புதுதில்லியில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் அமைப்பு சாரா தொழிலாளர்களின் இணையதளத்தில் பன்மொழி செயல்பாட்டை மத்திய தொழிலாளர் நலன், வேலைவாய்ப்பு, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் டாக்டர் மன்சுக் மாண்டவியா தொடங்கி வைத்தார். அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு ஒரே இடத்தில் அனைத்து விவகாரங்களுக்கும் தீர்வு காணும் வகையில் தொலைநோக்குப் பார்வையுடன் இந்த இணையதளம் செயல்படுகிறது. இதில் அட்டவணையில் உள்ள 22 மொழிகளிலும் காணலாம். முக்கிய தொழிலாளர், வேலைவாய்ப்பு அமைச்சகத்தின் …
Read More »ராஷ்ட்ரபர்வ் இணையதளம், கைபேசி செயலி- பாதுகாப்புத் துறை செயலாளர் தொடங்கி வைத்தார்
முன்னாள் பிரதமர் திரு அடல் பிஹாரி வாஜ்பாயின் பிறந்த நாளை நினைவுகூரும் ‘நல்லாட்சி தினத்தை’ முன்னிட்டு 2024 டிசம்பர் 25 அன்று பாதுகாப்புத் துறைச் செயலாளர் திரு ராஜேஷ் குமார் சிங், மொபைல் செயலியுடன் ராஷ்டிரபர்வ் (Rashtraparv)/என்ற இணையதளத்தைத் தொடங்கி வைத்தார். குடியரசு தினம், படைகள் பாசறை திரும்பும் விழா, சுதந்திர தினம் போன்ற தேசிய நிகழ்வுகளை ஏற்பாடு செய்தல், நேரடி ஒளிபரப்பு, அனுமதிச் சீட்டு வாங்குதல், இருக்கை ஏற்பாடுகள், நிகழ்வுகளின் வழித்தட வரைபடங்கள் தொடர்பான தகவல்களை வழங்க இந்த வலைத்தளம் உதவும். …
Read More »சிஎஸ்ஐஆர் – என்ஐஎஸ்சிபிஆர்-ன் புதுப்பிக்கப்பட்ட தளத்தை சிஎஸ்ஐஆர் தலைமை இயக்குநர் டாக்டர் என். கலைச்செல்வி திறந்து வைத்து, விஞ்ஞானிகள், ஆராய்ச்சியாளர்களுடன் கலந்துரையாடினார்
புதுதில்லியில் உள்ள சிஎஸ்ஐஆர்-அறிவியல் தகவல் தொடர்பு மற்றும் கொள்கை ஆராய்ச்சிக்கான தேசியக் கல்விக்கழக (என்ஐஎஸ்சிபிஆர்) வளாகத்தில் அதன் புதுப்பிக்கப்பட்ட இரண்டாவது தளத்தை 2024, டிசம்பர் 13 அன்று சிஎஸ்ஐஆர் தலைமை இயக்குநரும், மத்திய அறிவியல் மற்றும் தொழில்கள் ஆராய்ச்சித் துறை (டிஎஸ்ஐஆர்) செயலாளருமான டாக்டர் என். கலைச்செல்வி திறந்துவைத்தார். இது ஆராய்ச்சி நிறுவனத்தின் திறன்களை மேலும் மேம்படுத்தும். இந்த நிகழ்ச்சியையொட்டி தாயின் பெயரில் ஒரு மரக்கன்று என்ற மரக்கன்று நடும் இயக்கமும் நடைபெற்றது. சுற்றுச்சூழல் பாதுகாப்பு …
Read More »இ-ஷ்ரம் தளத்துடன் பிரதமரின் விரைவு சக்திப் பெருந்திட்ட இணையதளத்தை ஒருங்கிணைத்தல்
தொழிலாளர் நலன், வேலைவாய்ப்பு அமைச்சகம், ஆதாருடன் சரிபார்க்கப்பட்டு இணைக்கப்பட்ட அமைப்புசாரா தொழிலாளர்கள் தொடர்பான விரிவான தேசிய தரவுத்தளத்தை (NDUW) உருவாக்குவதற்காக 2021 ஆகஸ்ட் 26 அன்று நாடு தழுவிய அளவிலான இ-ஷ்ரம் (eshram.gov.in) தளத்தை அறிமுகப்படுத்தியது. இந்த இ-ஷ்ரம் தளத்தின் நோக்கம், அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு கணக்கு எண்ணை வழங்கி நலத் திட்டங்கள் தொடர்பாக அவர்களுக்கு ஆதரவு வழங்குவதாகும். பிரதமரின் விரைவு சக்தி தேசிய பெருந்திட்ட தளம், பல்வேறு அமைச்சகங்கள் / துறைகள் தொடர்பான உள்கட்டமைப்பு திட்டங்களின் பொதுவான தரவுத் தளமாக அமைந்துள்ளது. உள்கட்டமைப்புத் திட்டங்களை …
Read More »மக்களுக்கு அதிகாரம் அளிப்பதற்கான சஞ்சார் சாத்தி இணையதளத்தை தொலைத் தொடர்புத் துறை தொடங்கியுள்ளது
மத்தியத் தொலைத் தொடர்புத் துறை சாமானிய மக்களுக்கு அதிகாரம் அளிக்கும் வகையில் சஞ்சார் சாத்தி என்ற இணையதளத்தை உருவாக்கியுள்ளது. இதன் மூலம் சந்தேகத்திற்குரிய மோசடியான தகவல் தொடர்புகள் மற்றும் உரிமைக் கோரப்படாத வர்த்தக தொடர்புகள் ஆகியவை குறித்து புகார்தெரிவிக்கும் வகையில் இந்த இணையதளத்தில் வசதி செய்யப்பட்டுள்ளது. மோசடியான தகவல் தொடர்புகள் தொடர்பான புகார்களின் அடிப்படையில், மொபைல் இணைப்புகள், கைபேசிகள், குறுந்தகவல்களை அனுப்புவர்கள் மற்றும் வாட்ஸ்அப் கணக்குகள் மீது தொலைத் தொடர்புத் …
Read More »
Matribhumi Samachar Tamil