குறிப்பிட்ட பகுதிகளில் மாணவர்களின் உயர்கல்வியை மேம்படுத்தும் வகையில் உயர்நிலைப் பள்ளிகளில் மாணவர்களுக்கான உண்டு உறைவிடக் கல்வித் திட்டம் இரண்டு வகைகளில் செயல்படுத்தப்படுகிறது: முதலாவது ஆண்டு தோறும் 3,000 திறன் வாய்ந்த ஷெட்யூல்டு பழங்குடியின வகுப்பைச்“ சேர்ந்த மாணவர்கள் மத்திய இடைநிலை கல்வி வாரியம் அல்லது மாநில கல்வி வாரியங்களால் இணைக்கப்பட்ட உண்டு உறைவிடப் பள்ளிகளில் 9 மற்றும் 11-ம் வகுப்புகளில் மாணவர் சேர்க்கைக்கான தேசிய தேர்வு முகமை நடத்தும் நுழைவுத் தேர்வுமூலம் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். 12-ம் …
Read More »நாடாளுமன்ற கேள்வி: மூத்த குடிமக்களுக்கான திட்டங்கள்
சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம், மூத்த குடிமக்களின் பல்வேறு தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக பிரதமரின் மூத்த குடிமக்கள் ஓய்வூதிய காப்பீட்டு திட்டத்தை செயல்படுத்துகிறது. ஒருங்கிணைந்த மூத்த குடிமக்கள் திட்டமானது முதியோர் இல்லங்கள், தொடர் பராமரிப்பு இல்லங்கள் போன்றவற்றை நடத்துவதற்கும் பராமரிப்பதற்கும் அரசு சாரா / தன்னார்வ தொண்டு நிறுவனங்களுக்கு மானிய உதவி வழங்குகிறது. ஏழ்மை நிலையில் உள்ள மூத்த குடிமக்களுக்கு உறைவிடம், ஊட்டச்சத்து, மருத்துவ சேவை மற்றும் பொழுதுபோக்கு …
Read More »249 மாவட்டங்கள் மனிதக் கழிவுகளை மனிதர்களே அகற்றும் பணியாளர் இல்லாத மாவட்டங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன
சாக்கடை சுத்தம் செய்யும்போது ஏற்படும் இறப்புகளுக்கான இழப்பீடு அதிகரிக்கப்படுவதை உறுதி செய்யுமாறு நீதிமன்றம் மத்திய மற்றும் மாநிலங்களுக்கு அறிவுறுத்துகிறது. (முந்தைய நிர்ணயிக்கப்பட்ட தொகை, அதாவது ரூ.10 லட்சம்) 1993-ம் ஆண்டு முதல் இது பொருந்தும். அந்தத் தொகைக்கு தற்போதைய தொகை ரூ.30 லட்சமாகும். இது சம்பந்தப்பட்ட முகமையால் செலுத்தப்பட வேண்டிய தொகையாக இருக்கும். அதாவது, ஒன்றியம், யூனியன் பிரதேசம் அல்லது மாநிலம் இத்தொகையை செலுத்த வேண்டும்.அதாவது, சாக்கடை உயிரிழப்புகளுக்கு இப்போது ரூ. 30 லட்சம் இழப்பீடு வழங்கப்படும். இறந்தவரைச் சார்ந்து வாழந்தவருக்கு அத்தகைய …
Read More »சாகர்மாலா திட்டங்கள்
நாட்டில் துறைமுகம் சார்ந்த வளர்ச்சியை ஊக்குவிப்பதற்காக துறைமுகங்கள், கப்பல் மற்றும் நீர்வழிப் போக்குவரத்து அமைச்சகத்தின் முன்னோடித் திட்டமாக சாகர்மாலா அமைந்துள்ளது. இத்திட்டம் துறைமுக உள்கட்டமைப்பு, கடலோரக் கப்பல் நிறுத்தம், சாலை, ரயில் போக்குவரத்து, மீன்பிடி துறைமுகங்கள், திறன் மேம்பாடு, கடலோர சமூக மேம்பாடு, சர்வதேச தரத்திலான கப்பல் முனையம், ரோ-பாக்ஸ் படகு சேவைகள் போன்ற தனித்துவமான, புதுமையான திட்டங்களுக்கு மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகளுக்கு மத்திய அரசு நிதி …
Read More »இடதுசாரி தீவிரவாத வன்முறை குறைந்தது
