Thursday, January 09 2025 | 05:10:42 PM
Breaking News

Tag Archives: Rural

கிராமப்புற, பழங்குடியின பெண்களுக்கு அதிகாரமளித்தல் என்பது சமூக-பொருளாதார மாற்றத்திற்கு முக்கியமானதாகும்: மக்களவைத் தலைவர்

பெண்களுக்கு அதிகாரமளித்தல், குறிப்பாக கிராமப்புற, பழங்குடியின சமூகங்களைச் சேர்ந்த பெண்களுக்கு அதிகாரம் அளிப்பது என்பது  சமூக-பொருளாதார வளர்ச்சிக்கு முக்கிய காரணியாக அமையும் என்று மக்களவைத் தலைவர் திரு ஓம் பிர்லா தெரிவித்துள்ளார்.  தூய்மையான குடிநீர், துப்புரவு, கல்வி போன்ற முக்கியத்துவம் வாய்ந்த அம்சங்களில் கிராமப்புற மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதில் பெண்களின் தலைமைத்துவத்தை மேம்படுத்தப்பட வேண்டியதன் அவசியத்தை அவர் வலியுறுத்தினார். பாரம்பரிய கைவினைப் பொருட்கள்,  ஆன்லைன் வர்த்தகங்கள், உள்ளூர் உற்பத்தி …

Read More »

கூட்டுறவு மற்றும் கிராமிய பொருளாதாரம்

கூட்டுறவு அமைச்சகம், 2021 ஜூலை 6 அன்று தொடங்கப்பட்டதிலிருந்து, கூட்டுறவு சங்கங்களுக்கு அதிகாரம் அளிக்கவும், நாடு முழுவதும் உள்ள கூட்டுறவுகளின் ஒட்டுமொத்த வளர்ச்சியை மேம்படுத்துவதில் அவற்றின் திறனை மேம்படுத்தவும் பல்வேறு முயற்சிகள் மற்றும் சீர்திருத்தங்களை மேற்கொண்டுள்ளது. நாடு முழுவதும் கூட்டுறவுத் துறைக்கு புத்துயிரூட்டவும், வலுப்படுத்தவும் பல்வேறு மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களின் தீவிர பங்கேற்புடன் கூட்டுறவு அமைச்சகம் பல்வேறு முன்முயற்சிகளை மேற்கொண்டுள்ளது. கணினிமயமாக்கல் மூலம்  தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கத்தை வலுப்படுத்துவதற்காக, மொத்த நிதி ஒதுக்கீட்டில் ரூ.2,516 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இது நாட்டில் செயல்படும் அனைத்து தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கங்களையும் ஒரு பொதுவான  அமைப்பின் கீழ் நபார்டு வங்கியுடன் இணைக்கிறது. இத்திட்டத்தின் கீழ் 30 மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களைச் சேர்ந்த மொத்தம் 67,930 தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளன. மொத்தம் 40,727 தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கங்கள்  இஆர்பி மென்பொருளில் இணைக்கப்பட்டுள்ளன. வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சி வங்கிகளை கணினிமயமாக்குதல்: நீண்டகாலக் கூட்டுறவுக் கடன் அமைப்பை வலுப்படுத்தும் வகையில், 13 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 1,851 வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சி வங்கிகளை கணினிமயமாக்கும் திட்டத்திற்கு அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இத்திட்டத்தினை செயல்படுத்தும் நிறுவனமாக நபார்டு வங்கி செயல்பட்டு வருகிறது. இதுவரை, 10 மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களில் இருந்து முன்மொழிவுகள் பெறப்பட்டு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளன.

Read More »