Thursday, December 19 2024 | 02:26:00 PM
Breaking News

Tag Archives: பிரதமர்

திரு எஸ்.எம். கிருஷ்ணா மறைவுக்குப் பிரதமர் இரங்கல் தெரிவித்துள்ளார்

கர்நாடக முன்னாள் முதலமைச்சர் திரு எஸ். எம். கிருஷ்ணா மறைவுக்குப் பிரதமர் திரு நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். கர்நாடகாவின் உள்கட்டமைப்பு வளர்ச்சியில் கவனம் செலுத்தியதற்காக அறியப்பட்ட ஒரு குறிப்பிடத்தக்க தலைவர் என்று திரு மோடி அவரைப் பாராட்டியுள்ளார். சமூக ஊடக எக்ஸ் தளத்தில் திரு மோடி பதிவிட்டிருப்பதாவது: “திரு எஸ்.எம்.கிருஷ்ணா அவர்கள் ஒரு குறிப்பிடத்தக்க தலைவர். அனைத்துத் தரப்பு மக்களாலும் போற்றப்பட்டவர். மற்றவர்களின் வாழ்க்கையை மேம்படுத்த அவர் எப்போதும் அயராது உழைத்தார். கர்நாடகாவின் முதல்வராக இருந்த காலத்தில், குறிப்பாக உள்கட்டமைப்பு வளர்ச்சியில் கவனம் செலுத்தியதற்காக அவர் அன்புடன் நினைவுகூரப்படுகிறார். திரு  எஸ்.எம்.கிருஷ்ணா அவர்கள் ஒரு சிறந்த வாசகராகவும் சிந்தனையாளராகவும் இருந்தார். “திரு  எஸ்.எம்.கிருஷ்ணா அவர்களுடன் கலந்துரையாட  பல ஆண்டுகளில் எனக்குப் பல வாய்ப்புகள் கிடைத்தன. அந்த உரையாடல்களை நான் எப்போதும் போற்றுவேன். அவரது மறைவு எனக்கு ஆழ்ந்த வருத்தமளிக்கிறது. அவரது குடும்பத்தினருக்கும், தொண்டர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். ஓம் சாந்தி.”

Read More »

மத்திய பிரதேச முதலமைச்சர் பிரதமரை சந்தித்தார்

மத்தியப் பிரதேச முதலமைச்சர் டாக்டர் மோகன் யாதவ் பிரதமர் திரு நரேந்திர மோடியை சந்தித்தார். இது குறித்து சமூக  ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் அலுவலகம் பதிவிட்டிருப்பதாவது: “மத்தியப் பிரதேச முதலமைச்சர் திரு மோகன் யாதவ்@DrMohanYadav51, பிரதமர் திரு நரேந்திர மோடியைச் @narendramodi- சந்தித்தார்.

Read More »

சி.ராஜகோபாலாச்சாரியாரின் பிறந்த நாளில் பிரதமர் அவருக்கு நினைவஞ்சலி

திரு சி. ராஜகோபாலாச்சாரியாரின் பிறந்த நாளில், அவரை நினைவு கூர்ந்துள்ள பிரதமர் திரு நரேந்திர மோடி, அவரது  பன்முகத்தன்மை கொண்ட ஆளுமை, இலக்கியம், சமூகத்துக்கு அதிகாரமளித்தல் ஆகியவற்றில் வலுவான தாக்கத்தை ஏற்படுத்தியவர் என்று புகழாரம் சூட்டியுள்ளார். இது குறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் பதிவிட்டிருப்பதாவது : சி. ராஜகோபாலாச்சாரியாரின் பிறந்த நாளில் அவரை நினைவு கூர்கிறேன், நாட்டின் சுதந்திரப் போராட்டத்தில் அவர் ஆற்றிய அளப்பரிய பங்களிப்பு, இந்தியாவின் …

Read More »

மாபெரும் தமிழ்க் கவிஞரும் சுதந்திரப் போராட்ட வீரருமான சுப்பிரமணிய பாரதியாரின் முழுமையான படைப்புகள் அடங்கிய தொகுப்பை 2024, டிசம்பர் 11 அன்று பிரதமர் வெளியிடுகிறார்

