உலகளவில் மிகவும் துடிப்பான புத்தொழில் சூழல் அமைப்புகளில் ஒன்றாக இந்தியா உருவெடுத்துள்ளது. 3-வது பெரிய புத்தொழில் மையமாக இந்தியா தனது இடத்தைப் பெற்றுள்ளது. 100+ க்கும் மேற்பட்ட யூனிகார்ன்களுடன், இந்திய புத்தொழில் சூழல், புதுமை, தொழில்முனைவின் எதிர்காலத்தை வடிவமைக்கிறது. இந்தியாவில் 73,000 க்கும் மேற்பட்ட புத்தொழில் நிறுவனங்களில் குறைந்தது ஒரு பெண் இயக்குநர் உள்ளார். அவை ஸ்டார்ட்அப் இந்தியா முன்முயற்சியின் கீழ் அங்கீகரிக்கப்பட்டுள்ளன. இது அரசால் ஆதரிக்கப்படும் 1,57,066 புத்தொழில் நிறுவனங்களில் கிட்டத்தட்ட பாதியாகும். கடந்த பத்து ஆண்டுகளில் இந்தியாவில் தொழில்முனைவோர் உணர்வு ஒரு முன்னுதாரண மாற்றத்திற்கு உட்பட்டுள்ளது. பெங்களூரு, ஹைதராபாத், மும்பை, தில்லி போன்ற நகரங்கள் …
Read More »10,000-க்கும் அதிகமான கூட்டுறவு சங்கங்களை நாளை நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார் மத்திய அமைச்சர் திரு அமித் ஷா
மத்திய உள்துறை மற்றும் கூட்டுறவு அமைச்சருமான திரு அமித் ஷா, புதுதில்லி, பூசாவில் உள்ள ஐசிஏஆர் மாநாட்டு மையத்தில் 2024 டிசம்பர் 25, அன்று நடைபெறும் நிகழ்ச்சியில் புதிதாக நிறுவப்பட்ட 10,000-க்கும் மேற்பட்ட பன்னோக்கு தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கங்கள், பால், மீன்வள கூட்டுறவு சங்கங்களை நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார். புதிதாக உருவாக்கப்பட்ட கூட்டுறவு சங்கங்களுக்கு பதிவுச் சான்றிதழ்கள், ரூபே கிசான் கடன் அட்டைகள், மைக்ரோ ஏடிஎம்களை திரு அமித் ஷா வழங்குவார். இந்த நிதிக் கருவிகள் பஞ்சாயத்துகள் அளவில் கடன் சேவைகளை எளிதாக அணுகுவதற்கும் நிதி …
Read More »