Monday, December 08 2025 | 04:41:59 AM
Breaking News

Tag Archives: President

குடியரசுத்தலைவருடன் இந்தோனேசிய அதிபர் சந்திப்பு

குடியரசுத்தலைவர் திருமதி திரௌபதி முர்மு, ஜனவரி 25, 2025 அன்று குடியரசுத்தலைவர் மாளிகையில்  இந்தோனேசிய அதிபர் திரு பிரபோவோ சுபியாண்டோவை கௌரவிக்கும் வகையில் அவருக்கு விருந்தளித்தார். இந்தியாவிற்கு தனது முதல் அரசுமுறைப் பயணத்தை மேற்கொண்ட அதிபர் திரு சுபியான்டோவை வரவேற்ற குடியரசுத்தலைவர், இந்தியாவிற்கும் இந்தோனேசியாவிற்கும் இடையிலான நாகரீக உறவுகள் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டது என்றார். பன்மைத்துவம், உள்ளடக்கிய தன்மை மற்றும் சட்டத்தின் ஆட்சி ஆகிய மதிப்புகள் இரு நாடுகளுக்கும் பொதுவானவை …

Read More »

இந்திய பாதுகாப்புக் கணக்குப் பணி மற்றும் இந்திய தொலைத் தொடர்புப் பணி பயிற்சி அதிகாரிகள் குடியரசுத் தலைவருடன் சந்திப்பு

இந்திய பாதுகாப்பு கணக்குப் பணி மற்றும் இந்திய தொலைத்தொடர்புப் பணி பயிற்சி அதிகாரிகள் குழு இன்று (2025 ஜனவரி 22) குடியரசுத் தலைவர் திருமதி திரௌபதி முர்முவை குடியரசுத் தலைவர் மாளிகையில் சந்தித்தது. பயிற்சி அதிகாரிகளிடையே உரையாற்றிய குடியரசுத் தலைவர், இந்தியாவின் வளர்ச்சிப் பயணம் வேகமடைந்துள்ள சூழலில் இந்த அதிகாரிகள் பணியில் இணைவதாகக் கூறினார். வளர்ந்து வரும் தொழில்நுட்பங்களின் ஒருங்கிணைப்பு, விரைவான தகவல் பரவல், மாறும் உலகளாவிய சூழல்கள் ஆகியவற்றை …

Read More »

ஒடிசாவின் மயூர்பஞ்ச் மாவட்டத்தில் பால், கால்நடைகள் தொடர்பான முக்கிய முன்முயற்சிகள்: குடியரசுத் தலைவர் திருமதி திரௌபதி முர்மு காணொலி மூலம் தொடங்கி வைத்தார்

குடியரசுத்தலைவர் திருமதி திரௌபதி முர்மு, நேற்று (2025 ஜனவரி 13 -திங்கட்கிழமை) ஒடிசாவின் மயூர்பஞ்ச் மாவட்டத்தில் பால், கால்நடை துறையில் தொடர்ச்சியான பயனுள்ள முக்கிய முன்முயற்சிகளை காணொலி மூலம் தொடங்கி வைத்தார். மீன்வளம், கால்நடை பராமரிப்பு, பால்வள அமைச்சகத்தின் கீழ் உள்ள கால்நடை பராமரிப்பு, பால்வளத் துறையால் செயல்படுத்தப்படும் இந்தத் திட்டங்கள் கிராமப்புற வாழ்வாதாரத்தை மேம்படுத்துதல், கால்நடை உற்பத்தித்திறனை மேம்படுத்துதல், பிராந்தியத்தில் முக்கியமான ஊட்டச்சத்து சவால்களை எதிர்கொள்வது ஆகியவற்றை நோக்கமாகக் கொண்டுள்ளன. …

Read More »

தேசிய பால்வள மேம்பாட்டு வாரியத்தின் ஓம்ஃபட் முன்முயற்சி திட்டங்களை குடியரசுத்தலைவர் காணொலி வாயிலாக தொடங்கி வைத்தார்