மாபெரும் தமிழ்க் கவிஞரும், சுதந்திரப் போராட்ட வீரருமான சுப்பிரமணிய பாரதியின் முழுமையான படைப்புகளின் தொகுப்பை பிரதமர் திரு நரேந்திர மோடி புதுதில்லி, 7, லோக் கல்யாண் மார்கில் டிசம்பர் 11 அன்று பிற்பகல் 1 மணியளவில் வெளியிடுகிறார். சுப்பிரமணிய பாரதியின் எழுத்துக்கள் மக்களிடையே தேசபக்தியை விதைத்தன. இந்திய கலாச்சாரம் மற்றும் நாட்டின் ஆன்மீக பாரம்பரியத்தின் சாரத்தை பொதுமக்களுக்கு எளிதில் புரியும் மொழியில் எடுத்து சொல்லின. 23 தொகுப்புகளில் அவரது முழுமையான …

Read More »

டிசம்பர் 9 அன்று பிரதமர் ராஜஸ்தான், ஹரியானா மாநிலங்களுக்குப் பயணம் மேற்கொள்கிறார்

பிரதமர் திரு நரேந்திர மோடி டிசம்பர் 9 அன்று ராஜஸ்தான், ஹரியானா மாநிலங்களுக்குப் பயணம் மேற்கொள்கிறார். ஜெய்ப்பூர் செல்லும் அவர், காலை 10:30 மணியளவில், ஜெய்ப்பூர் கண்காட்சி – மாநாட்டு மையத்தில் (ஜேஇசிசி) ரைசிங் ராஜஸ்தான் உலக முதலீட்டாளர் உச்சி மாநாடு 2024-ஐ தொடங்கி வைக்கிறார். அதன்பிறகு, பானிபட் செல்லும் பிரதமர், பிற்பகல் 2 மணியளவில் எல்ஐசி-யின் பீமா சகி யோஜனா திட்டத்தைத் தொடங்கி வைக்கிறார். மஹாராணா பிரதாப் தோட்டக்கலை பல்கலைக்கழகத்தின் பிரதான வளாகத்திற்கும் அவர் அடிக்கல் நாட்டுகிறார். …

Read More »

தில்லியில் நடைபெறும் அஷ்டலட்சுமி மகோத்சவம் வடகிழக்குப் பகுதியின் துடிப்பான ஜவுளித் துறை, சுற்றுலா வாய்ப்புகள், பாரம்பரிய கைவினைத்திறன் ஆகியவற்றைக் கொண்டாடுகிறது: பிரதமர்

மத்திய அமைச்சர் திரு ஜோதிராதித்ய சிந்தியா எழுதிய கட்டுரையை சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ள பிரதமர் திரு நரேந்திர மோடி, தில்லியில் நடைபெறும் அஷ்டலட்சுமி மகோத்சவம் வடகிழக்குப் பகுதியின் துடிப்பான ஜவுளித் துறை, சுற்றுலா வாய்ப்புகள், பாரம்பரிய கைவினைத்திறன் ஆகியவற்றைக் கொண்டாடுகிறது என்று குறிப்பிட்டுள்ளார். இது குறித்து பிரதமர் அலுவலகம், சமூக ஊடக எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது: “மேம்படுத்தப்பட்ட போக்குவரத்து இணைப்பு, டிஜிட்டல் உள்ளடக்கம், உள்கட்டமைப்பில் முதலீடு ஆகியவற்றின் மூலம் வடகிழக்கு இந்தியா குறிப்பிடத்தக்க வளர்ச்சியைக் கண்டுள்ளது …

Read More »

ஆயுதப்படை கொடி நாள் என்பது நமது துணிச்சலான வீரர்களின் வீரம், உறுதிப்பாடு மற்றும் தியாகங்களுக்கு வணக்கம் செலுத்துவதாகும்: பிரதமர்

