இந்து, சனாதனம் போன்றவை தொடர்பான குறிப்புகள் பாரதத்தில் குழப்பமானதாகவும், முரண்பாடாகவும் வேதனையாகவும் உள்ளது என்று குடியரசுத் துணைத் தலைவர் திரு ஜக்தீப் தன்கர் தெரிவித்துள்ளார். ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் உள்ள மாநாட்டு மையத்தில் இன்று நடைபெற்ற வேதாந்தாவின் 27-வது சர்வதேச மாநாட்டில் தொடக்க உரையாற்றிய திரு தன்கர், “நம் பழமையான நாகரிகங்களில் ஒன்று, பல்வேறு வழிகளில் தனித்துவமான, இணையற்ற நாகரீகமாகும். இந்தியாவில் சனாதனம் என்று குறிப்பிடும்போது, இந்து என்ற குறிப்பு புரிந்துகொள்ள முடியாத அளவிற்கு குழப்பமானதாகவும், முரண்பாடாகவும், வேதனையாகவும் உள்ளது என்று தெரிவித்தார். இந்த வார்த்தைகளின் அர்த்தத்தைப் புரிந்துகொள்வதற்குப் பதிலாக, மக்கள் அதற்கு எதிரான மனநிலையில் உள்ளனர். இந்த ஆன்மீக பூமியில் இருக்கும் சிலர், வேதாந்தம், சனாதனம் தொடர்பான நூல்களை பிற்போக்குத்தனமானவை என்று நிராகரிக்கின்றனர். அவர்கள் அது குறித்து அறிந்து கொள்ளாமல் அதனை நிராகரிக்கின்றனர். இந்த நிராகரிப்பு பெரும்பாலும் வக்கிரமான காலனிய மனநிலைகளை கொண்டதாகவும், நமது அறிவுசார் பாரம்பரியத்தைப் பற்றிய புரிதல் இல்லாத தன்மையையும் எடுத்துரைக்கின்றன. மதச்சார்பின்மை என்ற கருத்தாக்கத்தை திரித்து கூறுவதன் பாதகமான சிந்தனைகளை கொண்டுள்ளனர். இது மிகவும் ஆபத்தானது. இதுபோன்ற செயல்களில் இருந்து பாதுகாத்து கொள்ள மதச்சார்பின்மை ஒரு கேடயமாக பயன்படுத்தப்படுகிறது. எனவே இந்த அடிப்படை கூறுகளை மக்களிடையே கொண்டு செல்வது ஒவ்வொரு இந்தியரின் கடமையாகும்” என்று அவர் மேலும் கூறினார்.
Read More »