இங்கிலாந்து வெளியுறவு செயலாளர் திரு டேவிட் லாமி இன்று பிரதமர் திரு நரேந்திர மோடியைச் சந்தித்தார். இந்தியா-இங்கிலாந்து தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் மற்றும் இரட்டை பங்களிப்பு மாநாடு தொடர்பான வெற்றிகரமான முடிவுகளுக்குப் பிரதமர் திரு நரேந்திர மோடி திருப்தி தெரிவித்தார். மேலும் இந்த மைல்கல் முடிவுகளுக்கு வழிவகுத்த இரு தரப்பினரின் ஆக்கபூர்வமான ஈடுபாட்டையும் அவர் பாராட்டினார். இருதரப்பு உறவுகளில் வளர்ந்து வரும் வேகத்தை பிரதமர் திரு நரேந்திர மோடி வரவேற்றார். …
Read More »ஏழைகள் நலனுக்கு அர்ப்பணிக்கப்பட்ட கருணையுள்ள அரசு: பிரதமர்
கடந்த 11 ஆண்டுக்கால ஆட்சியில் நாட்டின் முன்னேற்றத்தைக் கருத்தில் கொண்டு மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளில் அனைவரையும் உள்ளடக்கிய நிர்வாகத்துடன் ஏழைகள் நலனுக்கான திட்டத்தை செயல்படுத்துவதில் தேசிய ஜனநாயகக் கூட்டணி தலைமையிலான மத்திய அரசு உறுதியுடன் உள்ளதாக பிரதமர் திரு நரேந்திர மோடி மீண்டும் தெரிவித்துள்ளார். அதிகாரமளித்தல், உள்கட்டமைப்பு உள்ளிட்ட பல்வேறு சீர்திருத்த நடவடிக்கைகளில் கவனம் செலுத்தப்பட்டு வருவதால் 25 கோடிக்கும் அதிகமான மக்கள் வறுமையிலிருந்து மீட்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார். பிரதமரின் வீட்டு …
Read More »பிரதமரின் உழவர் நலத்திட்டத்தின் 19-வது தவணையை பீகார் மாநிலம் பாகல்பூரில் பிப்ரவரி 24 அன்று பிரதமர் வெளியிடுகிறார்
பிரதமரின் உழவர் நலத்திட்டத்தின் கீழ் வரவிருக்கும் 19 வது தவணை வெளியீடு குறித்து மத்திய விவசாயம் மற்றும் விவசாயிகள் நலத்துறை அமைச்சர் திரு சிவராஜ் சிங் சவுகான், வெள்ளிக்கிழமை செய்தியாளர்களிடம் பேசினார். பிரதமரின் உழவர் நலத்திட்டம், 2019 பிப்ரவரி 24 அன்று தொடங்கப்பட்டது. மத்திய அரசின் இத்திட்டத்தின் கீழ், , தகுதியுள்ள விவசாயி குடும்பத்திற்கு, ஆண்டுக்கு ரூ. 6,000/- வீதம் , இதுவரை, ரூ. 3.46 லட்சம் கோடி, 11 கோடிக்கும் அதிகமான விவசாயிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. மத்திய அமைச்சர் திரு சிவராஜ் …
Read More »பிப்ரவரி 23 முதல் 25 வரை மத்தியப் பிரதேசம், பீகார், அசாம் மாநிலங்களுக்குப் பிரதமர் பயணம்
