गुरुवार, नवंबर 14 2024 | 10:12:29 PM
Breaking News
Home / Choose Language / Tamil / மத்திய ரசாயனம் மற்றும் உரங்கள் துறை அமைச்சர் திரு ஜெ.பி.நட்டா “மருத்துவ சாதனத் தொழிலை வலுப்படுத்தும் திட்டத்தை” தொடங்கி வைத்தார்

மத்திய ரசாயனம் மற்றும் உரங்கள் துறை அமைச்சர் திரு ஜெ.பி.நட்டா “மருத்துவ சாதனத் தொழிலை வலுப்படுத்தும் திட்டத்தை” தொடங்கி வைத்தார்

Follow us on:

மருத்துவ சாதனங்கள் தொழில்துறைக்கு ஒரு பெரிய ஊக்கத்தை வழங்குவதற்காக, மத்திய ரசாயனம், உரங்கள், சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் திரு ஜகத் பிரகாஷ் நட்டா மருத்துவ சாதனத் தொழிலை வலுப்படுத்தும் திட்டத்தை இன்று (08.11.2024) தொடங்கி வைத்தார். துறையின் இணையமைச்சர் திருமதி அனுப்ரியா படேல், மருந்துகள் துறை செயலாளர் திரு அருணீஷ் சாவ்லா, துறை அதிகாரிகள் மற்றும் தொழில்துறை பிரதிநிதிகளும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

இந்த திட்டம் மருத்துவ சாதனத் துறையின் முக்கியமான பகுதிகளை இலக்காகக் கொண்ட ஒரு விரிவான திட்டமாகும், இது முக்கிய கூறுகள் மற்றும் பாகங்கள் உற்பத்தி, திறன் மேம்பாடு, மருத்துவ ஆய்வுகளுக்கான ஆதரவு, பொதுவான உள்கட்டமைப்பு மேம்பாடு மற்றும் தொழில்துறை மேம்பாடு ஆகியவற்றை உள்ளடக்கியது.

கூட்டத்தினரிடையே உரையாற்றிய மத்திய அமைச்சர் திரு ஜெ.பி.நட்டா, இந்தத் திட்டம் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தும் என்றும், இது தொழில்துறைக்கு உதவுவது மட்டுமல்லாமல், இந்தியாவை தற்சார்புடையதாக மாற்றுவதில் வேகமானதாக இருக்கும் என்றும் கூறினார். “இந்த நடவடிக்கைகள் சிறியதாகத் தோன்றலாம், ஆனால் விளைவுகள் பெரியவை. பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையிலான அரசு ஒரு செயல் அரசு என்றும், பி.எல்.ஐ திட்டமே புதிய பாதைகளைத் திறந்துள்ளது என்றும் அவர் கூறினார். “இது ஒரு தொடக்கம் மட்டுமே” என்று கூறிய அமைச்சர், இந்த முயற்சிகளுக்காக மருந்துத் துறையை வாழ்த்தியதுடன், திட்டத்தின் வெற்றிக்கு தொழில்துறையின் ஆதரவைக் கோரினார்.

மத்திய ரசாயனம் மற்றும் உரத்துறை அமைச்சர் இந்த திட்டத்தை நன்கு பயன்படுத்திக் கொள்ளுமாறு தொழில்துறையினருக்கு வேண்டுகோள் விடுத்தார், மேலும் அனைத்து ஆதரவையும் வழங்க இத்துறை உள்ளது என்று கூறி, அரசிடமிருந்து அனைத்து உதவிகளும் வழங்கப்படும் என தொழில்துறைக்கு உறுதியளித்தார்.

நிகழ்ச்சியில் பேசிய மத்திய ரசாயனம் மற்றும் உரங்கள் துறை இணையமைச்சர் திருமதி அனுப்பிரியா படேல், இந்தத் திட்டம் மருத்துவக் கருவிகளின் ஒட்டுமொத்த துறைக்கும் ஊக்கமளிக்கும் என்றார். “மருத்துவ சாதனம் சுகாதாரத் துறையின் ஒரு முக்கியமான தூணாக மாறியுள்ளது, அவற்றை அன்றாட வாழ்க்கையில் நாம் காண்கிறோம், அதன் தேவை தொடர்ந்து அதிகரித்து வருவதால் அதன் முக்கியத்துவத்தை அனைவரும் அறிவார்கள். இந்தத் தொழிலை மேம்படுத்துவதற்கான கொள்கைகள் மற்றும் திட்ட ஆதரவையும் அரசு உருவாக்கி வருகிறது” என்றார்.

