Saturday, January 10 2026 | 09:06:32 PM
Breaking News

Tag Archives: Statistics Day

19-வது புள்ளியியல் தினத்தை முன்னிட்டு (ஜூன் 29, 2025) நிலையான வளர்ச்சி இலக்குகள் குறித்த பிரசுரங்கள் வெளியீடு

19-வது புள்ளியியல் தினத்தை முன்னிட்டு, இன்று (ஜூன் 29, 2025)  புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகம், நிலையான வளர்ச்சி இலக்குகள் (SDGs) குறித்த தகவல்கள் அடங்கிய அறிக்கையை வெளியிட்டது. தேசிய முன்னுரிமைகளுக்கு முக்கியத்துவம் அளிக்கும் அதே வேளையில், நிலையான வளர்ச்சி இலக்குகளை (SDGs) செயல்படுத்துவதற்கான இந்தியாவின் உறுதிப்பாட்டை அங்கீகரிக்கும் வகையில், புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகம், தொடர்புடைய அமைச்சகங்கள்/துறைகள், ஐநா நிறுவனங்கள் மற்றும் சம்பந்தப்பட்ட பிற தரப்பினருடன் கலந்தாலோசித்து, நிலையான வளர்ச்சி இலக்குகளுக்கான தேசிய குறியீட்டுக் கட்டமைப்பை (NIF) உருவாக்கியுள்ளது. அதன் அடிப்படையில், ஒவ்வொரு ஆண்டும் புள்ளியியல் தினத்தன்று (அதாவது, ஜூன் 29 அன்று), புள்ளியியல் அமைச்சகம் நிலையான வளர்ச்சி இலக்குகள் குறித்த முன்னேற்ற அறிக்கையை வெளியிட்டு வருகிறது. இதில் இந்த 2025-ம் ஆண்டு புள்ளியியல் தினத்தை முன்னிட்டு, இன்று (ஜூன் 29, 2025) புள்ளியியல் அமைச்சகம் அது தொடர்பான அறிக்கையை வெளியிட்டுள்ளது. நிலையான வளர்ச்சி இலக்குகள் தேசிய குறியீட்டுக் கட்டமைப்பு முன்னேற்ற அறிக்கை -2025 என்ற இது 17 நிலையான வளர்ச்சி இலக்குகளில் தேசிய அளவிலான முன்னேற்றத்தைக் கண்காணிப்பதில் ஒரு முக்கிய கருவியாக இருக்கும். நிலையான வளர்ச்சி இலக்குகள் பற்றிய இந்த அறிக்கைகள் பொதுமக்கள் எளிதாக அணுகக்கூடியவை. www.mospi.gov.in என்ற புள்ளியியல் அமைச்சகத்தின் இணையதளத்தில் இவை இடம்பெற்றுள்ளன.

Read More »