सोमवार, दिसंबर 23 2024 | 09:47:07 AM
Breaking News
Home / अन्य समाचार / வளர்ச்சியடைந்த நாடு என்ற இலக்கை அடைய ஆராய்ச்சியும் புதிய கண்டுபிடிப்புகளும் முக்கியம்: குடியரசு துணைத்தலைவர்

வளர்ச்சியடைந்த நாடு என்ற இலக்கை அடைய ஆராய்ச்சியும் புதிய கண்டுபிடிப்புகளும் முக்கியம்: குடியரசு துணைத்தலைவர்

Follow us on:

“ஆராய்ச்சியும் புதிய கண்டுபிடிப்புகளும் வளர்ச்சியடைந்த நாடு என்ற இலக்கை அடைவதற்கு முக்கியமானவை. உண்மையில், ஆராய்ச்சியிலும் புதிய கண்டுபிடிப்புகளிலும்  நாம் எவ்வளவு உயர்ந்த நிலையில் இருக்கிறோம் என்பதுதான் உலக சமுதாயத்திற்கு நமது வலிமையை வரையறுக்கும். எனவே  கல்வி நிறுவனங்கள் தங்கள் திறனை “கண்டுபிடிப்பு மற்றும் ஆராய்ச்சியின் உலைக்களங்களாக” பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று குடியரசு துணைத்தலைவர் திரு ஜக்தீப் தன்கர் கூறியுள்ளார். கார்ப்பரேட் நிறுவனங்கள் கணிசமான பங்களிப்புகள் மூலம் இந்த இயக்கத்திற்கு ஆதரவளிக்க வேண்டும் என்றும் அழைப்பு விடுத்தார். “வர்த்தகம், தொழில், வணிகம் மற்றும் வர்த்தக சங்கங்கள் தாராளமான நிதி பங்களிப்புகள் மூலம் ஆராய்ச்சியையும் புதிய கண்டுபிடிப்புகளையும் தூண்டுவதற்கு முன்வர வேண்டும்” என்று அவர் கேட்டுக்கொண்டார்.

புதுதில்லியில் இன்று தேசிய தொழில்நுட்பக் கழகத்தின் (என்.ஐ.டி) 4-வது பட்டமளிப்பு விழாவில் உரையாற்றிய குடியரசு துணைத்தலைவர், கல்விச் சூழலை வலுப்படுத்துவதில் முன்னாள் மாணவர்களின் முக்கிய பங்கு குறித்து பேசினார். “ஒரு நிறுவனத்தின் முன்னாள் மாணவர்கள் பல வழிகளில் அதன் உயிர்நாடி. அவர்கள் நிறுவனத்தின் தூதர்கள். உங்கள் நிறுவனத்திற்கு திருப்பிச் செலுத்துவதற்கான சிறந்த வழி பழைய மாணவர் சங்கத்தின் செயலில் உறுப்பினராக இருப்பதே என்பது உலகளாவிய ரீதியிலும் தேசிய அளவிலும் அங்கீகரிக்கப்பட்ட நடைமுறையாகும். வருடாந்திர பங்களிப்புகளை வழங்கும் முன்னாள் மாணவர் நிதியம் இருக்க வேண்டும் என்று நான் அழுத்தமாக வலியுறுத்துகிறேன். உலக அளவில் சில சிறந்த நிறுவனங்கள் மேல்நோக்கிய வளர்ச்சியில் உள்ளன. ஏனெனில் இந்த நிறுவனங்கள் முன்னாள் மாணவர்களின் ஆற்றலால் தூண்டப்படுகின்றன. கல்வியைப் பெறுவதற்காக இந்த நிறுவனத்தில் அடியெடுத்து வைக்கும் அனைவரின் சிறந்த எதிர்காலத்திற்காக உங்கள் முன்னாள் மாணவர்களின் ஆற்றலை நீங்கள் பாதுகாத்து ஒருங்கிணைக்க வேண்டும்” என்று அவர் கூறினார்.

“கல்வி என்பது வணிகம் அல்ல. கல்வி என்பது சமுதாய சேவை. கல்வி உங்கள் கடமை. நீங்கள் சேவை செய்ய வேண்டும். சமூகத்திற்கு திருப்பிச் செலுத்துவது உங்கள் கடமை, அது தெய்வீகக் கட்டளை. சமூகத்திற்கு திருப்பிச் செலுத்துவதற்கான சிறந்த வழி கல்வியில் முதலீடு செய்வதாகும். கல்வியில் முதலீடு என்பது மனித வளத்திற்கான முதலீடு, நமது நிகழ்காலத்திற்கான முதலீடு, நமது எதிர்காலத்திற்கான முதலீடு. கல்வியின் மூலமே பல்லாயிரம் நூற்றாண்டுகளின் பெருமைமிகு கடந்த காலத்தை நாம் கண்டடைகிறோம்” என்று திரு  தன்கர் குறிப்பிட்டார்.

