Friday, January 09 2026 | 07:00:44 PM
Breaking News

Tag Archives: Sanchar Saathi mobile app

சஞ்சார் சாத்தி மொபைல் செயலி 21 பிராந்திய மொழிகளில் கிடைக்கிறது – 6 மாதங்களில் 50 லட்சம் பேர் பதிவிறக்கம்

தொலைத்தொடர்புத் துறையின் சஞ்சார் சாத்தி செயலி, தொலைத்தொடர்பு பாதுகாப்பை மேம்படுத்துவதிலும் மக்களுக்கு அதிகாரம் அளிப்பதிலும் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. அறிமுகப்படுத்தப்பட்டதிலிருந்து, இந்த மொபைல் செயலி ஆறு மாதங்களுக்குள் 50 லட்சம் பதிவிறக்கங்களைத் தாண்டியுள்ளது. இந்தியாவின் பரந்த மொழியியல், பிராந்திய பன்முகத்தன்மைகளை அங்கீகரித்து, ஆங்கிலம், இந்தி மற்றும் 21 பிராந்திய மொழிகளில் இந்த செயலியின் பயன்பாடு விரிவுபடுத்தப்பட்டுள்ளது. மோசடி அழைப்புகளையும், ஏமாற்றுத் தகவல் அடங்கிய செய்திகளைப் பற்றி புகாரளிப்பது இதன் மூலம் எளிதாகி உள்ளது.  5.35 லட்சத்திற்கும் அதிகமான தொலைந்து போன அல்லது திருடப்பட்ட கைபேசிகளை மீட்கவும், மக்களின் புகார்களின் அடிப்படையில் 1 கோடிக்கும் மேற்பட்ட அங்கீகரிக்கப்படாத மொபைல் இணைப்புகளைத் துண்டிக்கவும், சக்ஷு அம்சத்தின் மூலம் அறிவிக்கப்பட்ட 29 லட்சத்திற்கும் அதிகமான மொபைல் எண்களை செயலிழக்கச் செய்யவும் இந்த சஞ்சார் சாத்தி வழிவகுத்துள்ளது. சஞ்சார் சாத்தி தளத்தை 16.7 கோடிக்கும் அதிகமானோர் பார்வையிட்டு உள்ளனர். இது மக்களை மையமாகக் கொண்ட டிஜிட்டல் தளத்தின் மீது பொதுமக்களின் நம்பிக்கையை பிரதிபலிக்கிறது. தொலைத்தொடர்புத் துறை, நிதி மோசடி அபாயம் குறித்த தகவல் வழங்கும் நடவடிக்கையையும் செயல்படுத்தியுள்ளது. இது நிதி மோசடி அபாயத்துடனான அவற்றின் தொடர்பின் அடிப்படையில் மொபைல் எண்களை மதிப்பிட்டு வகைப்படுத்துகிறது. இந்தக் கருவி வங்கிகள், வங்கி சாரா நிதி நிறுவனங்கள், யுபிஐ சேவை வழங்குநர்கள் போன்றோர், நுகர்வோரைப் பாதுகாப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க உதவுகிறது. 2023 மே 16, 2023 அன்று தொடங்கப்பட்ட இணையதளத்தின் வெற்றியை அடுத்து 2025 ஜனவரி 17 அன்று சஞ்சார் சாத்தி (Sanchar Saathi) மொபைல் செயலியை அறிமுகப்படுத்தப்பட்டது. இது தொலைத்தொடர்பு பாதுகாப்பு சேவைகளை நேரடியாகவும் வசதியாகவும் அணுக அனுமதிக்கிறது. ஆண்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ் தளங்களில் கிடைக்கும் இந்த செயலி, பயனர்கள் தங்கள் தொலைத்தொடர்பு அடையாளத்தைப் பாதுகாக்கவும், மோசடிகளுக்கு எதிராக விரைவான நடவடிக்கை எடுக்கவும் அதிகாரம் அளிக்கிறது. …

Read More »

புதிய சஞ்சார் சாத்தி மொபைல் செயலி உட்பட குடிமக்களை மையமாகக் கொண்ட தொலைத்தொடர்பு வசதிகளை மத்திய அமைச்சர் திரு ஜோதிராதித்ய சிந்தியா தொடங்கி வைத்தார்

நாடு முழுவதும் தொலைத் தொடர்பு அணுகல், பாதுகாப்பு, அதிகாரமளித்தல் ஆகியவற்றை மேம்படுத்துவதற்கான ஒரு முக்கிய நடவடிக்கையாக, மத்திய தகவல் தொடர்புத் துறை அமைச்சர் திரு ஜோதிராதித்யா எம். சிந்தியா இன்று (17.01.2025) குடிமக்களை மையமாகக் கொண்ட முன்முயற்சிகளின் தொகுப்பை அறிமுகப்படுத்தினார். சஞ்சார் சாத்தி மொபைல் செயலி, தேசிய அகண்ட அலைவரிசை இயக்கம்  2.0,   டிபிஎன் நிதியுதவி பெறும் 4ஜி மொபைல் தளங்களில் இன்ட்ரா சர்க்கிள் ரோமிங் வசதியின் தொடக்கம் ஆகியவை இந்த நிகழ்வின் சிறப்பம்சங்களாகும். சஞ்சார் சாத்தி மொபைல் செயலி என்பது …

Read More »