Friday, December 05 2025 | 09:33:23 PM
Breaking News

Tag Archives: Narendra Modi

உலகளாவிய பருவநிலை நிதியை மறுசீரமைக்க இந்தியாவின் வாய்ப்பை எடுத்துரைக்கும் கட்டுரை ஒன்றை பிரதமர் பகிர்ந்துள்ளார்

மாபெரும் வெளிப்படைத்தன்மை மற்றும் பொதுவான தரநிலைகளுடன் உலகளாவிய பருவநிலை நிதியை மறுசீரமைக்க இந்தியாவின் வலுவான வாய்ப்பை எடுத்துரைக்கும் மத்திய அமைச்சர் திரு பூபேந்தர் யாதவின் கட்டுரை ஒன்றை பிரதமர் திரு நரேந்திர மோடி பகிர்ந்துள்ளார். பருவநிலை நிதிசார்ந்த பொருளாதாரம் குறித்த இந்தியாவின் முன்மொழிவு, அதிகரித்து வரும் உள்நாட்டு பசுமை நிதி ஆகியவற்றுக்கு, எதிர்காலத்திற்கான  உலகளாவிய கட்டமைப்புக்கு மிகவும் பயனுள்ள வழிகாட்டுதல்களை வழங்கும், நடைமுறை சார்ந்த தலைமைத்துவத்தை உதாரணமாக இந்தக் கட்டுரை …

Read More »

பிரதமர் திரு நரேந்திர மோடி நவம்பர் 19 அன்று ஆந்திர பிரதேசம், தமிழ்நாடு ஆகிய மாநிலங்களில் பயணம்

பிரதமர் திரு நரேந்திர மோடி நவம்பர் 19 அன்று ஆந்திர பிரதேசம், தமிழ்நாடு ஆகிய மாநிலங்களில் பயணம் மேற்கொள்கிறார். காலை 10 மணியளவில் புட்டபர்த்தியில் பகவான் ஸ்ரீ சத்ய சாய்பாபாவின் நினைவிடத்திற்கு சென்று பிரதமர் மரியாதை செலுத்துகிறார். காலை 10.30 மணியளவில் பகவான் ஸ்ரீ சத்ய சாய்பாபாவின் நூற்றாண்டு கொண்டாட்டத்தில் பிரதமர் பங்கேற்கிறார். இந்நிகழ்ச்சியில் பகவான் ஸ்ரீ சத்ய சாய்பாபாவின் வாழ்க்கை, போதனை மற்றும் அவரது சிறப்பை கௌரவிக்கும் வகையில் …

Read More »

புதுதில்லியில் 6-வது ராம்நாத் கோயங்கா சொற்பொழிவில் தாம் நிகழ்த்திய உரையின் காட்சிகளை பிரதமர் பகிர்ந்துள்ளார்

புதுதில்லியில் 6-வது ராம்நாத் கோயங்கா சொற்பொழிவில் தாம் நிகழ்த்திய உரையின் காட்சிகளை பிரதமர் திரு நரேந்திர மோடி பகிர்ந்துள்ளார். தனித்தனியான பதிவுகளில் திரு மோடி கூறியிருப்பதாவது: “திரு ராம்நாத் கோயங்காவை பொருத்தவரை தேசம் முதலில் என்பது எப்போதும் அவரது கருத்தாக இருந்தது. எது சரியோ, எது சத்தியமோ அதன் பக்கம் அவர் நின்றார். அனைத்துக்கும் மேலானதாக கடமையை  அவர் முன்வைத்தார்.” “அதிக எண்ணிக்கையிலான மக்கள் பங்கேற்கும் போது ஜனநாயகம் வலுப்பெறுகிறது. …

Read More »

ஆசிய வில்வித்தை சாம்பியன்ஷிப் 2025-ல் சிறப்பான வெற்றியை பெற்ற இந்திய வில்வித்தை குழுவினருக்கு பிரதமர் வாழ்த்து

ஆசிய வில்வித்தை சாம்பியன்ஷிப் 2025-ல் இதுவரை இல்லாத வகையில் சிறப்பான வெற்றியை பெற்ற இந்திய வில்வித்தை குழுவினருக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். இது குறித்து கருத்து தெரிவித்துள்ள அவர், இந்தியக் குழுவினர், இதுவரை இல்லாத வகையில் சிறப்பாக செயல்பட்டு, 6 தங்கம் உள்பட மொத்தம் 10 பதக்கங்களை வென்று தாயகத்திற்கு பெருமை சேர்த்துள்ளதாக கூறினார். ரிகர்வ் ஆடவர் பிரிவில் 18 ஆண்டுகளுக்கு பிறகு தங்கப்பதக்கம் வென்ற வரலாற்று சிறப்புமிக்க …

Read More »

சவுதி அரேபியா மதினா சாலை விபத்தில் இந்தியர்கள் உயிரிழந்ததற்கு பிரதமர் இரங்கல்

சவூதி அரேபியாவின் மதினா நகரில் நேரிட்ட சாலை விபத்தில் இந்தியர்கள் உயிரிழந்தது குறித்து பிரதமர் திரு நரேந்திர மோடி ஆழ்ந்த கவலை தெரிவித்துள்ளார். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தமது இரங்கலை தெரிவித்துள்ள அவர், காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திப்பதாக கூறியுள்ளார். பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் ரியாத்தில் உள்ள இந்திய தூதரகமும், ஜெட்டாவில் உள்ள துணைத் தூதரகமும் அளித்து வருவதாக பிரதமர் கூறியுள்ளார். தேவையான உதவியையும் ஒருங்கிணைப்பையும் உறுதி செய்வதற்கு சவுதி …

Read More »

