பிரதமர் திரு நரேந்திர மோடி அர்ஜெண்டினா அதிபர் திரு ஜேவியர் மிலேயை சந்தித்தார். காசா ரோசாடாவுக்கு அவர் வந்தடைந்தபோது, அதிபர் மிலே அவரை அன்புடன் வரவேற்றார். முன்னதாக பியூனஸ் அயர்ஸ் வந்தடைந்த பிரதமருக்கு, பாரம்பரிய முறைப்படி வரவேற்பு அளிக்கப்பட்டது. 57 ஆண்டுகளுக்குப் பிறகு அர்ஜெண்டினாவிற்கு இந்தியப் பிரதமர் ஒருவர் மேற்கொள்ளும் முதல் இருதரப்பு பயணம் இதுவாகும் என்பதால் இந்தப் பயணம் முக்கியத்துவம் பெறுகிறது. இரு நாடுகளும் தூதரக உறவுகள் நிறுவப்பட்ட …
Read More »டிரினிடாட் மற்றும் டொபாகோவுக்கு பிரதமரின் பயணத்தின் போது வெளியிடப்பட்ட கூட்டு அறிக்கை
டிரினிடாட் மற்றும் டொபாகோ குடியரசின் பிரதமர் கமலா பெர்சாத்-பிஸ்ஸேசரின் அழைப்பின் பேரில், இந்தியப் பிரதமர் திரு. நரேந்திர மோடி, ஜூலை 3 முதல் 4, 2025 வரை அந்நாட்டுக்கு அதிகாரப்பூர்வ பயணம் மேற்கொண்டார். இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க பயணம், 26 ஆண்டுகளில் ஒரு இந்தியப் பிரதமரின் முதல் இருதரப்பு பயணமாகும். 1845-ஆம் ஆண்டில் டிரினிடாட் மற்றும் டொபாகோவில் இந்தியர்கள் குடியேறியதன் 180-வது ஆண்டு நிறைவோடு இப்பயணம் ஒத்திசைவானதாக இருப்பதால், அதிக முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. இது இரு நாடுகளுக்கும் இடையிலான நீண்டகால நட்பின் அடித்தளமாக இருக்கும் ஆழமான வேரூன்றிய நாகரிக உறவுகள், துடிப்பான மக்களுக்கு இடையிலான இணைப்புகள் மற்றும் பகிரப்பட்ட ஜனநாயக மதிப்புகளை மீண்டும் உறுதிப்படுத்தியது. பிரதமர் நரேந்திர மோடி, பிரதமர் கமலா பெர்சாத்-பிஸ்ஸேசரின் சமீபத்திய தேர்தல் வெற்றிக்கு வாழ்த்து தெரிவித்தார், மேலும் இந்தியாவிற்கும் டிரினிடாட் மற்றும் டொபாகோவிற்கும் இடையிலான இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துவதில் அவர் ஆற்றிய மகத்தான பங்களிப்பைப் பாராட்டினார். இந்தியாவிற்குள்ளும் உலக அரங்கிலும் பிரதமர் நரேந்திர மோடியின் அபாரமான தலைமைத்துவத்தை அங்கீகரிக்கும் விதமாக, நாட்டின் மிக உயர்ந்த தேசிய விருது அவருக்கு வழங்கி கௌரவிக்கப்பட்டது. இரு பிரதமர்களும் பரஸ்பர நலன் சார்ந்த பல்வேறு இருதரப்பு, பிராந்திய மற்றும் உலகளாவிய பிரச்சினைகள் குறித்து விரிவான விவாதங்களை நடத்தினர். இரு தலைவர்களும் வலுவான உறவு குறித்து திருப்தி தெரிவித்தனர், மேலும் சுகாதாரம், தகவல் தொழில்நுட்பம், கலாச்சாரம், விளையாட்டு, வர்த்தகம், பொருளாதார மேம்பாடு, விவசாயம், நீதி, சட்ட விவகாரங்கள், கல்வி மற்றும் திறன் மேம்பாடு போன்ற துறைகளில் பரந்த அடிப்படையிலான, அனைவரையும் உள்ளடக்கிய மற்றும் எதிர்கால நோக்குடைய கூட்டாண்மையை உருவாக்குவதற்கான தங்கள் கடப்பாட்டை மீண்டும் உறுதிபட வெளிப்படுத்தினர். அமைதி மற்றும் பாதுகாப்பிற்கு பயங்கரவாதத்தால் ஏற்படும் பொதுவான அச்சுறுத்தலை இரு தலைவர்களும் ஒப்புக்கொண்டனர். பயங்கரவாதத்திற்கு தங்கள் கடுமையான கண்டனத்தையும், உறுதியான எதிர்ப்பையும் மீண்டும் அவர்கள் வலியுறுத்தினர். எல்லை தாண்டிய பயங்கரவாதம் உட்பட பயங்கரவாதத்திற்கு எந்த நியாயமும் இருக்க முடியாது என்று அவர்கள் அறிவித்தனர். மருந்துகள், மேம்பாட்டு ஒத்துழைப்பு, கல்வி, கலாச்சாரப் பரிமாற்றம், ராஜதந்திர பயிற்சி மற்றும் விளையாட்டு உள்ளிட்ட முக்கிய துறைகளில் முக்கியமான ஒப்பந்தங்கள் மற்றும் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தானதை அவர்கள் வரவேற்றனர். 2024 நவம்பரில் நடைபெற்ற 2வது இந்தியா-காரிகோம் உச்சிமாநாட்டின் முடிவுகளை தலைவர்கள் நினைவு கூர்ந்தனர். மேலும், அதில் அறிவிக்கப்பட்ட முயற்சிகளை செயல்படுத்துவதை விரைவுபடுத்த அவர்கள் உறுதிபூண்டனர். டிஜிட்டல் துறையில் ஒத்துழைப்பை விரிவுபடுத்துவதில் இரு நாடுகளும் வலுவான ஆர்வத்தை வெளிப்படுத்தின. இந்தியாவின் முதன்மை டிஜிட்டல் கட்டண தளமான ஒருங்கிணைந்த கட்டண இடைமுகத்தை (யுபிஐ) ஏற்றுக்கொண்ட முதல் கரீபியன் நாடாக மாறியதற்காக டிரினிடாட் மற்றும் டொபாகோவை பிரதமர் மோடி வாழ்த்தினார். டிஜிலாக்கர், இ-சைன் மற்றும் அரசு மின்-சந்தை (ஜெம்) உள்ளிட்ட இந்தியத் தீர்வுகளை செயல்படுத்துவதில் மேலும் ஒத்துழைப்பை ஆராய அவர்கள் ஒப்புக்கொண்டனர். நிலப் பதிவுக்கான அமைப்பை டிஜிட்டல் மயமாக்குதல் மற்றும் மேம்படுத்துவதில் இந்தியாவிடம் டிரினிடாட் மற்றும் டொபாகோ ஆதரவைக் கோரியது. டிஜிட்டல் ஆளுகை மற்றும் பொது சேவை வழங்கல் ஆகியவற்றை உள்ளடக்கிய வளர்ச்சி, புதுமை மற்றும் தேசிய போட்டித்தன்மைக்கு உதவும் என்பதையும் தலைவர்கள் வலியுறுத்தினர். கல்வியை டிஜிட்டல் மயமாக்கும் பிரதமர் பெர்சாத்-பிஸ்ஸேசரின் லட்சிய தொலைநோக்குப் பார்வையைப் பிரதமர் மோடி பாராட்டினார், மேலும் டிரினிடாட் மற்றும் டொபாகோவின் முதன்மை கல்வித் திட்டத்தை ஆதரிப்பதற்காக 2000 மடிக்கணினிகளை பரிசாக வழங்குவதாகவும் அவர் அறிவித்தார். இந்திய அரசு வழங்கும் பல்வேறு உதவித்தொகை திட்டங்களின் கீழ் இந்தியாவில் உயர் கல்வி வாய்ப்புகளை பயன்படுத்திக் கொள்வது குறித்து ஆராயுமாறு டிரினிடாட் மற்றும் டொபாகோ மாணவர்களை பிரதமர் மோடி ஊக்குவித்தார். விவசாயம் மற்றும் உணவுப் பாதுகாப்பை மற்றொரு முன்னுரிமைப் பகுதியாக தலைவர்கள் அடையாளம் கண்டனர். உணவு பதனப்படுத்துதல் மற்றும் சேமிப்பிற்காக 1 மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புள்ள வேளாண் இயந்திரங்களை டிரினிடாட் மற்றும் டொபாகோவின் தேசிய வேளாண் சந்தைப்படுத்தல் மற்றும் மேம்பாட்டுக் கழகத்திற்கு (NAMDEVCO) பரிசாக இந்தியா