வனவிலங்கு வாழ்விடங்களைப் பாதுகாப்பதற்கும், மனித-வனவிலங்கு மோதலை தடுப்பதற்கும் ‘வனவிலங்கு வாழ்விடங்களின் மேம்பாடு’, ‘புலிகள் – யானைகள் திட்டம்’ ஆகியவற்றை உள்ளடக்கிய மத்திய அரசின் நிதியுதவி பெற்ற ‘ஒருங்கிணைந்த வனவிலங்கு வாழ்விட மேம்பாடு’ திட்டத்தின் கீழ் மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களுக்கு மத்திய வனத்துறை அமைச்சகம் நிதி உதவி வழங்குகிறது. நடப்பு நிதியாண்டில் மத்திய அரசு பொறுப்பேற்கும் ‘ வன உயிரின வாழ்விட மேம்பாட்டுத் திட்டத்திற்கு மொத்தம் ரூ. 10455.46 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதில் தமிழ்நாட்டுக்கு ரூ.661.78 லட்சம் ஒதுக்கப்பட்டுள்ளது. ‘புலிகள் – யானைகள் பாதுகாப்புத் திட்டத்திற்கு மொத்தம் ரூ.14757.48 லட்சம் …
Read More »நாடாளுமன்ற கேள்வி:- தேசிய பல்லுயிர் செயல்திட்டம்
கொலம்பியாவின் காலியில் அண்மையில் நடைபெற்ற ஐநா பல்லுயிர் பெருக்க மாநாட்டின் போது இந்தியா தனது தேசிய பல்லுயிர் உத்தி, செயல் திட்டத்தை சமர்ப்பித்தது. இந்தியாவின் தேசிய பல்லுயிர் உத்தி செயல் திட்டம் (NBSAP) பாதுகாப்பு, நிலையான பயன்பாடு, பயன் பகிர்வு ஆகியவற்றை விரிவாக கவனிக்கிறது, நிலப்பரப்பு, கடல் பகுதிகளைப் பாதுகாத்தல், சீரழிந்த சுற்றுச்சூழல் அமைப்புகளை மீட்டெடுத்தல், மாசு கட்டுப்பாடு போன்றவற்றை நோக்கமாகக் கொண்டுள்ளது. 23 மத்திய அமைச்சகங்கள், பல தேசிய, மாநில அளவிலான அமைப்புகள், சமூகங்கள், பிற பங்குதாரர்களை உள்ளடக்கிய பரந்த ஆலோசனை செயல்முறையின் மூலம் இந்த திட்டம் புதுப்பிக்கப்பட்டுள்ளது. மாநிலங்களவையில் இன்று கேள்வி ஒன்றுக்கு எழுத்து …
Read More »நாடாளுமன்ற கேள்வி:- மின்னணுக் கழிவுகளை மறுசுழற்சி செய்தல்
மின்னணுக் கழிவு (மேலாண்மை) விதிகள், 2016-ஐ மின்னணுவியல் அமைச்சகம் விரிவாக திருத்தியமைத்து, மின்னணுக் கழிவு (மேலாண்மை) விதிகள், 2022-ஐ நவம்பர் 2022-ல் அறிவிக்கை செய்துள்ளது. இது2023 ஏப்ரல் 1-ம் தேதி முதல் அமலில் உள்ளது. மின்னணுக் கழிவுகளால் ஏற்படக்கூடிய பாதகமான விளைவுகளிலிருந்து சுற்றுச்சூழலையும், சுகாதாரத்தையும் பாதுகாக்கும் வகையில் மின்னணுக் கழிவுகள் மேலாண்மை செய்யப்படுவதை உறுதி செய்வதற்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்வதே இவ்விதிகளின் நோக்கமாகும். இந்த புதிய விதிகள், மின்னணுக் கழிவுகளை சுற்றுச்சூழலுக்கு உகந்த முறையில் நிர்வகிப்பதையும், மின்னணுக் கழிவுகளை மறுசுழற்சி செய்வதற்கான …
Read More »நாடாளுமன்றக் கேள்வி :வானிலை முன்னறிவிப்பை மேம்படுத்த திட்டம்
