Thursday, December 19 2024 | 08:11:59 AM
Breaking News

Tag Archives: President

மங்களகிரியில் எய்ம்ஸ் மருத்துவமனை மருத்துவக் கல்லூரியின் முதல் பட்டமளிப்பு விழாவில் குடியரசுத் தலைவர் பங்கேற்றார்

ஆந்திரப் பிரதேச மாநிலம் மங்களகிரியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனை மருத்துவக் கல்லூரியின் முதல் பட்டமளிப்பு விழாவில் குடியரசுத் தலைவர் திருமதி திரௌபதி முர்மு இன்று (டிசம்பர் 17, 2024) கலந்து கொண்டார். இந்நிகழ்ச்சியில் பேசிய குடியரசுத் தலைவர், ஒரு உயர்கல்வி நிறுவனத்தின் முதல் பேட்ச் மாணவர்கள்தான் அந்த நிறுவனத்தின் அடையாளத்தை உருவாக்குகின்றனர்என்று கூறினார். முதல் பேட்ச்  எம்.பி.பி.எஸ் பட்டதாரிகளிடம் பேசிய அவர், சமூகம், நாடு மற்றும் வெளிநாடுகளில் எய்ம்ஸ் மங்களகிரியின் முதல் …

Read More »

வெற்றி தினத்தையொட்டி, 1971-ம் ஆண்டு போரில் உயிர்நீத்த வீரர்களுக்கு குடியரசுத் தலைவர் உள்ளிட்டோர் மரியாதை செலுத்தினார்கள்

பாகிஸ்தானுக்கு எதிரான போரில், இந்தியாவின் வரலாற்று வெற்றியை நினைவுகூரும் வகையில், ஆண்டுதோறும் டிசம்பர் 16-ஆம் நாள் வெற்றி தினமாக கொண்டாடப்படுவதையொட்டி, 1971-ம் ஆண்டு போரில் உயிர்தியாகம் செய்த துணிச்சல்மிக்க வீரர்களுக்கு குடியரசுத் தலைவர் திருமதி. திரௌபதி முர்மு மரியாதை செலுத்தினார். இதுகுறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், ஒவ்வொரு இந்தியருக்கும் உத்வேகம் அளிக்கும் கதைகளைக் கொண்ட துணிச்சலான வீரர்களின் தியாகத்தை நாடு நன்றியுடன் நினைவில் கொள்கிறது என்றும், அவர்களுடைய தியாகம் நாட்டின் பெருமிதத்தின் ஆதாரமாக திகழ்கிறது என்றும் குறிப்பிட்டுள்ளார். குடியரசு துணைத் தலைவர் திரு. ஜக்தீப் தன்கர் வெளியிட்டுள்ள பதிவில், …

Read More »

இலங்கை அதிபர் உடனிருந்த கூட்டு ஊடகவியலாளர் சந்திப்பில் பிரதமர் வெளியிட்ட ஊடக அறிக்கையின் தமிழாக்கம்

மேதகு அதிபர் அனுர குமார திசநாயக அவர்களே, இரு நாடுகளின் பிரதிநிதிகளே, ஊடக நண்பர்களே, வாழ்த்துகள்! இந்தியாவிற்கு வருகை தந்துள்ள அதிபர் திசநாயகவை நான் அன்புடன் வரவேற்கிறேன். அதிபராக உங்களின் முதலாவது வெளிநாட்டுப் பயணத்திற்கு இந்தியாவைத் தேர்ந்தெடுத்ததில் நான் மகிழ்ச்சி அடைகிறேன். அதிபர் திசநாயகவின் வருகை எங்கள் உறவுகளில் புதிய உத்வேகத்தையும் சக்தியையும் ஏற்படுத்தியுள்ளது. எங்கள் கூட்டாண்மைக்கான எதிர்கால தொலைநோக்கை நாங்கள் ஏற்றுக்கொண்டுள்ளோம். எங்கள் பொருளாதார கூட்டணியில் முதலீடு சார்ந்த …

Read More »