தேசிய பால்வள மேம்பாட்டு வாரியத்தின் ஒடிசா மாநில கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் கூட்டமைப்பின் முன்முயற்சி திட்டங்களை குடியரசுத்தலைவர் திருமதி திரௌபதி முர்மு இன்று (ஜனவரி 13, 2025) குடியரசுத்தலைவர் மாளிகையில் காணொலி வாயிலாக தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் பேசிய குடியரசுத்தலைவர், கிராமப்புற பொருளாதார வளர்ச்சிக்கும், மக்களின் வருவாய்க்கும் கால்நடைகள் முக்கியப் பங்கு வகிப்பதாக தெரிவித்தார். இந்தியாவில் பல்வேறு வகையான கால்நடை இனங்கள் உள்ளன. அந்த இனங்கள் அனைத்தும் நாட்டின் வளமான …

Read More »

லோஹ்ரி, மகர சங்கராந்தி, பொங்கல், மாக் பிஹு பண்டிகைகளை முன்னிட்டு குடியரசுத் தலைவர் வாழ்த்து

லோஹ்ரி பண்டிகை ஜனவரி 13-ம் தேதி கொண்டாடப்படுகிறது). மகர சங்கராந்தி, பொங்கல், மாக் பிஹு பண்டிகைகள் ஜனவரி 14-ம் தேதி கொண்டாடப்படுகிறது. இவற்றை முன்னிட்டு குடியரசுத் தலைவர் திருமதி திரெளபதி முர்மு நாட்டு மக்களுக்கு வாழ்த்துத் தெரிவித்துள்ளார். குடியரசுத் தலைவர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் கூறியிருப்பதாவது: “லோஹ்ரி, மகர சங்கராந்தி, பொங்கல், மாக் பிஹு பண்டிகைகளை முன்னிட்டு, உள்நாட்டிலும், வெளிநாடுகளிலும் வசிக்கும் அனைத்து நாட்டுமக்களுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் …

Read More »

18-வது வெளிநாடுவாழ் இந்தியர் தின மாநாட்டின் நிறைவு விழாவில் குடியரசுத் தலைவர் கலந்து கொண்டு வெளிநாடுவாழ் இந்தியர்களுக்கான விருதுகளை வழங்கினார்

ஒடிசா மாநிலம் புவனேஸ்வரில் இன்று (ஜனவரி 10, 2025) நடைபெற்ற 18-வது வெளிநாடுவாழ் இந்தியர் தின மாநாட்டின் நிறைவு விழாவில் குடியரசுத் தலைவர் திருமதி திரௌபதி முர்மு கலந்து கொண்டு உரையாற்றினார். நிகழ்ச்சியில் பேசிய குடியரசுத் தலைவர், வெளிநாடுவாழ் இந்தியர்கள் நமது நாட்டின் சிறந்த பிரதிநிதிகள் என்று கூறினார். இந்தப் புனித பூமியில் பெறப்பட்ட அறிவு மற்றும் திறன்களை மட்டும் அவர்கள் தங்களுடன் எடுத்துச் செல்லவில்லை. ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக நமது …

Read More »

குடியரசுத் தலைவரின் அழைப்பிதழ்களை வழங்குவதில் தமிழ்நாடு அஞ்சல் வட்டத்தின் பங்களிப்பு

