मंगलवार, नवंबर 05 2024 | 09:51:52 AM
Breaking News
Home / Choose Language / tamil / சர்வதேச சூரியசக்தி கூட்டணியின் மூன்றாவது இயக்குநர் தேர்வு

சர்வதேச சூரியசக்தி கூட்டணியின் மூன்றாவது இயக்குநர் தேர்வு

Follow us on:

புதுதில்லியில் நடைபெற்று வரும் சர்வதேச சூரியசக்தி கூட்டணி (ஐஎஸ்ஏ) பேரவையின் 7-வது கூட்டத்தில், இந்தியாவின் மூன்றாவது தலைமை இயக்குநராக திரு ஆஷிஷ் கன்னா தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். கானாவைச் சேர்ந்த திரு விஸ்டம் அஹியடாகு – டோகோபோ மற்றும் எத்தியோப்பியாவைச் சேர்ந்த திரு கோசாய் மெங்கிஸ்டி அபய்னே ஆகியோர் பிற பதவிகளுக்கு போட்டியிட்டனர்.

சர்வதேச சூரியசக்தி கூட்டணியின் குறிக்கோளை முன்னெடுத்துச் செல்வதில், ஐஎஸ்ஏ-வின் தலைமை இயக்குநர் முக்கிய பங்காற்றுகிறார். பொதுவான சவால்களை எதிர்கொள்வதில் உறுப்பு நாடுகளுக்கு ஆதரவளிப்பது மற்றும் உலகளவில் சூரிய சக்திப் பயன்பாட்டை அதிகரிப்பதற்கான ஒருங்கிணைந்த நடவடிக்கையில் ஈடுபடுவது ஆகியவை இதில் அடங்கும்.

பதவிக் காலத்தை நிறைவு செய்யும் தலைமை இயக்குநர் டாக்டர் அஜய் மாத்தூர், “நான் எனது பொறுப்பிலிருந்து விலகும்போது, இந்த நம்பமுடியாத பயணத்திற்கு திரு ஆஷிஷ் கண்ணாவை அன்புடன் வரவேற்க விரும்புகிறேன். இந்த பதவியில் பணியாற்றுவது ஒரு கண்ணியம். மேலும் இந்த அலுவலகத்திற்கும் பொறுப்புக்கும் நீங்கள் தனித்துவமான ஆற்றல், பார்வை மற்றும் ஆர்வத்தைக் கொண்டு வருவீர்கள் என்று நான் நம்புகிறேன். உங்களது பாரம்பரியத்தை செதுக்கிக் கொண்டே அடைந்த முன்னேற்றத்தின் அடிப்படையில் உங்களது தலைமை, இந்த கூட்டணியை புதிய உயரத்திற்கு கொண்டு செல்லும் என்பதில் சந்தேகமில்லை. எதிர்நோக்கும் சவால்கள் பெரியவை, ஆனால் வாய்ப்புகளும் உள்ளன. எனது எளிய ஆலோசனை என்னவென்றால், உங்கள் உள்ளுணர்வை நம்புங்கள், உங்களைச் சுற்றியுள்ள ஆதரவை அரவணைத்துக்கொள்ளுங்கள், நீடித்த தாக்கத்தை ஏற்படுத்தும் திறன்கள் உங்களிடம் உள்ளன என்பதை அறிந்து கொள்ளுங்கள். இந்த புதிய அத்தியாயத்தை நீங்கள் தொடங்க வாழ்த்துகிறேன் என்று தெரிவித்தார்.

मित्रों,
मातृभूमि समाचार का उद्देश्य मीडिया जगत का ऐसा उपकरण बनाना है, जिसके माध्यम से हम व्यवसायिक मीडिया जगत और पत्रकारिता के सिद्धांतों में समन्वय स्थापित कर सकें। इस उद्देश्य की पूर्ति के लिए हमें आपका सहयोग चाहिए है। कृपया इस हेतु हमें दान देकर सहयोग प्रदान करने की कृपा करें। हमें दान करने के लिए निम्न लिंक पर क्लिक करें -- Click Here


* 1 माह के लिए Rs 1000.00 / 1 वर्ष के लिए Rs 10,000.00

Contact us

Check Also

மகாரத்னா பொதுத்துறை நிறுவனங்களான என்டிபிசி மற்றும் ஓஎன்ஜிசி இணைந்து ஒரு கூட்டு நிறுவனத்தை உருவாக்குகின்றன

மகாரத்னா பொதுத்துறை நிறுவனங்களான என்டிபிசி மற்றும் ஓஎன்ஜிசி ஆகியவை தங்கள் பசுமை எரிசக்தி துணை நிறுவனங்கள் (என்டிபிசி கிரீன் எனர்ஜி …