ஆர்மீனிய நாடாளுமன்ற தூதுக்குழு, குடியரசுத் தலைவருடன் சந்திப்பு

ஆர்மீனிய நாடாளுமன்றத் தலைவர் திரு ஆலன் சிமோனியன் தலைமையிலான ஆர்மீனிய நாடாளுமன்ற தூதுக்குழு இன்று (டிசம்பர் 16, 2024) குடியரசுத் தலைவர் திருமதி திரௌபதி முர்முவை குடியரசுத் தலைவர் மாளிகையில் சந்தித்தது. குழுவினரை வரவேற்ற குடியரசுத் தலைவர், இந்தியா – ஆர்மீனியா இடையேயான பல நூற்றாண்டுகள் பழமையான கலாச்சார தொடர்புகளையும் தற்கால உறவுகளையும் நினைவு கூர்ந்தார். உலகளாவிய  அரங்குகளில் இரு நாடுகளுக்கும் இடையிலான நெருங்கிய ஒத்துழைப்பை சுட்டிக்காட்டிய குடியரசுத் தலைவர், சர்வதேச சூரியசக்தி கூட்டணியில் ஆர்மீனியா …

Read More »

ஆந்திரப்பிரதேசம், தெலங்கானாவில் குடியரசுத் தலைவர் டிசம்பர் 17 முதல் 21 வரை பயணம் மேற்கொள்கிறார்

குடியரசுத் தலைவர் திருமதி திரௌபதி முர்மு, 2024 டிசம்பர் 17 முதல் 21 வரை ஆந்திரப்பிரதேசம், தெலங்கானாவில் பயணம் மேற்கொள்கிறார் . இந்த பயணத்தின்போது, செகந்திராபாத்தில் உள்ள போலாரத்தில் உள்ள குடியரசுத் தலைவர் நிலையத்தில் தங்குகிறார். டிசம்பர் 17 அன்று ஆந்திரப்பிரதேசத்தில் மங்களகிரியில் உள்ள  எய்ம்ஸ் மருத்துவமனை மருத்துவக்கல்லூரி பட்டமளிப்பு விழாவில் குடியரசுத் தலைவர் கலந்து கொள்கிறார். டிசம்பர் 18 அன்று, செகந்திராபாத்தின் போலாரத்தில் உள்ள குடியரசுத் தலைவர் நிலையத்தில் பல்வேறு திட்டங்களைத் தொடங்கி வைத்து அடிக்கல் நாட்டுகிறார் . டிசம்பர் 20 அன்று, செகந்திராபாத்தில் உள்ள பாதுகாப்பு மேலாண்மை கல்லூரிக்கு குடியரசுத் தலைவரின் கொடிகளை குடியரசுத் தலைவர் வழங்குவார். அன்று மாலை குடியரசுத் தலைவர் நிலையத்தில் மாநிலத்தின் பிரமுகர்கள், முக்கிய நபர்கள், கல்வியாளர்கள் ஆகியோருக்கு வரவேற்பு …

Read More »

ஜெனரல் அசோக் ராஜ் சிக்டலுக்கு இந்திய ராணுவத்தின் கவுரவ ஜெனரல் பதவியை குடியரசுத் தலைவர் வழங்கினார்

குடியரசுத் தலைவர் திருமதி திரௌபதி முர்மு இன்று (டிசம்பர் 12, 2024) குடியரசுத் தலைவர் மாளிகையில் நடைபெற்ற சிறப்பு பதவியேற்பு விழாவில், நேபாள இராணுவத்தின் இராணுவத் தளபதி சுப்ரபால் ஜனசேவஸ்ரீ ஜெனரல் அசோக் ராஜ் சிக்டெலுக்கு இந்திய இராணுவத்தின் கௌரவ ஜெனரல் பதவியை வழங்கினார். அவரது பாராட்டத்தக்க இராணுவ வலிமை மற்றும் இந்தியா-நேபாளம் இடையே நீண்டகாலமாக நட்புறவை வளர்ப்பதில் அவர் ஆற்றிய பங்களிப்பிற்காக இவ்விருது அவருக்கு வழங்கப்பட்டுள்ளது.

Read More »

பிரணாப் முகர்ஜி பிறந்த தினத்தையொட்டி, அன்னாரது உருவப்படத்திற்கு குடியரசுத் தலைவர் மலர் தூவி மரியாதை செலுத்தினார்

முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி பிறந்த தினத்தையொட்டி, குடியரசுத் தலைவர் மாளிகையின், அசோகா மண்டபத்தில்  அன்னாரது உருவப்படத்திற்கு குடியரசுத் தலைவர் திருமதி. திரௌபதி முர்மு இன்று  (டிசம்பர் 11, 2024) மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

Read More »