இந்தியாவின் வரலாற்று மற்றும் ஜனநாயக வலிமையைப் பிரதிபலிக்கும் வகையில் பேசிய குடியரசு துணைதலைவர், “பழமையான, மிகப்பெரிய, செயல்பாட்டு ஜனநாயகமான பாரதம், உலகில் மிக சக்திவாய்ந்ததாக இருக்க வேண்டும். அது நமது கனவாக இருக்க முடியாது. அது மீட்கப்பட்ட கனவாக இருக்க வேண்டும்; சக்திவாய்ந்த பாரதம் உலக நல்லிணக்கம், அமைதி மற்றும் மகிழ்ச்சிக்கான உத்தரவாதமாக இருக்கும். ஏனென்றால் நாம் பல நூற்றாண்டுகளாக நமது சிந்தனையை வளர்த்து வருகிறோம். அதை நாம் கடைப்பிடிக்கிறோம். வசுதைவ குடும்பகம் – ஒரே பூமி, ஒரே குடும்பம், ஒரே எதிர்காலம்.”

தேசியவாதத்திற்கான அசைக்க முடியாத அர்ப்பணிப்புக்கு அழைப்பு விடுத்த திரு தன்கர், “பாகுபாடு அல்லது பிற நலன்களை விட தேச நலனுக்கு முன்னுரிமை இருக்க வேண்டும்” என்றார். பொருளாதார தேசியவாதத்தின் அவசியத்தையும் அவர் எடுத்துரைத்தார், “பொருளாதார தேசியவாதம் வணிகத்திற்கு மேலாதிக்க அக்கறையாக இருக்க வேண்டும். எவ்வளவு நியாயமானதாக இருந்தாலும், அளவு அல்லது நிதி அளவு எவ்வளவு பெரியதாக இருந்தாலும், பொருளாதார தேசியவாதத்தை சமரசம் செய்வதற்கு எந்த காரணமும் இல்லை.”

இளைஞர்கள் நல்வாழ்வுடன் வெற்றியைத் தொடர வேண்டும், சவால்களை வளர்ச்சி வாய்ப்புகளாக எதிர்கொள்ள வேண்டும், உயர்ந்த நோக்கத்தை நிறைவேற்ற வேண்டும் என்று வலியுறுத்திய திரு ஜக்தீப் தன்கர் “ஒவ்வொரு பின்னடைவும் ஒரு வலுவான, அதிக தாக்கத்தை ஏற்படுத்தும் மறுபிரவேசத்திற்கு உங்களைத் தயார்படுத்துகிறது என்பதை நினைவில் கொள்ளுங்கள்,” என்று கூறி தனது உரையை நிறைவு செய்தார. அச்சமற்ற அணுகுமுறையை ஊக்குவித்து, இந்திய முன்னேற்றத்தின் எதிர்கால நிர்வாகிகளுடன் இணைவதற்கான வாய்ப்புக்கு நன்றி தெரிவித்தார்.

இயக்குநர் மற்றும் செனட் தலைவர் பேராசிரியர் அஜய் குமார் சர்மா,  நிர்வாகிகள் வாரியத் தலைவர் திரு சி.கே. பிர்லா மற்றும் பிரமுகர்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

मित्रों,
मातृभूमि समाचार का उद्देश्य मीडिया जगत का ऐसा उपकरण बनाना है, जिसके माध्यम से हम व्यवसायिक मीडिया जगत और पत्रकारिता के सिद्धांतों में समन्वय स्थापित कर सकें। इस उद्देश्य की पूर्ति के लिए हमें आपका सहयोग चाहिए है। कृपया इस हेतु हमें दान देकर सहयोग प्रदान करने की कृपा करें। हमें दान करने के लिए निम्न लिंक पर क्लिक करें -- Click Here


* 1 माह के लिए Rs 1000.00 / 1 वर्ष के लिए Rs 10,000.00

Contact us

Check Also

ઇન્સ્ટિટ્યૂટ ઓફ એરોસ્પેસ મેડિસિન ઇન્ડિયન સોસાયટી ઓફ એરોસ્પેસ મેડિસિન (આઇએસએએમ)ની 63મી વાર્ષિક પરિષદનું આયોજન કરશે

ઇન્ડિયન સોસાયટી ઓફ એરોસ્પેસ મેડિસિન (આઇએસએએમ) 05થી 07 ડિસેમ્બર 2024 દરમિયાન ઇન્સ્ટિટ્યૂટ ઓફ એરોસ્પેસ મેડિસિન (આઇએએમ), …