளிட்ட துறைகளில் நிபுணத்துவத்தை பரிமாறிக் கொள்வது ஆகியவை இதில் அடங்கும்.   04 சர்வதேச சூரியசக்தி கூட்டணியில் குவைத் உறுப்பினர்.   சர்வதேச சூரியசக்தி கூட்டணி, கூட்டாக சூரிய சக்தியைப் பயன்படுத்துவதை நோக்கமாகக் கொண்டது. உறுப்பு நாடுகளுக்கு குறைந்த கார்பன் வளர்ச்சிப் பாதைகளை உருவாக்க உதவும் வகையில் சூரிய சக்தியின் பயன்பாட்டை அளவிடுவதற்கான முக்கிய பொதுவான சவால்களை இது நிவர்த்தி செய்கிறது.  

Read More »