Monday, December 29 2025 | 03:31:41 AM
Breaking News

Tag Archives: National Consumer Helpline

தேசிய நுகர்வோர் உதவி எண் மூலமான புகார்களின் அடிப்படையில், 8 மாதங்களில் 45 கோடி ரூபாய் திருப்பி அளிக்கப்பட்டது

மத்திய அரசின் நுகர்வோர் விவகாரத் துறையின் முதன்மை முயற்சியான தேசிய நுகர்வோர் உதவி எண், நாடு முழுவதும் நுகர்வோர் குறைகளை திறம்பட, சரியான நேரத்தில் தீர்வு காண்பதில் தொடர்ந்து முக்கிய பங்கு வகிக்கிறது. 2025 ஏப்ரல் 25 முதல் டிசம்பர் 26 வரையிலான எட்டு மாத காலத்தில், இந்த உதவி எண், மூலம் 31 துறைகளில் பணத்தைத் திரும்பப் பெறுவது தொடர்பான 67,265 நுகர்வோர் குறைகள் தீர்க்கப்பட்டுள்ளன. இதன் மூலம் 45 கோடி ரூபாய் பணம் திரும்ப வழங்கப்பட்டுள்ளது . நுகர்வோர் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் வழக்குத் தொடரப்படுவதற்கு முந்தைய கட்டத்தில் செயல்படும் இந்த உதவி எண்ணில் புகார் அளிக்கும்போது, சிக்கல்களை விரைவாகவும், இணக்கமாகவும் தீர்க்க முடிகிறது. நுகர்வோர் ஆணையங்களின் சுமையையும் குறைக்கிறது. கடந்த 8 மாதங்களில் மின் வணிகத் துறையில் அதிகபட்சமாக 39,965 குறைகள் பதிவு செய்யப்பட்டு, அதன் மூலம் 32 கோடி ரூபாய் நுகர்வோருக்கு திரும்ப வழங்கப்பட்டது. அதைத் தொடர்ந்து பயணம், சுற்றுலாத் துறையில் 4,050 குறைகள் பதிவு செய்யப்பட்டு 3.5 கோடி ரூபாய் திருப்பி அளிக்கப்பட்டது. நாட்டின் அனைத்துப் பகுதிகளிலிருந்தும், முக்கிய பெருநகரங்கள் முதல் தொலைதூர பகுதிகள் வரை, மின் வணிக பணத்தைத் திரும்பப் பெறுவது தொடர்பான குறைகள் அதிகம் பெறப்பட்டன. இது தேசிய நுகர்வோர் உதவி எண்ணின் நாடு தழுவிய செயல்திறனை எடுத்துக்காட்டுகிறது. நாடு முழுவதும் உள்ள நுகர்வோர் வழக்குத் தொடரும் முன் குறைகளைத் தீர்க்க தங்கள் குறைகளை 1915 என்ற கட்டணமில்லா எண் மூலம் 17 மொழிகளில் பதிவு செய்யலாம் . ஒருங்கிணைந்த குறை தீர்க்கும் வழிமுறையான இன்கிராம் தளம் மூலமாகவும் குறைகளைச் சமர்ப்பிக்கலாம். நுகர்வோர் உதவி தொடர்பான இணையதளம்: www.consumerhelpline.gov.in நுகர்வோர் தங்கள் உரிமைகளைப் பாதுகாக்கவும், பிரச்சனைகளுக்குச் சரியான நேரத்தில் தீர்வு காணவும் உதவி எண்ணை அதிக அளவில் பயன்படுத்துமாறு நுகர்வோர் விவகாரங்கள் துறை கேட்டுக்கொள்கிறது.

Read More »

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்துடன் கூடிய தேசிய நுகர்வோர் உதவி தொலைபேசி எண் அமைப்பை ஏற்படுத்துதல்

நுகர்வோரின் குறைகளுக்குத் தீர்வு காணும் நடைமுறைகளை மேம்படுத்தும் வகையில், நுகர்வோர் விவகாரங்கள் அமைச்சகம் குறிப்பிடத்தக்க நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. இதன்படி, செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்துடன் கூடிய தேசிய நுகர்வோர் உதவி தொலைபேசி எண் அமைப்பை ஏற்படுத்துவதன் மூலம் பகுதி வாரியாக குறைகளைப் பகுத்தாய்வு செய்து தீர்வு காண வழி கிடைக்கும். இந்தப் புதிய தொழில்நுட்பம் அடிப்படையிலான அணுகுமுறை நுகர்வோர் தொடர்பான விவகாரங்களுக்கு விரைவாகவும், திறமையாகவும் தீர்வு காணும் நடைமுறைகளை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இதன் விளைவாக …

Read More »

மத்திய அரசின் நுகர்வோர் விவகாரங்கள் துறை, தேசிய நுகர்வோர் இலவச உதவி எண் மையத்தோடு தொடர்புடையவர்களுக்கு சிறப்புத் திறன் மேம்பாட்டுத் திட்டத்தை நடத்துகிறது

வழக்கு பதிவு செய்வதற்கு முந்தைய நிலையிலேயே குறைகள் தீர்த்துவைக்கப்படுவதை மேம்படுத்தும் வகையில் மேற்கொள்ளப்படும் தொடர் முயற்சிகளில், நுகர்வோர் விவகாரங்கள் துறை  இந்த ஆண்டு தேசிய நுகர்வோர் இலவச உதவி எண் மையத்தில் செயல்படுவர்களுக்கான  திறன் மேம்பாட்டு திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. திறன் மேம்பாட்டுத் திட்டம் என்பது தேசிய நுகர்வோர் உதவி எண் மையத்தில் செயல்படுவர்களுக்கான  வடிவமைக்கப்பட்ட தொடர்ச்சியான சிறப்பு திறன் மேம்பாட்டு முயற்சிகளை உள்ளடக்கியதாகும்.  நுகர்வோர் குறைகளை திறம்பட நிவர்த்தி செய்வதற்கும் …

Read More »