வ.எண் புரிந்துணர்வு ஒப்பந்தம்/உடன்படிக்கை குறிக்கோள் 01 பாதுகாப்புத் துறையில் ஒத்துழைப்புக்காக இந்தியா மற்றும் குவைத் இடையேயான புரிந்துணர்வு ஒப்பந்தம். இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தம் பாதுகாப்புத் துறையில் இருதரப்பு ஒத்துழைப்பை நிறுவனப்படுத்தும். பயிற்சி, பணியாளர்கள் மற்றும் நிபுணர்கள் பரிமாற்றம், கூட்டு பயிற்சிகள், பாதுகாப்பு தொழில்துறையில் ஒத்துழைப்பு, பாதுகாப்பு உபகரணங்கள் விநியோகம், ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டில் ஒத்துழைப்பு ஆகியவை இந்த ஒப்பந்தத்தில் முக்கிய அம்சங்களாகும். 02 இந்தியா மற்றும் குவைத் இடையே 2025-2029 ஆண்டுகளில் கலாச்சார பரிமாற்ற திட்டம் . கலை, இசை, நடனம், இலக்கியம், நாடகம் ஆகியவற்றில் கலாச்சார பரிமாற்றங்கள், கலாச்சார பாரம்பரியத்தைப் பாதுகாப்பதில் ஒத்துழைப்பு, கலாச்சாரத் துறையில் ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு மற்றும் விழாக்களை ஏற்பாடு செய்தல் ஆகியவற்றிற்கு கலாச்சார பரிமாற்ற திட்டம் வழிவகுக்கும். 03 விளையாட்டுத் துறையில் ஒத்துழைப்பைச் செயல்படுத்துவதற்கான திட்டம் (2025-2028) இந்தியா மற்றும் குவைத் இடையேயான விளையாட்டுத் துறையில் இருதரப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்தும் வகையில், விளையாட்டுத் தலைவர்களின் அனுபவங்களை பகிர்ந்து கொள்வது, விளையாட்டுத் துறையில் நிகழ்ச்சிகள் மற்றும் திட்டங்களில் பங்கேற்பது, விளையாட்டு மருத்துவம், விளையாட்டு மேலாண்மை, விளையாட்டு ஊடகம், விளையாட்டு அறிவியல் உள்ளிட்ட துறைகளில் நிபுணத்துவத்தை பரிமாறிக் கொள்வது ஆகியவை இதில் அடங்கும். 04 சர்வதேச சூரியசக்தி கூட்டணியில் குவைத் உறுப்பினர். சர்வதேச சூரியசக்தி கூட்டணி, கூட்டாக சூரிய சக்தியைப் பயன்படுத்துவதை நோக்கமாகக் கொண்டது. உறுப்பு நாடுகளுக்கு குறைந்த கார்பன் வளர்ச்சிப் பாதைகளை உருவாக்க உதவும் வகையில் சூரிய சக்தியின் பயன்பாட்டை அளவிடுவதற்கான முக்கிய பொதுவான சவால்களை இது நிவர்த்தி செய்கிறது.
Read More »குவைத் பிரதமரை, பிரதமர் சந்தித்தார்
பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று குவைத் நாட்டின் பிரதமர் ஷேக் அகமது அல்-அப்துல்லா அல்-அஹ்மத் அல்-சபாவுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். இரு தலைவர்களும் அரசியல், வர்த்தகம், முதலீடு, எரிசக்தி, பாதுகாப்பு, சுகாதாரம், கல்வி, தொழில்நுட்பம், கலாச்சாரம் மற்றும் மக்களிடையேயான உறவுகள் உள்ளிட்ட துறைகளில் உத்திசார் கூட்டாண்மையை வலுப்படுத்துவதற்கான செயல் திட்டம் குறித்து விவாதித்தனர். இரு நாடுகளுக்கும் இடையேயான பொருளாதார ஒத்துழைப்பை வலுப்படுத்துவது குறித்து அவர்கள் வலியுறுத்தினர். எரிசக்தி, பாதுகாப்பு, மருத்துவ சாதனங்கள், மருந்து, உணவுப் பூங்காக்கள் உள்ளிட்ட துறைகளில் புதிய வாய்ப்புகளை ஆராய