குஜராத்தின் சூரத்தில் கட்டப்பட்டு வரும் புல்லட் ரயில் நிலையத்தை பிரதமர் திரு நரேந்திர மோடி பார்வையிட்டார்; மும்பை-அகமதாபாத் அதிவேக ரயில் பாதைப் பணிகளின் முன்னேற்றத்தை ஆய்வு செய்தார்

சூரத்தில் கட்டப்பட்டு வரும் புல்லட் ரயில் நிலையத்தை பிரதமர் திரு நரேந்திர மோடி நேற்று (15.11.2025) பார்வையிட்டு, மும்பை-அகமதாபாத் அதிவேக ரயில் பாதைப் பணிகளின் முன்னேற்றத்தை ஆய்வு செய்தார். இந்தியாவின் முதல் புல்லட் ரயில் திட்டத்தை செயல்படுத்தி வரும் குழுவினருடன் அவர் கலந்துரையாடினார். பணிகளின் வேகம், நிர்ணயிக்கப்பட்ட கால அட்டவணைப்படி இலக்குகளை அடைவது உட்பட திட்டத்தின் முன்னேற்றங்கள் குறித்து அவர் கேட்டறிந்தார். திட்டப் பணிகள் எந்த சிக்கலும் இல்லாமல் சுமூகமாக …

Read More »

பிரதமர் திரு நரேந்திர மோடி பீகார் மற்றும் மேற்கு வங்க மாநிலங்களில் இம்மாதம் 22-ம் தேதி பயணம்

பிரதமர் திரு நரேந்திர மோடி நாளை மறுநாள் (22.08.2025) பீகார் மற்றும் மேற்கு வங்க மாநிலங்களுக்கு பயணம் மேற்கொள்கிறார். பீகார் மாநிலம் கயாவில் காலை 11 மணிக்கு நடைபெறும் நிகழ்ச்சியில் 13,000 கோடி ரூபாய் மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித் திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டுகிறார். பின்னர் அவர் இரண்டு ரயில் சேவைகளையும் கொடியசைத்துத் தொடங்கி வைத்து உரையாற்றுகிறார். இதனையடுத்து, கங்கை நதியின் மேல் அமைக்கப்பட்டுள்ள அவுண்டா – சிமாரியா மேம்பாலத்தை பயன்பாட்டிற்காக …

Read More »

பிரதமர் திரு நரேந்திர மோடி தில்லியில் ₹11,000 கோடி மதிப்பிலான இரண்டு முக்கிய தேசிய நெடுஞ்சாலைத் திட்டங்களைத் தொடங்கிவைத்தார்

தில்லியின் ரோஹிணியில் சுமார் ₹11,000 கோடி மதிப்பிலான இரண்டு முக்கிய தேசிய நெடுஞ்சாலைத் திட்டங்களை பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று (17.08.2025) தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் உரையாற்றிய பிரதமர், விரைவுச் சாலையின் பெயர் “துவாரகா” என்றும், நிகழ்ச்சி “ரோஹிணி”யில் நடைபெறுவதாகவும் கூறி, அந்த இடத்தின் முக்கியத்துவத்தைப் பற்றிக் குறிப்பிட்டார். ஜென்மாஷ்டமிப் பண்டிகையின் உணர்வை எடுத்துரைத்த அவர், துவாரகாவில் இந்த நிகழ்வு நடைபெறுவது தற்செயல் நிகழ்வாகும் என்றும் குறிப்பிட்டார். முழு …

Read More »

பிரதமர் திரு நரேந்திர மோடி எம் எஸ் சுவாமிநாதன் நூற்றாண்டு சர்வதேச மாநாட்டில் உரையாற்றினார்

பிரதமர் திரு நரேந்திர மோடி எம் எஸ் சுவாமிநாதன் நூற்றாண்டு சர்வதேச மாநாட்டை இன்று (07 ஆகஸ்ட், 2025) தொடங்கி வைத்து உரையாற்றினார். புதுதில்லியில் உள்ள இந்திய வேளாண் ஆராய்ச்சி கவுன்சில் வளாகத்தில் நடைபெற்று வரும் இம்மாநாட்டில் மறைந்த பேராசிரியர் எம் எஸ் சுவாமிநாதனுக்கு பிரதமர் மரியாதை செலுத்தினார். தொலைநோக்குப் பார்வையுடன் கூடிய அவரது பங்களிப்பு ஒரே சகாப்தத்தில் மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளதாக அவர் கூறினார். புகழ்பெற்ற விஞ்ஞானியான எம் எஸ் …

Read More »

பிரதமர் திரு நரேந்திர மோடி தில்லியில் புதிதாக கட்டப்பட்டுள்ள கடமை மாளிகையை (கர்த்தவ்ய பவன்) இம்மாதம் 6-ம் தேதி திறந்து வைக்கிறார்

தில்லியில் உள்ள கடமைப்பாதையில் அமைக்கப்பட்டுள்ள பதிய கடமை மாளிகையை பிரதமர் திரு நரேந்திர மோடி ஆகஸ்ட் 6-ம் தேதி நண்பகல் 12.15 மணிக்கு திறந்து வைக்கிறார். இதனையடுத்து கடமைப்பாதையில் மாலை 6.30 மணிக்கு நடைபெறவுள்ள பொதுக்கூட்ட நிகழ்ச்சியிலும் பிரதமர் உரையாற்ற உள்ளார். இந்தப் புதிய கட்டடம் நவீன வசதிகள், எரிசக்தித் திறன் மற்றும் மக்களை மையமாகக் கொண்ட நிர்வாகம் என்ற பிரதமரின் தொலைநோக்குப் பார்வையை எடுத்துக் காட்டும் வகையில் கட்டப்பட்டுள்ளது. …

Read More »