Monday, December 08 2025 | 09:54:03 AM
Breaking News

Tag Archives: seafood industry

இங்கிலாந்துடனான விரிவான பொருளாதாரம் மற்றும் வர்த்தக ஒப்பந்தத்தை தொடர்ந்து இந்தியாவின் கடல் உணவுத் தொழில், 70% ஏற்றுமதி வளர்ச்சி காணும்

ஜூலை 24, 2025 அன்று விரிவான பொருளாதாரம் மற்றும் வர்த்தக ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டதன் மூலம் இந்தியா-இங்கிலாந்து பொருளாதார உறவுகளில் ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல் எட்டப்பட்டது. பிரதமர் திரு நரேந்திர மோடி மற்றும் இங்கிலாந்து பிரதமர் சர் கெய்ர் ஸ்டார்மர் முன்னிலையில் இந்த ஒப்பந்தம் கையொழுத்தானது. மேலும் இந்தியாவின் வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் திரு பியூஷ் கோயல் மற்றும் இங்கிலாந்து வணிகம் மற்றும் வர்த்தக அமைச்சர்  திரு. ஜோனாதன் ரெனால்ட்ஸ் ஆகியோரால் அதிகாரப்பூர்வமாக கையெழுத்திடப்பட்டது. குறிப்பாக, கடல் துறையைப் பொறுத்தவரை, இந்த ஒப்பந்தம் பல்வேறு வகையான கடல் உணவுப் பொருட்களின் மீதான இறக்குமதி வரிகளை நீக்குகிறது, இது இங்கிலாந்து சந்தையில் இந்திய ஏற்றுமதியாளர்களின் போட்டித்தன்மையை அதிகரிக்கிறது. இது குறிப்பாக இறால், உறைந்த மீன்கள் மற்றும் மதிப்பு கூட்டப்பட்ட கடல் பொருட்களின் ஏற்றுமதிக்கு பயனளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது ஜவுளி, தோல் மற்றும் ரத்தினங்கள் மற்றும் நகைகள் போன்ற தொழிலாளர் மிகுந்த துறைகளுடன் அதன் முக்கிய கடல் உணவு இலக்குகளில் ஒன்றான இந்தியாவின் இருப்பை அதிகரிக்கும். தற்போது இங்கிலாந்துக்கு இந்தியாவின் முக்கிய கடல் உணவு ஏற்றுமதிகளில் வன்னாமி இறால், உறைந்த கணவாய், நண்டுகள், உறைந்த மீன்கள் மற்றும் கரும்புலி இறால் ஆகியவை அடங்கும். இவை அனைத்தும் ஒப்பந்தத்தின்  வரி இல்லாத அணுகலின் கீழ் மேலும் சந்தைப் பங்கைப் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 2024–25 ஆம் ஆண்டில் இந்தியாவின் மொத்த கடல் உணவு ஏற்றுமதி 7.38 பில்லியன் டாலரை (ரூ 60,523 கோடி) எட்டியது, ஒப்பந்தம்  இப்போது அமலில் உள்ளதால், வரும் ஆண்டுகளில் இங்கிலாந்துக்கான கடல்சார் ஏற்றுமதியில் 70% அதிகரிப்பு இருக்கும் என்று தொழில்துறை மதிப்பீடுகள் தெரிவிக்கின்றன. மீன்வளத் துறை சுமார் 28 மில்லியன் இந்தியர்களின் வாழ்வாதாரத்தை ஆதரிக்கிறது மற்றும் உலகளாவிய மீன் உற்பத்தியில் சுமார் 8% பங்களிக்கிறது. 2014–15 …

Read More »