Tuesday, December 09 2025 | 11:34:28 PM
Breaking News

Tag Archives: Nepal

நேபாளத்தில் 900 மெகாவாட் மேல் கர்னாலி நீர்மின் உற்பத்தித் திட்டத்திற்கான் ஒப்பந்தம்

நேபாளத்தில் 900 மெகாவாட் மேல் கர்னாலி நீர்மின் உற்பத்தித் திட்டத்திற்காக இந்திய புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மேம்பாட்டு முகமை, எஸ்ஜெவிஎன் நிறுவனம், ஜிஎம்ஆர்  எனர்ஜி நிறுவனம், நேபாள மின்சார ஆணையம் ஆகியவை இணைந்த கூட்டு  ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த   முன்முயற்சி அப்பிராந்தியத்தில் மின் சக்தி பாதுகாப்பை வலுப்படுத்துவதையும் புதுப்பிக்கத்தக்க எரிசக்திக்கான மேம்பாட்டு நடவடிக்கைகளை விரைவுப்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது. திட்ட மேம்பாடு, கட்டுமானம், செயல்பாடு, பராமரிப்பு ஆகியவற்றுக்கான ஒரு விரிவான கட்டமைப்பை …

Read More »

இந்தியா-நேபாள கூட்டு ராணுவப் பயிற்சிக்காக இந்திய ராணுவக் குழு நேபாளம் புறப்பட்டது

சூர்ய கிரண் என்ற கூட்டு ராணுவப் பயிற்சியின் 18-வது பதிப்பில் பங்கேற்பதற்காக 334 வீரர்களைக் கொண்ட இந்திய ராணுவக் குழு இன்று நேபாளத்திற்குப் புறப்பட்டது. இந்த பயிற்சி நேபாளத்தின் சல்ஜண்டியில் 2024 டிசம்பர் 31 முதல் 2025 ஜனவரி 13 வரை நடத்தப்படும். இது இரு நாடுகளிலும் மாறி மாறி நடத்தப்படும் வருடாந்திரப் பயிற்சி நிகழ்வாகும். இந்திய இராணுவப் பிரிவை 11-வது கோர்கா ரைபிள்ஸைச் சேர்ந்த ஒரு படைப் பிரிவு வழிநடத்துகிறது. நேபாள …

Read More »

நேபாள ராணுவத் தளபதி சுப்ரபால் ஜனசேவஸ்ரீ ஜெனரல் அசோக் ராஜ் சிக்டலின் இந்திய பயணத்தின் வெற்றிகரமான முடிவு

2024 டிசம்பர் 11 முதல் 14 வரை நேபாள ராணுவத் தளபதி  சுப்ரபால் ஜனசேவஸ்ரீ ஜெனரல் அசோக் ராஜ் சிக்டெல் இந்தியாவுக்கு வருகை தந்தது, நேபாள ராணுவத்திற்கும் இந்திய ராணுவத்திற்கும் இடையிலான நீண்டகால உறவுகளை வலுப்படுத்துவதில் ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லைக் குறிக்கிறது. இரு தரப்பிலும் மூத்த தலைவர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு இடையிலான முக்கிய ஈடுபாடுகளைக் கண்ட இந்தப் பயணம், பாதுகாப்பு நலன்களின் பகுதிகளில் மேம்பட்ட இருதரப்பு ராணுவ ஒத்துழைப்பு, பரிமாற்றம் மற்றும் ஒத்துழைப்புக்கான அடித்தளத்தை மேலும் வலுப்படுத்தியுள்ளது. தமது பயணத்தின் போது, ஜெனரல் அசோக் ராஜ் சிக்டெல், இந்திய ராணுவத்தின் தளபதி ஜெனரல் உபேந்திர திவேதியுடன் தொடர்ச்சியான பயனுள்ள விவாதங்களில் ஈடுபட்டார். இரு நாடுகளுக்கும் இடையிலான உறவை மேலும் வலுப்படுத்தும் வகையில், இரு நாட்டு ராணுவங்களுக்கிடையேயான ஒத்துழைப்பை விரிவுபடுத்துவது, ஆழப்படுத்துவது குறித்து இந்த பேச்சுவார்த்தை கவனம் செலுத்தியது. இந்தியாவுக்கும் நேபாளத்துக்கும் இடையிலான இருதரப்பு பாதுகாப்பு ஒத்துழைப்பு குறித்து, பாதுகாப்புத்துறை அமைச்சர் திரு. ராஜ்நாத் சிங், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் திரு அஜீத் தோவல் உள்ளிட்ட பலருடன் அவர் பேச்சு நடத்தினார். ஜெனரல் அசோக் ராஜ் சிக்டலின் வருகை இந்திய மற்றும் நேபாள ராணுவங்களுக்கு இடையிலான நீண்டகால நட்புறவை மேம்படுத்துவதில் ஒரு மகத்தான வெற்றியாக நிரூபிக்கப்பட்டுள்ளது. மேலே கோடிட்டுக் காட்டப்பட்ட பல்வேறு முன்முயற்சிகள், இரு ராணுவங்களுக்கும் இடையே ஆழமான வேரூன்றிய பிணைப்பை வலுப்படுத்துவதற்கான பகிரப்பட்ட உறுதிப்பாட்டை பிரதிபலிக்கின்றன.

Read More »