10 வது ஆசிய-பசிபிக் காது கேளாதோர் விளையாட்டுப் போட்டிகளில் 55 பதக்கங்களை வென்று கோலாலம்பூரில் இருந்து வெற்றிகரமாக திரும்பிய இந்திய அணிக்கு மத்திய இளைஞர் நலன், விளையாட்டு, தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சர் டாக்டர் மன்சுக் மாண்டவியா திங்களன்று வாழ்த்து தெரிவித்தார். 42 ஆடவர், 26 மகளிர் உட்பட 68 பேர் கொண்ட இந்திய அணி, இதுவரை இல்லாத வகையில், 8 தங்கம், 18 வெள்ளி மற்றும் 29 வெண்கலப் பதக்கங்களைக் கைப்பற்றி போட்டியில் பங்கேற்ற 21 நாடுகளில் ஐந்தாவது இடத்தைப் பிடித்தது. இது 1984-ம் ஆண்டிலிருந்து நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் …
Read More »ஸ்குவாஷ் விளையாட்டு ஜாம்பவான் ராஜ் மன்சந்தா மறைவுக்கு பிரதமர் இரங்கல்
முன்னணி ஸ்குவாஷ் வீரர் ராஜ் மன்சந்தா மறைவிற்கு பிரதமர் திரு நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். அர்ப்பணிப்புக்கும் சிறப்புக்கும் பெயர் பெற்றவர் மன்சந்தா என பிரதமர் கூறியுள்ளார். இது குறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது: “அர்ப்பணிப்புக்கும், சிறப்புக்கும் பெயர் பெற்ற இந்திய ஸ்குவாஷின் ஜாம்பவான் ராஜ் மன்சந்தா அவர்கள் மறைவால் வேதனை அடைந்தேன். அவர் வென்ற விருதுகள், விளையாட்டின் மீதான அவரது ஆர்வம், தலைமுறைகளை ஊக்குவிக்கும் திறன் ஆகியவை அவரை தனிச்சிறப்புடையவராக ஆக்கின. ஸ்குவாஷ் மைதானத்திற்கு அப்பால், அவரது சேவை ராணுவத்திலும் தொடர்ந்தது. அவரது குடும்பத்தினருக்கும் ஆதரவாளர்களுக்கும் இரங்கல். ஓம் சாந்தி: பிரதமர் நரேந்திர மோடி (@narendramodi)”
Read More »