மருத்துவ சாதனத் தொழில் சுகாதார வழங்கலின் இன்றியமையாத தூணாகும். நோயறிதல் இயந்திரங்கள் முதல் அறுவை சிகிச்சை கருவிகள் வரை, மற்றும் ஸ்டெண்டுகள் முதல் புரோஸ்டெடிக்ஸ் வரை, நோய்களைத் தடுப்பதற்கும், கண்டறிதல் மற்றும் சிகிச்சைக்கும் மருத்துவ சாதனங்கள் முக்கியமானவை. இந்தியாவின் மருத்துவ சாதன சந்தை தோராயமாக 14 பில்லியன் டாலர் மதிப்புடையது என்பதுடன் 2030-ம் ஆண்டில் 30 பில்லியன் டாலராக அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

புதிய திட்டத்திற்கு மொத்தம் ரூ.500 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இது ஐந்து துணை திட்டங்களைக் கொண்டுள்ளது. அவை பின்வருமாறு –

வ.எண் மருத்துவ சாதனங்கள் தொழிலை வலுப்படுத்தும் திட்டம்-
துணைத் திட்டங்கள்
நிதி ஒதுக்கீடு
(ரூபாய் கோடியில்)
1 மருத்துவ சாதனங்கள் தொகுப்புகளுக்கான பொதுவான வசதிகள் 110
2 இறக்குமதியை சார்ந்திருப்பதை குறைப்பதற்கான விளிம்புநிலை முதலீட்டு திட்டம் 180
3 மருத்துவ சாதனங்களுக்கான திறன் மேம்பாடு மற்றும் திறன் மேம்பாடு 100
4 மருத்துவ சாதன மருத்துவ ஆய்வுகள் ஆதரவு திட்டம் 100
5 மருத்துவ சாதன ஊக்குவிப்பு திட்டம் 10

அரசு ஆதரவு இருந்தபோதிலும், இந்தியாவில் மருத்துவ சாதன உற்பத்தித் துறை சவால்களை எதிர்கொள்கிறது. முதன்மையான சவால்களில் ஒன்று உள்கட்டமைப்பு இல்லாதது. மருத்துவ சாதனங்கள் தொகுப்புகளுக்கான பொது வசதிகளுக்கான துணைத் திட்டத்தின் மூலம், தொகுப்புகளில் தொழில் மையம் அமைத்துள்ள உற்பத்தியாளர்களுக்கு, ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு ஆய்வகங்கள், வடிவமைப்பு மற்றும் சோதனை மையம், விலங்கு ஆய்வகங்கள் போன்ற பொதுவான உள்கட்டமைப்பு வசதிகளை உருவாக்க மருத்துவ சாதன தொகுப்புகளுக்கு மத்திய அரசு நிதியுதவி வழங்கும். தற்போதுள்ள பரிசோதனை வசதிகளை வலுப்படுத்த அல்லது புதியவற்றை அமைப்பதற்கான ஆதரவு தேசிய / அரசு/ தனியார் நிறுவனங்களுக்கு வழங்கப்படும். பொது வசதிகளுக்கு ரூ.20 கோடி வரையும், பரிசோதனை வசதிகளுக்கு ரூ.5 கோடி வரையும் மானியமாக வழங்கப்படும்.

விளிம்புநிலை முதலீட்டு ஆதரவை வழங்கும் இரண்டாவது துணைத் திட்டம், நாட்டிற்குள் முக்கிய கூறுகள், மூலப்பொருட்கள் மற்றும் பாகங்கள் உற்பத்தியில் கவனம் செலுத்துவதன் மூலம் நாட்டில் மெட்டெக் விநியோகச் சங்கிலியை வலுப்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த துணைத் திட்டம் இறக்குமதி செய்யப்பட்ட கூறுகளைச் சார்ந்திருப்பதைக் குறைப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. தற்போது, பெரும்பாலான மூலப்பொருட்கள் மற்றும் முக்கிய கூறுகள் இறக்குமதி செய்யப்படுகின்றன. இதனால் இந்திய உற்பத்தியாளர்கள் மருத்துவ சாதன உற்பத்திக்கு வெளிப்புற பொருட்களை நம்பியுள்ளனர். இந்த துணைத் திட்டம் 10-20% ஒரு முறை மூலதன மானியத்தை வழங்குகிறது, அதிகபட்சமாக ஒரு திட்டத்திற்கு ரூ.10 கோடி வரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

மூன்றாவது துணைத் திட்டம் மருத்துவ சாதனத் துறைக்கான திறன் மேம்பாட்டில் கவனம் செலுத்துகிறது. மெட்டெக் தயாரிப்புகளை வடிவமைத்து உருவாக்கும் திறன் கொண்ட திறமையான தொழில்நுட்ப பணியாளர்களை உருவாக்குவதே இதன் குறிக்கோள். பல்வேறு முதுநிலை மற்றும் குறுகிய கால படிப்புகளை நடத்துவதற்கு மத்திய அரசு நிதி உதவி அளிக்கும். துணைத் திட்டத்தின் கீழ், மத்திய அரசு கல்வி நிறுவனங்களில் முதுநிலை படிப்புகளுக்கு ரூ.21 கோடி வரை ஆதரவு, என்.சி.வி.இ.டி அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் குறுகிய கால படிப்புகளுக்கு ரூ.10,000 மற்றும் டிப்ளமோ படிப்புகளுக்கு ரூ.25,000 வழங்கப்படுகிறது.

