Saturday, December 06 2025 | 06:50:18 AM
Breaking News

Tag Archives: villages

கிராமங்கள் வளர்ச்சியடைந்த இந்தியாவிற்கான பாதையாகும்: குடியரசுத் துணைத் தலைவர்

மொஹாலியில் தேசிய வேளாண் உணவு மற்றும் உயிரி உற்பத்தி நிறுவனத்தில் மேம்பட்ட தொழில் முனைவோர் மற்றும் திறன் மேம்பாட்டுத் திட்டத்தைக் குடியரசு துணைத் தலைவர் திரு ஜக்தீப் தன்கர்  தொடங்கி வைத்தார். அப்போது பேசிய அவர், “தாம் ஒரு விவசாயியின் மகன் என்றும்,  விவசாயியின் மகன் எப்பொழுதும் உண்மைக்குத் தன்னை அர்ப்பணித்துக் கொள்வான் என்றும் கூறினார். மேலும், “இந்தியாவின் ஆன்மா அதன் கிராமங்களில் வாழ்கிறது, கிராமப்புற அமைப்பு நாட்டின் முதுகெலும்பாகச் …

Read More »

76வது குடியரசு தின கொண்டாட்டத்திற்காக தலைநகருக்கு வருகை தந்துள்ள கிராமங்களைச் சேர்ந்த சிறப்பு விருந்தினர்களுடன் மத்திய உள்துறை அமைச்சர் திரு அமித் ஷா உரையாடினார்

மத்திய உள்துறை அமைச்சரும், கூட்டுறவு அமைச்சருமான திரு அமித் ஷா, 76வது குடியரசு தின விழாவிற்கு தலைநகருக்கு வருகை தந்த புது தில்லியில், எழுச்சிமிகு  கிராமம் திட்டத்தின் கீழ் உள்ள கிராமங்களைச் சேர்ந்த சிறப்பு விருந்தினர்களுடன் இன்று கலந்துரையாடினார். இந்நிகழ்ச்சியில் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் திரு ஜே.பி. நட்டா, மத்திய நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் திரு கிரண் ரிஜிஜு, மத்திய பழங்குடியினர் விவகார அமைச்சர் திரு ஜுவல் ஓரம், மத்திய உள்துறை இணை அமைச்சர் திரு நித்யானந்த் ராய், மத்திய …

Read More »

நாட்டில் உள்ள 6,44,131 கிராமங்களில், 6,22,840 கிராமங்கள் செல்பேசி வசதி பெற்றுள்ளன

நாட்டில் உள்ள 6,44,131 கிராமங்களில் (இந்திய தலைமைப் பதிவாளர் கூற்றுப்படி), சுமார் 6,22,840 கிராமங்களில் செல்பேசி வசதி உள்ளது, இவற்றில் 6,14,564 கிராமங்கள் 30.09.2024 நிலவரப்படி 4ஜி சேவை இணைப்பு பெற்றுள்ளன. பழங்குடியினர் விவகார அமைச்சகத்தின் பிரதமரின் பழங்குடியின நியாய மகா இயக்கத்தின் கீழ், 4,543 குறிப்பாக பாதிப்புக்குள்ளாகும் பழங்குடியினர் குடியிருப்புகள், செல்பேசி வசதி இல்லாதவை என கண்டறியப்பட்டு, அவற்றில் 1,136 குடியிருப்புகளுக்கு இந்த வசதி வழங்கப்பட்டுள்ளது. இந்தக் குடியிருப்புகள் உட்பட நாட்டின் ஊரக, தொலைதூர மற்றும் மலைப்பாங்கான பகுதிகளில் செல்போன் கோபுரங்களை நிறுவுவதன் மூலம் தொலைத் தொடர்பு இணைப்பை விரிவுபடுத்துவதற்காக டிஜிட்டல் பாரத் …

Read More »

நாடாளுமன்ற கேள்வி: பிரதமரின் மாதிரி கிராமத் திட்டம் : 29,851 கிராமங்கள் தேர்வு

2021-22-ம் ஆண்டில், பிரதமரின் மாதிரி கிராமத் திட்டத்தின் கீழ், 40 சதவீதத்திற்கும் மேல் எண்ணிக்கையில் ஆதிதிராவிடரை உள்ளடக்கிய 500 அல்லது அதற்கு மேற்பட்ட மக்கள் தொகை கொண்ட கிராமங்கள் இத்திட்டத்தின் கீழ் தேர்வு செய்யப்பட தகுதியுள்ளவை ஆகும். தேர்ந்தெடுக்கப்பட்ட கிராமங்களில், குடிநீர் மற்றும் சுகாதாரம், கல்வி, ஊட்டச்சத்து, சமூகப் பாதுகாப்பு, கிராமபுறச் சாலைகள் மற்றும் வீட்டுவசதி, மின்சாரம் மற்றும் தூய்மையான எரிபொருள், வேளாண் நடைமுறைகள், நிதி உள்ளடக்கம், டிஜிட்டல்மயமாக்கல், வாழ்வாதாரம், திறன் மேம்பாடு ஆகிய 10 களங்களின் கீழ் அடையாளம் காணப்பட்ட 50 சமூக-பொருளாதார மேம்பாட்டுக் குறியீடுகள் இணைக்கப்பட்டுள்ளன. 2018-19-ம் ஆண்டு முதல், 29851 கிராமங்கள் தேர்வு செய்யப்பட்டு, …

Read More »