வழங்கியது பாராட்டப்பட்டது. இது தொடர்பான ஒரு அடையாள விழாவின் போது, NAMDEVCO-விற்கான முதல் தொகுதி இயந்திரங்களை பிரதமர் மோடி, ஒப்படைத்தார். இயற்கை விவசாயம், கடற்பாசி சார்ந்த உரங்கள் மற்றும் தினை சாகுபடி ஆகிய துறைகளில் இந்தியாவின் உதவிகளையும் பிரதமர் மோடி வழங்கினார். மருந்துத் துறையில் நெருக்கமான ஒத்துழைப்பையும், டிரினிடாட் மற்றும் டொபாகோ மக்களுக்கு இந்தியாவில் இருந்து தரமான மற்றும் மலிவு விலையில் பொதுவான மருந்துகளை அணுகுவதையும், இந்தியாவில் மருத்துவ சிகிச்சையை வழங்குவதையும் உறுதி செய்யும் இந்திய மருந்தகத்தை அங்கீகரித்ததற்காக டிரினிடாட் மற்றும் டொபாகோ அரசை பிரதமர் மோடி பாராட்டினார். வரும் மாதங்களில், டிரினிடாட் மற்றும் டொபாகோவில் 800 நபர்களுக்கு செயற்கை மூட்டு பொருத்துதல் முகாம் ஏற்பாடு செய்யப்படும் என்றும் அவர் அறிவித்தார். மருந்துகள் மற்றும் உபகரணங்களுக்கு அப்பால் சுகாதார ஒத்துழைப்பை வழங்கும் பிரதமர் மோடிக்கு பிரதமர் கமலா பெர்சாத்-பிஸ்ஸேசர் நன்றி தெரிவித்தார். சிறந்த தரமான சுகாதார சேவையை வழங்குவதற்காக இந்திய அரசு இருபது ஹீமோடையாலிசிஸ் அலகுகள் மற்றும் இரண்டு கடல் ஆம்புலன்ஸ்களை நன்கொடையாக வழங்கியதற்காக டிரினிடாட் மற்றும் டொபாகோவின் நன்றியை அவர் தெரிவித்துக் கொண்டார். இது டிரினிடாட் மற்றும் டொபாகோ வளர்ச்சிக்கான ஒத்துழைப்பின் மதிப்பை சுட்டிக் காட்டியது. இந்தியாவின் உதவியுடன் டிரினிடாட் மற்றும் டொபாகோவில் சமூக மேம்பாட்டுத் திட்டங்களை சரியான நேரத்தில் மற்றும் பயனுள்ள முறையில் செயல்படுத்த உதவும் விரைவான திட்டங்கள் குறித்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டதை வரவேற்ற அதே வேளையில், கோவிட்-19 தொற்றுநோயின் கடினமான காலங்களில் விலைமதிப்பற்ற மனித உயிர்களைக் காப்பாற்றுவதில் இந்தியாவின் முன்னணி பங்கை பிரதமர் பெர்சாத்-பிஸ்ஸேசர் பாராட்டினார். டிரினிடாட் மற்றும் டொபாகோவிற்கு கோவிட் தடுப்பூசிகள் மற்றும் மருத்துவ உபகரணங்களை விரைவாக வழங்கிய இந்தியாவின் மதிப்புமிக்க விநியோகத்திற்கும் அவர் பாராட்டு தெரிவித்தார். கோவிட்-19 திட்டத்தில் 1 மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புள்ள , மொபைல் சுகாதார ரோபோக்கள், டெலிமெடிசின் கருவிகள் போன்றவற்றை வழங்கிய இந்தியாவின் ஆதரவை அவர் குறிப்பாகப் பாராட்டினார். பருவநிலை நடவடிக்கை, மீள்தன்மை உருவாக்கம் மற்றும் நிலையான வளர்ச்சிக்கான அவர்களின் பகிரப்பட்ட அர்ப்பணிப்பை பிரதிபலிக்கும் வகையில், பேரிடர் மீள்தன்மை உள்கட்டமைப்புக்கான கூட்டணி மற்றும் உலகளாவிய உயிரி எரிபொருள் கூட்டணியில் சேரும் டிரினிடாட் மற்றும் டொபாகோவின் முடிவை பிரதமர் மோடி வரவேற்றார். பேரிடர் அபாயத்தைக் குறைப்பதற்காக இந்தியா உருவாக்கிய ஆரம்ப எச்சரிக்கை அமைப்புகளில் மேலும் ஒத்துழைப்பை ஆராய தலைவர்கள் ஒப்புக்கொண்டனர். வெளியுறவு மற்றும் காரிகோம் விவகார அமைச்சகத்தின் தலைமையகத்திற்கு கூரை ஒளிமின்னழுத்த அமைப்பை வழங்க இந்தியா மானியம் வழங்கியதற்கு டிரினிடாட் மற்றும் டொபாகோ அரசும் நன்றி தெரிவித்தது. பிரதமர் மோடியின் தொலைநோக்கு பார்வை கொண்ட ‘மிஷன் லைஃப்’ முயற்சியை பிரதமர் பெர்சாத்-பிஸ்ஸார் பாராட்டினார். இது கவனத்துடன் கூடிய நுகர்வு மற்றும் நிலையான வாழ்க்கை முறையை ஊக்குவிக்கிறது. உலகளாவிய குடிமக்களை காலநிலை உணர்வுள்ள நடத்தைக்கு அணிதிரட்டுவதில் அதன் பொருத்தத்தை அவர் சுட்டிக் காட்டினார். டிரினிடாட் மற்றும் டொபாகோவுடனான இந்தியாவின் கூட்டாண்மையின் முக்கிய தூணாக திறன் மேம்பாடு அங்கீகரிக்கப்பட்டது. தங்கள் இளைஞர்களின் திறன் மேம்பாட்டிற்காக பல்வேறு துறைகளில் இந்தியா ஆண்டுதோறும் 85 ஐடிஇசி இடங்களை வழங்குவதை டிரினிடாட் மற்றும் டொபாகோ தரப்பு பாராட்டியது. தங்கள் அதிகாரிகளுக்கு பெரிய அளவிலான பயிற்சி அளிக்க நிபுணர்கள் மற்றும் பயிற்சியாளர்களை டிரினிடாட் மற்றும் டொபாகோவிற்கு அனுப்ப இந்திய தரப்பு விருப்பம் தெரிவித்தது. தடயவியல் அறிவியல் மற்றும் நீதி அமைப்பில் டிரினிடாட் மற்றும் டொபாகோவின் அதிகாரிகள் மற்றும் பணியாளர்களின் திறன்களை வளர்ப்பதில் டிரினிடாட் மற்றும் டொபாகோவை ஆதரிக்க பிரதமர் மோடி விருப்பம் தெரிவித்தார், பயிற்சிக்காக அவர்களை இந்தியாவிலிருந்து டிரினிடாட் மற்றும் டொபாகோவிற்கு அனுப்புவது உட்பட இரு நாடுகளின் வணிக ஆதரவு அமைப்புகளுக்கு இடையே நேரடி வழிகளை ஊக்குவிப்பதன் மூலம் இருதரப்பு வர்த்தகம் மற்றும் முதலீட்டு பரிமாற்றங்களை அதிகரிக்க வேண்டியதன் அவசியத்தை இரு தலைவர்களும் வலியுறுத்தினர். நாடுகளுக்கு இடையேயான வலுவான விளையாட்டு உறவுகளை, குறிப்பாக கிரிக்கெட் மீதான பகிரப்பட்ட ஆர்வத்தை இரு தலைவர்களும் கொண்டாடினர். பயிற்சி, திறமை பரிமாற்றம், உள்கட்டமைப்பு மேம்பாடு மற்றும் கூட்டு திறன் மேம்பாட்டை வளர்ப்பதற்காக விளையாட்டு ஒத்துழைப்பு குறித்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டதை அவர்கள் வரவேற்றனர். இந்தியாவில் உள்ள டிரினிடாட் மற்றும் டொபாகோவைச் சேர்ந்த இளம் பெண் கிரிக்கெட் வீரர்களுக்கு பயிற்சி அளிக்கும் வாய்ப்பையும் பிரதமர் மோடி சுட்டிக்காட்டினார். கலாச்சார ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்த ஒரு நடவடிக்கையாக , இந்தியாவில் உள்ள டிரினிடாட் மற்றும் டொபாகோவைச் சேர்ந்த பண்டிதர்களின் குழுவிற்கு பயிற்சி அளிப்பதாக பிரதமர் மோடி அறிவித்தார். இந்தப் பண்டிதர்கள் இந்தியாவில் நடைபெறும் ‘கீதா மஹோத்சவத்திலும்’ பங்கேற்பார்கள். பிரதமர் கமலா பெர்சாத்-பிஸ்ஸேசர் இந்த நற்செயலுக்கு தனது பாராட்டுகளைத் தெரிவித்தார். மேலும் இந்தியாவில் கொண்டாட்டங்களுடன் இணைந்து டிரினிடாட் மற்றும் டொபாகோவில் கீதா மஹோத்சவத்தை கூட்டாகக் கொண்டாடுவதற்கான இந்திய முன்மொழிவை அவர் உற்சாகமாக ஆதரித்தார். கலாச்சார ஒத்துழைப்பில், இரு தலைவர்களும் 1997- ஆம் ஆண்டு மகாத்மா காந்தி கலாச்சார ஒத்துழைப்பு நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட இருதரப்பு ‘கலாச்சார பரிமாற்றத் திட்டத்தின்’ முற்போக்கான பங்கைக் குறிப்பிட்டுக் காட்டினர். 