தொலைத்தொடர்பு கட்டமைப்பை வலுப்படுத்தவும், நாடு முழுவதும் குறிப்பாக நாட்டின் கிராமப்புற, தொலைதூர பகுதிகளில் இணைய இணைப்பை மேம்படுத்தவும், டிஜிட்டல் பாரத் நிதி திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இத்திட்டத்தின் கீழ் நாட்டின் கிராமப்புற, தொலைதூர, மலைப்பாங்கான பகுதிகளில் செல்பேசி கோபுரங்களை நிறுவுவதன் மூலம் தொலைத் தொடர்பு இணைப்பை விரிவுபடுத்துவதற்காக பல்வேறு திட்டங்களை அரசு செயல்படுத்தி வருகிறது. 4ஜி செறிவூட்டல் திட்டம் நாட்டில் 24,680 கிராமங்களுக்கு 4 ஜி மொபைல் இணைப்பை வழங்குகிறது. 28 மாநிலங்கள், …
Read More »திவால் தொடர்பான நடைமுறைகளை வலுப்படுத்தும் வகையில் திவால் நடைமுறைச் சட்டத்தில் திருத்தங்கள்
திவால் நடைமுறைகளை வலுப்படுத்தும் வகையில், அச்சட்டத்தில் தேவையான திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மத்திய அரசின் சர்வதேச செலாணிக் கொள்கையில் ஆறு திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. மேலும், இந்திய திவால் சட்ட வாரியம் நொடித்துப்போதல் மற்றும் திவால் வாரியம், சர்வதேச நாணய வங்கி தொடங்கப்பட்டதிலிருந்து 100-க்கும் மேற்பட்ட ஒழுங்குமுறை விதிகளில் திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளன. நிதிச் சேவைகளை வழங்கும் நிறுவனங்கள் தவிர, பெருநிறுவனங்களின் மறுசீரமைப்பு, திவால் நடைமுறைகளில் உள்ள சிக்கல்களுக்கு தீர்வு காண்பது, நிறுவனங்களை …
Read More »புள்ளியியல் நடைமுறைகளை வலுப்படுத்த மாநிலங்களுக்கு மத்திய அரசு உதவி – தமிழ்நாடு உள்ளிட்ட 14 மாநிலங்கள் பணிகளை நிறைவு செய்துள்ளன
நம்பகமான அதிகாரப்பூர்வ புள்ளிவிவரங்களை சேகரித்தல், தொகுத்தல், வெளியிடுதல் ஆகியவற்றில் மாநிலங்களின் திறன்களையும் செயல்பாடுகளையும் வலுப்படுத்த ‘புள்ளியியல் வலுப்படுத்துதலுக்கான ஆதரவு நடைமுறை’ என்ற மத்திய அரசின் துணைத் திட்டத்தின் கீழ் மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களுக்கு புள்ளியியல் – திட்ட அமலாக்க அமைச்சகம் மானிய உதவி வழங்குகிறது. இந்த துணைத் திட்டத்தின் கீழ், உள்ளூர் அளவிலான புள்ளிவிவரங்களைத் தொகுத்தல், ஒருங்கிணைந்த மாநில தரவுத்தளங்களை உருவாக்குதல், தரவு இடைவெளிகளை நிவர்த்தி செய்வதற்கான ஆய்வுகள் …
Read More »நேபாள ராணுவ தலைமை தளபதி, பாதுகாப்பு அமைச்சர் திரு. ராஜ்நாத் சிங்கை சந்தித்து இருதரப்பு பாதுகாப்பு ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவது குறித்து ஆலோசனை நடத்தினார்
நான்கு நாள் பயணமாக இந்தியா வந்துள்ள நேபாள ராணுவத் தலைமை தளபதி ஜெனரல் அசோக் ராஜ் சிக்டெல், பாதுகாப்பு அமைச்சர் திரு ராஜ்நாத் சிங்கை 2024 டிசம்பர் 12 அன்று புதுதில்லியில் சந்தித்து, இருதரப்பு உறவுகள் தொடர்பான பல விவகாரங்கள் குறித்து விவாதித்தார். நேபாள இராணுவத்தின் திறனை மேம்படுத்துவதற்கான பயிற்சிகள், வழக்கமான பயிற்சிகள், பயிலரங்குகள், கருத்தரங்குகள், பாதுகாப்பு உபகரணங்கள் மற்றும் கிடங்குகள் வழங்குதல் உள்ளிட்ட பாதுகாப்பு ஒத்துழைப்பின் பல்வேறு அம்சங்களை பாதுகாப்பு அமைச்சர் எடுத்துரைத்தார். இரு நாடுகளுக்கும் இடையிலான மிகவும் வலுவான …
Read More »