நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் 2025 தொடங்குவதற்கு முன் நாடாளுமன்ற வளாகத்தில் பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று ஊடகவியலாளர்களிடையே உரையாற்றினார். நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடருக்கு அனைவரையும் வரவேற்ற பிரதமர், இந்தக் கூட்டத்தொடர் புதிய கண்டுபிடிப்பு மற்றும் புதுப்பித்தலின் அடையாளமாக உள்ளது என்றார். நாடு முழுவதற்குமான தற்போதைய வானிலை பற்றி எடுத்துரைத்த அவர், இது முன்னேற்றத்திற்கு சாதகமானது என்றும் விவசாயத்திற்கு பயனளிக்கும் முன்னறிவிப்பைக் கொண்டுவந்துள்ளது என்றும் கூறினார். மழைப் பொழிவானது ஊரகப் …
Read More »பிரதமர் திரு நரேந்திர மோடி பீகார், மேற்கு வங்க மாநிலங்களுக்கு நாளை (ஜூலை 18-ம் தேதி) பயணம்
பிரதமர் திரு நரேந்திர மோடி நாளை (ஜூலை 18 – ம் தேதி) பீகார், மேற்கு வங்க மாநிலங்களுக்குப் பயணம் மேற்கொள்கிறார். காலை 11:30 மணியளவில், பீகாரில் உள்ள மோதிஹரியில் ரூ.7,200 கோடிக்கும் கூடுதல் மதிப்பிலான பல்வேறு மேம்பாட்டுத் திட்டப் பணிகளுக்கு அவர் அடிக்கல் நாட்டுவதுடன், முடிவுற்றத் திட்டங்களைத் தொடங்கி வைக்கிறார், பின்னர் நடைபெறும் பொது நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அவர் உரையாற்றுகிறார். இதனையடுத்து, மேற்கு வங்க மாநிலத்திற்குச் செல்லும் பிரதமர், பிற்பகல் 3 மணியளவில் துர்காபூரில் ரூ.5000 கோடிக்கும் கூடுதல் மதிப்பிலான பல்வேறு மேம்பாட்டுத் திட்டப் பணிகளுக்கு அடிக்கல் …
Read More »குடியரசுத் தலைவரால் மாநிலங்களவைக்கு நியமிக்கப்பட்டுள்ள புகழ்பெற்ற நபர்களுக்குப் பிரதமர் வாழ்த்துத் தெரிவித்துள்ளார்
குடியரசுத் தலைவரால் மாநிலங்களவைக்கு நியமிக்கப்பட்டுள்ள நான்கு சிறப்புமிக்க ஆளுமைகளுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி மனமார்ந்த வாழ்த்துகளையும், பாராட்டுகளையும் தெரிவித்துள்ளார். சமூக ஊடக எக்ஸ் தளத்தில் அவர் வெளியிட்டுள்ள தொடர் பதிவுகளில், ஒவ்வொருவரது பங்களிப்புகளையும் எடுத்துரைத்து வாழ்த்துத் தெரிவித்துள்ளார். சட்டத் துறையில் முன்மாதிரியாக அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் பணியாற்றும் திரு உஜ்வல் நிகாமைப் பிரதமர் பாராட்டியுள்ளார். முக்கியத்துவம் வாய்ந்த வழக்குகளில் முதன்மையான பங்கு வகித்து, சாதாரண குடிமக்களின் கண்ணியத்தை நிலைநிறுத்த தொடர்ந்து பாடுபட்ட ஒரு வெற்றிகரமான வழக்கறிஞர் திரு நிகாம் என்று பிரதமர் கூறியுள்ளார். மாநிலங்களவைக்கு அவர் நியமிக்கப்பட்டதை திரு நரேந்திர மோடி