2025-28 காலகட்டத்திற்கு இந்தத் திட்டத்தைப் புதுப்பிக்க ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. புதுப்பிக்கப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் கீழ், இரு நாடுகளுடனும் கலாச்சார உறவுகளை மேம்படுத்துவதற்காக, டிரினிடாட் மற்றும் டொபாகோ, பெர்குஷன் (ஸ்டீல் பான்) மற்றும் பிற கலாச்சாரப் பிரிவுகளில் கலைஞர்களை இந்தியாவிற்கு அனுப்பும். நாடு முழுவதும் யோகா மற்றும் இந்தி மொழியை ஊக்குவித்ததற்காக பிரதமர் மோடி டிரினிடாட் மற்றும் டொபாகோ அரசுக்கு நன்றி தெரிவித்தார். இந்தியாவில் இருந்து யோகா பயிற்சியாளர்களை அனுப்பவும், டிரினிடாட் மற்றும் டொபாகோவின் தேசிய பள்ளி பாடத்திட்டத்தில் யோகாவைச் சேர்ப்பதற்கு ஆதரவளிக்கவும் அவர் முன்வந்தார். 1845-ஆம் ஆண்டு டிரினிடாட் மற்றும் டொபாகோவில் நடந்த முதல் இந்திய குடியேற்றத்தின் 180-வது ஆண்டு நிறைவை 2025 மே 30 அன்று இரு பிரதமர்களும் நினைவு கூர்ந்தனர். கலாச்சார சுற்றுலாவிற்கான இடமாக நெல்சன் தீவின் முக்கியத்துவத்தையும், தேசிய ஆவணக் காப்பகத்தில் இந்திய வருகை மற்றும் பிற பதிவுகளை டிஜிட்டல் மயமாக்க வேண்டியதன் அவசியத்தையும் அவர்கள் அங்கீகரித்தனர். டிரினிடாட் மற்றும் டொபாகோவில் வசிக்கும் இந்திய புலம்பெயர்ந்தோரின் ஆறாவது தலைமுறை வரை இந்திய வெளிநாட்டு குடியுரிமை (ஓசிஐ) அட்டைகளை வழங்குவதற்கான இந்திய அரசின் முடிவையும் பிரதமர் மோடி அறிவித்தார். மேற்கிந்திய தீவுகள் பல்கலைக்கழகத்தில் இந்தி மற்றும் இந்திய படிப்புகளில் கல்வி இருக்கைகள் மீண்டும் அமைக்கப்பட இருப்பதற்கு இரு பிரதமர்களும் வரவேற்பு தெரிவித்தனர், இது இந்தியாவிற்கும் டிரினிடாட் மற்றும் டொபாகோவிற்கும் இடையிலான கல்வி மற்றும் கலாச்சாரத் தொடர்புகளை ஆழப்படுத்தவும், ஆயுர்வேதத்தின் பண்டைய ஞானம் மற்றும் பாரம்பரியத்தைப் பரப்புவதை ஊக்குவிக்கவும் உதவும். இந்தியா-டிரினிடாட் மற்றும் டொபாகோ நாடாளுமன்ற நட்புறவுக் குழுவை புதுப்பிக்க வேண்டியதன் அவசியத்தையும்; இந்தியாவில் டிரினிடாட் மற்றும் டொபாகோ நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு பயிற்சி அளிக்க வேண்டியதன் அவசியத்தையும் இரு தலைவர்களும் அடிக்கோடிட்டுக் காட்டினர். பிராந்திய மற்றும் சர்வதேச முன்னேற்றங்கள் குறித்து இரு தரப்பினரும் கருத்துக்களைப் பரிமாறிக் கொண்டதோடு, அமைதி, பருவநிலை நீதி, அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி மற்றும் உலகளாவிய தெற்கின் குரலை வலுப்படுத்துதல் ஆகியவற்றுக்கான தங்கள் பகிரப்பட்ட உறுதிப்பாட்டை மீண்டும் வலியுறுத்தினர். பலதரப்பு மன்றங்களில் வழங்கப்படும் மதிப்புமிக்க பரஸ்பர ஆதரவுக்கு அவர்கள் பாராட்டு தெரிவித்தனர். தற்போதைய உலகளாவிய நிலைகளை சிறப்பாகப் பிரதிபலிக்கும் வகையில் ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு கவுன்சிலை விரிவுபடுத்துவது உட்பட ஐக்கிய நாடுகள் சபையில் விரிவான சீர்திருத்தங்கள் தேவை என்பதை இரு தலைவர்களும் மீண்டும் உறுதிப்படுத்தினர். அதிகரித்து வரும் புவிசார் அரசியல் பதற்றங்கள் மற்றும் உலகளாவிய மோதல்களை அங்கீகரிக்கும் அதே வேளையில், இரு தலைவர்களும் பேச்சுவார்த்தை மற்றும் ராஜதந்திரத்தை முன்னோக்கி செல்லும் வழி என்று கூறினர். விரிவாக்கப்பட்ட ஐக்கிய நாடுகள் சபை பாதுகாப்பு கவுன்சிலில் நிரந்தர உறுப்பினர் பதவிக்கு இந்தியாவுக்கு டிரினிடாட் மற்றும் டொபாகோ தனது முழு ஆதரவை மீண்டும் உறுதிப்படுத்தியது. 2027-28 காலகட்டத்திற்கு ஐக்கிய நாடுகள் சபை பாதுகாப்பு கவுன்சிலில் நிரந்தரமற்ற இடத்திற்கான டிரினிடாட் மற்றும் டொபாகோவின் வேட்புமனுவை இந்தியா ஆதரிக்கும் என்றும் ஒப்புக் கொள்ளப்பட்டது; அதே நேரத்தில் டிரினிடாட் மற்றும் டொபாகோ 2028-29 காலகட்டத்திற்கு இந்தியாவின் வேட்புமனுவை ஆதரிக்கும் என்றும் ஒப்புக் கொள்ளப்பட்டது. பிரதமர் மோடி, தனக்கு அளிக்கப்பட்ட அசாதாரண விருந்தோம்பலுக்கு டிரினிடாட் மற்றும் டொபாகோ அரசுக்கும் மக்களுக்கும் தமது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்தார். பரஸ்பரம் வசதியான நேரத்தில் இந்தியாவுக்கு வருகை தருமாறு பிரதமர் கமலா பெர்சாத்-பிஸ்ஸேசருக்கு அவர் அழைப்பு விடுத்தார். பரஸ்பரம் வசதியான நேரத்தில் மீண்டும் டிரினிடாட் மற்றும் டொபாகோவுக்கு வருகை தருமாறு பிரதமர் மோடிக்கு, கமலா பெர்சாத்-பிஸ்ஸேசர் அழைப்பு விடுத்தார். பிரதமர் திரு. நரேந்திர மோடியின் டிரினிடாட் மற்றும் டொபாகோவுக்கான மிகவும் வெற்றிகரமான அதிகாரப்பூர்வ பயணத்தின் விளைவு, இரு நாடுகளுக்கும் இடையே உயர்ந்த இருதரப்பு உறவுகளின் புதிய சகாப்தத்திற்கு வழி வகுக்கும் என்றும், வலுவான, உள்ளடக்கிய மற்றும் எதிர்கால நோக்கில் செயல்படும் இந்தியா-டிரினிடாட் மற்றும் டொபாகோ கூட்டாண்மைக்கான அவர்களின் பகிரப்பட்ட உறுதிப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்தியது என்றும் தலைவர்கள் ஒப்புக்கொண்டனர்.
