இந்திய அரசின் நுகர்வோர் விவகாரத் துறையின் கீழ் இயங்கும் சட்டமுறை எடையளவுத் துறை, எடையிடுதல், அளவிடும் சாதனங்களின் துல்லியத்தையுத் நம்பகத்தன்மையையும் உறுதி செய்வதன் மூலம் நுகர்வோர் நலன்களைப் பாதுகாக்கிறது. மனிதர்கள், விலங்குகளின் உடல் வெப்பநிலையை அளவிட வடிவமைக்கப்பட்ட மருத்துவ மின் வெப்பநிலைமானிகளின் (எலக்ட்ரிக்கல் தெர்மாமீட்டர்) தரப்படுத்தலையும் துல்லியத்தையும் மேம்படுத்த, வரைவு விதிகள் முன்மொழியப்பட்டுள்ளன. காய்ச்சல், தாழ்வெப்பநிலை போன்ற நிலைமைகளைக் கண்டறிவதில் முக்கிய பங்கு வகிக்கும் இத்தகைய சாதனங்களுக்கான தற்போதுள்ள விதிமுறைகளை திருத்துவதை இந்த விதிகள் நோக்கமாகக் கொண்டுள்ளன. …
Read More »