மாநிலங்களவையில், அதன் தலைவர் திரு ஜக்தீப் தன்கர், உலக சதுரங்க சாம்பியன் பட்டம் வென்றுள்ள இளம் வீரர் குகேஷூக்கு இன்று வாழ்த்து தெரிவித்தார். அவரது உரை பின்வருமாறு: “மாண்புமிகு உறுப்பினர்களே, இந்திய விளையாட்டு வரலாற்றில் அற்புதமான உலகளாவிய சாதனைப் படைக்கப்பட்டுள்ளதை பெரு மகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொள்கிறேன். டிசம்பர் 12-ம் தேதி சிங்கப்பூரில் நடைபெற்ற ஒரு அற்புதமான சதுரங்கப் போட்டியில் சீனாவின் டிங் லிரெனை தோற்கடித்து இளைய உலக சதுரங்க சாம்பியனாக நமது 18 வயது சதுரங்க விற்பன்னர் டி. குகேஷ் சாம்பியன் பட்டம் வென்றுள்ளார். இந்த நட்சத்திர வெற்றி சதுரங்கப் பலகையையும் தாண்டி எதிரொலிக்கிறது. உலக அளவில் ஒவ்வொரு …
Read More »