Read More »டிரினிடாட் & டொபாகோவில் உள்ள இந்திய சமூகத்தினரிடையே பிரதமர் ஆற்றிய உரை
பிரதமர் திருமதி. கமலா பெர்சாத் பிஸ்ஸேசர் அவர்களே, அமைச்சரவை உறுப்பினர்களே இன்று கூடியிருக்கும் அனைத்து பிரமுகர்களே இந்திய வம்சாவளியினரே பெண்களே மற்றும் தாய்மார்களே, நமஸ்காரம்! சீதா ராம்! ஜெய் ஸ்ரீ ராம்! எதையாவது குறிப்பிட முடியுமா… என்ன ஒரு தற்செயலான நிகழ்வு! இந்த மாலைப் பொழுதில் உங்கள் அனைவருடனும் இருப்பது எனக்கு மிகுந்த பெருமையையும், மகிழ்ச்சியையும் அளிக்கிறது. பிரதமர் திருமதி. கமலா அவர்களின் அற்புதமான உபசரிப்பு மற்றும் அன்பான வார்த்தைகளுக்கு …
Read More »பிரதமர் திரு நரேந்திர மோடி கானா நாடாளுமன்றத்தில் உரையாற்றினார்
கானா நாடாளுமன்றத்தின் சிறப்பு அமர்வில் பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று (03.07.2025) உரையாற்றினார். அந்நாட்டு நாடாளுமன்றத்தில் உரையாற்றிய முதல் இந்தியப் பிரதமராக திரு நரேந்திர மோடி உள்ளார். நாடாளுமன்றத் தலைவர் திரு அல்பன் கிங்ஸ்ஃபோர்ட் சுமனா பாக்பின் கூட்டிய இந்த அமர்வில், நாடாளுமன்ற உறுப்பினர்கள், அரசு அதிகாரிகள், இரு நாடுகளைச் சேர்ந்த சிறப்பு விருந்தினர்கள் கலந்து கொண்டனர். இந்த உரை இந்தியா-கானா உறவுகளில் ஒரு குறிப்பிடத்தக்க தருணத்தைக் குறிப்பதாக அமைந்தது. இரு நாடுகளையும் ஒன்றிணைக்கும் …
Read More »கானா அதிபருடனான கூட்டு செய்தியாளர் சந்திப்பின் போது பிரதமர் வெளியிட்ட கருத்துக்களின் தமிழாக்கம்
அதிபர் திரு ஜான் மஹாமா அவர்களே, இரு நாடுகளைச் சேர்ந்த பிரதிநிதிகளே, ஊடக நண்பர்களே, வணக்கம்! 30 ஆண்டுகால நீண்ட இடைவெளிக்குப் பிறகு, ஒரு இந்தியப் பிரதமர் கானாவுக்கு வருகை தந்துள்ளார். இந்த வாய்ப்பு கிடைத்ததில் எனக்கு மிகுந்த பெருமை. கானாவில் எங்களுக்கு வழங்கப்பட்ட மரியாதைக்கு நான் மிகவும் நன்றியுள்ள நபராக இருக்கிறேன். அதிபரே என்னை வரவேற்க விமான நிலையத்திற்கு வந்தது எனக்கு மிகுந்த மரியாதைக்குரிய விஷயமாகும். 2024 டிசம்பர் …
Read More »பிரதமர், கானா அதிபரைச் சந்தித்தார்
பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று கானா அதிபர் டாக்டர் ஜான் டிராமணி மகாமாவைச் சந்தித்தார். ஜூபிலி ஹவுஸுக்கு வந்த பிரதமரை, அதிபர் திரு மகாமா வரவேற்றார். இந்திய பிரதமர் ஒருவரின் கானா அரசுமுறைப் பயணம் 30 ஆண்டுகளில் இது முதல் முறையானதாகும். இரு தலைவர்களும் பிரதிநிதிகள் அளவிலான விரிவான பேச்சுவார்த்தைகளை நடத்தினர். இருதரப்பு உறவை மேம்படுத்த அவர்கள் ஒப்புக்கொண்டனர். இரு தலைவர்களும் இந்தியாவிற்கும் கானாவிற்கும் இடையேயான காலத்தால் மாறாத …
Read More »கானா, டிரினிடாட் & டொபாகோ, அர்ஜென்டினா, பிரேசில், நமீபியா ஆகிய நாடுகளுக்கு பயணம் மேற்கொள்வதையொட்டி பிரதமர் வெளியிட்டுள்ள அறிக்கை
கானா, டிரினிடாட் & டொபாகோ, அர்ஜென்டினா, பிரேசில், நமீபியா ஆகிய ஐந்து நாடுகளுக்கு இன்று (02.07.2025) முதல் 09.07.2025 வரை நான் பயணம் மேற்கொள்கிறேன். அதிபர் திரு ஜான் டிராமணி மஹாமாவின் அழைப்பின் பேரில், ஜூலை 2 மற்றும் 3-ம் தேதிகளில் கானா செல்கிறேன். கானா உலகளாவிய தென்பகுதி நாடுகளில் ஒரு மதிப்புமிக்க தோழமை கூட்டாண்மை நாடாகும். மேலும் ஆப்பிரிக்க யூனியனிலும் மேற்கு ஆப்பிரிக்க நாடுகளின் பொருளாதார சமூகத்திலும் முக்கியப் பங்கு வகிக்கிறது. நமது வரலாற்று உறவுகளை மேலும் ஆழப்படுத்துவதையும், முதலீடு, எரிசக்தி, சுகாதாரம், பாதுகாப்பு, திறன் மேம்பாடு, வளர்ச்சிக் கூட்டாண்மை உள்ளிட்ட துறைகளில் ஒத்துழைப்பின் புதிய வாய்ப்புகளை ஏற்படுத்துவதை …
Read More »மனதின் குரல் நிகழ்ச்சியின் 123-வது அத்தியாயத்தில், 29.06.2025 அன்று பிரதமர் ஆற்றிய உரையின் தமிழாக்கம்
நாட்டுமக்களே! வணக்கம். மனதின் குரலில் உங்கள் அனைவரையும் வரவேற்கிறேன், நல்வாழ்த்துகள். நீங்கள் அனைவரும் யோகக்கலையின் ஆற்றல், சர்வதேச யோகக்கலை தினத்தின் நினைவலைகளால் நிரம்பியிருப்பீர்கள்!! இந்த முறையும் ஜூன் மாதம் 21ஆம் தேதியன்று நாடெங்கிலும், உலகெங்கிலும் கோடிக்கணக்கான மக்கள் சர்வதேச யோகக்கலை தினத்தின் அங்கமாக ஆனார்கள். பத்தாண்டுகள் முன்பாக இந்த தினம் தொடங்கப்பட்டதை நீங்கள் மறந்திருக்க மாட்டீர்கள். இப்போது பத்தாண்டுகளாகத் தொடரும் இந்த நிகழ்ச்சி, ஒவ்வோர் ஆண்டும் முந்தையதை விட மேலும் …
Read More »ஆச்சார்ய வித்யானந்த் மகாராஜின் நூற்றாண்டு விழாவில் பிரதமர் திரு நரேந்திர மோடி உரையாற்றினார்