வரவேற்றுள்ளதுடன் அவர் நாடாளுமன்றப் பணியில் சிறக்க வாழ்த்துத் தெரிவித்துள்ளார். இது குறித்து பிரதமர் கூறியிருப்பதாவது: “சட்டத்துறையிலும் நமது அரசியலமைப்பிலும் திரு உஜ்வால் நிகாமின் அர்ப்பணிப்பு முன்மாதிரியானது. அவர் ஒரு வெற்றிகரமான வழக்கறிஞர் மட்டுமல்ல. முக்கியமான வழக்குகளில் நீதியை நிலை நிறுத்துவதில் முன்னணியில் இருந்துள்ளார். தமது சட்டப் பணியில் அவர், அரசியலமைப்பு விழுமியங்களை வலுப்படுத்தவும், பொது மக்கள் எப்போதும் கண்ணியத்துடன் நடத்தப்படுவதை உறுதி செய்யவும் எப்போதும் பாடுபட்டு வந்துள்ளார். குடியரசுத் தலைவர் அவரை மாநிலங்களவைக்கு நியமித்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. அவரது நாடாளுமன்றப் பணிக்கு எனது வாழ்த்துகள்.” திரு சி. சதானந்தன் மாஸ்டரைப் பற்றிப் குறிப்பிட்டுள்ள, பிரதமர் அவரது வாழ்க்கை அநீதிக்கு எதிரான சின்னமாக திகழ்கிறது எனது விவரித்துள்ளார். வன்முறையையும் மிரட்டல்களையும் எதிர்கொண்ட போதிலும், திரு சதானந்தன் மாஸ்டர் தேச வளர்ச்சிக்கு உறுதியுடன் இருந்துள்ளார் என்று பிரதமர் கூறியுள்ளார். ஒரு ஆசிரியராகவும் சமூக சேவகராகவும் அவரது பங்களிப்புகளைப் பிரதமர் பாராட்டியுள்ளார். இது குறித்து பிரதமர் கூறியிருப்பதாவது: “திரு சி. சதானந்தன் மாஸ்டரின் வாழ்க்கை, அநீதிக்கு அடிபணியாமல் இருப்பதற்கும், துணிச்சலுக்கும் எடுத்துக்காட்டாகும்.வன்முறை, மிரட்டல் ஆகியவற்றால் தேச வளர்ச்சிக்கான அவரது உத்வேகத்தைத் தடுக்க முடியவில்லை. ஒரு ஆசிரியராகவும் சமூக சேவகராகவும் அவர் மேற்கொண்ட முயற்சிகள் பாராட்டத்தக்கவை. இளைஞர்களுக்கு அதிகாரமளிப்பதில் அவர் மிகுந்த ஆர்வம் கொண்டவர். அவர் குடியரசுத் தலைவரால் மாநிலங்களவைக்கு நியமிக்கப்பட்டதற்கு வாழ்த்துகள். மாநிலங்களவை உறுப்பினராக அவரது பணிக்கு வாழ்த்துகள்.” திரு ஹர்ஷ் வர்தன் ஷ்ரிங்லாவின் நியமனம் குறித்து கருத்துத் தெரிவித்துள்ள பிரதமர், அவர் ஒரு ராஜதந்திரி, அறிவுஜீவி, உத்திசார் சிந்தனையாளர் என பல வகைகளில் சிறப்பாகப் பணியாற்றியுள்ளதாக கூறியுள்ளார். இந்தியாவின் வெளியுறவுக் கொள்கைக்கும், இந்தியாவின் ஜி20 தலைமைத்துவத்திலும் திரு ஷ்ரிங்லாவின் பங்களிப்பை அவர் பாராட்டியுள்ளார். மாநிலங்களவைக்கு அவர் நியமிக்கப்படுவது குறித்து மகிழ்ச்சி அடைவதாக பிரதமர் தெரிவித்துள்ளார். அது குறித்து பிரதமர் கூறியிருப்பதாவது: “திரு ஹர்ஷ் வர்தன் ஷ்ரிங்லா ஒரு ராஜதந்திரி, அறிவுஜீவி, உத்திசார் சிந்தனையாளராக சிறந்து விளங்குகிறார். பல ஆண்டுகளாக, அவர் இந்தியாவின் வெளியுறவுக் கொள்கைக்கு முக்கிய