ஏற்கனவே பயன்பாட்டில் உள்ள இயற்பியல் அடிப்படையிலான எண் மாதிரிகளோடு இப்போது செயற்கை நுண்ணறிவு மற்றும் இயந்திர கற்றல் தொழில்நுட்பங்களை வானிலை, பருவநிலை மற்றும் கடல்சார் முன்னறிவிப்பு அமைப்புகளில் புவி அறிவியல் அமைச்சகம் ஒருங்கிணைத்துள்ளது. வேளாண்மை, பேரிடர் மேலாண்மை மற்றும் நகர்ப்புறத் திட்டமிடல் உள்ளிட்ட பல்வேறு துறைகளுக்கு முக்கியமான வானிலை கணிப்புகளின் துல்லியம் மற்றும் செயல்திறனை மேம்படுத்துவதற்கான பரந்த உத்திசார்ந்தாக இந்த முயற்சி உள்ளது. இது தொடர்பான முக்கிய முயற்சிகளில் புனேவில் உள்ள இந்திய வெப்பமண்டல வானிலை ஆய்வு நிறுவனத்தில் ஒரு சிறப்பு மெய்நிகர் மையத்தை நிறுவுவதும் உள்ளடங்கும். இந்த மையம் புவி அறிவியலில் முன்னேற்றங்களுக்கான செயற்கை நுண்ணறிவு மற்றும் இயந்திரவழி கற்றல் நுட்பங்களை மேம்படுத்துவதில் கவனம் செலுத்துகிறது. இந்திய வானிலை ஆய்வுத் துறை (ஐஎம்டி) கிராமின் கிரிஷி மவுசம் சேவா திட்டத்தின் கீழ் இந்திய வேளாண் ஆராய்ச்சி குழுமம், மாநில வேளாண் பல்கலைக்கழகங்கள், இந்திய தொழில்நுட்ப நிறுவனம் (IIT) போன்றவற்றுடன் இணைந்து தற்போதுள்ள 130 வேளாண் வானிலை கள அலகுகள் மூலம் விவசாயிகளுக்கு வானிலை முன்னறிவிப்பு அடிப்படையிலான வேளாண் ஆலோசனை சேவைகளை வழங்கி வருகிறது. வேளாண் பல்கலைக்கழகங்கள் அந்தந்த மாவட்டங்களுக்கு தகுந்த வேளாண்மை சார்ந்த ஆலோசனைகளை ஊடகங்கள், மொபைல் செயலிகள், குறுஞ்செய்திகள் உள்ளிட்ட பல்வேறு முறைகள் மூலம் அளிக்கின்றன. மாநிலங்களவையில் இன்று கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில் மத்திய அறிவியல், தொழில்நுட்பம்மற்றும் புவி அறிவியல் துறை இணையமைச்சர் (தனிப்பொறுப்பு) டாக்டர் ஜிதேந்திர சிங் இந்தத் தகவலைத் தெரிவித்தார்.
Read More »நாடாளுமன்றக் கேள்வி: அதிகரித்து வரும் புவி வெப்பநிலை
அனைத்து அம்சங்களையும் கருத்தில் கொண்டு நாடு முழுவதும் பருவநிலை மாற்றத்தின் தாக்கம் குறித்து மத்திய புவி அறிவியல் அமைச்சகம் மதிப்பீடு செய்துள்ளது. புவியின் நீண்டகால சராசரி வெப்பநிலையை 1.5 டிகிரி செல்சியஸ் வரம்பிற்குக் கீழ் பராமரிக்கும் வகையில் வரும் 2050 ம் ஆண்டுக்குள் நிகர பூஜ்ஜிய கார்பன் உமிழ்வு என்ற இலக்கை எட்ட வேண்டும் என்று பருவநிலை மாற்றத்திற்கான அரசுகளுக்கு இடையிலான குழு(ஐபிசிசி) தெரிவித்துள்ளது. பருவநிலை மாற்றம் தொடர்பான பிரச்சினைக்கு தீர்வு …
Read More »நாடாளுமன்றக் கேள்வி: நிலநடுக்க அபாயம் உள்ள பகுதிகளில் முன்னேற்பாடுகளின் தேவை
இந்திய வரலாற்றில் மிகவும் பேரழிவு தரும் நிலநடுக்கங்களில் ஒன்றான 1905 ஆம் ஆண்டின் காங்க்ரா நிலநடுக்கமானது இமாச்சலப் பிரதேசம் உட்பட இமயமலைப் பகுதியில் ஏற்படும் நில அதிர்வுப் பேரிடர்களை நினைவூட்டுகிறது. நிலநடுக்கம் என்ற பேரிடர் பரவலான பேரழிவு, உயிர் இழப்பு உட்பட பல்வேறு தாக்கங்களை ஏற்படுத்துகிறது. நிலநடுக்கம் ஏற்படக்கூடிய பகுதிகளில், மேம்படுத்தப்பட்ட உள்கட்டமைப்பு வசதிகள், பேரிடர் மேலாண்மை உத்திகள், பொது விழிப்புணர்வு ஆகியவற்றின் மூலம் முன்னெச்சரிக்கையுடன் கூடிய தயார் நிலை இருக்க வேண்டியது அவசியமாகும். இந்தியாவில் …
Read More »நாடாளுமன்ற கேள்வி : இந்திய விண்வெளி நிலையம் தொடர்பான பணிகள்