புதுதில்லி விஞ்ஞான் பவனில் இன்று (28.06.2025) நடைபெற்ற ஆச்சார்யா வித்யானந்த் மஹாராஜின் நூற்றாண்டு விழாவில் பிரதமர் திரு நரேந்திர மோடி உரையாற்றினார். இந்த நிகழ்வில் கூடியிருந்தவர்களிடையே உரையாற்றிய பிரதமர், இந்தியாவின் ஆன்மீக பாரம்பரியத்தில் ஒரு முக்கியமான நிகழ்வை நாடு காண்கிறது என்றும், ஆச்சார்யா வித்யானந்த் முனிராஜின் நூற்றாண்டு விழாவின் புனிதத்தை இந்த நிகழ்ச்சி எடுத்துக்காட்டுகிறது என்றும் குறிப்பிட்டார். மதிப்பிற்குரிய ஆச்சார்யாவின் அழியாத உத்வேகத்தால் நிறைந்த இந்த நிகழ்வு, ஒரு அசாதாரணமான மற்றும் எழுச்சியூட்டும் சூழலை உருவாக்குகிறது என்றும் அவர் கூறினார். அனைவருக்கும் பிரதமர் தனது வாழ்த்துக்களைத் தெரிவித்து, இந்த நிகழ்வில் கலந்துகொள்ள வாய்ப்பு கிடைத்ததற்கு மகிழ்ச்சி தெரிவித்தார். இன்றைய தினம் மற்றொரு காரணத்திற்காக சிறப்பு முக்கியத்துவம் வாய்ந்தது என்பதைக் குறிப்பிட்ட திரு நரேந்திர மோடி, 1987 ஜூன் 28 அன்று ஆச்சார்யா வித்யானந்த் முனிராஜுக்கு முறையாக ‘ஆச்சார்யா’ பட்டம் வழங்கப்பட்டதை நினைவு கூர்ந்தார். இது வெறும் பட்டம் மட்டுமல்ல, சமண மரபை சிந்தனை, ஒழுக்கம் மற்றும் இரக்கத்துடன் இணைக்கும் ஒரு புனித நீரோட்டத்தின் தொடக்கமாகும் என்றும் அவர் கூறினார். ஆச்சார்யா வித்யானந்த் முனிராஜின் நூற்றாண்டு விழாவை நாடு கொண்டாடும் வேளையில், அந்த வரலாற்றுச் சிறப்புமிக்க தருணத்தை நினைவுகூரும் வகையில் இந்த தேதி அமைந்துள்ளது என்று பிரதமர் குறிப்பிட்டார். ஆச்சார்யா ஸ்ரீ வித்யானந்த் ஜி முனிராஜுக்கு மரியாதை செலுத்துவதாகவும், அனைவருக்கும் ஆச்சார்யாவின் ஆசிகள் கிடைக்க விரும்புவதாகவும் திரு நரேந்திர மோடி கூறினார். வித்யானந்த் முனிராஜின் நூற்றாண்டு விழா ஒரு சாதாரண நிகழ்வு அல்ல, இது ஒரு சகாப்தத்தின் நினைவைக் கொண்டுள்ளது என்றும் ஒரு சிறந்த துறவியின் வாழ்க்கையை எதிரொலிக்கிறது என்றும் பிரதமர் குறிப்பிட்டார். இந்த வரலாற்று நிகழ்வை நினைவுகூரும் வகையில், சிறப்பு நினைவு நாணயங்கள் மற்றும் தபால் தலைகள் வெளியிடப்பட்டு உள்ளன என்பதை அவர் எடுத்துரைத்தார். ஆச்சார்யா பிரக்யா சாகரை சிறப்பாக அங்கீகரித்து மரியாதை செலுத்திய திரு நரேந்திர மோடி, அவரது வழிகாட்டுதலின் கீழ், லட்சக்கணக்கான சீடர்கள் மதிப்பிற்குரிய குரு காட்டிய பாதையில் நடந்து வருவதாகக் குறிப்பிட்டார். இந்த நிகழ்ச்சியில், தமக்கு ‘தர்ம சக்கரவர்த்தி’ என்ற பட்டம் வழங்கப்பட்டதாகவும், இந்திய பாரம்பரியம் துறவிகளிடமிருந்து பெறப்படுவதை ஒரு ஆசீர்வாதமாக ஏற்றுக்கொள்ளக் கற்றுக்கொடுக்கிறது என்றும் பிரதமர் தெரிவித்தார். இந்தப் பட்டத்தை மனத்தாழ்மையுடன் ஏற்றுக்கொண்டு, அதை இந்தியத் தாயின் பாதங்களில் அர்ப்பணிப்பதாகப் பிரதமர் கூறினார். வாழ்நாள் முழுவதும் வழிகாட்டும் தெய்வீக ஆன்மாவுடன் பகிர்ந்து கொள்ளப்படும் ஆழ்ந்த உணர்ச்சித் தொடர்பைப் பற்றிப் பேசிய பிரதமர், அத்தகைய மரியாதைக்குரிய நபரைப் பற்றிப் பேசுவது இயற்கையாகவே ஆழமான உணர்ச்சிகளைத் தூண்டுகிறது என்று குறிப்பிட்டார். ஸ்ரீ வித்யானந்த் ஜி முனிராஜைப் பற்றிப் பேசுவதற்குப் பதிலாக, அவரது குரலை மீண்டும் ஒருமுறை கேட்கும் பாக்கியம் கிடைத்திருக்க வேண்டும் என்று விரும்புவதாக அவர் தெரிவித்தார். இவ்வளவு சிறந்த ஆளுமையின் பயணத்தை வார்த்தைகளில் தொகுப்பது எளிதான காரியம் அல்ல என்று திரு நரேந்திர மோடி குறிப்பிட்டார். ஆச்சார்ய வித்யானந்த் ஜி முனிராஜ் 1925-ம் ஆண்டு ஏப்ரல் 22 ஆம் தேதி கர்நாடகாவின் புனித பூமியில் பிறந்தார் எனவும் அவருக்கு ‘வித்யானந்த்’ என்ற ஆன்மீகப் பெயர் வழங்கப்பட்டது என்றும் அவர் கூறினார். ஆச்சார்யரின் வாழ்க்கை, அறிவு மற்றும் ஆன்மீகத்தின் தனித்துவமான சங்கமம் என்பதை அவர் எடுத்துரைத்தார். அவரது உரை ஆழ்ந்த ஞானத்தைக் கொண்டிருந்தது எனவும் ஆனால் அவரது வார்த்தைகள் மிகவும் எளிமையானவை என்றும் அவற்றை எவரும் புரிந்து கொள்ள முடியும் எனவும் பிரதமர் கூறினார். ஆச்சார்யா வித்யானந்த் ஜி 150-க்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார் எனவும் ஆயிரக்கணக்கான கிலோமீட்டர் வெறுங்காலுடன் பயணங்களை மேற்கொண்டுள்ளார் என்றும் தனது அயராத முயற்சிகள் மூலம் கோடிக் கணக்கான இளைஞர்களை ஒழுக்கம் மற்றும் கலாச்சார விழுமியங்களுடன் இணைத்துள்ளார் என்றும் பிரதமர் குறிப்பிட்டார். ஆச்சார்ய வித்யானந்த் முனிராஜை ‘சகாப்தத்தின் தொலைநோக்குப் பார்வையாளர்’ என்று அவர் வர்ணித்தார். ஆச்சார்யாவின் ஆன்மீக ஒளியை நேரில் அனுபவிக்கவும், காலப்போக்கில் அவரது வழிகாட்டுதலையும் ஆசீர்வாதங்களையும் பெறவும் வாய்ப்பு கிடைத்தது தனது அதிர்ஷ்டம் என்றும் அவர் கூறினார். இந்த நூற்றாண்டு விழாவில், மதிப்பிற்குரிய ஆச்சார்யாவிடமிருந்து அதே பாசத்தையும் நெருக்கத்தையும் இன்னும் உணர முடிகிறது என்று அவர் கூறினார். “இந்தியா உலகின் மிகப் பழமையான நாகரிகம் எனவும், அதன் கருத்துக்கள், தத்துவ சிந்தனை மற்றும் உலகக் கண்ணோட்டம் நித்தியமானவை என்பதால் நமது நாடு ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக நிலைத்திருக்கிறது என்றும் திரு நரேந்திர மோடி கூறினார். இந்த நீடித்த பார்வை முனிவர்கள், துறவிகள் மற்றும் ஆச்சார்யர்களின் ஞானத்தில் வேரூன்றியுள்ளது என்று அவர் குறிப்பிட்டார். ஆச்சார்யா ஸ்ரீ வித்யானந்த் ஜி முனிராஜ் இந்த காலத்தால் அழியாத மரபின் நவீன கலங்கரை