பங்களிப்புகளைச் செய்துள்ளார், மேலும் நமது ஜி20 தலைமைத்துவத்திற்கும் அவர் பங்களித்தார். குடியரசுத் தலைவரால் மாநிலங்களவைக்கு அவர் நியமிக்கப்பட்டதில் மகிழ்ச்சி. அவரது தனித்துவமான கண்ணோட்டங்கள் நாடாளுமன்ற நடவடிக்கைகளை பெரிதும் வளப்படுத்தும். @harshvshrinla” டாக்டர் மீனாட்சி ஜெயின் நியமனம் குறித்து கருத்து தெரிவித்துள்ள பிரதமர், இது மிகுந்த மகிழ்ச்சிக்குரிய விஷயம் என்று கூறியுள்ளார். அறிஞர், ஆராய்ச்சியாளர், வரலாற்றாசிரியர் என்ற வகையில் அவரது சிறப்பான பணிகளைப் பிரதமர் பாராட்டியுள்ளார். கல்வி, இலக்கியம், வரலாறு, அரசியல் அறிவியல் ஆகியவற்றில் அவரது பங்களிப்புகளைப் பிரதமர் குறிப்பிட்டுக் காட்டியுள்ளார். மாநிலங்களவையில் அவரது பணிக்குப் பி்ரதமர் தமது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். இது குறித்து பிரதமர் கூறியிருப்பதாவது; “டாக்டர் மீனாட்சி ஜெயின், குடியரசுத் தலைவரால் மாநிலங்களவைக்கு நியமிக்கப்பட்டிருப்பது மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது. அவர் ஒரு அறிஞர், ஆராய்ச்சியாளர், வரலாற்றாசிரியராக தன்னை சிறப்பாக நிலைநிறுத்திக் கொண்டுள்ளார். கல்வி, இலக்கியம், வரலாறு, அரசியல் அறிவியல் ஆகிய துறைகளில் அவர் ஆற்றிய பணிகள் இத்துறைகள் சார்ந்த கல்வியை கணிசமாக வளப்படுத்தியுள்ளன. அவரது நாடாளுமன்ற பணிகளுக்கு எனது வாழ்த்துகள். @IndicMeenakshi”
Read More »பிரதமர் திரு. நரேந்திர மோடி வேலைவாய்ப்பு திருவிழாவில் உரையாற்றினார்
பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று வேலைவாய்ப்பு திருவிழாவில் உரையாற்றினார். மத்திய அரசின் பல்வேறு துறைகள் மற்றும் அமைப்புகளில் புதிதாக நியமிக்கப்பட்ட இளைஞர்களுக்கு இன்று காணொலி மூலம் 51,000க்கும் மேற்பட்ட பணி நியமன ஆணைகளை அவர் வழங்கினார். கூட்டத்தில் உரையாற்றிய அவர், மத்திய அரசின் பல்வேறு துறைகளில் இந்த இளைஞர்களுக்கு புதிய பொறுப்புகள் இன்று தொடங்குகின்றன என்று கூறினார். பல்வேறு துறைகளில் தங்கள் சேவையைத் தொடங்கிய இளைஞர்களை அவர் வாழ்த்தினார். இளைஞர்களுக்கு …
Read More »யுனெஸ்கோ உலக பாரம்பரிய பட்டியலில் ‘இந்தியாவின் மராட்டிய ராணுவ நிலப்பரப்புகள்’ இடம்பெற்றுள்ளதற்குப் பிரதமர் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்