‘இடதுசாரி தீவிரவாதத்தை எதிர்கொள்வதற்கான தேசிய கொள்கை மற்றும் செயல் திட்டத்தை’ மத்திய, மாநில அரசுகள் உறுதியாக அமல்படுத்தியதன் விளைவாக இடதுசாரி தீவிரவாதம் புவியியல் பரவல் மற்றும் வன்முறை ஆகிய இரண்டிலும் தொடர்ந்து குறைந்து வருகிறது. இடதுசாரி தீவிரவாதம் தொடர்பான வன்முறைகள் 2010-ம் ஆண்டுடன் ஒப்பிடும்போது 2023-ம் ஆண்டில் 73% குறைந்துள்ளது. இதே காலகட்டத்தில் இதன் விளைவாக ஏற்படும் இறப்புகளும் (பொதுமக்கள் + பாதுகாப்புப் படையினர்) 86% குறைந்துள்ளன. நடப்பாண்டில் (15.11.2024 வரை), 2023-ம் ஆண்டின் இதே காலகட்டத்துடன் ஒப்பிடும்போது இடதுசாரி தீவிரவாதத்தால் நிகழ்த்தப்பட்ட …
Read More »இந்தியாவில் மக்கள் தொகைக் கட்டுப்பாடு திட்டங்களின் விவரங்கள்
தேசிய குடும்ப சுகாதார கணக்கெடுப்பு-5 (2019-21)-ன் படி இந்தியாவில் மொத்த கருத்தரிப்பு விகிதமானது சாதனை அளவை எட்டியுள்ளது. இந்த இலக்கானது இந்திய மக்கள் தொகை கொள்கை-2000 மற்றும் தேசிய சுகாதார கொள்கை-2017 (டி.எஃப்.ஆர் 2.1) ஆகியவற்றுடன் ஒத்திசைவானதாக உள்ளது. குடும்ப கட்டுப்பாட்டுத் திட்டத்தின் கீழ் அரசால் செயல்படுத்தப்படும் பல்வேறு திட்டங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன: ஆணுறைகள், ஒருங்கிணைந்த வாய்வழி கருத்தடை மாத்திரைகள், அவசர கருத்தடை மாத்திரைகள், கருத்தடை சாதனங்கள் மற்றும் கருத்தடை அறுவை சிகிச்சை ஆகியவற்றை உள்ளடக்கிய விரிவாக்கப்பட்ட கருத்தடை …
Read More »நாட்டில் 25 மாநிலங்களில் மிகப்பெரும் உணவுப் பூங்கா திட்டத்தின் கீழ் 41 செயல்திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது
உணவு பதனப்படுத்துதல் துறையில் மொத்த அந்நிய நேரடி முதலீடு குறித்த விவரங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன. 2019-20-ம் ஆண்டில் 904.7 மில்லியன் டாலர் அளவிற்கும், 2020-21-ம் ஆண்டில் 393.41 மில்லியன் டாலர் அளவிற்கும், 2021-22 -ம் ஆண்டில் 709.72 மில்லியன் டாலர் அளவிற்கும், 2022-23-ம் ஆண்டில் 895.34 மில்லியன் டாலர் அளவிற்கும், 2023-24-ம் ஆண்டில் 608.31 மில்லியன் டாலர் அளவிற்கும் அந்நிய நேரடி முதலீட்டிற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. உணவு பதனப்படுத்துதல் தொழில்கள் அமைச்சகம் மிகப்பெரும் உணவுப் பூங்கா திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இது பிரதமரின் வேளாண் மேம்பாட்டு திட்டத்தின் …
Read More »மாஸ்கோவில் ராணுவம் மற்றும் அதன் தொழில்நுட்ப ஒத்துழைப்புக்கான இந்தியா-ரஷ்யா நாடுகளுக்கிடையேயான ஆணையத்தின் 21-வது அமர்வில் இந்திய, ரஷ்ய பாதுகாப்பு அமைச்சர்கள் கூட்டாக தலைமை தாங்கினார்கள்
ராணுவம் மற்றும் அதன் தொழில்நுட்ப ஒத்துழைப்புக்கான இந்தியா-ரஷ்யா நாடுகளுக்கிடையேயான ஆணையத்தின் 21-வது அமர்வு 2024 டிசம்பர் 10 அன்று மாஸ்கோவில் பாதுகாப்பு அமைச்சர் திரு ராஜ்நாத் சிங் மற்றும் ரஷ்ய பாதுகாப்பு அமைச்சர் திரு ஆண்ட்ரே பெலோசோவ் ஆகியோர் தலைமையில் கூட்டாக நடைபெற்றது. இந்தியா-ரஷ்யா உறவு மிகவும் வலுவானது என்றும், சிறப்பான மற்றும் முன்னுரிமை பெற்ற ராஜீய கூட்டாண்மையின் பொறுப்புகளை நிறைவேற்றி வருவதாகவும் பாதுகாப்பு அமைச்சர் திரு ராஜ்நாத் சிங் குறிப்பிட்டார். …
