ஆயுதப்படைகளின் தியாகங்களையும் அசைக்க முடியாத அர்ப்பணிப்பையும் போற்றும் வகையில் ஆண்டுதோறும் டிசம்பர் 07 அன்று நாடு முழுவதும் ஆயுதப்படைகள் கொடி நாள் கடைபிடிக்கப்படுகிறது. நாட்டைப் பாதுகாக்கும் துணிச்சலான வீரர்களுக்கு இந்த நாளில் பாதுகாப்புத் துறை அமைச்சர் திரு ராஜ்நாத் சிங் பாராட்டுத் தெரிவித்துள்ளார். மேலும், ஆயுதப்படைகளின் கொடிநாள் நிதிக்கு தாராளமாக பங்களிப்பு வழங்குமாறு அவர் கேட்டுக் கொண்டுள்ளார். சமூக ஊடக எக்ஸ் தளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது: “ஆயுதப்படை கொடி நாளன்று, நமது ஆயுதப்படைகளின் வீரத்துக்கும் தியாகங்களுக்கும் நான் தலை வணங்குகிறேன். அவர்களின் துணிச்சல் நமது நாட்டைப் பாதுகாக்கிறது. அவர்களின் தன்னலமற்ற சேவை நாம் ஒருபோதும் திருப்பிச் செலுத்த முடியாத கடனாகும் என்பதை நமக்கு நினைவூட்டுகிறது. ஆயுதப்படை கொடி நாள் நிதிக்கு தாராளமாக பங்களிக்குமாறு அனைவரையும் நான் கேட்டுக்கொள்கிறேன். உங்கள் ஆதரவு அவர்களின் அர்ப்பணிப்பை மதிப்பதாக அமையும் என்பதுடன் நம்மைப் பாதுகாப்பவர்களை பலப்படுத்தும்.” என்று திரு ராஜ்நாத் சிங் கூறியுள்ளார். பாதுகாப்புத் துறை இணையமைச்சர் திரு சஞ்சய் சேத் வெளியிட்டுள்ள பதிவில், இந்தியாவின் இறையாண்மையைப் பாதுகாப்பதில் ஆயுதப் படைகளின் முக்கிய பங்கை சுட்டிக்காட்டியுள்ளார். மனிதாபிமான நடவடிக்கைகளிலும் அவர்களின் அசாதாரண அர்ப்பணிப்பை திரு சஞ்சய் சேத் எடுத்துரைத்துள்ளார். முப்படைகளின் தளபதி ஜெனரல் அனில் சௌகான், பாதுகாப்புத் துறைச் செயலாளர் திரு ராஜேஷ் குமார் சிங், பாதுகாப்பு ஆராய்ச்சி – மேம்பாட்டு அமைப்பான டிஆர்டிஓ தலைவர் டாக்டர் சமீர் வி காமத், முன்னாள் ராணுவ வீரர்கள் நலத்துறை செயலாளர் திருமதி சுக்ரிதி லிக்கி ஆகியோரும் ஆயுதப்படை வீரர்களின் அர்ப்பணிப்புக்கு மரியாதை செலுத்தியுள்ளனர். கொடிநாள் நிதிக்கான பங்களிப்புகளுக்கு, வருமான வரிச் சட்டம், 1961-ன் பிரிவு 80ஜி (5)(vi)-ன் கீழ் வருமான வரியிலிருந்து விலக்கு அளிக்கப்படுகின்றன. பங்களிப்புகளை பின்வரும் வங்கிக் கணக்குகளில் காசோலை/வரைவோலை/நெஃப்ட்/ஆர்டிஜிஎஸ் மூலம் செலுத்தலாம்: 1) பஞ்சாப் நேஷனல் வங்கி, சேவா பவன், ஆர்.கே. புரம் புது தில்லி-110066. கணக்கு எண் – 3083000100179875 ஐஎஃப்எஸ்சி குறியீட்டு எண் – PUNB0308300 2) பாரத ஸ்டேட் வங்கி ஆர்.கே. புரம் புது தில்லி-110066. கணக்கு எண் – 34420400623 ஐஎஃப்எஸ்சி குறியீட்டு எண் – SBIN0001076 3) ஐசிஐசிஐ வங்கி ஐடிஏ ஹவுஸ், செக்டர்-4,ஆர்கே புரம் புது தில்லி-110022. கணக்கு எண் – 182401001380 ஐஎஃப்எஸ்சி குறியீட்டு எண் – ICIC0001824 affdf@icici என்ற யுபிஐ ஐடி மூலமாகவும் மக்கள் கொடிநாள் நிதிக்கு பங்களிப்புகளை வழங்கலாம்.