குவைத் முதலீட்டு ஆணையம் மற்றும் பிற பங்குதாரர்கள் அடங்கிய குழுவை இந்தியாவுக்கு வருமாறு பிரதமர் அழைப்பு விடுத்தார். பாரம்பரிய மருத்துவம் மற்றும் விவசாய ஆராய்ச்சியில் ஒத்துழைப்பு குறித்தும் தலைவர்கள் விவாதித்தனர். கூட்டுறவுக்கான கூட்டு ஆணையத்தில் (ஜேசிசி) சமீபத்தில் கையெழுத்திட்டதை அவர்கள் வரவேற்றனர், இதன் கீழ் சுகாதாரம், மனிதவளம் மற்றும் ஹைட்ரோகார்பன்கள், தொடர்பான ஏற்கனவே உள்ள கூட்டுப் பணிக்குழுக்களுடன், கூடுதலாக வர்த்தகம், முதலீடு, கல்வி, தொழில்நுட்பம், விவசாயம், பாதுகாப்பு, கலாச்சாரம் ஆகிய துறைகளில் புதிய கூட்டுப் பணிக்குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. பேச்சுவார்த்தைக்குப் பிறகு தலைவர்கள் முன்னிலையில், இருதரப்பு ஒப்பந்தங்கள் மற்றும் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டு பரிமாற்றம் செய்யப்பட்டன. பாதுகாப்பு ஒத்துழைப்பு குறித்த புரிந்துணர்வு ஒப்பந்தம், கலாச்சார பரிமாற்ற திட்டம், விளையாட்டுத் துறையில் ஒத்துழைப்புக்கான நிர்வாகத் திட்டம் மற்றும் குவைத் சர்வதேச சோலார் கூட்டணியில் இணைவதற்கான கட்டமைப்பு ஒப்பந்தம் ஆகியவை இதில் அடங்கும். இந்தியா வருமாறு குவைத் பிரதமருக்கு பிரதமர் அழைப்பு விடுத்தார்.
Read More »தற்போது நடைபெற்று வரும் ரான் உற்சவத்தின் போது கட்ச் பகுதியின் கண்கவர் கலாச்சாரம் மற்றும் அன்பான விருந்தோம்பலை ஆராய, பழமையான ஒயிட் ரானைக் கண்டறியுமாறு பிரதமர் வலியுறுத்தல்
மார்ச் 2025 வரை நடைபெறும் ரான் உற்சவத்துக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி அனைவரையும் அழைத்துள்ளார். இந்த விழா மறக்க முடியாத அனுபவமாக இருக்கும் என்று பிரதமர் திரு மோடி கூறியுள்ளார். சமூக ஊடக எக்ஸ் பதிவில் அவர் கூறியிருப்பதாவது; “கட்ச் உங்கள் அனைவருக்காகவும் காத்திருக்கிறது! தற்போது நடைபெற்று வரும் ரான் உற்சவத்தின் போது கட்ச் பகுதியின் அழகிய ஒயிட் ரானின் ( உப்பு சதுப்பு நிலம்) , கண்கவர் கலாச்சாரம் மற்றும் அன்பான விருந்தோம்பல் ஆகியவற்றைக் கண்டறிய வாருங்கள். மார்ச் 2025 வரை நடைபெறும் இந்தத் திருவிழா உங்களுக்கும் உங்கள் குடும்பத்துக்கும் மறக்க முடியாத அனுபவமாக இருக்கும்’’.
Read More »குவைத்தில் 101 வயதான முன்னாள் ஐஎஃப்எஸ் அதிகாரியைச் சந்திப்பதை பிரதமர் ஆவலுடன் எதிர்நோக்கியுள்ளார்
பிரதமர் திரு நரேந்திர மோடியிடம் விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு பதிலளிக்கும் வகையில், இன்று குவைத்தில் உள்ள 101 வயதான முன்னாள் ஐஎஃப்எஸ் அதிகாரியான திரு மங்கள் சைன் ஹந்தா ஜியை, புலம்பெயர்ந்த இந்தியர்களுடனான உரையாடலின் போது சந்திக்க ஆவலுடன் இருப்பதாக பிரதமர் பதிலளித்துள்ளார். சமூக ஊடகப் பதிவில் அவர் கூறியிருப்பதாவது; “நிச்சயமாக! நான் இன்று குவைத்தில் திரு மங்கள் சைன் ஹந்தா அவர்களைச் சந்திக்க ஆவலுடன் காத்திருக்கிறேன்.”