விளக்கமாக திகழ்ந்தார் என்பதை அவர் எடுத்துரைத்தார். ஆச்சார்யா ஏராளமான பாடங்களில் ஆழ்ந்த நிபுணத்துவம் பெற்றிருந்தார் என்றும் பல துறைகளில் சிறந்து விளங்கினார் என்றும் பிரதமர் குறிப்பிட்டார். ஆச்சார்யாவின் ஆன்மீக தீவிரம், விரிவான அறிவு மற்றும் கன்னடம், மராத்தி, சமஸ்கிருதம், பிராகிருதம் போன்ற மொழிகளில் அவரது புலமை ஆகியவற்றை பிரதமர் எடுத்துரைத்தார். இலக்கியம் மற்றும் மதத்திற்கு ஆச்சார்யாவின் பங்களிப்புகள், பாரம்பரிய இசை மீதான அவரது பக்தி, தேசிய சேவைக்கான அவரது உறுதியான அர்ப்பணிப்பு ஆகியவற்றை எடுத்துரைத்த பிரதமர், ஆச்சார்யா முன்மாதிரியான நபர் என்று கூறினார். ஆச்சார்யா வித்யானந்த் ஒரு சிறந்த இசைக்கலைஞர் மட்டுமல்ல, ஒரு தீவிர தேசபக்தர், சுதந்திரப் போராட்ட வீரர், மற்றும் முழுமையான பற்றின்மையை உள்ளடக்கிய ஒரு உறுதியான முனிவர் என்பதையும் அவர் சுட்டிக் காட்டினார். அவரை அறிவின் நீர்த்தேக்கம் என்று பிரதமர் வர்ணித்தார். சுரேந்திர உபாத்யாயிடமிருந்து ஆச்சார்ய வித்யானந்த் முனிராஜ் வரையிலான பயணம் ஒரு சாதாரண மனிதரிலிருந்து ஒரு உன்னதமான ஆன்மாவாக மாறுவதாகும் என்று திரு நரேந்திர மோடி கூறினார். எதிர்காலம் தற்போதைய வாழ்க்கையின் வரம்புகளால் கட்டுப்படுத்தப்படவில்லை, மாறாக ஒருவரின் திசை, நோக்கம் மற்றும் உறுதியால் வடிவமைக்கப்பட்டுள்ளது என்பதற்கான உத்வேகம் என்று பிரதமர் தெரிவித்தார். ஆச்சார்ய வித்யானந்த் முனிராஜ் தனது வாழ்க்கையை ஆன்மீக பயிற்சியுடன் நிறுத்தவில்லை எனவும், மாறாக சமூக மற்றும் கலாச்சார மறுகட்டமைப்புக்கான ஒரு ஊடகமாக தனது வாழ்க்கையை மாற்றினார் என்றும் குறிப்பிட்ட பிரதமர், பிராகிருத பவன் மற்றும் பல ஆராய்ச்சி நிறுவனங்களை நிறுவியதன் மூலம், ஆச்சார்யா புதிய தலைமுறையினருக்கு அறிவின் சுடரை எடுத்துச் சென்றார் என்பதை சுட்டிக் காட்டினார். ஆச்சார்யா சமண வரலாற்றுக்கும் சரியான அங்கீகாரத்தை அளித்தார் என்று அவர் கூறினார். ‘ஜெயின் தரிசனம்’ மற்றும் ‘அனேகாந்த்வாத்’ போன்ற முக்கிய நூல்களை எழுதியதன் மூலம், அவர் தத்துவ சிந்தனையை ஆழப்படுத்தினார் எனவும் உள்ளடக்கம் மற்றும் புரிதலின் அகலத்தை ஊக்குவித்தார் என்றும் பிரதமர் தெரிவித்தார். கோயில் மறுசீரமைப்பு முதல் பின்தங்கிய குழந்தைகளின் கல்வி மற்றும் பரந்த சமூக நலன் வரை, ஆச்சார்யாவின் ஒவ்வொரு முயற்சியும் சுய உணர்தல் மற்றும் பொது நன்மை ஆகியவற்றின் தொகுப்பை பிரதிபலித்தது என்று பிரதமர் குறிப்பிட்டார். சுயநலமற்ற சேவைக்கான வழிமுறையாக மாறும்போதுதான் வாழ்க்கை உண்மையிலேயே ஆன்மீகமாகிறது என்று ஆச்சார்யா வித்யானந்த் மகாராஜ் ஒருமுறை கூறியதை நினைவு கூர்ந்த திரு நரேந்திர மோடி, இந்த சிந்தனை சமண தத்துவத்தின் சாரத்தில் ஆழமாக வேரூன்றியுள்ளது என்றும், இந்தியாவின் உணர்வோடு உள்ளார்ந்த முறையில் இணைக்கப்பட்டுள்ளது என்றும் கூறினார். “இந்தியா சேவையால் வரையறுக்கப்பட்ட மற்றும் மனிதநேயத்தால் வழிநடத்தப்படும் ஒரு நாடு” என்று பிரதமர் தெரிவித்தார். உலகம் பல நூற்றாண்டுகளாக வன்முறையை வன்முறையால் அடக்க முயற்சித்தாலும், இந்தியா உலகிற்கு அகிம்சையின் சக்தியை அறிமுகப்படுத்தியது என்றும் அவர் குறிப்பிட்டார். இந்திய நெறிமுறைகள் எப்போதும் மனிதகுலத்திற்கு சேவை செய்யும் உணர்வை முதன்மைப்படுத்தியுள்ளன என்பதை அவர் எடுத்துரைத்தார். “இந்தியாவின் சேவை மனப்பான்மை நிபந்தனையற்றது, சுயநலத்திற்கு அப்பாற்பட்டது மற்றும் தன்னலமற்ற தன்மையால் ஈர்க்கப்பட்டது” என்று திரு நரேந்திர மோடி குறிப்பிட்டார், இந்தக் கொள்கை இன்று நாட்டின் நிர்வாகத்தை வழிநடத்துகிறது என்பதை அவர் விளக்கினார். பிரதமரின் வீட்டு வசதித் திட்டம், ஜல் ஜீவன் மிஷன், ஆயுஷ்மான் பாரத், மற்றும் பின்தங்கியவர்களுக்கு இலவச உணவு தானிய விநியோகம் போன்ற முயற்சிகள் இந்த நெறிமுறையின் பிரதிபலிப்புகளாகும் என்று அவர் மேற்கோள் காட்டினார். இது சமூகத்தின் கடைசி நிலையில் உள்ளவர்களை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டது எனவும் அனைத்து திட்டங்களிலும் செறிவூட்டலை அடைவதற்கும், யாரும் பின்தங்கியிருக்காமல் இருப்பதற்கும், முன்னேற்றம் உண்மையிலேயே அனைவரையும் உள்ளடக்கியதாக இருப்பதை உறுதி செய்வதற்கும் அரசு உறுதிபூண்டுள்ளது என்பதை அவர் எடுத்துரைத்தார். இந்த உறுதிப்பாடு ஆச்சார்ய வித்யானந்த் முனிராஜின் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டு, பகிரப்பட்ட தேசிய உறுதிப்பாடாக உள்ளது என்று பிரதமர் தெரிவித்தார். “தீர்த்தங்கரர்கள், துறவிகள் மற்றும் ஆச்சார்யர்களின் போதனைகள், வார்த்தைகள் ஒவ்வொரு சகாப்தத்திலும் காலத்தால் அழியாதவை மற்றும் பொருத்தமானவை. இன்று, ஐந்து மகாவ்ரதங்கள், அனுவ்ரதம், திரிரத்னங்கள் மற்றும் ஆறு அத்தியாவசியங்கள் போன்ற சமண மதக் கொள்கைகள் முன்பை விட மிகவும் முக்கியமானவை” என்று பிரதமர் கூறினார். காலத்தின் தேவைக்கேற்ப சாமானிய மக்களுக்கு