Read More »பயங்கரவாதத்திற்கு ஆதரவு அளிக்கும் பாகிஸ்தானை தண்டிக்கவே ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை: மத்திய அமைச்சர் திரு ராஜ்நாத் சிங்
ஆபரேஷன் சிந்தூரின் நோக்கம் எல்லையைத் தாண்டுவதோ அல்லது பிராந்தியத்தைக் கைப்பற்றுவதோ அல்ல என்றும், பாகிஸ்தான் பல ஆண்டுகளாக ஆதரித்து வந்த பயங்கரவாதிகளின் புகலிடங்களை அகற்றுவதும், எல்லை தாண்டிய தாக்குதல்களில் தங்களுடைய அன்புக்குரியவர்களை இழந்த அப்பாவி குடும்பங்களுக்கு நீதி வழங்குவதும் அதன் நோக்கமாகும் என்று 2025 ஜூலை 28 அன்று மக்களவையில் பாதுகாப்பு அமைச்சர் திரு ராஜ்நாத் சிங் கூறினார். பாகிஸ்தான் ஆதரவு பெற்ற பயங்கரவாதத்தை நன்கு திட்டமிடப்பட்ட சதி என்று …
Read More »ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையில் வெளிப்படுத்தப்பட்ட வீரம், உள்நாட்டு தளவாடங்களின் திறன் ஆகியவற்றால் உள்நாட்டு தயாரிப்புகளுக்கான உலகளாவிய தேவை மேலும் அதிகரித்துள்ளது: பாதுகாப்பு அமைச்சர்
புதுதில்லியில் இன்று (2025 ஜூலை 7) நடைபெற்ற பாதுகாப்பு கணக்குத் துறையின் கட்டுப்பாட்டாளர்கள் மாநாட்டில் பாதுகாப்பு அமைச்சர் திரு ராஜ்நாத் சிங் உரையாற்றினார். ஆயுதப்படைகளின் செயல்பாட்டுத் தயார்நிலை மற்றும் நிதிச் சூழலை வலுப்படுத்துவதில் துறையின் முக்கிய பங்கினை வலியுறுத்தினார். ஆபரேஷன் சிந்தூரின் வெற்றி குறித்து குறிப்பிட்ட அவர், உள்நாட்டு தளவாடங்களின் திறன், உலகளாவிய தேவையை மேலும் அதிகரித்துள்ளது என்று கூறினார். உலக நாடுகள் நமது பாதுகாப்புத் துறையை புதிய மரியாதையுடன் காண்கின்றன என்று தெரிவித்தார். நிதி நடைமுறைகளில் …
Read More »பாதுகாப்பு கணக்குத் துறையால் நடத்தப்படும் கணக்குக் கட்டுப்பாட்டாளர்கள் மாநாடு 2025: புதுதில்லியில் நாளை தொடங்கி வைக்கிறார் பாதுகாப்புத் துறை அமைச்சர் திரு ராஜ்நாத் சிங்
பாதுகாப்பு கணக்குத் துறையின் (DAD -டிஏடி) கட்டுப்பாட்டாளர்கள் மாநாடு, 2025 ஜூலை 7 முதல் 9-ம் தேதி வரை புது தில்லியில் உள்ள டிஆர்டிஓ பவனில் உள்ள டாக்டர் எஸ்கே கோத்தாரி அரங்கத்தில் நடைபெறுகிறது. 2025் ஜூலை 7-ம் தேதி, பாதுகாப்புத் துறை அமைச்சர் திரு ராஜ்நாத் சிங் இந்த மாநாட்டைத் தொடங்கி வைக்கிறார். முப்படைகளின் தளபதி ஜெனரல் அனில் சௌகான், கடற்படை, விமானப் படை, ராணுவம் ஆகியவற்றின் தலைமை …
Read More »ஒவ்வொரு தீவிரவாதச் செயலும் குற்றமே, நியாயப்படுத்த முடியாதது; கூட்டு பாதுகாப்புக்காக தீவிரவாத அச்சுறுத்தலை ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு நாடுகள் ஒன்றுபட்டு எதிர்க்க வேண்டும்: பாதுகாப்பு அமைச்சர்
சீனாவின் கிங்டாவோ நகரில் இன்று நடைபெற்ற ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் பாதுகாப்பு அமைச்சர்கள் கூட்டத்தில் உரையாற்றிய பாதுகாப்பு அமைச்சர் திரு ராஜ்நாத் சிங், தீவிரவாதத்திற்கு எதிரான இந்தியாவின் கொள்கையில் உள்ள விரிவான வரையறைகளை எடுத்துரைத்தார். தீவிரவாத அச்சுறுத்தல்களுக்கு எதிரான நடவடிக்கைகளில் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உறுப்பு நாடுகள் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டுமென்று அவர் அழைப்பு விடுத்தார். ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் பொதுச் செயலாளர், பிராந்திய தீவிரவாத எதிர்ப்பு அமைப்பு இயக்குநர் …
Read More »குடியரசுத் தலைவரின் உரைகள் அடங்கிய நூலின் இரண்டாம் தொகுதி – நாளை வெளியிடுகிறார் பாதுகாப்பு அமைச்சர் திரு ராஜ்நாத் சிங்