Read More »தியானத்தை அன்றாட வாழ்வின் ஒரு பகுதியாக மாற்றுமாறு அனைவருக்கும் பிரதமர் அழைப்பு விடுத்துள்ளார்
உலக தியான தினமான இன்று, தியானத்தை தங்களின் அன்றாட வாழ்வின் ஒரு பகுதியாக மாற்றுமாறு பிரதமர் திரு நரேந்திர மோடி அனைவருக்கும் அழைப்பு விடுத்துள்ளார். தியானம் என்பது ஒருவருடைய வாழ்க்கையிலும், நமது சமூகம் மற்றும் பூமியிலும் அமைதி மற்றும் நல்லிணக்கத்தைக் கொண்டுவருவதற்கான ஒரு சக்திவாய்ந்த வழியாகும் என்று பிரதமர் திரு மோடி குறிப்பிட்டுள்ளார். சமூக ஊடக எக்ஸ் தளத்தில் அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப் பதிவில் கூறியிருப்பதாவது; “இன்று, உலக தியான தினத்தில், தியானத்தை தங்கள் அன்றாட வாழ்வின் ஒரு பகுதியாக ஆக்கி, அதன் மாற்றும் திறனை அனுபவிக்குமாறு அனைவருக்கும் அழைப்பு விடுக்கிறேன். தியானம் என்பது ஒருவரின் வாழ்க்கையிலும், நமது சமூகம் மற்றும் பூமிக் கிரகத்திற்கும் அமைதி மற்றும் நல்லிணக்கத்தைக் கொண்டுவருவதற்கான ஒரு சக்திவாய்ந்த வழியாகும். தொழில்நுட்ப யுகத்தில், செயலிகள் மற்றும் வழிகாட்டும் காணொலிகள் தியானத்தை நமது அன்றாட நடவடிக்கைகளில் இணைக்க உதவும் மதிப்புமிக்க கருவிகளாக இருக்கும்’’.
Read More »குவைத்தில் உள்ள புலம்பெயர்ந்த இந்தியர்களின் இதயபூர்வமான வரவேற்பு குறித்து பிரதமர் மகிழ்ச்சி தெரிவித்தார்
குவைத்தில் உள்ள துடிப்பான இந்திய புலம்பெயர் மக்கள் அளித்த இதயபூர்வமான வரவேற்பு குறித்து பிரதமர் திரு நரேந்திர மோடி மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். அவர்களின் ஆற்றல், அன்பு மற்றும் இந்தியாவுடனான அசைக்க முடியாத தொடர்பு ஆகியவை உண்மையிலேயே ஊக்கமளிப்பதாக பிரதமர் திரு மோடி குறிப்பிட்டுள்ளார். குவைத்தில் இன்று பிற்பகலில் பிரதமர் திரு நரேந்திர மோடிதிரு மங்கள் சைன் ஹந்தா ஜியை சந்தித்ததில் தமது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். சமூக ஊடக எக்ஸ் தளத்தில் அவர் பதிவிட்டுள்ளதாவது: “குவைத்தில் உள்ள துடிப்பான இந்திய புலம்பெயர் மக்களிடம் இருந்து இதயபூர்வமான வரவேற்பு கிடைத்தது. இந்தியாவுடனான அவர்களின் ஆற்றல், அன்பு மற்றும் அசைக்க முடியாத தொடர்பு ஆகியவை உண்மையிலேயே ஊக்கமளிக்கின்றன. அவர்களின் உற்சாகத்திற்கும், நமது நாடுகளுக்கிடையேயான உறவுகளை வலுப்படுத்துவதற்கு அவர்கள் ஆற்றிய பங்களிப்பிற்காகவும் நன்றி . “இன்று மதியம் குவைத்தில் திரு மங்கல் சைன் ஹந்தா ஜியை சந்தித்ததில் மகிழ்ச்சி. இந்தியாவுக்கான அவரது பங்களிப்பையும், இந்தியாவின் வளர்ச்சிக்கான அவரது ஆர்வத்தையும் நான் பாராட்டுகிறேன்’’.
Read More »ராமாயணம், மகாபாரதம் ஆகியவற்றை அரபு மொழியாக்கம் செய்த அப்துல்லா அல்-பரூன், அப்துல் லத்தீப் அல்-நெசெஃப் ஆகியோருக்குப் பிரதமர் பாராட்டு
ராமாயணம், மகாபாரதம் ஆகியவற்றை அரபு மொழியில் மொழிபெயர்த்து வெளியிடுவதில் மேற்கொண்ட முயற்சிகளுக்காக அப்துல்லா அல்-பரூன், அப்துல் லத்தீப் அல்-நெசெஃப் ஆகியோரைப் பிரதமர் திரு நரேந்திர மோடி பாராட்டியுள்ளார். இது குறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது: “ராமாயணம், மகாபாரதம் ஆகியவற்றின் அரபு மொழிபெயர்ப்புகளைக் கண்டு மகிழ்ச்சி அடைந்தேன். அதை மொழிபெயர்த்து வெளியிட எடுத்த முயற்சிகளுக்காக அப்துல்லா அல்-பரூன், அப்துல் லத்தீஃப் அல்-நெசெஃப் ஆகியோரை நான் பாராட்டுகிறேன். அவர்களின் இந்த முயற்சி உலக அளவில் இந்தியக் கலாச்சாரத்தின் சிறப்பை எடுத்துக்காட்டுகிறது.”
