Thursday, December 19 2024 | 12:11:02 PM
Breaking News

Tag Archives: ராஜ்நாத் சிங்

ரஷ்யாவில் பாதுகாப்பு அமைச்சர் திரு ராஜ்நாத் சிங் முன்னிலையில் இந்திய கடற்படையில் ஐஎன்எஸ் துஷில் சேர்க்கப்பட்டது

ஐஎன்எஸ் துஷில் (F 70), அதிநவீன பல்நோக்கு ஏவுகணை போர்க்கப்பல், 2024 டிசம்பர் 09 அன்று ரஷ்யாவின் கலினின்கிராடில் உள்ள யந்தர் கப்பல் கட்டும் தளத்தில் பாதுகாப்புத்துறை  அமைச்சர் திரு ராஜ்நாத் சிங் முன்னிலையில் இந்திய கடற்படையில் சேர்க்கப்பட்டது. பாதுகாப்பு அமைச்சர் தமது உரையில், இந்த கமிஷன் இந்தியாவின் வளர்ந்து வரும் கடல்சார் வலிமைக்கு பெருமை சேர்க்கும் சான்று என்றும், இந்தியா மற்றும் ரஷ்யா இடையேயான நீண்டகால நட்புறவில் குறிப்பிடத்தக்க மைல்கல் என்றும் விவரித்தார். தற்சார்பு இந்தியா என்ற இந்தியாவின் தொலைநோக்குப் பார்வைக்கு ரஷ்யாவின் …

Read More »

ராணுவ தொழில்நுட்ப ஒத்துழைப்புக்கான இந்திய – ரஷ்ய அரசுகளுக்கு இடையிலான ஆணையத்தின் 21-வது கூட்டத்தில் பங்கேற்க பாதுகாப்புத் துறை அமைச்சர் திரு ராஜ்நாத் சிங் நாளை ரஷ்யா செல்கிறார்

பாதுகாப்புத் துறை அமைச்சர் திரு ராஜ்நாத் சிங், 2024 டிசம்பர் 08 முதல் 10ம் தேதி வரை ரஷ்யாவில் அரசு முறை பயணம் மேற்கொள்கிறார். இந்த பயணத்தின் போது, பாதுகாப்பு அமைச்சரும் ரஷ்யாவின் பாதுகாப்பு அமைச்சர் திரு ஆண்ட்ரே பெலோசோவ்-வும் டிசம்பர் 10-ம் தேதி மாஸ்கோவில் நடைபெறும் ராணுவ தொழில்நுட்ப ஒத்துழைப்புக்கான இந்திய-ரஷ்ய அரசுகளுக்கு இடையிலான ஆணையத்தின் (IRIGC-M&MTC) 21- வது கூட்டத்திற்கு இணைத் தலைமை வகிப்பார்கள். இரு நாட்டு ராணுவத்திற்கு இடையேயான ஒத்துழைப்பு, பாதுகாப்புத் துறையில் இரு நாடுகளுக்கும் இடையிலான பன்முக …

Read More »