குடியரசுத்தலைவர் மாளிகையில் நடைபெற்ற கலை உத்சவ நிகழ்ச்சியில் ஜார்க்கண்டின் பாரம்பரியமான சோஹ்ராய் கலை முக்கிய இடத்தைப் பிடித்தது. இந்த பத்து நாள் நிகழ்ச்சியில் குடியரசுத்தலைவர் திருமதி திரௌபதி முர்மு கலந்து கொண்டார். இந்தியாவின் வளமான நாட்டுப்புற, பழங்குடி கலை மரபுகளைக் கொண்டாடுவதில் இது ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல் என அவர் குறிப்பிட்டார். இது தொடர்பான கண்காட்சியைப் பார்வையிட்ட குடியரசுத்தலைவர், கலைஞர்களுடன் கலந்துரையாடினார். அப்போது பேசிய அவர், இந்த கலைப்படைப்புகள் இந்தியாவின் ஆன்மாவை பிரதிபலிக்கின்றன என்றார். இயற்கையுடனான நமது தொடர்பு ஆழமானது என அவர் கூறினார். இந்த விலைமதிப்பற்ற மரபுகளை நிலைநிறுத்தும் கலைஞர்களைப் பாராட்டுவதாக அவர் கூறினார். இந்நிகழ்ச்சியில், இந்திரா காந்தி தேசிய கலை மையத்தின் (IGNCA-ஐஜிஎன்சிஏ) உறுப்பினர் செயலாளர் டாக்டர் சச்சிதானந்த ஜோஷி, பிராந்திய இயக்குநர் டாக்டர் குமார் சஞ்சய் ஜா, ராஞ்சியில் உள்ள ஐஜிஎன்சிஏ பிராந்திய மையத்தின் திட்ட உதவியாளர் திருமதி சுமேதா சென்குப்தா உள்ளிட்டோர் நிறுவனத்தின் சார்பாக கலந்து கொண்டனர். ராஞ்சியில் உள்ள ஐஜிஎன்சிஏ பிராந்திய மையத்தின் திட்ட உதவியாளர்களான திருமதி போலோ குமாரி ஓரான், திரு பிரபாத் லிண்டா, டாக்டர் …
Read More »
Matribhumi Samachar Tamil