நித்திய போதனைகள் அணுகக்கூடியதாக இருக்க வேண்டும் என்று அவர் குறிப்பிட்டார். ஆச்சார்யா வித்யானந்த் முனிராஜ் தனது வாழ்க்கையையும் பணியையும் இந்த நோக்கத்திற்காக அர்ப்பணித்ததாக திரு நரேந்திர மோடி எடுத்துரைத்தார். “சமண வேதங்களை பேச்சுவழக்கில் வழங்குவதற்காக ஆச்சார்யா ‘வச்சநாமிர்த’ இயக்கத்தைத் தொடங்கினார். மேலும் ஆழமான ஆன்மீகக் கருத்துக்களை மக்களுக்கு எளிமையாகவும் அணுகக்கூடிய வகையிலும் தெரிவிக்க பக்தி இசையையும் பயன்படுத்தினார்” என்று பிரதமர் கூறினார். ஆச்சார்யாவின் பஜனைகளில் ஒன்றை மேற்கோள் காட்டிய பிரதமர், இத்தகைய இசையமைப்புகள் ஞான முத்துக்களால் ஆன ஆன்மீக மாலைகள் என்று குறிப்பிட்டார். அழியாமையின் மீதான இந்த எளிதான நம்பிக்கையும், எல்லையற்றதை நோக்கிப் பார்க்கும் தைரியமும் இந்திய ஆன்மீகத்தையும் கலாச்சாரத்தையும் உண்மையிலேயே சிறப்பானதாக ஆக்குகின்றன என்று அவர் மேலும் கூறினார். ஆச்சார்யா வித்யானந்த் முனிராஜின் நூற்றாண்டானது தொடர்ச்சியான உத்வேகத்தை அளிக்கும் ஆண்டு என்பதை எடுத்துரைத்த திரு நரேந்திர மோடி, ஆச்சார்யாவின் ஆன்மீக போதனைகளை தனிப்பட்ட வாழ்க்கையில் உள்வாங்குவது மட்டுமல்லாமல், சமூகம் மற்றும் தேசத்தின் நலனுக்காக அவரது பணிகளை முன்னெடுத்துச் செல்ல வேண்டிய பொறுப்பையும் வலியுறுத்தினார். ஆச்சார்யா வித்யானந்த் தனது இலக்கியப் படைப்புகள் மற்றும் பக்திப் படைப்புகள் மூலம் பழங்கால பிராகிருத மொழியை மீண்டும் உயிர்ப்பிப்பதில் வகித்த முக்கிய பங்கை அவர் எடுத்துரைத்தார். பிராகிருதம் இந்தியாவின் பழமையான மொழிகளில் ஒன்றாகும் என்றும், சமண ஆகமங்கள் இயற்றப்பட்ட பகவான் மகாவீரரின் போதனைகளின் அசல் ஊடகம் அது என்றும் பிரதமர் குறிப்பிட்டார். கலாச்சார புறக்கணிப்பு காரணமாக, மொழி பொதுவான பயன்பாட்டிலிருந்து மறைந்துவிட்டதாகவும் அவர் குறிப்பிட்டார். ஆச்சார்யா வித்யானந்த் போன்ற துறவிகளின் முயற்சிகள் இப்போது தேசிய முயற்சிகளாக மாறிவிட்டன என்றும் பிரதமர் கூறினார். அக்டோபர் 2024-ல், அரசு பிராகிருதத்திற்கு செம்மொழி அந்தஸ்தை வழங்கியதை அவர் நினைவு கூர்ந்தார். இந்தியாவின் பழங்கால கையெழுத்துப் பிரதிகளைப் பாதுகாக்க தொடங்கப்பட்ட டிஜிட்டல் மயமாக்கல் இயக்கத்தை அவர் குறிப்பிட்டார். இதில் கணிசமான எண்ணிக்கையிலான சமண வேதங்கள் மற்றும் ஆச்சார்யர்கள் தொடர்பான நூல்கள் அடங்கும் என பிரதமர் கூறினார். உயர்கல்வியில் தாய்மொழியைப் பயன்படுத்துவதை அரசு ஊக்குவித்து வருவதாகவும் பிரதமர் குறிப்பிட்டார். செங்கோட்டையில் இருந்து தமது உரையை மீண்டும் உறுதிப்படுத்திய அவர், காலனித்துவ மனநிலையிலிருந்து நாட்டை விடுவித்து, வளர்ச்சி மற்றும் பாரம்பரியம் இரண்டையும் இணைத்து முன்னேறுவதற்கான உறுதியை மீண்டும் எடுத்துரைத்தார். இந்த உறுதிமொழி இந்தியாவின் கலாச்சார மற்றும் புனித யாத்திரைத் தலங்களின் தொடர்ச்சியான வளர்ச்சிக்கு வழிகாட்டுகிறது என்று திரு நரேந்திர மோடி கூறினார். 2024-ம் ஆண்டில், பகவான் மகாவீரரின் 2,550-வது நிர்வாண மஹோத்சவத்தைக் குறிக்கும் வகையில் அரசு பெரிய அளவிலான கொண்டாட்டங்களை ஏற்பாடு செய்ததை அவர் நினைவு கூர்ந்தார். இது ஆச்சார்ய வித்யானந்த் முனிராஜால் ஈர்க்கப்பட்டு, ஆச்சார்ய பிரக்யா சாகர் போன்ற துறவிகளால் ஆசீர்வதிக்கப்பட்டது என அவர் தெரிவித்தார். வருங்காலங்களில், நாடு அதன் கலாச்சார பாரம்பரியத்தை வளப்படுத்த இதுபோன்ற பெரிய அளவிலான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என்று குறிப்பிட்ட பிரதமர், தற்போதைய நிகழ்ச்சியைப் போலவே, இதுபோன்ற அனைத்து முயற்சிகளும் மக்கள் பங்களிப்பு உணர்வால், அனைவரும் இணைவோம் அனைவரும் உயர்வோம், அனைவரின் முயற்சி என்ற தாரக மந்திரத்துடன் வழிநடத்தப்படும் என்று உறுதிப்படுத்தினார். இந்த நிகழ்வில் தமது பங்கேற்பு இயற்கையாகவே நவ்கர் மந்திர தினத்தின் நினைவை எழுப்பியதாக திரு நரேந்திர மோடி கூறினார். இந்த ஒன்பது தீர்மானங்களும் பகிர்ந்து கொள்ளப்பட்டன எனவும் ஏராளமான மக்கள் இந்த உறுதிமொழிகளை நிறைவேற்ற ஆர்வத்துடன் பாடுபடுகிறார்கள் என்பதிலும் அவர் மகிழ்ச்சி தெரிவித்தார். ஆச்சார்ய வித்யானந்த் ஜி முனிராஜின் போதனைகள் இந்த உறுதிமொழிகளை வலுப்படுத்துகின்றன என்றும் கூறினார். ஒன்பது தீர்மானங்களை மீண்டும் வலியுறுத்திய பிரதமர், தண்ணீரைப் பாதுகாப்பதே முதல் தீர்மானம் என்று கூறினார். ஒவ்வொரு துளியின் மதிப்பையும் அனைவரும் அங்கீகரிக்க வேண்டும் என்றும், அது தாய் பூமிக்கு நாம் செய்யும் ஒரு பொறுப்பு மற்றும் கடமை என்றும் அவர் வலியுறுத்தினார். இரண்டாவது தீர்மானம் தாயின் பெயரில் ஒரு மரத்தை நட்டு, தாய்மார்கள் நம்மை வளர்ப்பது போல அதை வளர்ப்பது, ஒவ்வொரு மரத்தையும் தாயிடமிருந்து ஒரு உயிருள்ள ஆசீர்வாதமாக மாற்றுவது. மூன்றாவது தீர்மானம் தூய்மையை வலியுறுத்துகிறது என்றும் ஒவ்வொரு தெரு, சுற்றுப்புறம் மற்றும் நகரமும் கூட்டு பங்கேற்புடன் சுத்தமாக