இலங்கை-இந்தியா இடையேயான கடற்படைக் கூட்டுப்பயிற்சி டிசம்பர் 17 முதல் 20 வரை விசாகப்பட்டினத்தில் கிழக்கு கடற்படை சார்பில் நடைபெறவுள்ளது. இரண்டு கட்டங்களாக நடைபெறவுள்ள பயிற்சியின் துறைமுக கட்டப் பயிற்சி டிசம்பர் 17 முதல் 18 வரையிலும், கடல் மார்க்கப் பயிற்சி டிசம்பர் 19 முதல் 20 வரையும் நடைபெறவுள்ளது. 2005-ம் ஆண்டில் தொடங்கப்பட்ட SLINEX எனப்படும் கடற்படை கூட்டுப்பயிற்சி பல ஆண்டுகளாக இந்தியாவிற்கும், இலங்கைக்கும் இடையிலான கடல்சார் ஒத்துழைப்பை வலுப்படுத்துவதற்கான இருதரப்பு கடற்படை பயிற்சிகளாகும். இந்திய கடற்படையின் ரோந்து கப்பலான ஐஎன்எஸ், இலங்கை கடற்படையின் ரோந்து கப்பலான எஸ்.எல்.என்.எஸ் சயுர ஆகியவை சிறப்பு படை குழுக்களுடன் பயிற்சியில் ஈடுபடுத்தப்படவுள்ளன. டிசம்பர் 19-ம் தேதி தொடங்கும் கடல் மார்க்கப் பயிற்சியில், சிறப்புப் படை நடவடிக்கைகள், துப்பாக்கிச்சுடுதல், தகவல் தொடர்பு பயிற்சிகள், கடல்சார் நடைமுறைகள் உள்ளிட்ட கூட்டுப் …
Read More »இந்தியா – இலங்கை கூட்டறிக்கை: எதிர்காலத்திற்கான கூட்டு ஒத்துழைப்பை மேம்படுத்த முடிவு
1. பிரதமர் திரு நரேந்திர மோடியும் இலங்கை அதிபர் திரு அனுர குமார திசநாயகவும் இன்று (2024 டிசம்பர் 16) புதுதில்லியில் சந்தித்தபோது, விரிவான, பயனுள்ள விவாதங்களை நடத்தினர். 2. ஆழமான வேரூன்றிய கலாச்சார, நாகரிக உறவுகள், புவியியல் ரீதியான அருகாமை, மக்களுக்கு இடையிலான உறவு ஆகியவற்றின் அடிப்படையில் இந்தியா-இலங்கை இடையேயான இருதரப்பு உறவுகள் அமைந்துள்ளன என்பதை இரு தலைவர்களும் மீண்டும் உறுதிப்படுத்தினர். 3. 2022-ம் ஆண்டில் ஏற்பட்ட முன்னெப்போதும் இல்லாத பொருளாதார நெருக்கடியின் போதும் அதன் பின்னரும் இலங்கை மக்களுக்கு இந்தியா வழங்கிய …
Read More »இலங்கை அதிபர் உடனிருந்த கூட்டு ஊடகவியலாளர் சந்திப்பில் பிரதமர் வெளியிட்ட ஊடக அறிக்கையின் தமிழாக்கம்
மேதகு அதிபர் அனுர குமார திசநாயக அவர்களே, இரு நாடுகளின் பிரதிநிதிகளே, ஊடக நண்பர்களே, வாழ்த்துகள்! இந்தியாவிற்கு வருகை தந்துள்ள அதிபர் திசநாயகவை நான் அன்புடன் வரவேற்கிறேன். அதிபராக உங்களின் முதலாவது வெளிநாட்டுப் பயணத்திற்கு இந்தியாவைத் தேர்ந்தெடுத்ததில் நான் மகிழ்ச்சி அடைகிறேன். அதிபர் திசநாயகவின் வருகை எங்கள் உறவுகளில் புதிய உத்வேகத்தையும் சக்தியையும் ஏற்படுத்தியுள்ளது. எங்கள் கூட்டாண்மைக்கான எதிர்கால தொலைநோக்கை நாங்கள் ஏற்றுக்கொண்டுள்ளோம். எங்கள் பொருளாதார கூட்டணியில் முதலீடு சார்ந்த …
Read More »