பாரதிய அந்தரிக்ஷ் நிலையம் (பிஏஎஸ்) எனப்படும் இந்திய விண்வெளி நிலையம் குறைந்த புவி சுற்றுப்பாதையில் (எல்இஓ) இந்தியாவின் மனித விண்வெளிப் பயண நோக்கங்களை நிறைவேற்ற உதவும். மனித விண்வெளிப் பயணத் திட்டத்தின் ஒரு பகுதியாக, மனித விண்வெளிப் பயணங்களை மேற்கொள்ள இது உதவும். மற்ற நாடுகளின் செயல்பாட்டு விண்வெளி நிலையங்களைப் போலவே, தேசிய முன்னுரிமைகள், சமூக பயன்பாடுகளை இலக்காகக் கொண்ட மைக்ரோ கிராவிட்டி சூழலில் அதிநவீன அறிவியல் ஆராய்ச்சி, தொழில்நுட்ப மேம்பாட்டு நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கான பல …
Read More »நாடாளுமன்ற கேள்வி: பாலசோரில் டாப்ளர் ரேடார் நிலையம்
டாப்ளர் வானிலை ரேடார்கள் (டி.டபிள்யூ.ஆர்) நெட்வொர்க்கானது முக்கியமாக இடியுடன் கூடிய மழை மற்றும் கனமழையைக் கண்காணிக்கவும், 3 மணி நேரம் வரை சரியான நேரத்தில் எச்சரிக்கைகளை வழங்கவும் பயன்படுத்தப்படுகிறது. 6 முதல் 12 மணி நேரத்திற்கு முன்பே மழை மற்றும் இடியுடன் கூடிய மழையை கணிப்பதற்காக இந்தக் கட்டமைப்பு வானிலை முன்கணிப்பு மாதிரிகளில், குறிப்பாக நவ்காஸ்ட் மாதிரிகளில் செயல்படுத்தப்படுகிறது. இந்த டி.டபிள்யூ.ஆர்களின் உதவியுடன் தகுந்த முன்னெச்சரிக்கைகள் வழங்கப்படுகின்றன. பாலசோரில் உள்ள …
Read More »நாடாளுமன்றக் கேள்வி: அணு மின் உற்பத்தித் திறனை விரிவுபடுத்துவதற்கான திட்டங்கள்
அணுமின் உற்பத்தித் திறனை தற்போதுள்ள 8180 மெகாவாட்டிலிருந்து 2031-32-ம் ஆண்டுக்குள் 22,480 மெகாவாட்டாக உயர்த்தும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. 2070 ஆம் ஆண்டு வாக்கில் நாட்டின் எரிசக்தி கலவையை நிகர பூஜ்ஜியத்திற்கு மாற்றுவதற்காக, நாட்டின் எரிசக்தித் துறையை கார்பன் நீக்கம் செய்வதற்கான உத்தியின் ஒரு பகுதியாக அணுசக்தி விரிவாக்கம் உள்ளது. இந்திய அணு மின் கழகம் அமலாக்கும் திட்டங்களில் தமிழ்நாட்டில் உள்ள கூடங்குளம் அணு மின் திட்டம் 3,4,5,6 ஆகியவற்றில் மொத்தம் 2000 மெகா வாட் மின்னுற்பத்தியும் அடங்கும் தொலைதூரப் பகுதிகளில் சிறிய அணு உலைகளை நிறுவி, அங்கு …
Read More »நாடாளுமன்ற கேள்வி:மாற்றுத்திறனாளிகளுக்கான சுகாதார மற்றும் ஆயுள் காப்பீடு
ஆட்டிசம், மூளை முடக்குவாதம், அறிவுத்திறன் குறைபாடு போன்ற பல்வேறு குறைபாடுகள் உள்ளவர்களுக்கான நிராமயா சுகாதார காப்பீட்டுத் திட்டத்தை தேசிய அறக்கட்டளை செயல்படுத்துகிறது. நிராமயா மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் தற்போது செயல்பாட்டில் இருந்து வருகிறது. கடந்த மூன்று ஆண்டுகளுக்கான நிதி ஒதுக்கீடு, அதன் பயன்பாடு பின்வருமாறு: வ.எண். ஆண்டு ஒதுக்கப்பட்ட நிதி (கோடியில்) பயன்படுத்தப்பட்ட நிதிகள் (கோடியில்) 2021-22 11.38 11.38 2 2022-23 18.14 18.14 3 2023-24 13.87 13.87 நடப்பாண்டில், அதாவது 2024-25-ம் …
Read More »
Matribhumi Samachar Tamil