Monday, December 08 2025 | 12:49:02 AM
Breaking News

Tag Archives: Statement

பிரான்ஸ், அமெரிக்க பயணத்தையொட்டி பிரதமர் வெளியிட்டுள்ள அறிக்கை

அதிபர் மேக்ரோனின் அழைப்பையடுத்து, பிப்ரவரி 10 முதல் 12 வரை பிரான்சில் பயணம் மேற்கொள்கிறேன். பாரிஸில், உலகத் தலைவர்கள் மற்றும் உலகளாவிய தொழில்நுட்ப நிறுவனங்களின் தலைமை நிர்வாக அதிகாரிகளின் கூட்டமான செயற்கை நுண்ணறிவு செயல் உச்சிமாநாட்டில் இணைத்தலைமை தாங்க நான் ஆவலுடன் எதிர்பார்த்துள்ளேன். அங்கு புதுமைக்கண்டுபிடிப்புகள் மற்றும் பரந்த அளவிலான பொது நன்மையைக் கருத்தில் கொண்டு ஒருங்கிணைந்த, பாதுகாப்பான மற்றும் நம்பகமான முறையில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்திற்கான கூட்டு அணுகுமுறை குறித்த கருத்துக்களைப் பரிமாறிக் கொள்ள இருக்கிறோம். எனது பயணம் …

Read More »

இந்தோனேசியா அதிபருடனான கூட்டுப் பத்திரிகையாளர் சந்திப்பில் பிரதமரின் அறிக்கை

மாண்புமிகு அதிபர் மற்றும் எனது சகோதரரான பிரபோவோ சுபியாண்டோ, இரு நாடுகளின் பிரதிநிதிகள், ஊடக நண்பர்களே, வணக்கம்! இந்தியாவின் முதல் குடியரசு தினத்திற்கு இந்தோனேஷியா எங்கள் தலைமை விருந்தினராக இருந்தது. மேலும், நமது 75வது குடியரசு தினத்தை கொண்டாடும் இந்த வேளையில், இந்தோனேஷியா மீண்டும் இந்த முக்கியமான நிகழ்வில் பங்கேற்பதை மனதார ஏற்றுக்கொண்டது எங்களுக்கு மிகவும் பெருமைக்குரிய விஷயம். இந்தச் சந்தர்ப்பத்தில் அதிபர்  பிரபோவோவை நான் இந்தியாவிற்கு அன்புடன் வரவேற்கிறேன். நண்பர்களே, 2018-ம் ஆண்டு …

Read More »

குவைத் பயணத்திற்கு முன்னதாக பிரதமர் வெளியிட்ட அறிக்கை

“குவைத் அரசின் அமீர் திரு ஷேக் மெஷல் அல்-அகமது அல்-ஜாபர் அல்-சபாவின் அழைப்பை ஏற்று நான் குவைத்துக்கு இரண்டு நாள் பயணத்தை இன்று தொடங்குகிறேன். பல தலைமுறைகளாக குவைத்துடனான வரலாற்று தொடர்பை நாங்கள் ஆழமாக மதிக்கிறோம். நாம் வலுவான வர்த்தகம், எரிசக்தி ஒத்துழைப்பு நாடுகள் மட்டுமல்ல. மேற்கு ஆசிய பிராந்தியத்தில் அமைதி, பாதுகாப்பு, நிலைத்தன்மை, வளம் ஆகியவற்றில் பகிர்ந்து கொள்ளப்பட்ட நலன்களையும் கொண்டிருக்கிறோம். குவைத் அமீர், பட்டத்து இளவரசர், குவைத் பிரதமர் ஆகியோரை சந்திக்க ஆவலுடன் உள்ளேன். நமது மக்கள், பிராந்தியம் ஆகியவற்றின் நலனுக்காக எதிர்கால ஒத்துழைப்புக்கான செயல்திட்டத்தை உருவாக்க இது ஒரு வாய்ப்பாக இருக்கும். இரு நாடுகளுக்கும் இடையேயான நட்புறவை வலுப்படுத்துவதில் பெரும் பங்காற்றியுள்ள இந்திய வம்சாவளியினரை குவைத்தில் சந்திப்பதை நான் ஆவலுடன் எதிர்நோக்கியுள்ளேன். வளைகுடா பிராந்தியத்தின் முதன்மையான விளையாட்டு நிகழ்வான அரேபிய வளைகுடா கோப்பையின் தொடக்க விழாவிற்கு என்னை சிறப்பு விருந்தினராக அழைத்த குவைத் தலைமைக்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். விளையாட்டுச் சிறப்பு, பிராந்திய ஒற்றுமை ஆகியவற்றுக்கான இந்த கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக இருப்பதை நான் எதிர்நோக்கி உள்ளேன். இந்தப் பயணம், இந்தியா – குவைத் மக்களுக்கு இடையேயான நட்புறவை மேலும் வலுப்படுத்தும் என்று நான் நம்புகிறேன்.”

Read More »