Read More »ஆயுஷ் மருத்துவ முறையின் கீழ் சிகிச்சை பெற இந்தியாவுக்கு வரும் வெளிநாட்டினருக்கு ஆயுஷ் விசா
ஆயுஷ் மருத்துவ முறையின் கீழ் சிகிச்சை பெறுவதற்காக இந்தியாவுக்கு வருகை தரும் வெளிநாட்டினருக்கு ஆயுஷ் விசா என்ற தனி பிரிவை அரசு 2023 ஜூலை 27 அன்று அறிமுகப்படுத்தியுள்ளது. ஆயுஷ் விசா நான்கு துணை வகைகளின் கீழ் கிடைக்கிறது: (i) ஆயுஷ் விசா (AY-1), (ii) ஆயுஷ் உதவியாளர் விசா (AY2), (iii) இ-ஆயுஷ் விசா மற்றும் (iv) இ-ஆயுஷ் உதவியாளர் விசா. ஆயுஷ் விசா ஆயுஷ் அமைப்புகள் மூலம் சிகிச்சை பெறுவதை ஒரே நோக்கமாகக் கொண்டு இந்தியாவுக்கு வரும் ஒரு வெளிநாட்டவருக்கு வழங்கப்படுகிறது. அரசு அமைப்புகள் அல்லது மருத்துவமனை & சுகாதார சேவை வழங்குபவர்களுக்கான தேசிய அங்கீகரிப்பு வாரியம் அல்லது ஹோமியோபதிக்கான தேசிய ஆணையம் அல்லது இந்திய மருத்துவ முறைகளுக்கான தேசிய ஆணையம் ஆகியவற்றில் பதிவு செய்துள்ள மருத்துவமனை/நல்வாழ்வு மையத்தில் சிகிச்சை பெற வருகை புரிபவர்களுக்கு ஆயுஷ் விசா வழங்கப்படுகிறது. 04.12.2024 வரை மொத்தம் 123 வழக்கமான ஆயுஷ் விசா, 221 இ-ஆயுஷ் விசா மற்றும் 17 இ-ஆயுஷ் உதவியாளர் விசாக்கள் வழங்கப்பட்டுள்ளன.சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகம் மருத்துவ மதிப்பு பயணத்திற்கான இந்தியாவின் அதிகாரப்பூர்வ தளத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்தியாவில் மருத்துவ பராமரிப்பு அல்லது ஆரோக்கிய சேவைகளை நாடும் எந்தவொரு சர்வதேச நோயாளியும் வருகை தருவதன் மூலம் அட்வான்டேஜ் ஹெல்த்கேர் இந்தியா தளத்தைப் பார்வையிடலாம்www.healinindia.gov.in. மாநிலங்களவையில் இன்று கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில் மத்திய ஆயுஷ் துறை இணையமைச்சர் (தனிப்பொறுப்பு) திரு பிரதாப்ராவ் ஜாதவ் இந்தத் தகவலைத் தெரிவித்தார்.
Read More »மூத்த குடிமக்களுக்கான ஆயுஷ்மான் சேர்க்கை அடையாள அட்டைகள் 25 லட்சத்தை எட்டியது
பிரதமரால் மூத்த குடிமக்களுக்கான ஆயுஷ்மான் திட்டம் தொடங்கப்பட்டு 2 மாதகாலத்தில் அதில் பதிவு செய்தவர்களின் எண்ணிக்கை 25 லட்சம் என்ற சாதனை அளவை எட்டியுள்ளது. இந்தத் திட்டம் தொடங்கப்பட்டதிலிருந்து ரூ.40 கோடிக்கும் கூடுதல் மதிப்பிலான சிகிச்சைகள் வழங்கப்பட்டுள்ளன. இத்திட்டம் 70 வயது நிறைவடைந்த அல்லது அதற்கு மேற்பட்ட வயதுள்ள மூத்த குடிமக்கள் 22000 பேருக்கு பயனளிக்கிறது. இருதய பரிசோதனை, இடுப்பு எலும்பு மாற்று அறுவை சிகிச்சை, பித்தப்பை அகற்றுதல், கண்புரை அறுவை சிகிச்சை, புரோஸ்டேட் அறுவை சிகிச்சை, பக்கவாதம், ஹீமோடையாலிசிஸ், குடல் காய்ச்சல் மற்றும் பிற காய்ச்சல் போன்ற பல்வேறு உபாதைகளுக்கு மூத்த …
Read More »