நான்காவது துணைத் திட்டம், மருத்துவ ஆய்வுகளை நடத்துவதில் நிறுவப்பட்ட நிறுவனங்கள் மற்றும் தொடக்க நிறுவனங்களுக்கு உதவ வடிவமைக்கப்பட்ட ஒரு முன்னோடி முயற்சியாகும். இந்த திட்டம் மருத்துவ சாதன வடிவமைப்பாளர்கள் மற்றும் உற்பத்தியாளர்கள் விலங்கு ஆய்வுகளுக்கான நிதி ஆதரவுக்கு விண்ணப்பிக்கவும், வெற்றிகரமாக இருந்தால் மெட்டெக் தயாரிப்புகளை சரிபார்க்க மனித சோதனைகளுக்கு விண்ணப்பிக்கவும் உதவுகிறது. கால்நடை ஆய்வுக்கு ரூ.2.5 கோடி வரை நிதி உதவி வழங்கப்படும். அங்கீகரிக்கப்பட்ட சாதனங்களில் சோதனை சாதனங்களின் மருத்துவ விசாரணை மற்றும் சந்தைக்குப் பிந்தைய மருத்துவ பின்தொடர்வுகளுக்கு, மருத்துவ தரவுகளை உருவாக்க அதிகபட்சமாக ரூ.5 கோடி கிடைக்கிறது. கூடுதலாக, புதிய இன்-விட்ரோ கண்டறியும் தயாரிப்புகளின் மருத்துவ செயல்திறன் மதிப்பீடுகளுக்கு ரூ.1 கோடி வரை வழங்கப்படலாம். இந்த துணைத் திட்டம், மருத்துவ ஆய்வுகளில் ஆதரவுக்கான நீண்டகால தேவையை நிவர்த்தி செய்வதன் மூலம் தொழில்துறைக்கு கணிசமாக பயனளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் மருத்துவ சாதனங்களின் பாதுகாப்பு மற்றும் செயல்திறனை மேம்படுத்துவதோடு, சர்வதேச சந்தைகளில் தயாரிப்பு பதிவுகளைப் பெறவும் இந்திய உற்பத்தியாளர்களுக்கு உதவும்.

மருத்துவ சாதனம் தொடர்பான நடவடிக்கைகளை ஊக்குவிக்கும் மாநாடுகள் மற்றும் பிற நிகழ்வுகளை ஏற்பாடு செய்ய நிதி உதவி வழங்குவதன் மூலம் தொழில்துறை சங்கங்கள் மற்றும் ஏற்றுமதி கவுன்சில்களை ஆதரிப்பதை கடைசி துணைத் திட்டம் நோக்கமாகக் கொண்டுள்ளது. கணக்கெடுப்புகள் மற்றும் ஆய்வுகளை நடத்துவதற்கும் இது ஆதரவளிக்கும்.

இந்திய மருத்துவ சாதனத் துறையின் எதிர்காலம் மிகவும் நம்பிக்கைக்குரியதாகத் தெரிகிறது. இந்திய நிறுவனங்கள் ஏற்கனவே தங்கள் சர்வதேச போட்டியாளர்களுடன் ஒப்பிடும்போது குறைந்த செலவில் புதுமையான தீர்வுகளை வழங்கி வருகின்றன. நாட்டிற்குள் உயர்தர மருத்துவ சாதனங்களை உருவாக்குவதற்கு உகந்த சூழலை உருவாக்க மத்திய அரசு தீவிரமாக செயல்பட்டு வருகிறது.

मित्रों,
मातृभूमि समाचार का उद्देश्य मीडिया जगत का ऐसा उपकरण बनाना है, जिसके माध्यम से हम व्यवसायिक मीडिया जगत और पत्रकारिता के सिद्धांतों में समन्वय स्थापित कर सकें। इस उद्देश्य की पूर्ति के लिए हमें आपका सहयोग चाहिए है। कृपया इस हेतु हमें दान देकर सहयोग प्रदान करने की कृपा करें। हमें दान करने के लिए निम्न लिंक पर क्लिक करें -- Click Here


* 1 माह के लिए Rs 1000.00 / 1 वर्ष के लिए Rs 10,000.00

Contact us

Check Also

வட மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களில் கால்நடை பராமரிப்பு, பால்வளத் துறையை வலுப்படுத்துவதில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் குறித்து புதுதில்லியில் பிராந்திய ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது

மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வள அமைச்சகத்தின் கீழ் உள்ள கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத் துறையின்  செயலாளர் திருமதி அல்கா …