शुक्रवार, नवंबर 22 2024 | 08:43:30 PM
Breaking News
Home / Choose Language / Tamil / தன்னிச்சையான நிறை பொருட்களுக்கான குவாண்டம் கோட்பாட்டின் வரம்புகளை ஆராய புதிய சோதனை

தன்னிச்சையான நிறை பொருட்களுக்கான குவாண்டம் கோட்பாட்டின் வரம்புகளை ஆராய புதிய சோதனை

Follow us on:

வழக்கமான நுண்ணிய இயற்பியல் பொருள்களை (அணுக்கள், மூலக்கூறுகள் போன்றவை) விட மிகப் பெரிய பொருட்களுக்கான குவாண்டம் கோட்பாட்டின் செல்லுபடியாகும் களத்தை சோதிக்க விஞ்ஞானிகள் ஒரு பரிசோதனையை உருவாக்கியுள்ளனர். அதற்கு அப்பால் கிளாசிக்கல் கோட்பாடு அவசியம் பயன்படுத்தப்பட வேண்டும். அதிநவீன குவாண்டம் தொழில்நுட்பங்களில் முக்கியமான கருவிகளான உயர் துல்லியமான குவாண்டம் சென்சார்களை உருவாக்கவும் இந்த ஆய்வு உதவும்.

நியூட்டனிய கிளாசிக்கல் மெக்கானிக்ஸின் கோட்பாடுகளுக்குப் பதிலாக குவாண்டம் இயந்திரவியல் கோட்பாடுகள் சுமார் 100 ஆண்டுகளுக்கு முன்பு உருவாக்கப்பட்டன. இருப்பினும், இதில் பல சிக்கல்கள் உள்ளன.

அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையின் (டி.எஸ்.டி) தன்னாட்சி நிறுவனமான கொல்கத்தாவின் போஸ் நிறுவனத்தைச் சேர்ந்த பேராசிரியர் தீபங்கர் ஹோம், டி.தாஸ், எஸ்.போஸ் (யுனிவர்சிட்டி காலேஜ் லண்டன்) மற்றும் எச்.உல்பிரிச்ட் (யுனிவர்சிட்டி ஆஃப் சவுத்தாம்ப்டன், யுகே) ஆகியோருடன் இணைந்து ஊசலாடுதல் போன்ற பெரிய நிறை கொண்ட அலைவுறும் பொருளுக்கு குவாண்டம் நடத்தையின் கவனிக்கத்தக்க அடையாளத்தை நிரூபிப்பதற்கான ஒரு புதிய செயல்முறையை உருவாக்குவதன் மூலம் இந்த சவாலை எதிர்கொண்டனர்.

இந்த விஞ்ஞானிகள் ஒரு தன்னிச்சையான பெரிய குவாண்டம் இயந்திர ஊசலுக்கான அளவீட்டால் தூண்டப்பட்ட இந்த இடையூறுகளைக் கண்டறிய ஒரு புதிய வழியைக் கண்டுபிடித்துள்ளனர்.

தற்போதுள்ள அதிநவீன தொழில்நுட்பத்தை வைத்துப் பார்க்கும்போது, இந்த உத்தேசிக்கப்பட்ட பரிசோதனை வரும் ஆண்டுகளில் அலைவுறும் நானோ பொருள்கள் (ஹைட்ரஜன் அணுவை விட டிரில்லியன் மடங்கு கனமான தூசியைப் போன்றது) முதல் ஈர்ப்பு அலை கண்டறிதலுக்குப் பயன்படுத்தப்படும் சுமார் 10 கிலோ எடையுள்ள திறம்பட்ட நிறை கொண்ட அலைவுறும் கண்ணாடிகள் வரையிலான அமைப்புகளுக்கு சாத்தியமாகும்.

இந்தப் பணி பெரிய அளவிலான குவாண்டம்னெஸின் மிகவும் அழுத்தமான செயல்முறையை வழங்கும் சோதனைகளுக்கு வழி வகுக்கும்.

मित्रों,
मातृभूमि समाचार का उद्देश्य मीडिया जगत का ऐसा उपकरण बनाना है, जिसके माध्यम से हम व्यवसायिक मीडिया जगत और पत्रकारिता के सिद्धांतों में समन्वय स्थापित कर सकें। इस उद्देश्य की पूर्ति के लिए हमें आपका सहयोग चाहिए है। कृपया इस हेतु हमें दान देकर सहयोग प्रदान करने की कृपा करें। हमें दान करने के लिए निम्न लिंक पर क्लिक करें -- Click Here


* 1 माह के लिए Rs 1000.00 / 1 वर्ष के लिए Rs 10,000.00

Contact us

Check Also

வணிக நிலக்கரி சுரங்க ஏலத்தின் 10-வது சுற்று முதல் நாளில் ஐந்து நிலக்கரி சுரங்கங்கள் ஏலத்திற்கு விடப்பட்டது

மத்திய நிலக்கரி அமைச்சகம் 2024 ஜூன் 21 அன்று 10-வது சுற்றின் கீழ் வணிக சுரங்கத்திற்கான நிலக்கரி சுரங்கங்களின் ஏலத்தை தொடங்கியது. ஏலங்கள் மதிப்பீடு செய்யப்பட்ட பிறகு, ஒன்பது …