மத்திய நுகர்வோர் விவகாரத் துறை , கல்வித் துறையில் 600க்கும் மேற்பட்ட ஆர்வலர்கள் மற்றும் மாணவர்களுக்காக ரூ 1.56 கோடியைத் திரும்பப் பெற்றுள்ளது. சிவில் சர்வீசஸ், இன்ஜினியரிங் படிப்பு மற்றும் பிற திட்டங்களுக்கான பயிற்சி மையங்களில் பதிவுசெய்யப்பட்ட இந்த மாணவர்களுக்கு, பயிற்சி நிறுவனங்களால் வகுக்கப்பட்ட விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளைப் பின்பற்றிய போதிலும், முன்னர் பணத்தைத் திரும்பப் பெறுவது மறுக்கப்பட்டது. தேசிய நுகர்வோர் உதவி எண் வழியாக மாணவர்கள் தாக்கல் செய்த குறைகளின் மூலம் இந்த நிவாரணம் சாத்தியமானது, இது …
Read More »பிஎஸ்என்எல்-லின் தடையில்லா தகவல் தொடர்பு சேவைகள், பிரயாக்ராஜில் மஹாகும்பமேளாவில் பக்தர்கள் மற்றும் பாதுகாப்புப் படையினருக்கு நிவாரணம் வழங்குகின்றன
தற்சார்பு இந்தியா முன்முயற்சியின் கீழ், பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் (பிஎஸ்என்எல்) நம்பகமான இணைப்பை உறுதி செய்வதற்காக, 2025 மகாகும்பமேளாவில் தகவல் தொடர்பு உள்கட்டமைப்பை வலுப்படுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கிறது. பிஎஸ்என்எல் மேளா பகுதியில் பிரத்யேக வாடிக்கையாளர் சேவை மையத்தை அமைத்துள்ளது, அங்கு பக்தர்கள் தடையில்லா தகவல் தொடர்பு சேவைகளைப் பெறுகின்றனர். கும்பமேளாவில், நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து வரும் பக்தர்களுக்கு அந்தந்த வட்டங்களில் இருந்து இலவச சிம் கார்டுகள் வழங்கப்பட்டு வருகின்றன. யாத்ரீகர் யாரேனும் தங்கள் சிம் கார்டை தொலைத்துவிட்டால். மேளா பகுதியிலேயே நாடு முழுவதும் உள்ள அனைத்து வட்டங்களில் இருந்தும் சிம் கார்டுகளை வழங்க பிஎஸ்என்எல் ஏற்பாடு செய்துள்ளது. இந்த சேவை முற்றிலும் இலவசம், யாத்ரீகர்கள் தங்கள் குடும்பத்தினருடனும் நண்பர்களுடனும் எளிதாக தொடர்பில் இருக்க முடியும் என்பதை உறுதி செய்கிறது. பொதுமக்களின் வசதியை கருத்தில் கொண்டு, பல்வேறு மாநிலங்களில் இருந்து சிம்கார்டுகள் வழங்கப்படுவதால், பக்தர்கள் மட்டுமின்றி, அங்கு நிறுத்தப்பட்டுள்ள பாதுகாப்பு படையினரும் பயனடைகின்றனர். மகர சங்கராந்தி மற்றும் மௌனி அமாவாசை அன்று அமிர்த நீராடல்களின் போது, தகவல் தொடர்பு சேவைகளின் தரம் அப்படியே இருந்தது என்றும், அதிக கூட்டம் இருந்தபோதிலும், நெட்வொர்க் எந்த இடையூறும் ஏற்படவில்லை என்றும், பிரயாக்ராஜ் வணிகப் பகுதிக்கான பிஎஸ்என்எல்- இன் முதன்மை பொது மேலாளர் திரு பி.கே.சிங் குறிப்பிட்டார்.
Read More »ராஜஸ்தானில் ஜெய்ப்பூர்-அஜ்மீர் நெடுஞ்சாலையில் நேரிட்ட சாலை விபத்துக்கு பிரதமர் ஆழ்ந்த இரங்கல், உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு நிவாரண உதவி அறிவிப்பு
ராஜஸ்தானில் ஜெய்ப்பூர்-அஜ்மீர் நெடுஞ்சாலையில் நேரிட்ட சாலை விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார். இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தேசிய நிவாரண நிதியில் இருந்து தலா 2 லட்சம் ரூபாயும், காயமடைந்தவர்களுக்கு தலா 50 ஆயிரம் ரூபாயும் நிதியுதவி வழங்கப்படும் என்று பிரதமர் மோடி அறிவித்துள்ளார். இதுகுறித்து சமூக ஊடக எக்ஸ் தள பதிவில் பிரதமர் அலுவலகம் கூறியிருப்பதாவது: “ராஜஸ்தானில் ஜெய்ப்பூர்-அஜ்மீர் நெடுஞ்சாலையில் …
Read More »
Matribhumi Samachar Tamil