தமிழ்நாடு உணவுப் பாதுகாப்பு ஆணையர் திரு லால்வேனா மற்றும் அதிகாரிகளுடன் இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணைய (எஃப்எஸ்எஸ்ஏஐ) தலைமைச் செயல் அதிகாரி திரு ஜி. கமலா வர்தன ராவ் இன்று ஆலோசனை நடத்தினார். தமிழகத்தில் உணவு நிறுவனங்களில் ஆய்வுகளை அதிகரிக்க வேண்டும் என்றும், உணவு பரிசோதனை ஆய்வகங்களை அவ்வப்போது ஆய்வு செய்ய வேண்டும் என்றும் அப்போது அவர் வலியுறுத்தினார். ஆரோக்கியமான, சுகாதாரமான உணவக மையங்களை (ஃபுட் ஸ்ட்ரீட்) …
Read More »ஆயுஷ்மான் பாரத் பிரதமரின் மக்கள் சுகாதார இயக்கத்தை செயல்படுத்தும் 34-வது மாநிலமாக ஒடிசா சேர்ந்துள்ளது
மத்திய சுகாதார அமைச்சகத்தின் தேசிய சுகாதார ஆணையம் ஒடிசா மாநில அரசின் சுகாதார, குடும்ப நலத் துறையுடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளதையடுத்து, ஆயுஷ்மான் பாரத் – பிரதமரின் மக்கள் சுகாதார திட்டத்தை செயல்படுத்திய 34-வது மாநிலமாக ஒடிசா இணைந்துள்ளது. இந்த ஒப்பந்தம் புதுதில்லியில் உள்ள விஞ்ஞான் பவனில் மத்திய சுகாதாரம், குடும்ப நல அமைச்சகத்தின் கூடுதல் செயலாளரும், தேசிய நெடுஞ்சாலை முகமையின் தலைமை செயல் அதிகாரியுமான திருமதி எல்.எஸ். சங்சன், …
Read More »ஒடிசா சூரியசக்தி முதலீட்டாளர் மாநாடு: ஐஆர்இடிஏ ரூ.3,000 கோடி அனுமதி; மாநிலத்தின் 10 ஜிகாவாட் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி இலக்குக்கு ஆதரவு
புவனேஸ்வரில் கிரிட்கோ ஏற்பாடு செய்திருந்த ஒடிசா சூரியசக்தி முதலீட்டாளர்கள் மாநாட்டில் இந்திய புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மேம்பாட்டு முகமையின் தலைவரும் நிர்வாக இயக்குநருமான திரு. பிரதீப் குமார் தாஸ் சிறப்புரையாற்றினார். புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் திட்டங்களை விரைவுபடுத்துவதில் எளிதில் நிதியுதவி கிடைக்க வேண்டியதன் முக்கிய பங்கினை திரு தாஸ் விவரித்தார். பசுமை எரிசக்தி திட்டங்களுக்கு தடையற்ற ஆதரவை ஊக்குவிப்பதோடு முற்றிலும் காகிதமற்ற, டிஜிட்டல் மயமாக்கப்பட்ட மற்றும் கடன் வாங்குவோருக்கு உகந்த செயல்பாடுகளுடன் போட்டி …
Read More »இந்திய வனங்களின் நிலை அறிக்கை 2023-ஐ, டேராடூனில் உள்ள வன ஆராய்ச்சி நிறுவனத்தில் மத்திய அமைச்சர் திரு பூபேந்தர் யாதவ் நாளை வெளியிடுவார்
மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்றங்கள் அமைச்சர் திரு பூபேந்தர் யாதவ், டேராடூனில் உள்ள வன ஆராய்ச்சி நிறுவனத்தில் இணையமைச்சர் திரு கீர்த்தி வர்தன் சிங், துறையின் செயலாளர் திருமதி லீனா நந்தன் முன்னிலையில் இந்திய வனங்களின் நிலை அறிக்கை 2023-ஐ நாளை வெளியிடுகிறார். இந்த நிகழ்ச்சியில் மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்ற அமைச்சகத்தின் மூத்த அதிகாரிகள், ஐசிஎஃப்ஆர்இ, எஃப்ஆர்ஐ, ஐஆர்ஓ, பிஎஸ்ஐ போன்ற அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்து கொள்வார்கள். 1987 முதல் இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை இந்திய வனநில அளவை நிறுவனத்தால் “இந்திய வனங்களின் நிலை அறிக்கை” வெளியிடப்படுகிறது. வன அடர்த்தி வரைபடம், வனநில அளவை நிறுவனத்தின் தேசிய வனப்பட்டியல் ஆகிய இரண்டு முக்கிய செயல்பாடுகளின் அடிப்படையில் நாட்டின் வனம் மற்றும் மர வளங்கள் குறித்த முக்கிய தகவல்களை இந்த அறிக்கை வழங்குகிறது. இந்த அறிக்கைத் தொடரில் இது 18-வது அறிக்கையாகும்.
Read More »
Matribhumi Samachar Tamil