இந்தியாவின் மராட்டிய ராணுவ நிலப்பரப்புகள் மதிப்புமிக்க யுனெஸ்கோ உலக பாரம்பரிய பட்டியலில் சேர்க்கப்பட்டதற்கு பிரதமர் திரு நரேந்திர மோடி மிகுந்த பெருமையையும் மகிழ்ச்சியையும் வெளிப்படுத்தியுள்ளார். இந்தப் பாரம்பரிய பட்டியலில் 12 கம்பீரமான கோட்டைகள் இடம்பெற்றுள்ளன. அவற்றில் 11 கோட்டைகள் மகாராஷ்டிராவில் அமைந்துள்ளன. 1 கோட்டை தமிழ்நாட்டில் உள்ளது. மராட்டிய பேரரசின் சிறப்புகளை எடுத்துரைத்துள்ள பிரதமர், “நாம் புகழ்பெற்ற மராட்டிய பேரரசைப் பற்றிப் பேசும்போது, அதை நல்லாட்சி, ராணுவ வலிமை, கலாச்சார பெருமை, சமூக நலனுக்கு முக்கியத்துவம் …
Read More »நமீபியா நாட்டின் மிக உயரிய கௌரவ விருதைப் பெற்றுக் கொண்ட பிரதமரின் ஏற்புரை
மேன்மைதங்கிய அதிபர் அம்மையார் அவர்களே, துணை அதிபர் அவர்களே, பிரதமர் அவர்களே, நமீபியாவின் அமைச்சர் பெருமக்களே, மதிப்பிற்குரிய விருந்தினர்களே, நமீபியா நாட்டின் மிக உயரிய விருதான ‘தி ஆர்டர் ஆப் தி மோஸ்ட் ஏன்சியன்ட் வெல்விட்ஸ்சியா மிரபிலிஸ்’ விருதை அந்நாட்டு அதிபரிடமிருந்து பெறுவது எனக்கு மிகுந்த பெருமையையும் மரியாதையையும் அளிப்பதாக உள்ளது. இந்த விருதினை வழங்கியதற்காக அந்நாட்டு அதிபர், அரசு மற்றும் மக்களுக்கு எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். …
Read More »இந்தியா – பிரேசில் இடையே 20 பில்லியன் டாலர் வர்த்தக இலக்கு
பிரதமர் திரு நரேந்திர மோடி, அரசு முறைப் பயணத்தின் 4-வது கட்டமாக பிரேசில் தலைநகர் பிரசிலியா சென்றடைந்தார். அங்குள்ள அல்வோராடா அரண்மனையில் அந்நாட்டு அதிபர் திரு லூயிஸ் இனாசியோ லூலா டா சில்வாவை சந்தித்துப் பேசினார். முன்னதாக பிரதமர் திரு நரேந்திர மோடியை அந்நாட்டு அதிபர் திரு லூலா பாரம்பரிய முறைப்படி அன்புடன் வரவேற்றார். இரு நாட்டுத் தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகள் நிலையிலான பேச்சுவார்த்தை நடைபெற்றது. இந்தப் பேச்சுவார்த்தையில் இரு …
Read More »இந்தியா – பிரேசில் – உயரிய நோக்கங்களைக் கொண்ட இரண்டு பெரிய நாடுகளின் கூட்டறிக்கை
பிரேசில் குடியரசின் அதிபர் திரு லூயிஸ் இனாசியோ லூலா டா சில்வா அழைப்பின் பேரில் இந்திய பிரதமர் திரு நரேந்திர மோடி 2025 ஜூலை 8 அன்று, பிரேசில் நாட்டிற்கு பயணம் மேற்கொண்டார். இதையடுத்து வரவிருக்கும் தசாப்தங்களில் இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்த ஐந்து முக்கிய அம்சங்களைக் கொண்ட உத்திசார்ந்த திட்டத்தை வகுக்க இருதலைவர்களும் முடிவு செய்துள்ளனர். 1. பாதுகாப்பு: கூட்டு ராணுவப் பயிற்சி, உயர்நிலை பாதுகாப்பு தூதுக் குழுக்களின் பரிமாற்றம் …
Read More »பிரேசில் அதிபருடன் சேர்ந்து மேற்கோண்ட கூட்டு செய்தியாளர் சந்திப்பின் போது பிரதமர் திரு நரேந்திர மோடியால் வெளியிடப்பட்ட ஊடக அறிக்கையின் தமிழாக்கம்