குடியரசுத் தலைவரின் உரைகள் அடங்கிய தொகுப்பு நூலின் இரண்டாம் பகுதியான விங்ஸ் டூ அவர் ஹோப்ஸ் – (Wings to Our Hopes – Volume 2) என்ற நூலையும் அதன் இந்தி மொழி பதிப்பான ஆஷான் கி உடான் (Ashaon Ki Udaan – Khand 2) என்ற நூலையும் பாதுகாப்பு அமைச்சர் திரு ராஜ்நாத் சிங் புதுதில்லியில் நாளை (23.06.2025) வெளியிடுகிறார். இந்த நூல் குடியரசுத் தலைவர் …
Read More »பாதுகாப்பு அமைச்சகத்தின் சார்பில் பல்வேறு இடங்களில் யோகா தின கொண்டாட்டங்கள் – ஜம்மு – காஷ்மீரின் உதம்பூரில் நிகழ்ச்சியில் பாதுகாப்புத் துறை அமைச்சர் திரு ராஜ்நாத் சிங் பங்கேற்பு
ஜம்மு & காஷ்மீர், உதம்பூரில் உள்ள வடக்கு கட்டளையில் சுமார் 2,500 வீரர்களுடன் பல்வேறு ஆசனங்கள் மற்றும் சுவாசப் பயிற்சிகளைச் செய்து 11வது சர்வதேச யோகா தின கொண்டாட்டங்களுக்குப் பாதுகாப்புத் துறை அமைச்சர் திரு ராஜ்நாத் சிங் நிகழ்ச்சிக்குத் தலைமை வகித்தார். அவர் தமது உரையில், யோகாவை உலக அளவில் பிரபலப்படுத்தியதற்காக பிரதமர் திரு நரேந்திர மோடிக்கு அவர் பாராட்டு தெரிவித்தார். மக்களுக்கு யோகா தெளிவை அளிக்கிறது என அவர் …
Read More »“சஞ்சய் – போர்க்கள கண்காணிப்பு அமைப்பு”- பாதுகாப்புத் துறை அமைச்சர் திரு ராஜ்நாத் சிங் கொடியசைத்து தொடங்கி வைத்தார்
பாதுகாப்பு அமைச்சர் திரு ராஜ்நாத் சிங் இன்று (2025 ஜனவரி 24) புதுதில்லியின் சௌத் பிளாக்கில் ‘சஞ்சய் – போர்க்கள கண்காணிப்பு அமைப்பு (BSS)’-ஐ கொடியசைத்து தொடங்கி வைத்தார். சஞ்சய் என்பது ஒரு தானியங்கி அமைப்பாகும். இது அனைத்து தரை, வான்வழி போர்க்கள சென்சார்களிலிருந்து உள்ளீடுகளை பெற்று ஒருங்கிணைக்கிறது. அவற்றின் உண்மைத்தன்மையை உறுதிப்படுத்த அவற்றை செயலாக்குகிறது. பாதுகாப்பான ராணுவ தரவு கட்டமைப்பு, செயற்கைக்கோள் தகவல் தொடர்பு கட்டமைப்பு ஆகியவற்றின் மூலம் …
Read More »9-வது முன்னாள் படை வீரர்கள் தினத்தை முன்னிட்டு நாடு முழுவதும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன – ஜம்முவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பாதுகாப்புத் துறை அமைச்சர் திரு ராஜ்நாத் சிங் பங்கேற்பு
ஒன்பதாவது முன்னாள் படை வீரர்கள் தினம் இன்று (2025 ஜனவரி 14) நாடு முழுவதும் பல இடங்களில் கொண்டாடப்பட்டது. ஜம்மு, மும்பை, புது தில்லி, புனே, நாக்பூர், விசாகப்பட்டினம், பெங்களூரு, பரேலி, ஜெய்ப்பூர், சிலிகுரி உள்ளிட்ட பல இடங்களில் முன்னாள் ராணுவ வீரர்களின் தன்னலமற்ற கடமைக்கு மரியாதை செலுத்தும் வகையில் பேரணிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டன. ஜம்முவில் உள்ள அக்னூரில் உள்ள தாண்டா பீரங்கிப் படையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சுமார் 1,000 …
Read More »தற்போதைய பாதுகாப்புச் சூழலைக் கருத்தில் கொண்டு உலக நாடுகளின் ஒருங்கிணைப்பு மேம்படுத்தப்பட வேண்டும்: பாதுகாப்பு அமைச்சர் திரு ராஜ்நாத் சிங் அழைப்பு
பல்வேறு நாடுகளிடையே மோதல்கள், சவால்கள் நிறைந்துள்ள தற்போதைய சூழலைக் கருத்தில் கொண்டு உலக நாடுகளின் ஒருங்கிணைப்பு மேம்படுத்தப்பட வேண்டியதன் அவசியத்தை பாதுகாப்பு அமைச்சர் திரு ராஜ்நாத் சிங் வலியுறுத்தியுள்ளார். இன்று (2025-ம் ஆண்டு ஜனவரி 10, -ம் தேதி) புதுதில்லியில் நடைபெற்ற வெளிநாட்டு தூதர்களின் வட்டமேசை மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றிய அவர், நாடுகளிடையே பரஸ்பர வளம் மற்றும் அமைதியை உறுதிசெய்யும் வகையில், நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். புவி சார் அரசியல் பதற்றங்களை சமாளிக்க …
Read More »
Matribhumi Samachar Tamil