பிரதமர் திரு நரேந்திர மோடி பிப்ரவரி 23 முதல் 25 வரை மத்தியப் பிரதேசம், பீகார் அசாம் மாநிலங்களுக்கு பயணம் மேற்கொள்கிறார். பிப்ரவரி 23 அன்று மத்தியப் பிரதேசத்தின் சத்தர்பூர் மாவட்டத்திற்குச் செல்லும் அவர், பிற்பகல் 2 மணியளவில் பாகேஷ்வர் தாம் மருத்துவ, அறிவியல் ஆராய்ச்சி நிறுவனத்திற்கு அடிக்கல் நாட்டுகிறார். பிப்ரவரி 24 அன்று காலை 10 மணியளவில், போபாலில் உலக முதலீட்டாளர்கள் உச்சிமாநாடு 2025-ஐ பிரதமர் தொடங்கி வைக்கிறார். அதன்பிறகு, அவர் பீகாரின் பாகல்பூருக்குச் செல்கிறார். …
Read More »சோல்(SOUL) தலைமைத்துவப் பண்பு மாநாட்டின் முதல் பதிப்பை தில்லியில் பிப்ரவரி 21-ம் தேதி பிரதமர் தொடங்கி வைக்கிறார்
புதுதில்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் பிப்ரவரி 21-ம் தேதி காலை 11 மணியளவில் சோல் முதலாவது தலைமைத்துவ மாநாட்டை பிரதமர் திரு நரேந்திர மோடி தொடங்கி வைத்து உரையாற்றுகிறார். இம்மாநாட்டில் பூடான் பிரதமர் திரு தாஷோ ஷெரிங் டோப்கே சிறப்பு விருந்தினராகச் சிறப்புரையாற்றுகிறார். பிப்ரவரி 21-ம் தேதி முதல் 22-ம் தேதி வரை இரண்டு நாட்கள் நடைபெறும் இந்தத் தலைமைத்துவ மாநாட்டில் அரசியல், விளையாட்டு, கலை, ஊடகம், ஆன்மீக உலகம், பொதுக் கொள்கை, …
Read More »பாரத் டெக்ஸ் 2025 நிகழ்ச்சியில் பிரதமர் திரு நரேந்திர மோடி உரையாற்றினார்
புதுதில்லியில் உள்ள பாரத மண்டபத்தில் இன்று நடைபெற்ற பாரத் டெக்ஸ் 2025 நிகழ்ச்சியில் பிரதமர் திரு. நரேந்திர மோடி உரையாற்றினார். நிகழ்ச்சியில் காட்சிப்படுத்தப்பட்ட கண்காட்சியையும் அவர் பார்வையிட்டார். கூட்டத்தினரிடையே உரையாற்றிய பிரதமர், பாரத் டெக்ஸ் 2025-க்கு அனைவரையும் வரவேற்றார், இன்று பாரத் டெக்ஸின் 2-வது பதிப்பை பாரத் மண்டபம் காண்கிறது என்று குறிப்பிட்டார். இந்த நிகழ்ச்சி நமது பாரம்பரியம், வளர்ச்சி அடைந்த பாரதத்தின் வாய்ப்புகள் குறித்த ஒரு பார்வையை அளிக்கிறது …
Read More »இந்தியப் பிரதமரின் அமெரிக்கப் பயணத்தையொட்டி வெளியிடப்பட்ட இந்தியா – அமெரிக்கா கூட்டு அறிக்கை
அமெரிக்காவிற்கு அரசுமுறைப் பயணம் மேற்கொண்ட பிரதமர் திரு நரேந்திர மோடியை, வாஷிங்டனில் நேற்று அதிபர் டொனால்ட் ஜே.டிரம்ப் வரவேற்றார். சுதந்திரமான, சட்டத்தின் ஆட்சி, மனித உரிமைகள், பன்முகத்துவத்தை மதிக்கும் இறையாண்மை மற்றும் உலகின் பெரிய ஜனநாயக நாடுகளின் தலைவர்களான, அதிபர் டிரம்ப், பிரதமர் மோடி ஆகியோர் இந்தியா-அமெரிக்காவின் உறுதியான உலகளாவிய உத்திசார் கூட்டாண்மையின் வலிமையை மீண்டும் உறுதிப்படுத்தினர். இரு நாட்டு மக்களிடையேயான நம்பிக்கை, நல்லெண்ணம் மற்றும் வலுவான ஈடுபாடுகளையும் அவர்கள் உறுதிபடுத்தினர். இரு நாடுகளிடையே “21-ம் நூற்றாண்டிற்கான ராணுவ கூட்டாண்மைக்கான வாய்ப்புகள், விரைவான வர்த்தகம் மற்றும் தொழில்நுட்பத்தை ஊக்குவித்தல்” குறித்து அதிபர் டிரம்ப் மற்றும் பிரதமர் மோடி புதிய முயற்சியைத் தொடங்கினர். ஒத்துழைப்பில் மாற்றத்தை …