மேன்மை தங்கிய எனது சிறந்த நண்பரான அதிபர் லூலா அவர்களே, இருநாடுகளின் பிரதிநிதிகளே, ஊடக நண்பர்களே, வணக்கம். “போவா டார்டே”. ரியோவிலும் பிரேசிலியாவிலும் அன்பான வரவேற்பு அளித்ததற்காக எனது நண்பர் அதிபர் லூலாவுக்கு நான் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். அமேசான் அழகிலும் உங்களின் அன்பிலும் உண்மையிலேயே நாங்கள் மனம் நெகிழ்ந்துள்ளோம். பிரேசில் அதிபரால் பிரேசிலின் மிக உயரிய தேசிய விருது வழங்கி இன்று கௌரவிக்கப்பட்டிருக்கும் தருணமானது எனக்கு மட்டும் பெருமிதமும், …
Read More »பிரிக்ஸ் உச்சிமாநாடு: பலதரப்புவாதம், பொருளாதார-நிதிசார் விவகாரங்கள், செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தை வலுப்படுத்துதல் குறித்த பிரதமரின் அறிக்கை
உயர்மதிப்பாளர்களே, மேன்மை தங்கியவர்களே, பிரிக்ஸ் அமைப்பின் உறுப்பு நாடுகளைச் சேர்ந்த நண்பர்களைச் சந்திப்பது மகிழ்ச்சி அளிப்பதாக உள்ளது. இந்த மாநாட்டில் லத்தீன் அமெரிக்கா, ஆப்பிரிக்கா, ஆசியாவைச் சேர்ந்த நட்பு நாடுகளுடன் எனது கருத்துக்களைப் பரஸ்பரம் பகிர்ந்து கொள்ள வாய்ப்பளித்த பிரேசில் அதிபர் திரு லூலாவுக்கு எனது மனமார்ந்த நன்றி. நண்பர்களே, பிரிக்ஸ் அமைப்பின் பலதரப்புவாதத்தின் மீதான நம்பிக்கை இந்த அமைப்பிற்கு மிகப்பெரிய வலிமையை அளிக்கிறது. இன்று, உலக நாடுகளின் செயல்பாடுகளில் உள்ள மாற்றங்கள் மற்றும் சவால்களை எதிர்கொள்வதில் அழுத்தங்களைச் சந்தித்து வருகிறது. மேலும் உலக அளவில் நிலவி வரும் பொருளாதார நிச்சயமற்றச் சூழலை திறம்பட எதிர்கொள்வதன் மூலம், பிரிக்ஸ் உறுப்பு நாடுகளுக்கு பொருளாதார வளர்ச்சி ஏற்படும். வரும் காலங்களில் பிரிக்ஸ் அமைப்பு பல்வேறு உலக நாடுகளுக்கு வழிகாட்டியாக உருவாகும் வகையில் நடவடிக்கைகள் ஒருங்கிணைந்து மேற்கொள்ளப்பட வேண்டும் என்பதில் உறுப்பு நாடுகள் கவனத்தில் கொள்ள வேண்டும். இது தொடர்பான சில பரிந்துரைகளைச் சமர்ப்பிக்க விரும்புகிறேன்: முதலாவதாக, பிரிக்ஸ் உறுப்பு நாடுகளின் கீழ், பொருளாதார ஒத்துழைப்பு சீராக வளர்ச்சி கண்டு வருகிறது. இந்த அமைப்பின் வர்த்தக குழு மற்றும் பெண்கள் வர்த்தக கூட்டணி சிறப்பாக செயல்பட்டு வருகிறது. பிரேசிலின் தலைமையின் கீழ் நடைபெறும் இந்த உச்சி மாநாட்டின், சர்வதேச நிதி அமைப்பில் சீர்திருத்த நடவடிக்கைகளுக்கு சிறப்பு முக்கியத்துவம் வழங்கப்பட்டுள்ளதை இந்தியா வரவேற்கிறது. பிரிக்ஸ் அமைப்பின் புதிய மேம்பாட்டு வங்கியின் மூலம் வளரும் நாடுகளின் வளர்ச்சிக்கான திட்டங்களை ஆதரிக்க ஒரு வலுவான மற்றும் நம்பகமான மாற்று நிலையை இந்தியா வழங்கியுள்ளது. திட்டங்களை