வைத்திருக்கப்பட வேண்டும் என்றும் அவர் கூறினார். ‘உள்ளூர் மக்களுக்கான குரல்’ என்பது நான்காவது தீர்மானமாக இருப்பதால், நாட்டின் வியர்வை மற்றும் மண்ணால் வளமான சக இந்தியர்களால் தயாரிக்கப்பட்ட பொருட்களைத் தேர்ந்தெடுத்து ஊக்குவிக்குமாறு திரு நரேந்திர மோடி மக்களை வலியுறுத்தினார். ஐந்தாவது தீர்மானம் இந்தியாவை ஆராய்ந்து புரிந்துகொள்வது, உலகைப் பார்ப்பது நல்லது என்றாலும், ஒருவர் இந்தியாவை ஆழமாக அறிந்து, அனுபவித்து, போற்ற வேண்டும் என அவர் கூறினார். இயற்கை விவசாயத்தை ஏற்றுக்கொள்ளும் ஆறாவது தீர்மானத்தை பிரதமர் சுட்டிக் காட்டினார். பூமித்தாயை தீங்கு விளைவிக்கும் இரசாயனங்களிலிருந்து விடுவித்து, கிராமங்கள் முழுவதும் இயற்கை விவசாயத்தை ஊக்குவிக்க வேண்டியதன் அவசியத்தைக் கூறினார். ஆரோக்கியமான வாழ்க்கை முறையைப் பராமரித்தல் ஏழாவது தீர்மானமாகும் என்று அவர் கூறினார். கவனத்துடன் சாப்பிடுவது, உணவுகளில் சிறுதானியங்களைச் சேர்ப்பது மற்றும் எண்ணெய் பயன்பாட்டைக் குறைப்பது ஆகியவற்றை அவர் அறிவுறுத்தினார். எட்டாவது தீர்மானம் யோகா மற்றும் விளையாட்டுகளை அன்றாட வாழ்க்கையின் ஒரு பகுதியாக ஏற்றுக்கொள்வது என அவர் கூறினார். ஏழைகளுக்கு உதவுவது ஒன்பதாவது தீர்மானம் என்று திரு நரேந்திர மோடி கூறினார். பின்தங்கியவர்களின் கைகளைப் பிடித்து வறுமையை வெல்ல அவர்களுக்கு உதவுவது உண்மையான சேவை என்பதை அவர் சுட்டிக் காட்டினார். இந்த ஒன்பது தீர்மானங்களைப் பின்பற்றுவதன் மூலம், மக்கள் ஆச்சார்யா வித்யானந்த் முனிராஜின் போதனைகளை வலுப்படுத்துவார்கள் என்று பிரதமர் நம்பிக்கை தெரிவித்தார். அமிர்த காலத்திற்கான இந்தியாவின் தொலைநோக்குப் பார்வை நாட்டின் உணர்வில் ஆழமாக வேரூன்றியுள்ளது மற்றும் அதன் துறவிகளின் ஞானத்தால் வளப்படுத்தப்பட்டுள்ளது என்று திரு நரேந்திர மோடி கூறினார். அமிர்த தீர்மானங்களை நனவாக்கி வளர்ந்த இந்தியாவை உருவாக்க 140 கோடி குடிமக்கள் தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர் என்பதை அவர் எடுத்துரைத்தார். வளர்ந்த இந்தியா என்ற கனவு என்பது ஒவ்வொரு இந்தியரின் விருப்பங்களையும் நிறைவேற்றுவதாகும் என்று அவர் குறிப்பிட்டார். இந்த தொலைநோக்குப் பார்வை ஆச்சார்ய வித்யானந்த் முனிராஜிடமிருந்து உத்வேகம் பெறுகிறது என்றும், அவர் காட்டிய பாதையில் நடப்பது, அவரது போதனைகளை உள்வாங்குவது மற்றும் தேசத்தைக் கட்டியெழுப்புவதை வாழ்க்கையின் முதன்மையான கடமையாக மாற்றுவது ஒரு கூட்டுப் பொறுப்பு என்றும் பிரதமர் குறிப்பிட்டார். இந்த நிகழ்வின் புனிதத்தன்மை இந்த உறுதிமொழிகளை மேலும் வலுப்படுத்தும் என்று நம்பிக்கை தெரிவித்து, ஆச்சார்ய வித்யானந்த் ஜி முனிராஜுக்கு மரியாதை செலுத்தி பிரதமர் திரு நரேந்திர மோடி தமது உரையை நிறைவு செய்தார். மத்திய கலாச்சாரம் மற்றும் சுற்றுலா அமைச்சர் திரு கஜேந்திர சிங் ஷெகாவத் மற்றும் துறவிகள் நிகழ்வில் கலந்து கொண்டனர். பின்னணி ஆச்சார்ய வித்யானந்த் மகாராஜின் நூற்றாண்டு விழா, மத்திய அரசால் பகவான் மகாவீர் அஹிம்சா பாரதி அறக்கட்டளையுடன் இணைந்து ஏற்பாடு செய்யப்படும் ஒரு வருட கால தேசிய நிகழ்வின் முறையான தொடக்கத்தைக் குறிக்கிறது. மதிப்பிற்குரிய ஜெயின் ஆன்மீகத் தலைவரும் சமூக சீர்திருத்தவாதியுமான ஆச்சார்ய வித்யானந்த் மகாராஜின் 100-வது பிறந்தநாளை முன்னிட்டு இந்த ஆண்டு முழுவதும் கொண்டாடப்படும் இந்த கொண்டாட்டத்தில் நாடு முழுவதும் கலாச்சார, இலக்கிய, கல்வி மற்றும் ஆன்மீக முயற்சிகள் நடைபெறும். இது அவரது வாழ்க்கை மற்றும் பாரம்பரியத்தை கொண்டாடுவதையும் அவரது செய்தியைப் பரப்புவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது. ஆச்சார்ய வித்யானந்த் மகாராஜ் சமண தத்துவம் மற்றும் நெறிமுறைகள் குறித்து 50-க்கும் மேற்பட்ட படைப்புகளை எழுதியுள்ளார். இந்தியா முழுவதும் உள்ள பழங்கால சமண கோயில்களின் மறுசீரமைப்பு மற்றும் மறுமலர்ச்சியில் அவர் முக்கியப் பங்காற்றினார். மேலும் கல்விக்காகவும், பிராகிருதம், சமண தத்துவம் மற்றும் பாரம்பரிய மொழிகள் வளர்ச்சிக்கும் அவர் பணியாற்றினார்.
Read More »அரசியலமைப்பு படுகொலை தினத்தன்று ஜனநாயக பாதுகாவலர்களுக்கு பிரதமர் புகழாரம் சூட்டியுள்ளார்
அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்டதன் 50-வது ஆண்டினைக் குறிக்கும் நாளான இன்று, நாட்டின் வரலாற்றில் இருண்ட அத்தியாயங்களில் ஒன்றாக இருந்த காலத்தில் ஜனநாயகத்தை பாதுகாக்க உறுதியுடன் நின்ற எண்ணற்ற இந்தியர்களுக்குப் பிரதமர் திரு நரேந்திர மோடி மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். அரசியல் சட்ட மாண்புகள் மீது நடத்தப்பட்ட கடுமையான தாக்குதலை நினைவுகூர்ந்த பிரதமர், அடிப்படை உரிமைகள் ரத்து செய்யப்பட்ட, பத்திரிகை சுதந்திரம் முடக்கப்பட்ட, எண்ணற்ற அரசியல் தலைவர்கள், சமூக ஊழியர்கள், மாணவர்கள், …
Read More »
Matribhumi Samachar Tamil