புதுதில்லி பாரத மண்டபத்தில் 2025, டிசம்பர் 19 அன்று மாலை 4:30 மணியளவில் நடைபெறும் பாரம்பரிய மருத்துவம் குறித்த உலக சுகாதார அமைப்பின் இரண்டாவது சர்வதேச உச்சி மாநாட்டின் நிறைவு விழாவில் பிரதமர் திரு நரேந்திர மோடி பங்கேற்கவுள்ளார். அத்துடன் இந்த நிறைவு விழாவில் பிரதமர் உரையாற்ற உள்ளார். ஆராய்ச்சி, நிலைப்படுத்துதல் மற்றும் உலகளாவிய ஒருங்கிணைப்பு மூலம் இந்திய அறிவுசார் முறை, முக்கிய பாரம்பரிய மருத்துவ முறையை பிரதமர் தொடர்ந்து வலியுறுத்தியுள்ளார். இந்த தொலைநோக்கு பார்வையுடன் இந்த நிகழ்ச்சியில் ஆயுஷ் துறைக்கான …
Read More »எஸ்விசிசி, கோனயூர் அமைப்புகள் இணைந்து நடத்திய சர்வதேச ஆயுர்வேத மாநாடு சாவ் பாலோவில் நடைபெற்றது பாரம்பரிய மருத்துவத்தில் இந்தியா – பிரேசில் இடையேயான ஒத்துழைப்பை எடுத்துக்காட்டியது
மூன்றாவது சர்வதேச ஆயுர்வேத மாநாடு பிரேசிலின் சாவ் பாலோ நகரில் நடைபெற்றது. அங்குள்ள சுவாமி விவேகானந்தா கலாச்சார மையமும் (எஸ்விசிசி), பிரேசிலில் உள்ள ஆயுர்வேத அமைப்பான கோனயூர் அமைப்பும் இணைந்து 2025 நவம்பர் 14, 15 ஆகிய தேதிகளில் இந்த மாநாட்டை நடத்தின. இந்திய கலாச்சார உறவுகள் கவுன்சிலின் ஆதரவுடன் நடைபெற்ற இந்த இரண்டு நாள் நிகழ்வு, பிரேசிலில் ஆயுர்வேத மருத்துவம் பின்பற்றப்படுவதன் 40 ஆண்டுகள் நிறைவை நினைவுகூர்வதாக அமைந்தது. …
Read More »பாரம்பரிய மருத்துவத்தில் செயற்கை நுண்ணறிவு – உலக சுகாதார நிறுவனத்தின் முக்கிய வெளியீட்டில் இந்தியாவின் ஆயுஷ் கண்டுபிடிப்புகள் இடம்பெற்றுள்ளன
உலகளாவிய சுகாதார கண்டுபிடிப்புகளுக்கான ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லாக, உலக சுகாதார அமைப்பு (WHO) “பாரம்பரிய மருத்துவத்தில் செயற்கை நுண்ணறிவின் பயன்பாட்டை திட்டமிடுதல்” என்ற தலைப்பில் ஒரு தொழில்நுட்ப சுருக்க அம்சத்தை வெளியிட்டுள்ளது. இது செயற்கை நுண்ணறிவை (AI) பாரம்பரிய மருத்துவ அமைப்புகளுடன், குறிப்பாக ஆயுஷ் அமைப்புகளுடன் ஒருங்கிணைப்பதில் இந்தியாவின் முன்னோடி முயற்சிகளை அங்கீகரித்துள்ளது. இந்த விஷயத்தில் இந்தியாவின் முன்மொழிவை இந்த வெளியீடு பின்பற்றுகிறது. இது பாரம்பரிய மருத்துவத்தில் செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்துவதற்கான உலக சுகாதார …
Read More »இந்திய தர நிர்ணய அமைவனம் (BIS), சென்னை கிளை அலுவலகத்தின் “பாரம்பரிய மருத்துவத்தில் இந்தியத் தரநிலைகளின் பங்கு – குறிப்பாக இஞ்சி, வசம்பு” குறித்த கலந்துரையாடல் நிகழ்ச்சி
இந்திய தர நிர்ணய அமைவனம் (பி .ஐ .எஸ்) என்பது மத்திய அரசின் நுகர்வோர் விவகாரங்கள், உணவு, பொது விநியோக அமைச்சகத்தின் கீழ் செயல்படும் ஒரு சட்டரீதியான அமைப்பாகும். இது பொருள்களுக்கான தர உரிமம் (ஐஎஸ்ஐ மார்க்), மேலாண்மை திட்ட சான்றிதழ், தங்கம், வெள்ளி நகைகள்/கலைப் பொருள்களுக்கான ஹால்மார்க் உரிமம், ஆய்வகச் சேவைகளின் நலன், நுகர்வோர் பாதுகாப்பை நோக்கமாகக் கொண்ட பல்வேறு திட்டங்களை செயல்படுத்துகிறது. இது சம்பந்தமாக, இந்திய தர நிர்ணய அமைவனம், சென்னை கிளை அலுவலகம்,” ” பாரம்பரிய மருத்துவத்தில் இந்தியத் தரநிலைகளின் பங்கு – குறிப்பாக இஞ்சி, வசம்பு ” குறித்த கலந்துரையாடல் நிகழ்ச்சிக்கு சென்னையில் இன்று ஏற்பாடு செய்துள்ளது. இந்நிகழ்ச்சியில் வரவேற்புரையாற்றிய விஞ்ஞானி-F/மூத்த இயக்குனர், தலைவர் (சென்னை கிளை அலுவலகம்); ஸ்ரீமதி.ஜி.பவானி, தலைமை விருந்தினர், பிரமுகர்கள், பங்கேற்பாளர்கள் ஆகியோரை வரவேற்றார். இத்திட்டத்தின் நோக்கங்கள் குறித்து எடுத்துரைத்த அவர், தொழில்துறையின் நலனுக்காக “மானக் மந்தன்” என்ற தலைப்பில் தொடர்ச்சியான கலந்துரையாடல் நிகழ்ச்சிகளுக்கு பிஐஎஸ் ஏற்பாடு செய்து வருகிறது என்று கூறினார். மேலும் புதிய தரநிலைகளை அறிமுகப்படுத்தவும், முக்கியத்துவம் வாய்ந்த திருத்தங்கள் , வரைவுகளை உள்ளூர் உற்பத்தியாளர்கள், தொழில்துறையினர், …
Read More »
Matribhumi Samachar Tamil