அங்கீகரிக்கும் அதே வேளையில், புதிய வளர்ச்சி வங்கியின் தேவை சார்ந்த அணுகுமுறைகள், நீண்டகால நிதிசார் நிலைத்தன்மை, கடன் மதிப்பீடு ஆகியவற்றில் போதிய கவனம் செலுத்தப்பட வேண்டும். பிரிக்ஸ் அமைப்பின் கட்டமைப்புகளை வலுப்படுத்துவதுடன் சீர்திருத்த நடவடிக்கைகளை மேற்கொள்வதன் மூலம் பன்முகத்தன்மை மீதான நம்பிக்கை மேம்படும். இரண்டாவதாக, இன்று உலக அளவில் உள்ள வளரும் நாடுகள் பிரிக்ஸ் அமைப்பிடமிருந்து சில எதிர்பார்ப்புகளைக் கொண்டுள்ளன. அவற்றை நிறைவேற்றும் வகையில் பிரிக்ஸ் அமைப்பின் உறுப்பு நாடுகள் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும். உதாரணமாக, இந்தியாவில் நிறுவப்பட்டுள்ள பிரிக்ஸ் வேளாண் ஆராய்ச்சித் தளம், விவசாயத்தில் ஆராய்ச்சிப் பணிகளின் ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கான ஒரு முயற்சியாகும். வேளாண் – உயிரியல் தொழில்நுட்பம், துல்லியமான விவசாய நடைமுறைகள், பருவநிலை மாற்றம் தொடர்பான ஆராய்ச்சிகள் மற்றும் உலக அளவில் வேளாண் பணிகளில் உள்ள சிறந்த நடைமுறைகளைப் பகிர்ந்து கொள்வதற்கான ஊடகமாக உருவெடுக்கச் செய்ய முடியும். இத்தகைய நடவடிக்கைகள் மூலம் தென்பகுதியில் உள்ள வளரும் நாடுகளுக்கு இதன் நன்மைகளை விரிவுபடுத்த முடியும். இதேபோல், கல்வி இதழ்களுக்கான நாடு தழுவிய அணுகுமுறையை உறுதி செய்வதற்காக இந்தியா ‘ஒரே நாடு, ஒரே சந்தா’ என்ற முயற்சியைத் தொடங்கியுள்ளது. இதர பிரிக்ஸ் நாடுகளிலும் இதே போன்ற முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. உலக அளவில் தென்பகுதியில் உள்ள நாடுகளில் இத்தகைய முயற்சிகள் மதிப்பு வாய்ந்த நடவடிக்கையாக செயல்படும். பிரிக்ஸ் அறிவியல் மற்றும் ஆராய்ச்சி களஞ்சியத்தை உருவாக்குவது குறித்து உறுப்பு நாடுகள் ஒன்றிணைந்து ஆய்வு செய்ய வேண்டும் என்பதை நான் முன்மொழிகிறேன். மூன்றாவதாக, அரியவகை கனிமங்கள் தொடர்பான தொழில்நுட்பத்திற்கு விநியோகச் சங்கிலிகளை பாதுகாப்பானதாகவும் நம்பகத்தன்மை கொண்டதாகவும் மாற்றுவதற்கு நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும். எந்தவொரு நாடும் இத்தகைய வளங்களை அதன் சுயநலத்திற்காகவோ அல்லது மற்ற நாடுகளுக்கு எதிரான ஆயுதமாகவோ பயன்படுத்தக் கூடாது என்பதை உறுதி செய்ய வேண்டியது அவசியமாகும். நான்காவதாக, 21-ம் நூற்றாண்டில், மக்களின் முன்னேற்றம் மற்றும் நலவாழ்வு ஆகியவை பெரும்பாலும் தொழில்நுட்பத்தை சார்ந்தே உள்ளன. குறிப்பாக செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பம் இதில் முக்கியப் பங்கு