ஆயுதப் படைகளின் கொடி தினமான இன்று பிரதமர் திரு நரேந்திர மோடி, இது நமது வீரம், உறுதிப்பாடு மற்றும் தியாகங்களுக்கு வணக்கம் செலுத்துவம் நாள் எனக் குறிப்பிட்டுள்ளார். ஆயுதப்படை கொடி நாள் நிதிக்கு அனைவரும் பங்களிக்க வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார். சமூக ஊடக எக்ஸ் தளத்தில் அவர் பதிவிட்டுள்ளதாவது; “ஆயுதப் படைகளின் கொடி நாள் என்பது நமது துணிச்சலான வீரர்களின் வீரம், உறுதிப்பாடு மற்றும் தியாகங்களுக்கு வணக்கம் செலுத்தும் நாளாகும். அவர்களின் துணிச்சல் …

Read More »

பூடான் மன்னரையும் ராணியையும் பிரதமர் வரவேற்றார்

பூடான் மன்னர் ஜிக்மே கேசர் நம்க்யெல் வாங்சுக், பூடான் ராணி ஜெட்சன் பெமா வாங்சுக் ஆகியோரை பிரதமர் திரு நரேந்திர மோடி, புதுதில்லியில் இன்று (05.12.2024) வரவேற்றார். மன்னருக்கும் ராணிக்கும் தமது வாழ்த்துக்களை தெரிவித்த பிரதமர், 2024 மார்ச் மாதத்தில் தமது அரசுமுறைப் பயணத்தின்போது பூடான் அரசும், மக்களும் அளித்த அன்பான விருந்தோம்பலை நினைவுகூர்ந்தார். வளர்ச்சியில் ஒத்துழைப்பு, தூய்மையான எரிசக்தி, வர்த்தகம், முதலீடு, விண்வெளி, தொழில்நுட்ப ஒத்துழைப்பு, மக்களுக்கு இடையேயான …

Read More »

அஷ்டலட்சுமி மகா திருவிழாவை டிசம்பர் 6 அன்று பிரதமர் தொடங்கி வைக்கிறார்

வடகிழக்கு இந்தியாவின் கலாச்சார துடிப்பை வெளிப்படுத்த வேண்டும் என்ற தனது உறுதிப்பாட்டிற்கு ஏற்ப, பிரதமர் திரு நரேந்திர மோடி டிசம்பர் 6 அன்று பிற்பகல் 3 மணியளவில் புதுதில்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் அஷ்டலட்சுமி மகா திருவிழாவைத் தொடங்கி வைக்கிறார். முதன்முறையாக கொண்டாடப்படும் இந்த மூன்று நாள் கலாச்சார விழா டிசம்பர் 6 முதல் 8 வரை நடைபெறும். இது வடகிழக்கு இந்தியாவின் பரந்த கலாச்சார அம்சங்களை முன்னிலைப்படுத்துவதுடன், பாரம்பரிய கலைகள், கைவினைப்பொருட்கள் மற்றும் கலாச்சார நடைமுறைகளை ஒன்றிணைக்கும். பாரம்பரிய கைவினைப் பொருட்கள், கைத்தறி, வேளாண் பொருட்கள் சுற்றுலா …

Read More »

கடற்படை தினத்தை முன்னிட்டு இந்திய கடற்படையின் துணிச்சல்மிக்க வீரர்களுக்கு பிரதமர் வாழ்த்து

கடற்படை தினத்தை முன்னிட்டு இந்திய கடற்படையின்  துணிச்சல்மிக்க வீரர்களுக்கு வாழ்த்து தெரிவித்த பிரதமர் திரு. நரேந்திர மோடி, நமது நாட்டின் பாதுகாப்பு மற்றும் வளத்தை உறுதி செய்யும் அவர்களின் அர்ப்பணிப்புக்காக அவர்களைப் பாராட்டினார். சமூக ஊடக எக்ஸ் தள  பதிவில் திரு நரேந்திர மோடி கூறியிருப்பதாவது: “கடற்படை தினத்தை முன்னிட்டு, ஈடு இணையற்ற தைரியத்துடனும், அர்ப்பணிப்புடனும் நமது கடல்களைப் பாதுகாக்கும் இந்திய கடற்படையின் துணிச்சல்மிக்க வீரர்களுக்கு நாம் வணக்கம் செலுத்துவோம். …

Read More »