Read More »ராஜஸ்தானில் ஜெய்ப்பூர்-அஜ்மீர் நெடுஞ்சாலையில் நேரிட்ட சாலை விபத்துக்கு பிரதமர் ஆழ்ந்த இரங்கல், உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு நிவாரண உதவி அறிவிப்பு
ராஜஸ்தானில் ஜெய்ப்பூர்-அஜ்மீர் நெடுஞ்சாலையில் நேரிட்ட சாலை விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார். இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தேசிய நிவாரண நிதியில் இருந்து தலா 2 லட்சம் ரூபாயும், காயமடைந்தவர்களுக்கு தலா 50 ஆயிரம் ரூபாயும் நிதியுதவி வழங்கப்படும் என்று பிரதமர் மோடி அறிவித்துள்ளார். இதுகுறித்து சமூக ஊடக எக்ஸ் தள பதிவில் பிரதமர் அலுவலகம் கூறியிருப்பதாவது: “ராஜஸ்தானில் ஜெய்ப்பூர்-அஜ்மீர் நெடுஞ்சாலையில் …
Read More »திரு ஓம் பிரகாஷ் சவுதாலா மறைவுக்குப் பிரதமர் இரங்கல் தெரிவித்துள்ளார்
ஹரியானா முன்னாள் முதலமைச்சர் திரு ஓம் பிரகாஷ் சவுதாலா மறைவுக்குப் பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று இரங்கல் தெரிவித்துள்ளார். சமூக ஊடக எக்ஸ் தளத்தில் திரு மோடி பதிவிட்டிருப்பதாவது: “ஹரியானா முன்னாள் முதல்வர் ஓம் பிரகாஷ் சவுதாலாவின் மறைவு மிகவும் வருத்தமளிக்கிறது. அவர் பல ஆண்டுகளாக மாநில அரசியலில் தீவிரமாக செயல்பட்டவர். சவுத்ரி தேவி லால் அவர்களின் பணிகளை முன்னெடுத்துச் செல்ல தொடர்ச்சியான முயற்சிகளை மேற்கொண்டார். இந்தத் துயரமான …
Read More »இங்கிலாந்து மன்னர் மூன்றாம் சார்லஸுடன் பிரதமர் மோடி உரையாடினார்
இங்கிலாந்து மன்னர் மூன்றாம் சார்லஸுடன் பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று உரையாடினார். இரு நாடுகளுக்கும் இடையேயான வரலாற்றுச் சிறப்புமிக்க உறவுகளை நினைவுகூர்ந்த அவர்கள், இந்தியா, இங்கிலாந்து இடையேயான விரிவான உத்திசார் கூட்டாண்மையை மேலும் வலுப்படுத்துவதற்கான உறுதிப்பாட்டை மீண்டும் உறுதி செய்தனர். காமன்வெல்த் நாடுகள், சமோவாவில் சமீபத்தில் முடிவடைந்த காமன்வெல்த் நாடுகளின் தலைவர்கள் கூட்டம் ஆகியவை குறித்து அவர்கள் கருத்துக்களை பரிமாறிக் கொண்டனர். பருவநிலை நடவடிக்கை, நிலைத்தன்மை உள்ளிட்ட பரஸ்பர ஆர்வமுள்ள பல அம்சங்கள் குறித்தும் விவாதித்தனர். இவற்றில் மன்னரின் நீடித்த ஆதரவு மற்றும் முன்முயற்சிகளுக்கு பாராட்டு தெரிவித்த பிரதமர், இந்தியா மேற்கொண்டுள்ள பல்வேறு முன்முயற்சிகள் குறித்தும் எடுத்துரைத்தார். கிறிஸ்துமஸ், புத்தாண்டு பண்டிகை வாழ்த்துகளை பரஸ்பரம் இருவரும் பரிமாறிக் கொண்டனர். மன்னரின் சிறந்த ஆரோக்கியம், நல்வாழ்வுக்கு பிரதமர் தனது வாழ்த்துகளைத் தெரிவித்தார்.
Read More »
Matribhumi Samachar Tamil