வகிக்கிறது. ஒருபுறம், செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தின் உதவியுடன் அன்றாட வாழ்க்கையை பெரிதும் மேம்படுத்த முடியும். மறுபுறம், இது தொடர்பான அபாயங்கள், நெறிமுறைகள், சார்பு நிலை தொடர்பான கவலைகளும் எழுந்துள்ளன. இந்தியாவின் அணுகுமுறை மற்றும் கொள்கை மிகவும் தெளிவாக உள்ளது. மனித குலத்தின் மாண்புகள் ஆற்றலை மேம்படுத்துவதற்கான ஒரு ஊடகமாக செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தை இந்தியா கருதுகிறது. “அனைவருக்கும் செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பம்” என்ற தாரக மந்திரத்தின் அடிப்படையில், இன்று இந்தியாவில் விவசாயம், சுகாதாரம், கல்வி, நிர்வாகம் போன்ற பல்வேறு துறைகளில் அதன் பயன்பாடு விரிவடைந்துள்ளது. செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்துடன் கூடிய நிர்வாக கட்டமைப்புகள் சவால்களுக்கு தீர்வு காண்பதிலும், புதுமைகளை ஊக்குவிப்பதிலும் சம அளவிலான முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டும் என்பதில் இந்தியா நம்பிக்கை கொண்டுள்ளது. செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தை பொறுப்புணர்வுடன் பயன்படுத்தும் வகையில், பிரிக்ஸ் உறுப்பு நாடுகள் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும். டிஜிட்டல் நடைமுறைகளின் நம்பகத்தன்மையை சரிபார்க்கக்கூடிய அளவில் தரநிலைகள் உருவாக்கப்பட வேண்டும். இதன் மூலம் டிஜிட்டல் பரிவர்த்தனைகளில் உள்ளமுக்கிய அம்சங்களை அடையாளம் காணவும் வெளிப்படைத்தன்மையைப் பராமரிக்கவும் தவறான பயன்பாடுகளைத் தடுக்கவும் இது உதவிடும். இன்றைய அமர்வில் வெளியிடப்படும் “செயற்கை நுண்ணறிவுத் தொழில் நுட்பத்தின் நிர்வாகம் மற்றும் நடைமுறைகள் குறித்த உறுப்பு நாடுகளைச் சேர்ந்த தலைவர்களின் அறிக்கை” இதற்கான ஒரு நேர்மறையான செயல்பாடுகளை உறுதிப்படுத்தும் வகையில் அமைந்துள்ளது. பிரிக்ஸ் அமைப்பின் உறுப்பு நாடுகளிடையே மேம்பட்ட ஒத்துழைப்புக்காக, அடுத்த ஆண்டு இந்தியாவில் “செயற்கை நுண்ணறிவுத் தொழில் நுட்பத்தின் தாக்கம் குறித்த உச்சிமாநாட்டை” நடத்துவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படும். நண்பர்களே, உலகின் தென்பகுதியில் உள்ள வளரும் நாடுகள் இந்தியா மீது நம்பிக்கைக் கொண்டுள்ளதாகவும் அவற்றை நிறைவேற்ற, “முன்மாதிரி நாடாக செயல்படுவது என்ற கொள்கையை அனைவரும் பின்பற்ற வேண்டும். பிரிக்ஸ் அமைப்பின் பொதுவான இலக்குகளை அடைய உறுப்பு நாடுகள் அனைத்துடனும் இணைந்து செயல்பட இந்தியா உறுதியுடன் உள்ளது. மிக்க நன்றி.
Read More »
Matribhumi Samachar Tamil