தமிழ்நாடு அஞ்சல் வட்டம், 2025 குடியரசு தினத்தன்று, குடியரசுத் தலைவர் வழங்கும் ‘Republic Day at Home-2025’ எனும் பெருமை மிகு நிகழ்வுக்கான அழைப்பிதழ்களை பட்டுவாடா செய்யும் பணியில், அதன் ஒருங்கிணைந்த பங்களிப்பை அறிவிப்பதில் பெருமிதம் கொள்கிறது. இந்த குறிப்பிடத்தகுந்த நிகழ்வு ஜனவரி 26,2025 அன்று குடியரசுத் தலைவர் மாளிகையில் நடைபெற உள்ளது. இந்த அழைப்பிதழ்கள் பல்வேறு துறைகளில்  சாதனை படைத்த பெண் சாதனையாளர்கள், மாற்றுத் திறனாளிகள், ஆயுஷ் மருத்துவர்கள், விவசாயிகள், ஆசிரியர்கள், எரிசக்தி பாதுகாப்பு வாகையர்கள்,  அரசுத் திட்டத்தின்  பயனாளர்கள் மற்றும் தத்தமது களங்களில் சிறப்பான பங்களிப்பை வழங்கிய பொதுமக்களுக்கும் வழங்கப்பட இருக்கின்றன. இதன் முக்கியத்துவத்தை உணர்ந்து, துல்லியமாக உரிய நபரிடம் அவற்றை பட்டுவாடா செய்ய தமிழ்நாடு அஞ்சல் வட்டம் உறுதிபூண்டுள்ளது. பெருமைமிகு இப்பணியை செய்ய, அர்ப்பணிப்புமிக்க குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது. அக்குழு ஒவ்வொரு அழைப்பிதழும் உரிய நேரத்தில், உரிய நபரிடம் சென்று சேர்வதை உறுதிசெய்யும். அர்ப்பணிப்போடு கூடிய சேவை புரிந்த இச்சாதனையாளர்கள் மற்றும் அரசு திட்டங்களின் பயனாளிகளின் செயலை அங்கீகரிக்கும் விதமாகவும், அவர்களுக்கு நாட்டின் நன்றியைக் கோடிட்டுக் காட்டும் விதமாகவும், அவர்கள் இந்த பெருமை மிகு நிகழ்ச்சியில் பங்கேற்க அழைக்கப்பட உள்ளனர். தமிழ்நாடு அஞ்சல் வட்டம் ஒவ்வொரு அழைப்பிதழையும் கையாள்வதில் பெருமிதம் கொள்வது மட்டுமின்றி இவ்வழைப்பிதழ்களை வழங்கிய அலுவலகமும், பெறுநர்களும் முழு திருப்தி அடைவதை உறுதி செய்வதும்  நோக்கமாகக் …

Read More »

பெங்களூருவில் நடைபெற்ற தேசிய மனநலம், நரம்பியல் அறிவியல் நிறுவனத்தின் (நிம்ஹான்ஸ்) பொன்விழா நிகழ்ச்சியில் குடியரசுத் தலைவர்

தேசிய மனநலம், நரம்பியல் அறிவியல் நிறுவனத்தின் ஆசிரியர்கள், மாணவர்கள், நிர்வாக அதிகாரிகள் ஆகியோர் மனநலம் என்ற உன்னத நோக்கத்திற்காக  ஆற்றிய அர்ப்பணிப்பு மிக்க பணிகள்  சமூகத்தில்  முன்மாதிரியான பங்களிப்பை அளிக்க உதவியது என்று  குடியரசுத் தலைவர் திருமதி திரௌபதி முர்மு கூறினார். புதுமையான ஆராய்ச்சிகள், அர்ப்பணிப்புடன் கூடிய நோயாளிகளுக்கான சேவை, மேம்பட்ட கல்வி திட்டங்கள் ஆகியவை  மனநலம் , நரம்பியல் அறிவியலில்  முக்கிய பங்கு வகிக்கின்றன. டெலி-மனஸ் தளம், நாடு முழுவதும் அதன் 53 மையங்களுடன், கடந்த இரண்டு ஆண்டுகளில் 70 லட்சம் மக்களுக்கு அவர்கள் தேர்ந்தெடுத்த மொழிகளில் சேவை வழங்கியுள்ளது. நவீன உடல்நல பராமரிப்பு அமைப்புகளை யோகா, ஆயுர்வேதம் போன்ற பாரம்பரிய முறைகளுடன் ஒருங்கிணைத்து மனம், உடல் ரீதியான பிரச்சனைகளுக்கு தீர்வு காண்கிறது. மனநலம், நரம்பியல் அறிவியலில் அதிநவீன  சிகிச்சைக்கான மனநல சிறப்புப் பிரிவு, மத்திய ஆய்வக வளாகம், பீமா விடுதி, அடுத்த தலைமுறை 3டி எம் ஆர் ஐ ஸ்கேனர், மேம்பட்ட டிஎஸ்ஏ அமைப்பு உள்ளிட்ட புதிய வசதிகளை குடியரசுத் தலைவர் தொடங்கி வைத்தார். தேசிய மனநலம், நரம்பியல் அறிவியல் நிறுவனத்திற்கு வரும்  நோயாளிகளின் எண்ணிக்கை ஐந்து மடங்கு அதிகரித்துள்ளது. 1970-ம் ஆண்டுகளில் 10 லட்சத்துக்கும் குறைவாக இருந்த நோயாளிகளின் எண்ணிக்கை கடந்த பத்தாண்டுகளில் 50 லட்சமாக அதிகரித்துள்ளது. இந்நிறுவனத்திற்கு வரும் ஏராளமான நோயாளிகளுக்கு  தரமான சிகிச்சை அளிக்கும் அளவிற்கு வசதிகள் இங்குள்ளன  என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் திரு ஜே.பி. நட்டா தெரிவித்துள்ளார். தேசிய முக்கியத்துவம் வாய்ந்த நிறுவனமாக தனது பத்தாண்டு கால பயணத்தில், தேசிய மனநலம், நரம்பியல் அறிவியல் நிறுவனத்தின் மருத்துவ கவனிப்பு, ஆராய்ச்சி, கல்வி ஆகியவற்றில் உலகளவில் முன்னணியில் உள்ளது, மனநலக் கொள்கைகளுக்கு ஊக்கமளிக்கும் நடைமுறைகளையும்  இந்நிறுவனம் வடிவமைத்துள்ளது என்று கர்நாடக மாநில முதலமைச்சர் திரு சித்தராமையா தெரிவித்துள்ளார்.