Read More »நீங்கள் சரியாக சாப்பிட்டால், உங்களால் தேர்வுகளை சிறப்பாக எழுத முடியும்!: பிரதமர்
சரியான உணவை உட்கொள்வதும், நன்றாகத் தூங்குவதும் தேர்வுகளை சிறப்பாக எழுத உதவும் என்று பிரதமர் திரு. நரேந்திர மோடி அறிவுறுத்தி இருக்கிறார். தேர்வு குறித்த கலந்துரையாடல் நிகழ்ச்சியின் நான்காவது அத்தியாயத்தை நாளை காணுமாறு அவர் கேட்டுக்கொண்டார். சமூக ஊடக எக்ஸ் தளத்தில் மத்திய கல்வி அமைச்சகம் வெளியிட்டுள்ள பதிவிற்கு பதிலளித்து திரு மோடி கூறியதாவது: “நீங்கள் சரியாக சாப்பிட்டால், உங்களால் தேர்வுகளை சிறப்பாக எழுத முடியும்! தேர்வு குறித்த கலந்துரையாடல் …
Read More »பிரதமர் திரு. நரேந்திர மோடியின் பிரான்ஸ் பயணம் குறித்த இந்தியா – பிரான்ஸ் கூட்டு அறிக்கை
பிரெஞ்சுக் குடியரசின் அதிபர் திரு. இம்மானுவேல் மக்ரோனின் அழைப்பின் பேரில், பிரதமர் திரு நரேந்திர மோடி, பிப்ரவரி 10 முதல் 12 வரை பிரான்சுக்கு பயணம் மேற்கொண்டார். பிப்ரவரி 10 மற்றும் 11 ஆகிய நாட்களில், பிரான்ஸ் மற்றும் இந்தியா இணைந்து செயற்கை நுண்ணறிவு செயல்முறை உச்சிமாநாட்டிற்குத் தலைமை தாங்கின. இதில், பிளெட்ச்லி பார்க் (நவம்பர் 2023) மற்றும் சியோல் (மே 2024) உச்சிமாநாடுகளின் போது எட்டப்பட்ட முக்கியமான முடிவுகளை செயல்படுத்துவதற்காக, அரசு மற்றும் அரசாங்கத் தலைவர்கள், சர்வதேச …
Read More »பிரான்ஸ் அதிபருடன் பிரதமர் இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்தினார்
பிரதமர் திரு நரேந்திர மோடியும் அதிபர் இம்மானுவேல் மக்ரோனும் தங்களுக்கிடையிலான தனிப்பட்ட நல்லுறவைப் பிரதிபலிக்கும் வகையில், நேற்று பாரிஸிலிருந்து மர்சேயிலுக்கு பிரான்ஸ் அதிபர் விமானத்தில் ஒன்றாகப் பயணித்தனர். இருதரப்பு உறவுகளின் முழு பரிமாணங்கள் மற்றும் முக்கிய உலகளாவிய, பிராந்திய பிரச்சனைகள் குறித்து அவர்கள் விவாதித்தனர். மர்சேயில் வந்து இறங்கிய பின்னர் தூதுக்குழு நிலை பேச்சுவார்த்தைகள் நடந்தன. கடந்த 25 ஆண்டுகளில் பன்முக உறவாக சீராக உருவாகியுள்ள இந்தியா-பிரான்ஸ் கூட்டாண்மைக்கான தங்கள் …
Read More »
Matribhumi Samachar Tamil