Read More »

பெங்களூருவில் நடைபெற்ற தேசிய மனநலம் மற்றும் நரம்பியல் அறிவியல் நிறுவனத்தின்(நிம்ஹான்ஸ்) பொன்விழா கொண்டாட்டங்களில் குடியரசுத்தலைவர் பங்கேற்றார்

பெங்களூருவில் உள்ள  தேசிய மனநலம் மற்றும் நரம்பியல் அறிவியல் நிறுவனத்தில் இன்று (ஜனவரி 3, 2025) நடைபெற்ற  பொன்விழா கொண்டாட்டங்களில் குடியரசுத்தலைவர் திருமதி திரௌபதி முர்மு கலந்து கொண்டார் . நிகழ்ச்சியில் பேசிய அவர் , புதுமையான ஆராய்ச்சிகள், தனித்தன்மை வாய்ந்த நோயாளிகளை கவனிப்பதை உள்ளடக்கிய கடுமையான கல்வித் திட்டங்கள் ஆகியவை தேசிய மனநலம் மற்றும் நரம்பியல் அறிவியல் நிறுவனத்தை முதன்மை நிறுவனமாக மாற்றியுள்ளன என்றார். சமூக அடிப்படையிலான மனநல சுகாதாரத்தில் …

Read More »

கேஎல்இ புற்றுநோய் மருத்துவமனையை குடியரசுத் தலைவர் தொடங்கி வைத்தார்

கர்நாடக மாநிலம் பெலகாவியில் கேஎல்இ புற்றுநோய் மருத்துவமனையை குடியரசுத் தலைவர் திருமதி திரௌபதி முர்மு இன்று (ஜனவரி 3, 2025) திறந்து வைத்தார். நிகழ்ச்சியில் பேசிய குடியரசுத் தலைவர் , உலகளாவிய ஆய்வின்படி, உலகில் இறப்புக்கு புற்றுநோய் ஒரு முக்கிய காரணமாக உள்ளது என்று கூறினார். 2022-ம் ஆண்டில், உலகளவில் 20 மில்லியன் புதிய புற்றுநோயாளிகள் இருந்ததாகவும் 9.7 மில்லியன் இறப்புகள் புற்றுநோயால் ஏற்பட்டதாகவும் மதிப்பிடப்பட்டுள்ளது. இந்தியாவில் ஒரு லட்சம் பேரில் 100 பேருக்கு புற்றுநோய் பாதிப்பு ஏற்படுகிறது. ஐ.சி.எம்.ஆர் நடத்திய ஆய்வின்படி, 2020-ம் ஆண்டுடன் ஒப்பிடும்போது 2025-ம் ஆண்டில் …

Read More »